நினைக்காத நேரமேது

(15)
  • 219.5k
  • 6
  • 109k

அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது. பறவைக் கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல். வெளியெல்லாம் ஒளியின் வீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா.

1

நினைக்காத நேரமேது - 1

நினைக்காத நேரமேது... நினைவு-1 அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது. கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல். வெளியெல்லாம் ஒளியின் வீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா. ஐந்தரை அடி சந்தனச்சில ...மேலும் வாசிக்க

2

நினைக்காத நேரமேது - 2

நினைவு-2 "அக்கா! இந்த பிராப்ளம் மட்டும் எனக்கு சால்வ் ஆக மாட்டேங்குது. இதுக்குதான் எனக்கு கணக்குன்னாலே கடுப்பாகுது.” அங்கிருந்த சிறுவர்களில் பெரியவனான சதீஷ் மூக்கால் அழ, அலுப்பாக பார்த்தாள். "ஏன்டா, ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ்‌ பண்ணி வச்சா எப்படிடா வரும்? பார்முலா படி போட்டா கரெட்டா வந்துடும். கொஞ்சம் கவனிச்சு போடு!" அவள் எப்படிச் சொன்னாலும் சிறுவனின் மூளையோ ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. "போங்கக்கா... பக்கம் பக்கமா படிக்கச் சொன்னாக் கூட படிச்சுடலாம். ஆனா இந்தக் நம்பர் கூட்டி கழிச்சு போடுறதுனாலே எனக்கு நாக்கு தள்ளுது.” என வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டான் சதீஷ். திவ்யாவைச் சுற்றி பலதரப்பட்ட வயதில் பிள்ளைகள் பதினைந்துபேர்‌ வட்டமாக அமர்ந்திருந்தனர். பள்ளியில் தினசரி கொடுக்கும் அவர்களின் வீட்டுப் பாடங்களை பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தாள். "ஏம்மா! நீயே அலுப்பா வந்திருப்ப... ...மேலும் வாசிக்க

3

நினைக்காத நேரமேது - 3

நினைவு-3 பரம்பரை சொத்து முழுவதும் இழந்த நிலையில் தேவானந்தனின் தந்தையும் இயற்கை எய்திவிட, இதற்குமேல் யாரிடமும் வேலை கேட்கவும், உதவி கேட்கவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. தான் மகன் ரவியானந்தனும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவனுக்கு கையாக வந்தார், பள்ளித் தோழரும், குடும்ப நண்பருமான இராமநாதன். பணமாக உதவி செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தெரியும். எனவே தான் தேவானந்தனை ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர். தேவானந்தன் என்றைக்கும் உடல் உழைப்பிற்கு தயங்கி நின்றதில்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது. எங்கெங்கு நேரடியாகச் சென்றால் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம் என நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவர், அதைக் கொண்டே தொழிலை நடத்தத் தொடங்கினார். அது ஏறுமுகமாகவே அமைந்தது. இராமநாதன் அலுவலக உள்வேலைகளைப் பார்த்துக் கொள்ள, தேவானந்தன் வெளியே சுற்றித் திரிந்தார். நெல், மஞ்சள், வேர்க்கடலை, ...மேலும் வாசிக்க

4

நினைக்காத நேரமேது - 4

நினைவு-4 ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா யமுனை ஆற்றிலே காற்றிலே கண்ணனோடுதான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட நிழற்படத்தை எடுத்து தன்னவனின் முகம் வருடியவளின் மனம் நிஜம் உணர, கரை தாண்டத் தொடங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் திவ்யா. அவள் சகஜமாவதற்கும் நொடிநேரம் பிடித்தது. பின்னர் எப்பொழுதும் போல் புகைப்படத்திற்கு ‘பை’ சொல்லி மெல்லிய முத்தம் பதித்து முடித்து, தன்னறையை விட்டு வெளியே வந்தாள். அந்த காலை நேரத்தின் வழமையாக பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு தயாராகி விட்டு, சாப்பிடுவதற்கு வந்து அமரத் தொடங்கி இருந்தனர். சதிஷோடு சேர்ந்து திவ்யாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறுசிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள். அங்கு வந்த லட்சுமி, "திவ்யா! உனக்கு டைமாச்சு பாரு! நீ முதல்ல ...மேலும் வாசிக்க

5

நினைக்காத நேரமேது - 5

நினைவு-5 நண்பனின் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது. தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட‌ திவ்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பெர்சனல் விஷயம் பேசும்போது தான் அங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது. அதற்குள் அவர்கள் ஆர்டர் ‌செய்திருந்த உணவு வகைகள் ‌வரவும் பேச்சு சற்று மாறியது. "அப்புறம் தேவா! உன் பேரனைப் பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!" "நம்பர் ஒன், நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா! இன்னைக்கு நாமன்னா... நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்!" "பரவாயில்ல தேவா! உனக்கு கை கொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுங்க ...மேலும் வாசிக்க

6

நினைக்காத நேரமேது - 6

நினைவு-6 மதியம் மணி மூன்றினைத் தொட்டிருந்தது. அந்த நேரத்தில் மதியம் சாப்பாட்டிற்கு, சண்முகம் வீட்டிற்கு வருவது வழக்கம். கட்டிடப் பணிக்குத் தேவையான, சிறு ஆணிமுதல், ஜல்லி, சிமெண்ட், கம்பி என சகலமும் கொண்ட ஹார்டுவேர் கடை அவருடையது. பெரிய பெரிய பில்டிங் கான்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், கைவசம் வாடிக்கையாளர்களாக இருப்பதால், எப்பொழுதும் வருமானத்திற்கு பஞ்சமில்லாத தொழிலாக சென்று கொண்டிருக்கிறது. காலைநேர உணவை முடித்துக் கொண்டு கடைக்குச் செல்பவர், மதியம் மூன்று மணியப் போல் வந்து சாப்பிட்ட பின், சற்றுநேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். மறுபடியும் ஐந்து மணிக்கு மேல் தான் கிளம்புவார். அது வரை கடை வேலையாட்கள் பொறுப்பில். இன்றும் வழமை போல், வீட்டிற்கு வந்தார். திவ்யாவின் வண்டியைப் பார்த்தவருக்கு முகத்தில் சிறு யோசனை. "லட்சுமி…! லட்சுமி…!" கணவர் வரும் நேரம் என்பதால் குரல் கேட்டவுடன், அவரும் வெளியே வந்தார். "என்ன லட்சுமி!? திவ்யா சீக்கிரம் வந்துட்ட மாதிரி இருக்கு." "ஆமாங்க... ...மேலும் வாசிக்க

7

நினைக்காத நேரமேது - 7

நினைவு-7 பிள்ளைகள் கவனிப்பு, வீட்டுப் பாடம், இரவு சமையல், சாப்பாடு என அன்றைய நாளுக்குரிய வேலைகள் நேரம் தவறாமல் தன் வருகையைப் பதிவு செய்தன. சதிஷ் படுக்கைக்கு பிள்ளைகளை ஒழுங்கு படுத்திக் கூட்டிச் சென்றான். இரவு நேரம். தனிமை… வழக்கம் போல் பவளமல்லி செடித் திட்டில் திவ்யா!துணைக்கு கைபேசியில் ஒலிக்கும் பாடல்கள். "முழுநிலா எப்பவும் அழகு! பிறைநிலா இன்னும் அழகு... வளர்பிறை நிலாப் பக்கத்துல மின்னுற அந்த ஒற்றை நட்சத்திரம் மேலும் அழகு. அது மின்னுறப்ப நிலவுக்கு மூக்குத்தி மாதிரி எனக்குத் தோனும்!" பிறைநிலவில் பார்வையைப் பதித்திருந்தவள் கூற, "இப்ப எனக்கும் அப்படித்தான் தோணுது. உனக்கு நட்சத்திரம் மூக்குத்தியாத் தோணுது. எனக்கு அதுவே இடமாற்றமாத் தோணுது. மின்னுற நட்சத்திரம் மீது சிறு முத்தம்." எனத் தொடராமல் நிறுத்தியவனை, வான்பிறையில் தன் பார்வையைப் பதித்திருந்தவள், 'என்ன!?” என்பது போல் பார்க்க... போர்டிகோ தூணில் கைகட்டி சாய்ந்து நின்றவனது பார்வை, நிலவில் இல்லாமல் ...மேலும் வாசிக்க

8

நினைக்காத நேரமேது - 8

நினைவு-8 கணவனும் மனைவியும் செய்வதறியாது நின்றது ஒரு நிமிடம்தான். பின்னர் லட்சுமி ஜாடையாக, ‘பேசிப் புரிய வைங்க’ என்று கோடிட்டுக் காட்டவும் தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தார் சண்முகம். “கோபப்படாதே திவிம்மா!” “இது கோபம் இல்லை அங்கிள், என்னோட அதிர்ஷ்டம். அவங்க சுயநலம் இத்தனை சீக்கிரமா வெளிவந்ததுல நான்தான் தப்பிச்சேன்.” என்று பெருமூச்செறிந்தாள் திவ்யா. "சரி, அவங்கள விடு... உன் மேல அவங்களுக்கு அக்கறை இல்ல. எங்களுக்கு இருக்கா, இல்லையா!?" "இல்லைன்னு சொல்லுவேனா?" "அப்படினா, எப்பப் போய் நாங்க பேசட்டும்?" சண்முகம் கேட்க "ஏன் அங்கிள்? இப்ப நான் போனா அவங்க அம்மா என்னைய ஏத்துக்க மாட்டாங்கனு நினைக்கிறீங்களா?" "அவங்க அம்மா உன்னைய ஏத்துக்கறதாம்மா பிரச்சனை?" "கண்ணா மேல சந்தேகமா அங்கிள்?" "கண்டிப்பா கண்ணா மேல இல்லம்மா... சந்தேகம் எல்லாம் சத்யானந்தன் மேல தான். ஆனா எடுத்து சொன்னோம்னா கட்டாயம் புரிஞ்சுக்குவார் திவிம்மா!" "நானும் அதையே தான் அங்கிள் சொல்றேன். ...மேலும் வாசிக்க

9

நினைக்காத நேரமேது - 9

நினைவு-9 நாட்கள் தன்போக்கில் நகர, நல்லதொரு நாளில் தேவானந்தன், நாதன் அன்ட் கம்பெனியை, ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸோடு இணைத்துக் கொண்டு எம்.டி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று, வரவேற்புக்கு எல்லாம் ரெடியா இருக்காம்மா?" என்று ராமநாதன் வினவ, "எல்லாம்‌ ரெடி சர்." என்றாள் திவ்யா. "தேவானாந்தனுக்கு மஞ்சள் கலர்னா ரெம்ப பிடிக்கும். பொக்கே எல்லோ ஃப்ளவர்ஸ் தானம்மா சொல்லியிருக்க?" "ஆமா சர்." என்றாள். அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது புது எம்.டி.யை வரவேற்க ஆவலாய்க் காத்துக் கொண்டிருந்தனர். தேவானந்தனின் கார் அலுவலக வாயிலை வந்தடைந்தது. தகவல் ராமநாதனுக்குத் தெரிவிக்கப்பட்டது. கார் டிரைவர் இறங்கிக் காரின் பின் கதவைத் திறந்து விட, தேவானந்தன் இறங்கினார். ஒரு கணம் திவ்யாவின் கண்கள், தாத்தாவோடு சேர்த்துப் பேரனையும் எதிர்பார்த்ததோ என்னவோ? சற்றே சோர்ந்தது. திவ்யா ஊழியர்கள் சார்பாக பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க, இராமநாதன் தன் நண்பனுக்கு சந்தன மாலை போட்டு வரவேற்றார். "என்ன ராமா? அரசியல்வாதிய ...மேலும் வாசிக்க

10

நினைக்காத நேரமேது - 10

நினைவு-10 அலுவலகம் வந்த இருவரும், ஏற்கனவே ஒரு மணி நேர‌ பெர்மிஷன், ஒன்றரை மணிநேரமாகிப் போனதில், வந்ததும்‌ வேலையில் கவனமாயினர். திவ்யாவை அழைத்த‌ மேனஜர், “நீ உடனே எம்.டி உன்னை வந்து பார்க்கச் சொன்னாரும்மா!” என்று தகவல் கூறினார். முன்தினமே தேவானாந்தன் தன்னிடம் ஆடிட்டிங் பற்றிக் கூறியிருந்ததால், அது சம்பந்தப்பட்ட சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு, எம்.டி‌ அறை‌ நோக்கிச் சென்றாள். அறைக்கதவை தட்டி விட்டு, "எக்ஸ்கியூஸ்மீ சர்!" எனக் கேட்டுக்‌ கதவைத் திறந்து உள்ளே சென்றாள். "யெஸ்... கம் இன்!" ஆணவனின் கம்பீரக் குரல் கேட்டு, சட்டென அவள் இதயம் இயங்க மறுத்தது. இல்லை... இவ்வளவு நாட்களாக இயந்திரமாக இயங்கிய இதயம், இக்குரல் கேட்டுத் தன் இயக்கத்தை மீட்டெடுத்ததா?கனவா? கற்பனையா? அல்லது நிகழ்காலத்தில் கரையும் நிகழ்வுகளா! எத்தனை நாள்‌ ஏக்கம்... தவிப்பு! வேண்டுதல், எதிர்பார்ப்பு, இந்த‌ நொடிக்காக! சமீப காலமாகவே இப்படியொரு சந்திப்பு என்றாவது ஒருநாள் நிகழும்‌ ...மேலும் வாசிக்க

11

நினைக்காத நேரமேது - 11

நினைவு-11 தன்னவனைப் பார்த்து விட்டால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் இருக்க முடியாதென்று நினைத்து தான் திவ்யாவும் இவ்வளவு நாட்களாக ஒதுங்கி இருந்தது. அதற்கே அவள் சொல்லிமாளாது. ஆனால் தன்னவனை நேரில் சந்தித்தப் பிறகு, இனியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. சாப்பாட்டைக் கிண்டிக்கொண்டே யோசனையோடு திவ்யா அமைதியாக இருக்க, "ஏன் திவி? இப்படி வாழ்ற வயசுலவெளிநாட்டுல போய் உக்காந்துகிட்டு காச மட்டும் சம்பாரிச்சு என்ன பண்ணப் போறீங்க?" திவ்யாவைப் பற்றி அவள் கூறியதை வைத்துக் கேட்டாள் நந்தினி. 'என்ற வூட்டுக்காரர் வெளிநாட்டுல‌ இல்லைங்கோ, எம்.டி. ரூம்ல தான் உக்காந்திருக்காருங்கோ அம்மணி!' என்று கூறினால் எப்படி‌ இருக்கும் என்று எக்குதப்பாக நினைத்தது திவ்யாவின் மனம். அப்படி நினைத்துப் பார்த்தவளின் முகத்தில் சட்டென்று சிறு புன்னகை முகத்தில் தோன்றவும் செய்தது. அதைப் பார்த்து தோழியின் மேல் கோபம் கொண்டாள் நந்தினி. "நான் என்ன இப்ப காமெடியா பண்ணேன்? காலம் ...மேலும் வாசிக்க

12

நினைக்காத நேரமேது - 12

நினைவு-12 "ம்ம்மாஆஆ... என்னம்மா இது?" வீடே அலறுமாறு கத்திக் கொண்டே இருந்தாள் திவ்யா. "ஏன்டி இப்படிக் கத்துற?" பட்டுப் புடவையின் மடிப்பை நீவியவாறேக் கேட்டுக்கொண்டு சரஸ்வதி "ஏம்மா… வெறும் சாம்பார மட்டும் வச்சுட்டுப் போனா எப்படிம்மா சாப்டறது? பொட்டோட்டோ ஃப்ரை எங்கம்மா?" ஆத்திரத்துடன் கேட்க, "அடத் தீனிப் பண்டாரமே… இதுக்கா இப்படிக் கத்துன? ஏற்கனவே அந்த சைஸ்ல தான இருக்க? இதுல எப்பப்பாரு உருளைக்கிழங்கு ஃப்ரை கேக்குது." என்று கன்னத்தில் இடித்தார். "வெறும் சாம்பார் சோத்த எப்படிம்மா சாப்டறது, தொட்டுக்க ஒன்னுமில்லாம?" "சாப்பிடும் போது அப்பளம் போட்டுக்க… ஃப்ரிட்ஜ்ல தயிர் இருக்கு. ஊறுகா எடுத்துக்க… ஏழு கழுத வயசாகுது இன்னும் வெளிய கிளம்பினா எல்லாம் செஞ்சு வச்சுட்டுப் போக வேண்டியதா இருக்கு." என்று பேச்சோடு பேச்சாக நொடித்துக் கொண்டார் சரஸ்வதி. "அப்பா... இங்க பாருங்கப்பா... குழம்ப மட்டும் வச்சுட்டுப் போறாங்க, கேட்டா நீயே செஞ்சுக்கனு சொல்றாங்கப்பா." என்று கிளம்பித் தயாராகி ...மேலும் வாசிக்க

13

நினைக்காத நேரமேது - 13

நினைவு-13 இரவு நேரமாதலால் அங்கு நடந்த விபத்து அறியப்பட சற்று தாமதமானது. அதற்குள் அவ்வழி சென்ற நம்நாட்டு இரு குடிமகன்கள், கீழே கிடந்தவனை, உயிர் சோதனை போல் சென்று, யாரும் அறியா வண்ணம், விபத்திற்கு உள்ளானவனின் செயின், பர்ஸ் முதலியவைகளை கைப்பற்றிக் கொண்டனர். மோதிரம் சற்று இறுக்கமாக இருந்ததால், கழற்றுவதற்குள் கூட்டம் சேர ஆரம்பிக்க, நல்லவர்களாக நூற்றியெட்டுக்கு அழைப்பை விடுத்து விட்டு, சற்றுத் தொலைவில் கிடந்த அவனுடைய பேக்கையும் எடுத்துக் கொண்டு நழுவினர். 'இருட்டறதுக்குள்ள வந்துடறதா சொன்னாங்க... இன்னும் காணோம். வீட்ல புள்ள தனியா பயந்துகிட்டு இருப்பாளே, சீக்கிரம் வரணும்னு எண்ணம் இருக்கா? நம்மகிட்ட மட்டும் இப்படியிரு அப்படியிருனு ஆயிரத்தெட்ட சொல்ல வேண்டியது.' திவ்யாவின் மனம் இன்னதென்று முறையில்லாமல் வெடுவெடுத்துக் கொண்டிருந்தது. பெற்றோர் வரத் தாமதமானதால் வந்த படபடப்போ? இல்லை அவர்களுக்கு நேர்ந்த முடிவை உள்ளுணர்வு உணர்த்தியதோ? ஏதோ ஒன்று அவளை அலைக்கழித்தது ஃபோனில் அழைப்பு மணி ஒழிக்க, அழைப்பை ...மேலும் வாசிக்க

14

நினைக்காத நேரமேது - 14

நினைவு-14 தனித்திருந்தவன் தன்னைச் சுற்றி மீண்டும் ஆழ்ந்து கவனிக்க, அது மருத்துவமனை என்பதும், தனக்கு சிகிச்சை நடைபெறுகிறது என்பதும் மெதுமெதுவாகப் புரிய ஆரம்பித்தது. எனினும் எவ்வளவு தான் யாரென்பது மட்டும் அவனுக்கு சுத்தமாய் பிடிபடவில்லை. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க தலைவலி தான் மிஞ்சியது. ‘கடவுளே இதென்ன சோதனை? நான் யார்!” உள்மனதின் அலறல் அவனது மனதை வண்டாய் குடைந்து பாடாய்படுத்தியது. அது அரசு மருத்துவமனை. துணைக்கும் யாருமில்லை. உடனிருப்பவர்களின் உந்துதலை, பணியாளர்களுக்கான சிறப்பு கவனிப்புகளைப் பொறுத்து தான் நோயாளிக்கும் சிறந்த கவனிப்பும் இருக்கும். அதிலும் அந்த மருத்துவமனையில் பிரசவம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும் வகையில் இருந்தது. சிறப்பு சிகிச்சைக்கோ, மேல்மட்ட அறுவை சிகிச்சை முதலியவற்றிற்குநோயாளிகள் கோவை ஜி.எச்.தான் அனுப்பி வைக்கப்படுவர். விபத்து நடந்த இடம் அவினாசிக்கும் கோவைக்கும் இடையில் என்பதால் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். மருத்துவருக்கும் அவன் நிலைமை சிறிது சந்தேகத்தை ...மேலும் வாசிக்க

15

நினைக்காத நேரமேது - 15

நினைவு-15 "மாமா... சத்யா ஃபோன் ஏதும் பண்ணினானா?" பெரும் கவலையுடன் கேட்டார் மங்கையர்க்கரசி. இதோடு இவர் கேட்பது நூறாவது முறையோ ஐநூறாவது முறையோ! அது அந்த கூட தெரியாது. எத்தனை முறை கேட்டாலும் தனது பதில் ஒன்றே தான் என்ற முறையில் பதிலளித்தார் தேவானந்தன். "இல்லைமா, உனக்கும் பண்ணலியா?" இரவு சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தவாறே மங்கையர்கரசி, மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். "எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான் மாமா! போனா... போன வேலையை முடிச்சோமா வந்தோமானு இருக்கணும். அப்படியே நாடோடி மாதிரி ஊர் சுத்த கிளம்பிற வேண்டியது." "இந்தக் காலத்துப் பிள்ளைகளை ரொம்ப இறுக்கிப் பிடிக்க‌ முடியாதும்மா. பிடிக்கவும் கூடாது. அதுவும் என் பேரன் தகப்பன் சாமி மாதிரி. சின்ன வயசுலயே அதிகப்படியான அனுபவம். எது செய்தாலும் சரியாத்தான் இருக்கும்." மெச்சுதலாய் சொன்ன மாமனாரின் சமாதானங்கள் எதுவும் தாய் மனதை குளிர்விக்கவில்லை. தாத்தாவிற்கு பேரனின் மீது அபார நம்பிக்கை. ...மேலும் வாசிக்க

16

நினைக்காத நேரமேது - 16

நினைவு-16 "திவிக்கா சிரிக்காதிங்க. ஒரு அக்காவா இந்த எடத்துல என்ன சொல்லணும்?" தோரணையுடன் சதீஷ் கேட்க, "என்னடா சொல்லணும்?" திவ்யாவும் குறும்புப் பேச்சில் இணைந்து கொள்ள, கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு சொல்லணுமா... இல்லையா?'' எதிர்கேள்வி கேட்டு அவளின் வாயடைத்தான் சதீஷ். "எப்படிடா மனசறிஞ்சு பொய் சொல்லுவாங்க? அப்படி சொன்னா நம்ம மனசே நம்மைச் சுடும்னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்காருல...." என்று தேவி நக்கலடிக்க, "ம்ம்... அவரே தான் நன்மைக்காக பொய் சொல்லலாம்னும் சொல்லியிருக்கார்." என்றான். “பாருங்க க்கா... இவன் இஷ்டத்துக்கு ரெண்டு வரி திருக்குறளை எப்படியெல்லாம் யூஸ் பண்ணிக்கிறான்னு!” தேவி கேலி பேசிய நேரத்தில், "அப்படின்னா பொய்யாவாவது நீ அழகன்னு சொல்லச் சொல்றியா?" என்றாள் திவ்யா. "ஒரு பொய்யாவது சொல் அக்கா… அழகன் நான் தானென்று… அந்தப் பொய்யில்… உயிர் வாழ்வேன்," என்று அவன்‌ பாட ஆரம்பிக்க, "டேய், போதும்டா நிப்பாட்டு. வரவர உன் இம்சை தாங்கலை." என்று ...மேலும் வாசிக்க

17

நினைக்காத நேரமேது - 17

நினைவு-17 தேவானந்தன் முடிந்த அளவிற்கு தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார், தனது பதட்டம் மருமகளை பாதித்து விடக்கூடாது என்பதற்காக! தாலிக்கொடி உறவை தொப்புள் கொடி உறவையே பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்பவள். தனக்கும் அதே நிலைமை தான், எனினும் பதறிய காரியம் சிதறும் என்ற அனுபவ அறிவு கொண்டு நிதானமாக நிலைமையைக் கையாள முயல்கிறார். மங்கையர்கரசி மகனைப் பற்றி விசாரிக்கும் பொழுதே, ஆறுதலாக பதிலுரைத்தாலும், பொறுப்புணர்ந்த பேரன், 'இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருக்க மாட்டானே!' என்ற எண்ணம் தோன்றத் தான் செய்தது. எனினும் பேரன் வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறைகளோ இவ்வாறு செல்வது வழக்கம் தானே. முன்பெல்லாம் தனியாக இதற்கென திட்டமிட்டு செல்பவன், தாத்தா மற்றும் அன்னையின் தவிப்பு காரணமாக வியாபார நோக்கமாக செல்லும் இடங்களிலேயே, தனது ரோட் ட்ரிப்பை வைத்துக் கொள்கிறான். எப்பொழுதும் வியாபாரம் பற்றியே சிந்திப்பவனுக்கு கொஞ்சம் மாற்றமும் தேவை தானே என்று ...மேலும் வாசிக்க

18

நினைக்காத நேரமேது - 18

நினைவு-18 மறுபடியும் திவ்யா சோக மோடுக்குப் போக அதைக் காணச் சகிக்காதவனாய், கேலி பேச ஆரம்பித்தான் சத்யானந்தன். "ஏங்க! காஃபி கொடுத்து டெஸ்ட் பண்ணுனீங்க… வேற என்னை எலியாக்க?" என்றவனிடம், "சாரி கண்ணன்! ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்டுதான். எலி தாங்க வேண்டாமா? அதுக்கு ஏதாவது ஆகிட்டா இன்னொன்றுக்கு நான் எங்கே போறது? வான்டடா இப்படி வந்து சிக்குற எலி கிடைக்கறது ரொம்ப ரேர் கண்ணன்." அவள் கூறியதைக் கேட்டு அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள், வெகு நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேசியதில். எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த பாப்பாத்தியும், திவ்யாவின் சிரிப்பைக் கேட்டு, 'மறுபடியும் இந்தப்புள்ள பழைய மாதிரி கலகலப்பாக மாறணும்.' என்று எண்ணிக் கொண்டார். காஃபியைக் குடித்துவிட்டு கிளம்பியவன், பாப்பாத்தியை அழைத்து, "தேவையில்லாம வெளிய வராதிங்க ஆத்தா! கேட்டை நல்லா பூட்டிக்கோங்க! அவங்க சொந்தக்காரங்க யாராவது வந்துருவாங்க. திவ்யாவை வேற நல்ல ட்ரெஸ்ஸா ...மேலும் வாசிக்க

19

நினைக்காத நேரமேது - 19

நினைவு-19 சண்முகமும் லட்சுமியும் ஓரளவுக்கு திவ்யா வீட்டில் பொருத்திக் கொண்டனர். பாதி வெள்ளாமையில் இருந்த விளைநிலங்களை ஆட்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு திவ்யாவின் வீட்டிற்கு குடி விட்டார்கள். அவர்களிடம் பிள்ளைகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, திவ்யா அக்காவுக்காக சிறிது நாள் தங்கி விட்டுப் போகலாம் என சொல்லப்பட்டது. தோட்ட வீட்டில் விசாலமாக இருந்தவர்கள், சற்று சிரமப்பட்டாலும் பழகிக் கொண்டனர். சண்முகமும் பிள்ளைகளை, எந்த இடத்திலும் பொருத்திப் போகும்படியாகத் தான் வளர்த்திருந்தார். எனினும் புது இடம் சில பிள்ளைகளுக்கு பிடித்தமாயும், சில பிள்ளைகளுக்கு பிடித்தமின்மையாகவும். "அதென்னமா கணக்கு? பதினஞ்சு பிள்ளைக..." என்று கண்ணன் எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைக்க உதவிக் கொண்டே கேட்டான். "அதுவா கண்ணா... இவர் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பனிரெண்டு பிள்ளைகளாம்! அந்த காலத்துல அதெல்லாம் சாதாரணம். இவரும் சின்னப் பிள்ளையா இருக்கும் போது தாத்தாகிட்ட, நான் உங்களை முந்தி காட்டுறேனு பந்தயம் கட்டுனாராம்." என்று நமட்டுப் ...மேலும் வாசிக்க

20

நினைக்காத நேரமேது - 20

நினைவு-20 காருண்யா பல்நோக்கு மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காத்திருப்போர் வரிசையில் சண்முகம், கண்ணன் மற்றும் திவ்யா பெரும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது. ‘அவர் என்ன கூறப் போகிறார்?’ என்ற பதற்றம் சண்முகம் முகத்தை விட, மற்ற இருவர் முகத்திலும் அதிகமாகத் தெரிந்தது. ஏற்கனவே அவரை சந்தித்து, அவரது பரிந்துரையின் பேரில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டோடு, அவரை சந்திக்க இப்பொழுது காத்திருக்கின்றனர். "கண்ணன்!" மணியடித்து பெயர் அழைத்தவுடன் மூவரும் உள்ளே சென்றனர். டாக்டர் நாராயணன்... அறுபதுகளைக் கடந்த படிப்பும் அனுபவமும் கற்றுத் தந்த, நிதானம் நிறைந்த முகம்.அறைக்குள் வந்தவர்களை ஆழ்ந்து பார்த்தார். மூவருக்கும் இருக்கையைக் காட்டியவர், ரிப்போர்ட்டை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தார். சில நிமிட பார்வையிடலுக்கு பிறகு நிமிர்ந்தவர், "இன்னும் கண்ணனோட குடும்ப விபரம் எதுவும் தெரியலையா சண்முகம்?" அவனின் முந்தைய விபத்து விபரம் தெரிந்தவராகக் கேட்க, "இன்னும்‌ எதுவும் ...மேலும் வாசிக்க

21

நினைக்காத நேரமேது - 21

நினைவு-21 மறுநாள் வழக்கம்போல் வேலைகள் நடக்க, எழுந்து வந்தவளைப் பார்த்தவன், அவளது முகத்தில் சிறுவாட்டத்தைக் கண்டான். கல்லூரி கிளம்பும் அறிகுறி அவளிடமில்லை. "திவ்யா! இன்னைக்கு காலேஜ் எனக் கேட்டான் கண்ணன். "இல்ல கண்ணன்... போர்ஷன் முடிச்சுட்டாங்க! இனி படிக்கிற வேலை தான். அது தான் பிள்ளைகளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு லீவு போட்டுட்டேன்!" என்று சோர்வாக கூறியவள், சமையலில் உதவ அடுக்களை சென்றுவிட்டாள். எனினும் அவள் முகத்தில் பழைய சுரத்தையில்லை என்பதைக் கவனித்தான் கண்ணன். பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், கண்ணனும் கடைக்கு கிளம்பினான். அனைவரும் கிளம்பியவுடன், திவ்யாவும் செல்லாத்தாளை உடன் அழைத்துக்கொண்டு வெளியே சென்று வந்தாள். மதியம் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தான். பவளமல்லி திட்டில் திவ்யா அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், சாமான்களை உள்ளே வைத்து விட்டு அவ்விடம் வந்தான். அவள் முகத்தைப் பார்க்க ஏதோவொரு மாற்றம். ஆனால் நன்றாக இருந்தது. உற்றுப் பார்க்க அவள் மூக்கில் ...மேலும் வாசிக்க

22

நினைக்காத நேரமேது - 22

நினைவு-22 தலையில் நெருக்கக் கட்டிய முல்லைப்பூச்சரம், ஆரஞ்சும் இளஞ்சிவப்பும் கலந்த சல்வாரில் அவனது தேவதை பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்தாள். மாடியில் இருந்தவாறு கைப்பிடிச் சுவரில் குனிந்து குற்றி ஊன்றியவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் கண்ணன். கையில் அவன் மாலையில் கொடுத்த வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோருடன் அவளும் சேர்ந்து எடுத்த நிழற்படம் பென்சில் ஓவியமாய் அவள் கைகளில், நேர்த்தியாக வரைந்து கொடுத்து இருந்தான். பிள்ளைகள் மாலை பள்ளி விட்டு வந்ததும் தேவியை அழைத்த கண்ணன்,"தேவி உனக்கு பூக்கட்ட தெரியுமா?" எனக்கேட்க, "மாலைக்கட்டே கட்ட தெரியும்ண்ணே... யூ டியூப்ல பாத்து கத்துக்கிட்டேன்." என்றாள். "அதை‌ இன்னொரு நாளைக்கு கட்டிக்கலாம். இப்ப, கொடியில் இருக்க முல்லை பூவைப் பறிச்சு தலையில் வைக்கிற மாதிரி சரமா கட்டிக் கொடுடா ம்மா!" என்று கேட்க, "எதுக்குண்ணே? புதுசா பூவெல்லாம் கட்டச் சொல்றீங்க! கடையில பூஜைக்கு வேணுமா? இன்னைக்கி வெள்ளிகிழமை கூட இல்லியே?' என்று கேள்வி ...மேலும் வாசிக்க

23

நினைக்காத நேரமேது - 23

நினைவு-23 கையில் இருந்த சாம்பார் வாளி தெறித்து கீழே விழுந்து சிதறி இருந்தது. கண்ணன் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தவாறு எதிரில் நின்றவரைப் பார்க்க, மங்கையர்க்கரசியோ எரிமலைக் கொதித்துக் கொண்டிருந்தார். மனதின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை அவருக்கு... ‘எங்கிருக்கிறானோ… எப்படியிருக்கிறானோ…’ என்று தெரியாமல் இத்தனை நாட்களாக தவித்த தவிப்பு, மகனை நேரில் கண்டவுடன் கோபமும் அழுகையுமாக வெளிப்பட்டது. காரை விட்டு இறங்கி, உள்ளே நுழைந்தவரின் கண்களில் பட்டது, உணவுக்கூடத்தில் தோளில் சிறு துண்டும், சாதாரண கைலி டிசர்ட்டில், சாம்பார் வாளியுடன் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப, லட்சுமிக்கு உதவிக் கொண்டு இருந்த தன் மகனைத் தான்! துக்க வீட்டிற்கு சென்றவர்கள் இன்று காலையில் தான் வந்தனர். திவ்யாவும் கல்லூரிக்கு செல்லக் கிளம்பி அப்பொழுது தான் வெளியே வந்தாள். அவர்களின் பரபரப்பான தினசரி ஆரம்பமாகி இருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த களேபரம். "என்னடா சத்யா இது... பிச்சைக்கார வேஷம்?" தாளமுடியாமல் கோபத்துடன் கேட்டார் ...மேலும் வாசிக்க

24

நினைக்காத நேரமேது - 24

நினைவு-24 எல்லோர் முகத்திலும் ஆச்சரியத்தின் வெளிப்பாடு அப்பட்டமாகத் தெரிய, நொடிநேரம் பேசவும் மறந்தனர். "இவ்ளோ பெரிய ஆளுங்களா இருக்கீங்க... எப்படி என்னை இவ்வளவு நாளா தேடாம என்று கண்ணன், தானாகவே முன்வந்து கேட்டான். "நாங்க உன்னை சூரத்துலயும், மும்பை, கோவானுல தேடிட்டு இருந்தோம். நீதான் நாடோடி மாதிரி அப்பப்ப‌ ரோட் டிரிப் போறவனாச்சே!" என்று மங்கையர்க்கரசி கூறினார். "அம்மா! நாங்க உங்களை எப்படி நம்புறது?" என்ற சண்முகம் கேள்விக்கு, "சார்… கூகுள்ல போட்டாலே இவன் விபரம் வருமே! இளம் தொழிலதிபர்கள் லிஸ்ட்ல முதல் ஆளா இருப்பானே! நீங்க எப்படி கண்டுபிடிக்காம விட்டீங்க?" என்ற விஷவாவின் கேள்விக்கு, "நாங்க, எங்க கண்ணனை இவ்ளோ பெரிய ஆளா எதிர்பாக்கல தம்பி." என்றார் லட்சுமி. "இவன் கையில இருக்கிற மோதிரத்துல எஸ்.ஏ.னு லெட்டர்ஸ் இருக்கும். சத்யானந்தன் தான் அது. அவங்க அப்பா இறந்த பின்னாடி என்னோட மாங்கல்யத்துல செஞ்ச மோதிரம் அது." என்று மங்கையர்க்கரசி ...மேலும் வாசிக்க

25

நினைக்காத நேரமேது - 25

நினைவு-25 இரவு உணவுவேளை முடிந்து அவரவர் இடத்தில் அடைக்கலமாக, வெகுநேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான் கண்ணன். அவன் நினைத்தது போலவே திவ்யா திட்டில் தனியாக கவலையுடன் அமர்ந்திருந்தாள். கீழே இறங்கி அவளருகில் வந்தான். கண்களில் கண்ணீர் அவள் அழுததைக் கூற, அவனுக்கோ காரணம் புரியவில்லை. "தியா..." வார்த்தைக்கும் வலிக்குமோ என்றிருந்தது அவனின் அழைப்பு. "வாங்க!" என்ற அழைப்பு அவளின் உணர்ச்சியற்ற குரலில். "உன் கண்ணன்கிட்ட எதுக்கு தியா தயங்குறே? நானும் காலையில இருந்து பாக்குறேன். ஏதோ உன் மனசுல கெடந்து உழட்டுது. எதுவாயிருந்தாலும் உன் கண்ணன்கிட்ட சொல்லக்கூடாதா?" ஆற்றாமையாக‌ அவன் ‌கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் மேலும் கண்ணீர் வழிந்தது. "இப்படி எதுவும் சொல்லாம அழுதா எப்படிம்மா? ஒருவேளை நான், என் விருப்பத்தை சொன்னது பிடிக்கலயா?"‌ என்றவாறு அவளருகில் அமர்ந்தான். கண்களில் ஏக்கத்தோடு அவள் பார்க்க,"சொன்னாத் தானே தெரியும். இன்னும் என்னை நீ கண்ணானு ...மேலும் வாசிக்க

26

நினைக்காத நேரமேது - 26

நினைவு-26 ஒருவழியாக கண்ணனின் அறுவைசிகிச்சை முடிந்திருந்தது. தீவிரசிகிச்சை பிரிவில் வெளியே அனைவரும் காத்திருந்தனர். அனைவரிடமும் பதற்றத்துடன் கூடிய அமைதியே நிலை கொண்டிருந்தது.சண்முகமும், லட்சுமியும் இருபுறமும் அமர்ந்திருக்க, அவளவன் கண் விழிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள். மங்கையர்க்கரசியும் திவ்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். மகனின் அதிரடி முடிவு அவருக்குமே ஆச்சரியம்தான். நேற்று வரை மகனுக்கு உதவிய பெண்ணாக நினைத்துக் கொண்டிருந்தவள், இன்று அவனின் மனைவியாக, தனக்கு மருமகளாக மாறியிருந்தாள். அவள் மீது மகன் கொண்ட காதலின் தீவிரம் அப்பட்டமாகப் புரிந்தது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்க அம்மணி!’ என்று முன்தினம் இரவில் திவ்யாவிடம் கூறியவன், அடுத்து எடுத்த முடிவுகளெல்லாம் அதிரடிதான். விடிந்தவுடன் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு, பிள்ளைகளும் கிளம்பிவிட, திவ்யாவை கைபிடித்து இழுத்து கொண்டு சண்முகம் மற்றும் லட்சுமியின் முன் வந்தவன், "ம்மா… நான் திவ்யாவை விரும்புறேன்… அவளும் தான்!" என்றான் தடாலடியாக. இருவரும் அதிர்ச்சியுடன் திவ்யாவைப் பார்க்க, "அவளை ஏன் பாக்குறீங்க? நேத்துல ...மேலும் வாசிக்க

27

நினைக்காத நேரமேது - 27

நினைவு-27 மகனது திடீர் திருமணத்தை அறிந்து மங்கையர்க்கரசி முதலில் அதிர்ந்தாலும், அவனது விருப்பமே முக்கியமென்று சமாதானம் ஆகிவிட்டார். அவரைப் பொறுத்தவரை மகன் கிடைத்ததே போதும் என்றிருந்த அவனது ஆசையும், செயலும் பெரிதாகத் தெரியவில்லை. மறுநாள் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடாக அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டு, அதிகாலை அறுவை சிகிச்சை செய்வதற்கு நேரமும் குறிக்கப்பட்டது. அது விஐபி அறை என்பதால் அனைவருமே அங்கிருந்தனர். சற்று நேரத்தில், பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என சண்முகமும், லட்சுமியும், காலை வருவதாகக் கூறி விட்டுக் கிளம்பினர். "சத்யா... நானும் ஆன்ட்டியும் போய் சாப்பிட்டு வர்றோம். வரும்போது சிஸ்டர்க்கு வாங்கிட்டு வந்துர்றோம்." என்று கூற, மங்கையர்க்கரசியும் விஷ்வாவுடன் கிளம்பி விட்டார். சத்யாவுக்கு எளிமையான மருத்துவமனை உணவு வழங்கப்பட்டது. அவன் பெட்டில் அமர்ந்திருக்க, திவ்யா அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சேலையை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்திருந்தாள். "தியா..." "ம்ம்ம்…" "இப்பவும் எதுவுமே பேசாம என்னை சோதிக்கிறே! ...மேலும் வாசிக்க

28

நினைக்காத நேரமேது - 28

நினைவு-28 மங்கையர்க்கரசி கெஞ்சலான குரலில் பேச ஆரம்பித்தார். "கொஞ்சம் பொறுமையா சொல்றதைக் கேளுங்கண்ணா! திவ்யாவைப் பத்தி சொன்னா அவளோட பெத்தவங்களைப் பத்தியும் சொல்ல வேண்டிவரும். ஏற்கனவே தான் ஆக்சிடன்ட் ஆச்சுனு நினைச்சுட்டிருக்கான். என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியலை. அவங்க இப்ப உயிரோடவே இல்லைனு தெரிஞ்சா, அந்த ஸ்ட்ரெசும் சேர்ந்துக்கும். தன்னால தான் ரெண்டு உயிர் போயிருக்குனு தெரிஞ்சா... மேலும் மன அழுத்தம் அதிகமாகும். அதுக்கும் மேல காதல், கல்யாணம் எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி அவனை ரொம்ப அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டாம்னு நினைக்கிறேன்." என்றவர், திவ்யாவிடம், "எனக்கு என் பையன் இப்படியே வேணும்மா... சில விஷயங்களை காலத்தின் முடிவுக்கு விட்டுருவோம். அவசரப்பட்டு முடிவெடுத்து, அதிகமா குழம்பிட்டான்னா, யாருக்கும் இல்லாம ஆகிருவானோனு பயமாயிருக்கும்மா!" என்று கரகரத்தார். அவருக்கு எங்கே தன்மகன் மீண்டும் அம்னீசியாவிற்கு சென்று விடுவானோ என்கிற பயத்தோடு, ஞாபகங்களை மீட்டெடுப்பதற்காக அதிகமாக யோசித்து வேறு மாதிரியாக குழம்பி விடுவானோ என்ற பயமும் சேர்ந்து ...மேலும் வாசிக்க

29

நினைக்காத நேரமேது - 29

நினைவு-29 இப்பொழுதெல்லாம்‌ மகனை சற்று உன்னிப்பாய் கவனிக்கிறார் மங்கையர்க்கரசி. அவருக்கு தான் தெரியுமே... திவ்யா, ராமநாதன் ஆஃபிஸில் தான் வேலை பார்க்கிறாள் என்று! அவளை சந்தித்த மகனின் மனநிலை என்னவென்று கூர்ந்து கவனிக்கிறார். மனதை அலைபாய விடாமல் இருக்க எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை இருப்பது போல் ஏற்பாடு செய்து கொண்டான் சத்யானந்தன். ஆனாலும் இரவு என்று ஒன்று வருமே! குளிர்நிலவும், வாடைக்காற்றும் தன்னியல்பு மாறி எதிர்மறையாக வேலை செய்து நெடுநல்வாடையாகிப் போகும் என்றா நினைத்தான்! விஷ்வாவிடம் இது பற்றி பேசலாம் என்றால், அவன் மனசாட்சியை விட கேவலமாகத் திட்டுவானே என்று எண்ணிக் கொண்டான். அடக்க நினைப்பது தான் ஆணவம் கொண்டு ஆடும். எனவே அதை கடக்க நினைத்தான் சத்யா. அவளை நினைக்கக் கூடாதென்று எண்ணியே எந்நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தான். இனிமேல் இங்கு வரக்கூடாது என்றவனது, வைராக்கியம் பிரசவ வைராக்கியமாக மாறி அடுத்த வாரத்திலேயே அவனை ...மேலும் வாசிக்க

30

நினைக்காத நேரமேது - 30

நினைவு-30 மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் தனிமையே போ… இனிமையே வா… நீரும் வேரும் வேண்டும் காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் விரகமே ஓ நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும் பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா… வா… வா… தன்முன் தெரிந்த லட்சுமியின் காலடியைப்‌ பார்த்தும், பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்த திவ்யா நிமிரவில்லை. தன்நிலையிலேயே அசையாது அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்து கொண்டவர், அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டார். இரண்டாம் சாமம், கொட்டும் பனி... வெட்டும் குளிர். வெண்பட்டாய்‌ நிலவொளி, ஏங்க வைக்கும் ...மேலும் வாசிக்க

31

நினைக்காத நேரமேது - 31

நினைவு-31 வாழ்வாதாரத்திற்கு படியளக்கும் எம்.டி. ஆயிற்றே... நேரிடையாக கேட்க முடியாமல் ஜாடை‌ பேசிச் சென்றான் ராகவன். தன்னைப்‌போல் தான் மற்றவரும் என்ற துரியோதனன் எண்ணம்‌ கொண்டு. கேட்டு கையிலிருந்த பேனா பறந்து போய் சுக்கு நூறாய்ச் சிதறியது, சத்யானந்தன் சுவற்றில் வீசியடித்த வேகத்தில். இரு கைகளைக் கொண்டு தலை தாங்கிக் கொண்டான். ஈசன் தலை ஏறிய கங்கையென, மங்கை தான் அவன் தலையை விட்டு இறங்க மறுக்கின்றாளே! அவனுள் சகம் ஆகிப்போன சக்தி அவள் என்று இந்த பித்தனுக்குத் தான் தெரியவில்லையே! வெளியேறி வந்த திவ்யாவும் தன் இருக்கையில் சென்று அமரவும் இல்லை, வேலையத் தொடரவும் முயற்சிக்கவில்லை. நந்தினியிடம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. தனது கைப்பையை எடுத்துக் கொண்டு‌ வெளியேற எத்தனித்தாள். அப்போது அவ்விடம் வந்த ராகவனோ, "என்ன திவி? வண்டியை சர்வீஸ்க்கு விட்டுட்டீங்க போல!" அவனின் இரட்டை அர்த்தக் கேள்வியில், உள்ளம் தீப்பற்ற, அவனை முறைத்துப் பார்க்க, "இல்ல... ...மேலும் வாசிக்க

32

நினைக்காத நேரமேது - 32

நினைவு-32 காலை ஜாகிங் முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க வீடு வந்தான் சத்யானந்தன். தன் பேரனின் மீது பார்வையை ஓட்டியவாறே அவனது தாத்தா அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடைப் பயிற்சியை செய்து கொண்டிருந்தார். இதமான இளங்காலையில்,சூரியனின் இளங்கதிரின் செவ்வொளி பட்டு, முறுக்கேறிய புஜங்கள், வெண்கலச் சிலை என மின்ன, இடுப்பில் வலக்கை ஊன்றி, நெற்றி வியர்வையை இடக்கை ஆட்காட்டி‌ விரல் கொண்டு துடைத்து சுண்டிய பேரனின் தோரணையைப் பார்த்தவர், "அழகன்டா!" என்று சிலாகித்தார் பெரியவர். "தாத்தா! என்னைய சைட் அடிச்சது போதும்!" எனக்கூறி சிரித்தவன், "நீங்க எத்தனை எட்டு போட்டாலும் எவனும் லைசென்ஸ் தர மாட்டான்." என எட்டுவடிவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவரை பேரனும் கேலி பேசினான். "டிக்கெட் வாங்க வேண்டிய வயசுல லைசென்ஸ் வாங்கி நான் என்னடா பண்ணப் போறேன்? நான் லைசென்ஸ் வாங்குறது இருக்கட்டும். நீ எப்ப ராமநாதன் பேத்தியப் பாக்கப் போற?" பேரன் மனது மாறுவதற்குள் அடுத்தகட்ட வேலையை ...மேலும் வாசிக்க

33

நினைக்காத நேரமேது - 33

நினைவு-33 மங்கையர்க்கரசியின் பேச்சில் நியாயம் தென்பட்டாலும் தங்கள் வீட்டுப் பெண்ணிற்காக மட்டுமே யோசிக்கும் நிலையில் இருந்தார் சண்முகம். ''நீங்க பயப்பட இது ஒன்னும் சின்னப் பிள்ளைக இல்லம்மா... ரெண்டு பேரோட வாழ்க்கை. நாங்க அப்படியே விட முடியாது. அன்னைக்கும் நீங்க சொன்னீங்களேனு தான் அமைதியா போனோம். இன்னைக்கு நீங்க வரலைன்னா நாங்க அங்க வந்திருப்போம்." என்று திட்டமாக கூறிமுடித்தார். இப்படியே எத்தனை நாட்களுக்கு விடமுடியும்? நேற்றைய திவ்யாவின் நிலை பார்த்து இன்று எப்படியும் மங்கையர்க்கரசியிடம் போய் பேச வேண்டும் என லட்சுமி கணவரிடம் கூறியிருந்தார். "எனக்கும் சீக்கிரம் சத்யாகிட்ட இதைப் பத்தி பேசிடணும். அவனோட தாத்தா தீவிரமா பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சுட்டாரு! ராமநாதன் சாரோட பேத்திய சத்யாவுக்கு பேசத் தயாரா இருக்காங்க... நேத்து அதுக்கு தான் ஜாதகம் பாத்தாங்க. அதுல தான் நேரம் சரியில்லை, கொஞ்சநாள் போகட்டும்னு சொல்லி இருக்காங்க!" என்றார் மங்கையர்க்கரசி. இதைக் கேட்டு திவ்யாவிற்கு தான் அழுவதா ...மேலும் வாசிக்க

34

நினைக்காத நேரமேது - 34

நினைவு-34 தன்போக்கில் வீட்டிற்குள் நுழைந்த சத்யானந்தனை இழுத்துப் பிடித்து, டேய் சத்யா! எங்கே வந்திருக்க தெரியுமா? அதிர்ச்சி விலகாமல் கேட்டான் விஷ்வா. ஓனரைப் பாக்க வந்திருக்கோம். என்னமோ தெரியாதவனாட்டம் கேக்குற! என்று மெத்தனமாக சத்யா பதில் பேசினான். புரோக்கர் கூறியதை எல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட, அது திவ்யாவின் இடம் எனப் புரிந்தது விஷ்வாவிற்கு. 'அதுக்கு உன் ஆஃபிஸூக்கு இல்லடா போயிருக்கணும். ஓனர் அங்க தானே இருக்கு. உனக்கு தான்டா மாமியார் வீட்டுக்கு வந்திருக்கோம்னு தெரியல.' விஷ்வாவின் மைன்ட் வாய்ஸ் சரமாரியாக நக்கலடித்துக் கொண்டிருந்தது. வெளிய நின்று பேசிக் கொண்டிருந்தனர். கேட்டைத் திறந்த விஷ்வா, எதுக்கும் வலது காலை எடுத்து வச்சு வாடா! எனக் கூற, நானென்ன மாமியார் வீட்டுக்காடா வந்திருக்கேன்... வலது காலை எடுத்து வச்சு வர்றதுக்கு? என்று சத்யாவின் வாய்மொழியே நிலைமையை உரைத்தது. ‌யாரு கண்டா? எப்ப எது நடக்கும்னு நம்ம கையிலயா இருக்கு? ...மேலும் வாசிக்க

35

நினைக்காத நேரமேது - 35

நினைவு-35 சத்யானந்தனின் மனதிற்குள் குழப்ப வெள்ளோட்டம் சுனாமியாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. என்ன செய்தும் அதன் வேகம் தணிந்த பாடில்லை. ஆயிரமாயிரம் கேள்விகளுடன் அங்கிருந்த அனைவரையும் பார்த்திருந்தான். அப்ப... நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல? ... கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்கு மேல அம்னீசியாவால எல்லாத்தையும் நான் மறந்துருக்கேன்? .... இவங்க கூடத்தான்... அதுவும் இந்த வீட்ல தான் நான் இருந்திருக்கேன்! .... அப்ப தான் இவளை லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போயிருக்கேன்! ... இப்படி எல்லோரும் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்? தலையை அழுத்திக் கொண்டே தனது குழப்பத்திற்கெல்லாம் விடை தேடுபவனாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். யாருக்கும் பதில் சொல்லும் தைரியம் இல்லை. அமைதி விடுமுறை கேட்கப் பயந்து அன்றையதினம் ஓவர் டைம் பார்த்தது அங்கு. இத்தனை நாட்களாகத் தன்னைச் சுழற்றிய சூறாவளியின் திசை அறிந்து, சத்தியப் புயல் மையம் ‌கொண்டிருந்தது திவ்யாவின் வீட்டில்! சத்யாவின் தாத்தா தேவானந்தன் உட்பட அனைவரும் ...மேலும் வாசிக்க

36

நினைக்காத நேரமேது - 36

நினைவு-36 அடுத்து என்ன செய்வதென்று அந்த குடவுனில் பதட்டத்துடன் திவ்யா யோசித்து கொண்டிருந்த சற்று நேரத்தில் கதவில் தட்டும் சப்தம் கேட்டது. ‘சரி... நிலைமையை யூகித்த்ஹு இருந்து திறந்து விடுவார்கள், இனி பயமில்லை’ என்று நினைத்தாள். ஆனாலும் அது பொய்யாகிப் போயிற்று! நேரம் கடந்து கொண்டு இருந்ததே தவிர கதவு திறக்கப்படவில்லை. மசாலா அரைக்கும் அரவை மெஷினும் அங்குதான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் சற்று நேரத்திற்கெல்லாம் மசாலாக்களின் நெடி துணியையும் மீறி நாசியைத் தாக்கியது. தும்மலும் இருமலும் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு அவளைத் தாக்கி, சற்று நேரத்தில் திவ்யாவின் நுரையீரலுக்கு மூச்சுத்திணறலை அறிமுகப்படுத்தியது. *********************** "நந்தினி! திவ்யாவுக்கு கால் பண்ணுங்க! உள்ளே என்ன நிலமையில இருக்கானு கேக்கலாம்?" சத்யா தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் நந்தினிக்குக் கட்டளையிட, அவளும் பதட்டமாக தனது கைபேசியில் திவ்யாவின் நம்பரைத் தேட, "ம்ப்ச்... நம்பர் சொல்லுங்க... நான் கால் பண்றேன்" எனக் கேட்டான். ...மேலும் வாசிக்க

37

நினைக்காத நேரமேது - 37

நினைவு-37 வெகு நாட்கள் கழித்து அன்றைய இரவு உணவினை வெகு சந்தோசமாய் உண்டான் சத்யானந்தன். அங்கிருந்த பொழுதுகள் எல்லாம் பிள்ளைகளுடன் கேலியும் கிண்டலுமாய்ப் போனது. மங்கையர்க்கரசியும் அறிந்து மருமகளைப் பார்க்க பதட்டத்துடன் வந்திருந்தார். அப்பொழுதும் தன் தாயிடமும் சத்யா எதைப் பற்றியும் விரிவாக கேட்டுக் கொள்ளவில்லை. எதுவும் நினைவில் இல்லை எனினும் பிள்ளைகள் பேச்சுவாக்கில் ஒவ்வொன்றாகக் கூற ஓரளவிற்கு நடந்தவற்றை ஊகிக்க முடிந்தது அவனால். பிள்ளைகளோடு சாப்பிட்டு முடித்தவன், திவ்யாவின் அறைக்குச் செல்ல, அங்கு உணவும், மருந்தும் லட்சுமி கொடுத்துக் கொண்டிருக்க, அவளோ மறுத்துக் கொண்டிருந்தாள். “மூச்சு முட்டுது ஆன்ட்டி... என்னால முழுங்க முடியல!” என்று சிரமப்பட்டவளை பார்க்க பாவமாகத் தான் இருந்தது. “இப்படியே சொல்லிட்டு இருந்தா வியாதி குணமாகிடுமா? மெதுமெதுவா முழுங்க டிரை பண்ணச் சொல்லுங்க!” என்று மறுத்தவளை ஜாடைப் பேச்சில் ஒரு பார்வையால் அடக்கியவன், அருகே வந்து மாத்திரைகளை உடைத்துக் கொடுக்க, லட்சுமி அசந்தே போனார். ‘இனி ...மேலும் வாசிக்க

38

நினைக்காத நேரமேது - 38

நினைவு-38 சத்யானந்தனின் வீடு... உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் வளர்ச்சியை செல்வாக்கை பறைசாற்ற, அவர்களது கண்களில் மிரட்சி எட்டிப் பார்த்தது. "வாங்கப்பா! யாரப் பாக்கணும்?" வீட்டுக்குள் வந்தவர்களை மங்கையர்க்கரசி வரவேற்க, "ம்மா… வந்தவங்களுக்கும் டிஃபன் ரெடி பண்ணச் சொல்லுங்கம்மா!" சொல்லிக் கொண்டே, சட்டையின் முழுக் கைப் பகுதியை நீட்டி பட்டனைப் போட்டவாறே படிகளில் இறங்கி வந்தான் சத்யா. இரண்டு நாட்களாக சரியாக முகம் கொடுத்துப் பேசாத மகன் இன்று பேசியதில் ஆனந்தம் அந்த தாய்க்கு. அதே சந்தோஷத்தோடு வந்தவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்க ஆரம்பித்தார். வந்திருந்த நான்கு பேருக்கும் கிட்டத்தட்ட சத்யாவின் வயதுதான். சற்றே முன்னபின்ன இருக்கும். அதிக வித்தியாசம் இருக்காது. "எதுவும் வேண்டாம்‌." என்றனர் சங்கோஜமாக. "உக்காருங்க! ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க? இதுவும் உங்களுக்கு அத்தை வீடுதான்." அவர்களை உபசரித்தவாறே, அவர்கள் முன்னே வந்து நின்றவனைப் பார்த்து ...மேலும் வாசிக்க

39

நினைக்காத நேரமேது - 39

நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். மயங்கிய பாம்பாய் அவர்களும் அவனது பேச்சிற்கு எதிர்பேச்சின்றி அமைதியாய் நின்றனர். "முதல்ல... இந்த சார் மோர்னு கூப்புடுறத நிப்பாட்டுங்க... எனக்கு நீங்க மாமன் மகனுங்க தான். எப்பவும் மச்சானுங்க தான்! மலையேறப் ‌போனாலும் மாமன் மச்சான் தயவு வேணும்." என்று சத்யா கூறி விட்டுச் சிரிக்க, அவர்கள் தான் கொஞ்சம் கூசிப் போய் நின்றனர், இவன் வசதி, உயரத்தைப் பார்த்து. "அது வந்துங்க... உங்க அந்தஸ்து கௌரவம்..." என இழுக்க, “மனுஷனுக்கு மனுஷன் நேர்மையா இருக்கிறது தான் அந்தஸ்து கௌரவம்னு நான் நினைக்கிறேன். அது எப்பவும் உங்ககிட்ட இருக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன்” என்று தெளிவாய் பேசியவனை மறுத்துப் பேச வார்த்தை வரவில்லை. "சரி... சரி, சட்டுனு எப்படி சொந்தம் கொண்டாடறதுனு பாக்காதீங்க...நீங்க எல்லாரும் லட்சுமி ...மேலும் வாசிக்க

40

நினைக்காத நேரமேது - 40

நினைவு-40 காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேக்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை... காரின் சத்தமும் அதைத் தொடர்ந்து சில கணங்களில் நுழைவு வாயிலில் கேட் திறக்கும் சத்தமும் திவ்யாவிற்கு நன்றாகக் கேட்டது. வருவது யாரென்றும் அவளின் உள்ளம் உணர்த்தியது. பவளமல்லித் திட்டில் அமர்ந்திருந்தவளின் கைவிரல்கள் ஒன்றையொன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டன. கால்கள் தரையோடு அழுத்திக் கொண்டன. மயங்காதே என்றது மனம். எனினும் இரக்கமற்ற இதயம் அவனுக்காக வேகமாகத் துடிக்க, மானங்கெட்ட மனமோ மயங்க முற்பட்டது. கண்கள் அவனைக் காண துடித்துக் கொண்டன. நெருங்கி வரும் காலடியோசை, இவளின் இதய ஓசையை மத்தளமாய் மாற்றி இசைக்க, கண்களில் குளம் ...மேலும் வாசிக்க

41

நினைக்காத நேரமேது - 41

நினைவு-41 எளிய முறையில் பதிவுத் திருமணத்தை முடித்துக் கொண்டு முறைப்படி மருமகளாக புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் திவ்யா. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த மூன்று மனைவியை தன் கண் பார்வையில் வைத்துக் கொள்வதற்காக இத்தனை சீக்கிரமாய் இப்படியொரு ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தான் சத்யானந்தன். ஏற்கனவே கோவிலில் தாலி கட்டி திருமணம் முடித்திருந்தாலும் தொழில் நிர்வாகத்தில் மனைவியை அடையாளப் படுத்துவதற்காகவும் ஊராரின் கேள்விகளுக்கு பதிலாகவும் தங்களின் பந்தத்தை சட்டப்படி சாஸ்வதப்படுத்தி விட்டான். சண்முகமும் லட்சுமியும் மணமக்களை வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட கையோடு காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர். திவ்யாவின் உடல்நிலை இன்னும் இயல்பிற்கு வராமல் முகத்தில் சோர்வு அப்பட்டமாய் அப்பியிருந்தது. அவளால் பேச நினைத்தாலும் அவளை அமுக்கி எடுத்திருந்த மூச்சுத் திணறலின் தாக்கத்தால் இன்னும் அவளால் சகஜமாய் நடமாட முடியவில்லை. மிகவும் தளர்ந்த குரலில் மெதுவான பேச்சு, சோர்வான நடை என இன்னும் நோயாளியாகவே சுற்றிக் ...மேலும் வாசிக்க

42

நினைக்காத நேரமேது - 42

நினைவு-42 அவினாசி... சத்யானந்தனின் பூர்வீக வீடு. அவனது தந்தையின் காலத்தில் கஷ்டஜீவனத்தின் போது கை நழுவிப் போயிருந்த வீட்டினை மீண்டும் வாங்கி தனது தாத்தா தேவானந்தன் மாற்றிக் கொடுத்து புதுப்பித்து இருந்தான். ‘பார்த்தாயா என் பேரனின் சாமர்த்தியத்தை!’ என்று பெரியவரும் மீசையை முறுக்கிக் கொண்டு பேரனைப் பற்றி பெருமை பேசாத நிமிடம் இல்லை. இப்பொழுது அந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க, அவரின் பேச்சினை கேட்கவென ஒரு கூட்டமே அவரைச் சுற்றியிருந்தது. தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட்டதும், “இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான்” என்று சத்யானந்தன் உறுதியாகக் கூறிவிட, அனைவரும் இங்கே கிளம்பி வந்து விட்டனர். கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு, நாலாபுறமும் அறைகள் என விசாலமான அந்தக் காலத்து காரைவீடு. வாசல் நிலைப்படியே அவ்வீட்டில் வாழ்ந்தோரின் செல்வச்செழிப்பை கம்பீரமாய் கட்டியம் கூறி நிமிர்ந்து நின்றது. பெரிய பெரிய உத்திரக்கட்டைகள் கொண்டு மச்சடைத்தும், கடைந்தெடுத்த தேக்கு மரத் ...மேலும் வாசிக்க

43

நினைக்காத நேரமேது - 43

நினைவு-43 அவினாசி வீட்டின் மொட்டைமாடி. அதன் ஒருபுறம் சத்யானந்தனின் படுக்கையறை. வசதியான அழகான சிறியதாக தனக்கென அமைத்துக் கொண்ட குருவிக்கூடு. என்ன… கொஞ்சம் பெரிய, நவீனரக தனது ரசனைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொண்ட படுக்கையறை அது. அங்குதான் முதலிரவுக்கென்று திவ்யாவை உள்ளிருந்த படிக்கட்டின் வழியாக மேலே அழைத்து வந்து விட்டுட்டு வெளியே வந்தார் லட்சுமி. நாள் நட்சத்திரம் பார்த்து அனைத்து சடங்கையும் நடத்திவிட தீர்மானித்து எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டனர் பெரியவர்கள். 'விவரம் புரிந்த சின்னஞ்சிறுசுகள் சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்வர்' என்ற நம்பிக்கையில் அனைத்தும் நிகழ்ந்தேறி வருகிறது. 'எந்த ஏற்பாடும் இல்லாமல் அறை இயல்பாக இருக்கட்டும்' என அன்னையர்களிடம் மகன் கூறிவிட, அதற்கு பரிசாக விஷ்வாவின் முறைப்பையும் பெற்றுக் கொண்டான். “வாழ்க்கையில ஒருநாள்... இதெல்லாம் அனுபவிக்கணும் மாப்ள!” என்று கன்னத்தில் இடிக்காத குறையாக கூறிவிட்டுச் சென்றான் நண்பன். அறையில் விட்டுவிட்டு லட்சுமி வெளியே சென்றதும், திவ்யா அறையில் பார்வையை ...மேலும் வாசிக்க

44

நினைக்காத நேரமேது - 44

நினைவு-44 எல்லா விசேசங்களும் முடிந்து இருவரும் வாழ ஆரம்பித்து ஒருவாரத்திற்கு மேல் கடந்து விட்டது. மறுவீட்டு விருந்திற்கு லட்சுமி வீட்டிற்கும், மாமன் வீட்டு விருந்திற்காக லட்சுமியின் வீட்டிற்கும் சென்று வந்து ஒரு சுற்று பெருத்தாற் போல் தான் இருந்தனர் இருவரும். உற்ற நண்பனான விஷ்வா மணமக்களை அழைத்து, விருந்து துணிமணி என சிறப்பாக கவனித்து திக்குமுக்காட வைத்து விட்டான். அடுத்து நந்தினி வீட்டு விருந்து, ‘உனக்கு நான் விட்டவள் இல்லை’ எனும் விதமாக இருந்தது. "இப்படியே மாத்தி மாத்தி விருந்துக்கு போயிட்டு இருந்தா அவ்வளவு தான், நான் வெடிச்சு போயிருவேன்.‌ நாளையிலிருந்து எப்பவும் போல ஆபீசுக்கும் சைட்டுக்கும் கிளம்புறேன்மா." என்றான் சத்யானந்தன். "டேய்... இன்னும், நம்ம கோயிலுக்குப் போகலியே?" என மங்கையர்க்கரசி கேட்க, "அதெல்லாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்மா. புரோடக்சன் எப்படியிருக்குன்னு போயி பாக்கணும். தீபாவளி சீசன் ஸ்டார்ட் ஆகிடுச்சு, ஆர்டர்ஸ் அதிகமா இருக்கும். அதெல்லாம் கவனிச்சா தான் ...மேலும் வாசிக்க

45

நினைக்காத நேரமேது - 45

நினைவு-45 அன்பைப் பொழியும் பிறந்த வீடு, புகுந்த வீட்டோடும், நண்பனாக நேசத்தையும் பாசத்தையும் கொட்டும் கணவனோடும் திவ்யாவின் குடும்ப வாழ்க்கை பயணிக்க ஆரம்பித்தது. அவளின் உணர்ச்சிகளை கொண்டு எப்போதும் அவளை அடைகாக்கும் கோழியாக கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டு நடமாடினான் சத்யானந்தன். அவ்வப்பொழுது அலுவலக வேலைகளையும் மனைவியின் வசம் ஒப்படைத்து மனதளவில் அவள் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டான். இத்தனைக்கும் மத்தியில் அவனது அலுவலக வேலைகளும் வியாபார நிமித்தங்களும் அவனது கழுத்தை நெறுக்கிப் பிடித்தன. அன்று காலை மங்கையர்க்கரசியின் நச்சரிப்பால் வேண்டுதல் என்று இருவரும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் அன்னதானம் முடித்து திரும்பி இருந்தனர். “இந்த மாதிரி என்னை இழுத்துப் பிடிக்கிற வேலையை இனிமேட்டு வச்சுக்காதேம்மா! எந்த நிலமையில நான் சுத்திட்டு இருக்கேன்னு தெரியாம இருக்கே நீ!” என்று தாயிடம் கோபித்துக் கொண்டு ஓய்வெடுக்க தங்களின் அறைக்கு சென்று விட்டான். மதிய உணவு முடித்துக் கொண்ட திவ்யாவும் தங்களின் அறைக்கு வந்து ...மேலும் வாசிக்க

46

நினைக்காத நேரமேது - 46

நினைவு-46 தாத்தாவின் கேள்வி சத்யானந்தனை திகைக்க வைத்தது. ‘தொழிலை அப்படியே விட்டு விடுவான்’ எனும் விதமாக அவர் பேசியதில் சட்டென்று ஆத்திரம் கொண்டான். “ஏன்? என்னைப் தொழிலை அம்போன்னு விடுறவனாட்டம் தெரியுதா?” என்று தாத்தாவிடம் வெகுண்டு கேட்க, “டேய் சத்யா!” “என்ன கண்ணா இது?” மங்கையர்க்கரசியும் திவ்யாவும் சேர்ந்து அவனை அடக்கினர். “அந்த துரோகிய எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு சும்மா விட்றனுமா?” குரலை உயர்த்தியபடியே மீண்டும் பேச ஆரம்பிக்க, அமைதியாக எழுந்தார் தேவானந்தன். “தொழில்ல ஜெயிக்கிறவனுக்கு ஆத்திரம் தான் முதல் எதிரி அதை அடக்கிட்டா எந்த மலையையும் புரட்டிப் போட்றலாம். அவன் எப்படி உள்ளேயே இருந்து காரியத்தை சாதிச்சானோ அதே வழியில போயி மெதுவா தான் அவனை முடிக்கணும். அதுக்கும் முன்னாடி நஷ்டத்தை தாண்டி நாம திடமா எழுந்து நிக்க என்ன செய்யணுமோ அதுல கவனம் செலுத்தணும்.” என்றவர் தனது அறைக்கு திரும்பிச் சென்றார். “அடுத்து என்ன செய்யறது, ஏது ...மேலும் வாசிக்க

47

நினைக்காத நேரமேது - 47

நினைவு-47 நாட்கள் வழக்கம் போல நகரத் தொடங்கின. எந்தவொரு காரியத்தையும் மிக ஜாக்கிரதையாக செய்ய ஆரம்பித்திருந்தான் சத்யானந்தன். அதன் விளைவாய் ஏகப்பட்ட கெடுபிடிகள்... பல முஸ்தீபுகள் அவனை நெருங்குவதற்கே அனைவருக்கும் மூச்சு முட்டிப் போயிற்று! ஒரே இடத்தில் வேலை செய்தாலும் கடமையாக சிரித்துக் கொள்ள முடியாத இக்கட்டான வேலைப்பளுவில் இருவருமே மாட்டிக் கொண்டு முழித்தனர். திவ்யா கேட்டதைப் போல சத்யாவில் புதைந்திருந்த கண்ணனை வெளிக்கொணர அவனால் முடியவே இல்லை. ஆனால் அதற்கு பதிலாக மனைவிக்காக பல காரியங்களை செய்து அவளை தன்பக்கம் இழுக்கத் தொடங்கினான். அவளுமே அவனுக்கு தோதாக மயங்கத் தொடங்கினாள். அலுவலகத்திலிருந்து வரும்போது அவளுக்காக எதையாவது வாங்கிக் கொடுத்து அவள் சந்தோஷமாக விழிவிரித்து வாங்கிக் கொள்வதைப் புன்னகையுடன் ரசிப்பான். "ஏன் பகல்ல கூட தள்ளித் தள்ளிதான் நிக்கணுமா? யாருமில்லாத நேரத்துல என்கிட்டே வந்து பேசலாம்ல தியா?” என்று சலுகையாகப் பேசி மனைவியை தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டு ...மேலும் வாசிக்க

48

நினைக்காத நேரமேது - 48

நினைவு-48 “உங்களைத் தான் மலை போல நம்பி வந்திருக்கேன் ராகவன். முடியாதுன்னு மட்டும் தட்டி கழிச்சுடாதீங்க... ப்ளீஸ்!” எதிரில் அமர்ந்திருந்தவன் பாவமாய் கூற கர்வமாய் சிரித்தான் “கொஞ்சம் விட்டா இந்த விஷயத்துக்கு என்னை தவிர வேற ஆளே இல்லன்னு சொல்லிடுவீங்க போலிருக்கு. இதுக்கெல்லாம் ஸ்பெசலிஸ்ட்னு என்னை முத்திரை குத்திடாதீங்க ப்ரோ!” என்று சிலாகிப்புடன் சிரித்தபடி ராகவன் கூறினான். “வொய் நாட் ப்ரோ? எங்கே எப்படின்னு எந்த ஆதாரமும் இல்லாம ஒரு பெரிய கம்பெனியோட அஸ்திவாரத்தையே பள்ளத்துல தள்ளி இருக்கீங்களே... அது போதாதா, உங்க திறமையை சொல்ல... அதை நம்பித்தானே நானும் உங்களைத் தேடி வந்தேன்” என்று ஐஸ் மழையில் ராகவனை நனைய வைக்க, மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவனும் தலையாட்டத் தொடங்கினான். “நம்ம வேலை அப்படி கேசவ்... எல்லாத்துலயும் கிளியர் கட்டா இருக்கும். எங்கேயும் குழப்படி இருக்காது” என்று பெருமை பீற்றிக் கொண்டான் ராகவன். “இதுதான் சார் கம்பெனி பேர்... ...மேலும் வாசிக்க

49

நினைக்காத நேரமேது - 49

நினைவு-49 வெளியில் வந்த ராகவனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வேனில் கொண்டு சென்றது ஒரு கூட்டம். திமிறியவனின் முகத்தில் இரண்டு குத்துவிட்டு, மயக்க மருந்து துணி கொண்டு கட்டி வைத்தனர். பின்னர் ஒரு குடவுனில் அடைத்து வைக்கப்பட்டான் ராகவன். அதிக நேரமில்லாமல் வெகு சீக்கிரமே அவனுக்கு மயக்கம் மயக்கம் தெளிந்து விட்டது. காரணம் அப்படியொரு மசலா நெடி அவன் மூக்கில் ஏறி தும்மலை வரவழைத்து அவனை தத்தளிக்க வைத்தது. மூச்சுவிட முடியாமல் தொடர் தும்மலில் இருமலும் சேர்ந்து வர, பெரிதாகக் கஷ்டப்படத் தொடங்கினான். மூக்கும், கண்களும் கண்ணீரை சுரக்க வைக்க அதை துடைத்துக் கொள்ள முடியவில்லை அவனால்! நாற்காலியின் பின்புறத்தோடு அவன் கைகள் கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். பழக்கமான இடமாகத் தோன்றியது. ஆனால் இருட்டில் சரியாக கண்டறிய முடியவில்லை. “யாரும் இருக்கீங்களா? காப்பாத்துங்க!” என்ற அவனது ஓலமும் தும்மலில் சிதறி சிதைந்து காணாமல் போனது. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரத்திற்கும் ...மேலும் வாசிக்க

50

நினைக்காத நேரமேது - 50

நினைவு-50 அரசு மருத்துவமனையில் சற்றும் தாமதிக்காமல் அனுமதிக்கப்பட்டான் ராகவன். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனின் மூச்சுத்திணறல் சீராகப்பட்டது. திணறல் எடுத்த மூச்சு பேசும் போதும் நடக்கும் போதும் அவனுக்கு மூச்சு வாங்கத்தான் செய்தது. எளிதாக எதையும் செய்ய முடியாமல் திண்டாடி தத்தளித்துப் போனான். மருத்துவமனையில் இவனிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. நேரம் தவறாமல் மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டுச் செல்ல, செவிலி வந்து மருந்துகளை கொடுத்து கடமையைச் செய்தாள். இவனுக்கு வேண்டிய உணவையும் உடையினையும் ஹாஸ்பிடல் வார்டுபாய் கொண்டு வந்து கொடுக்க, இவனது தேவைகள் எல்லாம் பூர்த்தியடைந்து விடுகின்றன. எந்நேரமும் ஆக்சிஜன் மாஸ்கை அணிய வேண்டியிருந்தது. இன்னும் சிறிது நாளுக்கு இப்படித்தான் நடமாட வேண்டுமென மருத்துவர் சொல்லி விட்டார். ராகவனின் அவஸ்தையின் அளவு இன்னதென்று இல்லாமல் ஏறிக் கொண்டே போனது. ‘அப்பப்பா இத்தனை பாடா? திடகாத்திரமான ஆண் எனக்கே இத்தனை வேதனை என்றால், மென்மையான உடலமைப்பும் ...மேலும் வாசிக்க