தீப்தி கார் ஓட்டும் அழகை ரஞ்சித் புகழ்ந்து தள்ளினான். என்ன ஓவர் புகழ்ச்சியா இருக்கே என்றாள். நீ யார்கிட்ட வண்டி ஓட்ட கத்துகிட்ட. அதுவா தன்ராஜ் மாஸ்டர்ன்னு ஒருத்தர்கிட்ட. ம்ம் உண்மையிலே அது நல்ல டிரைவிங் ஸ்கூல் தான் போலிருக்கு என்றான்.ரஞ்சித் அவரை பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஒரு நாள் போய் பார்த்துட்டு வருவோம் வரியா? ஆரம்பிச்சுட்டியா சரி போவோம் ஆனா அங்க வந்து என் டிரைவிங் ஸ்கில்ஸ் பத்தி பேசக்கூடாது ஓகே பேசமாட்டேன். இப்போ போன் பண்ணி கேளேன் எப்போ பாக்கலாமுனு ? சரி கேக்குறேன். ஹாய் சார் எப்படி இருக்கீங்க . சொல்லுமா ..நான் நல்லா இருக்கிறேன் .வண்டியை இடிக்காம ஓட்டுறேயில்லை?மாஸ்டர்.. சும்மா கிண்டலுக்கு சொன்னேன்மா எப்படியிருக்குற? உன் husband ரஞ்சித் எப்படி இருக்குறாரு . அவர் நல்லா இருக்குறாரு. இந்த weekend உங்களை பாக்க வரலாம்னு இருக்கோம் மாஸ்டர். உங்களுக்கு ஏதும் ஒர்க் இருக்கா ? இல்லமா நீங்க வாங்க.என் வீடு தெரியும்ல ?தெரியும் மாஸ்டர் அப்போ வந்துடுங்க.
தீப்தியும் ரஞ்சித்தும் தன்ராஜ் master வீட்டுக்கு போயிருந்த பொது ஒரே கூட்டமாக இருந்தது. அவர் போன டூ வீலரை ஏதோ அடையாளம் தெரியாத வாகனம் இடித்து விட்டதாக கூறினர். ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருப்பதாக சொன்னார்கள் .தன்ராஜ் நம்பருக்கு போன் செய்த பொது சுவிட்ச் ஆப் என்று வந்தது. ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்றனர் தீப்தியும், ரஞ்சித்தும். அங்கே அவர் மனைவி தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்தார். என் புருஷனை அநியாயமாக
கொன்னுட்டாங்களே என்று அழுதாள் .
என்ன நடந்தது என விசாரித்த போது ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அதோடு வண்டி ஓட்டும் போது அவர் குடித்திருந்ததாகவும் தெரிவித்தனர். அதனால் குடி போதையில் நடந்த விபத்து என்று போலீசில் பதிவானது .தீப்தியால் இதை நம்ப முடியவில்லை. மாஸ்டர் accident ல இறந்துட்டார்ங்கிறதை என்னால நம்ப முடியல. எனக்கு அவரை பத்தி நல்லா தெரியும், ரொம்ப கவனமா வண்டி ஓட்டுவார்.
தீப்தி தன்னை தன்ராஜின் மனைவி ஷீலாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.அதோடு கொஞ்சம் பணமும் கொடுத்தாள். தன்ராஜுக்கு குழந்தைகள் கிடையாது. அப்போதுதான் அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை கவனித்தாள். நவீனா தன்ராஜின் ஸ்டுடென்ட் என்றும் கூறினாள்.அவளுக்குத்தான் தன்ராஜ் முதலில் போன் செய்திருந்தார். உடனே விரைந்து வந்த நவீனா ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்திருந்தாள்.நவீனாவின் போன் நம்பரை தீப்தி கேட்டு வாங்கி கொண்டாள்.போஸ்டமோர்டெம் முடிந்து தன்ராஜின் உடலை எடுத்து செல்லும் போது நவீனாவும் ,ஷீலாவும் உடன் அந்த வண்டியிலேயே போனார்கள்.தன்ராஜின் போன் காணாமல் போயிருந்தது.தன்ராஜின் ஸ்டுடென்ட்ஸ் ஏராளமானோர் வந்திருந்தார்கள். ரஞ்சித் நீ என்ன நினைக்கிற? மாஸ்டர் குடிச்சுட்டு வண்டி ஓட்டி இருப்பாரா ?அதுதான் எனக்கும் புரியல. சிசிடிவி வீடியோ பார்த்தேயில்ல உனக்கு எதுவும் சந்தேகம் இருக்கா ?இல்லை. எதுக்கும் ஒரு தடவை ராம் சார்கிட்ட பேசி பாக்கட்டுமா?கேளேன்.விசாரிச்சாதான் உண்மை தெரியும். நாம பார்க்கிறதெல்லாம் உண்மையில்லை. அதே சமயம் எல்லாத்தையும் சந்தேகப்பட முடியாது.என்ன சொல்லறீங்க சார். நான் இந்த கேஸ் எடுத்துகிறேன் அவர் மரணம் விபத்தா இல்லையானு விசாரிச்சு சொல்றேன் . ரொம்ப தேங்க்ஸ் ராம் சார்.
ராம் தன்ராஜை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை சந்தித்தான்.ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறி எல்லா உபகரணங்களும் இருக்கிறதா என பார்த்தான். என்ன நடந்தது சாரதி அன்னிக்கி? அன்னிக்கி நவீனாங்கிறவங்க போன் பண்ணினாங்க . மாஸ்டருக்கு accident ஆயிடுச்சி நான் லொகேஷன் அனுப்புறேன் அப்படின்னு சொன்னாங்க. தன்ராஜை ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு வர வழியிலேயே அவர் உயிர் பிரிஞ்சிட்டுது .உங்க கூட யார் இருந்தாங்க. தேவின்னு ஒருத்தவங்க இருந்தாங்க.தேவியிடம் பேசிய போது திடீர்னு இது நடந்து போச்சு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணினேன் ஆனா காப்பாத்த முடியல.தவிர அவர் அன்னிக்கி குடிச்சிருந்தாரு.அவர்கள் இருவருடைய மொபைல் நம்பரையும் கேட்டு வாங்கி கொண்டான்.ராம் ஆம்புலன்ஸ் செக் செய்த போது கீழே கிடந்த ஒரு சிறிய பேப்பரில் சிம் கார்டு ஒன்று மடித்து இருப்பதை கண்டு பிடித்தான் .
நவீனா நீங்க எப்படி அந்த ஸ்பாட்டுக்கு கரெக்ட்டா போனீங்க. தன்ராஜ் மாஸ்டர் அப்போ conscious ஆஹ் தான் இருந்தாரு. என் வீடு அவருக்கு accident ஆனா இடத்துக்கு பக்கத்துலதான் இருக்கு.அது நிச்சயமா accident தானா?ஏன் சார் அப்படி கேக்குறீங்க? நீங்க சிசிடிவி footage பார்த்தீங்களா இல்லையா?என்கிட்டே இருக்கு என்று அவளுடைய மொபைலை கொடுத்தாள்.மொபைல் புதுசாக இருந்தது.வாங்கி பார்த்துவிட்டு , மாஸ்டருக்கு குடிப்பழக்கம் உண்டா ? எனக்கு எதுவும் தெரியாது சார்.உங்க வீட்ல ஏதும் விசேஷமா முகூர்த்த கால் நட்டிருக்கே .. இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு கல்யாணம் சார். நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி.வாழ்த்துக்கள் நவீனா இந்த விபத்து சம்பந்தமா வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா என்னை கூப்பிடுங்க ,சரிங்க சார்.புது மொபைலா வெரி நைஸ் என்றான்.
தன்ராஜின் மனைவியிடம் கேட்ட போது அவர் குடிச்சு குடிச்சு என்னை நடுத்தெருவில் நிறுத்திட்டாரு சார். ஆனா கிளாஸ் போகும் போது குடிக்க மாட்டாரு.சரிங்கமா அவர் மொபைல் போலீஸ் குடுத்தாங்களா ? இல்லையே சார் விபத்து நடந்த இடத்துல எவனாவது எடுத்துட்டு போயிருப்பான்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கென்ன தோணுது இது விபத்தா இருக்குமா? இந்த மனுஷன் குடிக்காம இருந்திருந்தா government பணமாவது குடுக்கும் இப்போ அதுவும் இல்லாம போயிடுச்சே. லாரி டிரைவரை சந்தித்தான். அவர் போன் பேசிக்கிட்டே வண்டி ஒட்டிக்கிட்டு இருந்தாரு சார்.. யார்கிட்டயோ ரொம்ப கோவமா பேசிகிட்டு இருந்தாரு. அது எப்படி சொல்லறீங்க. அவர் நான் ஹார்ன் அடிச்சும் வழி குடுக்கல. என்னை கெட்ட வார்த்தைல திட்டினார். கொஞ்ச தூரம் போனதும் சறுக்கி விழுந்து வண்டியில அடிபட்டாரு. நல்ல ஸ்பீட்ல போனாரு. நீங்க உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணலியா ? அவரே ஒரு மாதிரி சமாளிச்சு எழுந்துட்டாரு அப்புறம் அவர் மொபைல்லேயிருந்தே யாருக்கோ போன் பண்ணாரு அப்புறம் அந்த பொண்ணு வந்து ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுச்சு. அவரே ஆம்புலன்ஸ் கூப்பிடலையா?என்னனு தெரியலியே சார்.
அவர் மொபைல் நீங்க எதுவும் எடுக்கலியே .. இல்லை சார். சத்தியமா நாங்க எடுக்கலே .. நீங்க எதையும் மறைக்கலியே
இல்லை சார்.
ராம் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் பேசி பார்த்தான். இது ஒன்னும் பெரிய கேஸ் இல்லை அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் வேகமாத்தான் விபத்து நடந்த இடத்துக்கு வந்திருக்கான் அதே மாதிரி வேகமாத்தான் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க.அவன் மேல தப்பில்லை.ராம் அவனிடத்தில் இருந்த சிம் கார்டை மொபைலில் போட்டு பார்த்தான். அதில் தன்ராஜின் மனைவி ஷீலாவின் நம்பரும், நவீனாவின் நம்பரும் save செய்யபட்டிருந்தது .புது சிம்மாக இருந்தது . நெட்ஒர்க் ஆபரேட்டர் மூலமாக விசாரித்த போது அது விபத்து நடந்த அன்று வாங்கபட்ட சிம் என்று தெரிந்தது,ராம் நவீனாவின் நம்பருக்கு போன் செய்த போது அது உபயோகத்தில் இல்லை என தெரிய வந்தது.தீப்தியிடம் கேட்டு நவீனாவின் நம்பரை வாங்கினான்.ஹலோ யார் பேசறீங்க ? நாந்தான் ராம் பேசறேன் . என்ன சார் வேணும் உங்களுக்கு நாந்தான் ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லிட்டேனே ? சாரி தன்ராஜ் சிம் கார்டு ல உங்க பேரு இருந்தது அந்த நம்பர் இப்போ active ல இல்லையா ? அவரு என்னை ரொம்ப தொந்தரவு பண்ணினாரு அதனாலே என் நம்பரை மாத்திட்டேன்.ஓ அவரு அப்படிப்பட்டவரா ?ஆமாம் சார் வெளியே சொன்னா எனக்குத்தான் அசிங்கம்னு நான் சொல்லலை. சரிம்மா இனிமே நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன் என்றான்.
மற்ற டிரைவிங் ஸ்டுடென்ட்ஸ்களிடம் பேசிய போது அவர்கள் எல்லோருமே தன்ராஜின் திறமைகளை பாராட்டினார்கள்.அப்போது ஹேமா என்ற பெண் ராமிடம் வந்து நவீனா என்ன சொன்னா சார்? நவீனா சொன்னது இருக்கட்டும் நீங்க ஏன் அதை பத்தி கேக்குறீங்க. நான் அவ கிளோஸ் friend தான். கொஞ்ச நாளாவே அவ போக்கே சரியில்லை. திடீர் திடீர்னு கோவப்படுறா
என்ன செய்யுறோம்னு அவளுக்கே தெரியல .ம்ம் நீங்க சொல்றது சரிதான் என்கிட்டேயும் அவங்க அப்படித்தானே பேசினாங்க. ராம் சார் நான் ஒரு விஷயம் சொன்னா வெளியிலே சொல்ல மாட்டிங்களே? சொல்லமாட்டேன். தன்ராஜும் நவீனாவும் ஒருத்தரை ஒருத்தர் sincere ஆஹ் லவ் பண்ணினாங்க.என்ன ? அவளுக்கு திடீர்னு அமெரிக்கா போற மாப்பிள்ளையோட நிச்சயம் ஆச்சு. எனக்கு அதுதான் புரியல .. தன்ராஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது நவீனாவுக்கு தெரியுமா ? தெரிஞ்சுதான் லவ் பண்ணினாங்க எல்லா எடத்துலயும் சுத்தினாங்க . ஓ அப்புறம் என்னாச்சுன்னு தெரியலை என்றாள்.