காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கெஞ்சி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன. இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான்.
இரவை சுடும் வெளிச்சம் - 1
காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன. இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான். ...மேலும் வாசிக்க
இரவை சுடும் வெளிச்சம் - 2
கார்த்திக்கை அவசரமாக ஆம்புலன்ஸ் இல் ஏற்றி அழைத்து கொண்டு போனார்கள் . சுட்டது யார் என்று தெரியவில்லை . தீப்திக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. சுட்டது ரஞ்சித்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவனுக்கு அவ்வளவு துணிச்சல் எல்லாம் கிடையாது .போலீஸ் வந்து விசாரித்தார்கள் . கார்த்திக் பேசும் நிலையில் இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து வெளியே கேன்டீனுக்கு வந்து ரஞ்சித்துக்கு போன் பண்ணினாள் . எங்கடா இருக்கே உன் வேலையா இது ? சே சே.. அதானே பார்த்தேன் நீயாவது எனக்காகவாவது ? என்றாள். அவசரப்படாதே தீப்தி .நான் இப்போ சென்னைல இல்லை . காஞ்சிபுரத்துல இருக்குற என் friend வீட்டுக்கு வந்திருக்கேன் . போலீஸ் என்னை தேடலை இருந்தாலும் .. கார்த்திக் எப்படி இருக்கான் ?அவன் இன்னும் ICU ல தான் இருக்கான் . பாத்து ஜாக்கிரதை தீப்தி . நீ மொதல்ல பத்திரமா இருடா . ...மேலும் வாசிக்க
இரவை சுடும் வெளிச்சம் - 3
ஜாபர் அப்படி எந்த பொருளை வைத்திருந்தான் என தெரியவில்லை. ரஞ்சித் சென்னைக்கு பயணமானான் . எப்போதும் போல வேலைக்கு போனான். இது போல unknown நம்பரில் கால் வந்தது என்ற போது இது ஒரு ஸ்கேம் என்றார்கள் கூட வேலை பார்ப்பவர்கள் . தீப்தியை சந்தித்தான் . ஜாபர் சம்பந்தமா உனக்கு ஏதாவது மறுபடி கால் வந்துச்சா என்றான் . இல்லே அன்னிக்கி வந்தது தான். நாம டிடெக்ட்டிவ் யாரையாச்சும் பாக்கலாமா என்றாள்?. கொஞ்சம் பொறு தீப்தி அந்த பொருள் என்னனு கண்டுபிடிக்கணும் அதுக்கு அப்புறமா நாம டிடெக்ட்டிவ் பார்க்கலாம் . கார்த்திக் என்ன சொல்றான். அந்த துப்பாக்கி சம்பவத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்டான் . என்னை கண்டாலே விலகி போறான் . என்னனு தெரியல . ஒரு வேளை அவனை குறி வெச்சவங்க உனக்கும் வைக்கலாம்னு நினைக்கிறானோ என்னவோ ? சரி ரஞ்சித் நான் வரேன்.ஏன் இவ்ளோ அவசரம் ...மேலும் வாசிக்க