ரகுராம் சொன்னதை அலட்சியடுத்திவிட்டோமே என ராம் வருந்தினான். நல்ல வேளை ட்ராபிக் constable ஒருவர் தடுத்து இருக்காவிட்டால் இந்நேரம் நினைக்கவே அச்சமாகத்தான் இருந்தது. நாந்தான் சொன்னனே சார் அவ அனுப்புன ஆளுங்கதான் சார். நீங்க ஸ்ட்ரைன் பண்ணாதீங்க . எங்க போயிருக்காங்க மெடிசின் வாங்க . இதோ வந்துட்டாளே.. வாங்க சார் பாருங்க சார் யார்கிட்டயோ வம்பிழுத்து இந்த அடி வாங்கிருக்கார் . நீங்க அவர் friend ஆ ஆமா . கொஞ்சம் பார்த்து இருக்க சொல்லுங்க சார். அப்போதுதான் அவன் வந்தான் ஏண்டா அறிவு இருக்கா? இப்டி போய் அடிபட்டு வந்துருகியே எந்த ஏரியா பசங்கடா அவனுக ? அது வந்து .. ராஜி என குரல் கொடுத்தான். ராஜி பார்த்துவிட்டு வாங்க மதி என்றாள்ராஜி நான் போய் அவனுகளை உண்டு இல்லனு பண்ண போறேன் . ஒன்னும் வேணாம். மொதல்ல இவருக்கு கை,கால் சரியாகட்டும் . அதுவும் சரிதான் என்றான் மதி. இவன்தான் என கண்ணாலேயே சைகை செய்தான் ரகுராம் .ராம் சார் நீங்க என்ன பண்ணுறீங்க நான் வந்து கடை நடத்துறேன் இரும்பு கடை. நீங்க? நான் சும்மாதான் சார் இருக்குறேன் ஒன்னும் செட் ஆக மாட்டேங்குது என்றான் மதி. சரி அப்போ வரேன் ராஜி உடம்பை பார்த்துக்கோடா வரேன் சார் என்றவாறு நகர்ந்தான் .அப்போ நானும் கிளம்புறேன் ரகுராம் ஒன்னும் கவலை படாதீங்க எல்லாம் சரி ஆயிடும் .
தீபு இப்போ என்ன பண்ணலாம் ? ரகுராம் ரொம்ப பயந்து போய் இருக்காரு .இப்போதைக்கு மதி கிட்டேயே பேசி பார்க்கலாம் சார். சரி அந்த போனை போடு . நான் ராம் பேசுறேன் ? எந்த ராம் . அதான் சார் இரும்பு கடை.. ஓ நீங்களா ராஜி சொல்லுச்சு எங்களை வேவு பார்க்க ரகுராம் ஏற்பாடு பண்ண ஆளுதான நீ ?அப்படியெல்லாம் இல்லை . இதுலெல்லாம் நீ தலையிடாத அப்புறம் ஒன்னும் சொல்றதுக்கிருக்காது .நான் சொல்ல வந்தது என்னனா ..சரி சொல்லு பேசாம ராஜியை டிவோர்ஸ் குடுக்க சொல்லு அப்புறம் உங்க இஷ்டம் போல இருங்க யாரு கேட்கப்போறா . நீ அனாவசியமா பேசுற சார் போனை வை .. ராம் இது சரியா வராது என்றான்.ரகுராம் அவ்வப்போது ராமுக்கு போன் செய்து வந்தான்.
ரகுராம் அவ்வப்போது ராமுக்கு போன் செய்து வந்தான். ரெண்டு நாட்களாக போன் வரவில்லை . என்னாச்சு ரகுராமுக்கு என்ற யோசனையில் போன் செய்தான். ராம் அங்கிள் டாடி ய போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க என்றான் ரகுராமுடைய பையன். என்னப்பா ஆச்சு அதுவந்து மதி அங்கிளை யாரோ கொன்னுட்டாங்க அதனாலே.. சரி சரி அம்மாகிட்ட போனை குடு, அம்மா கடைக்கு போயிருக்காங்க. என்ன சார் பண்றது விதி, கூட நட்பா பழகுன நண்பன்னு கூட பாக்காம சந்தேகப்பட்டு போட்டு தள்ளிட்டாரு போல என்றாள். எந்த போலீஸ் ஸ்டேஷன் ?யார் இன்ஸ்பெக்டர் ?யாரோ மகேஷ் s2 ஸ்டேஷன். நீங்க அவரை பெயில்ல எடுக்கலையா. எதுக்கு என்னையும் அவன் போட்டு தள்ளவா?போனை வைத்து விட்டாள்.
தீபு மதிய யாரோ கொன்னுட்டாங்க போல . ரகுராமை புடிச்சி உள்ள வெச்சிருக்காங்களாம் . நான் போய் பார்த்துட்டு வரேன் . எனக்கு எதுவும் தெரியாது சார் திடீர்னு அவன்தான் போன் பண்ணி என்னை வர சொன்னான் . எங்கே? பக்கத்துல இருந்த பார்க் பக்கம் . என்ன நெனைச்சானோ தெர்ல .. என்னை மன்னிச்சுக்கப்பா நான் செஞ்சது தப்புதான்னு சொன்னான். நான் ஒன்னும் சொல்லலை . திடீர்னு நாலு ஆளுங்க வந்து அவனை வெட்டி சாச்சுட்டு போய்ட்டாங்க சார். போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணி கூடி வந்துட்டாங்க . வக்கீலை கூட கூப்பிட்டு கொண்டு போயிருந்தான் . அவர் ரகுராமிடம் பேசினார். எப்படியும் ஜாமீன் கிடைச்சுடும் . நீங்களா எதுவும் வாக்குமூலம் குடுத்துடாதீங்க என்றான் ராம்.
தீபு இப்ப எப்படி proceed பண்றதுன்னு தெரியல ஒரு வேலை அந்த ராஜி வேலையா இருக்குமோ .. சே சே இருக்காது . மதிக்கு எதுனா எதிரிகள் இருப்பாங்களா ? ஒன்னும் புரியலே . அவன் எதுக்காக மன்னிக்க சொன்னான் . ராஜி இடமும் போலீஸ் விசாரணை நடத்தியது . கொலை பண்ற அளவுக்கு எனக்கு எந்த காரணமும் இல்ல சார். அவனை நான் ஏன் கொல்லனும் என்றாள் . ஆள் மாறி வெட்டிட்டானுகளோ என்று பலவாறு சிந்தித்தான் ராம். ரகுராம் ஜாமீனில் வந்துவிட்டான். அவர் பையனோடு இருப்பதை ராஜி விரும்பவில்லை . ராம் நான் உங்க கூட வந்து கொஞ்ச நாள் தங்கிக்கட்டுமா ? சரி சார் . நீங்க கவலைப்படாதீங்க எப்படியும் அவனை கொன்னவங்களை கண்டுபிடிச்சிடலாம் .அவன்கிட்டே போன் ஏதாவது இருந்ததா ? ஏதாவது வித்தியாசமான மெசேஜ் உங்களுக்கு வந்ததா ? இல்லையே சார் . அவன் திடீர்னு மனமாற்றத்துக்கு யார் காரணுமுன்னு தெரியலியே .அவனுக்கு அவனோட முடிவு முன்னாடியே தெரிஞ்சிருக்கு . உங்களுக்கு வேண்டிய யார்கிட்டயாவது இதை ஷேர் பண்ணிங்களா ? இல்லை ஆனா facebook ல போட்டேன் . நீயெல்லாம் ஒரு ஆம்பளையானு கமெண்ட்தான் வந்தது. அந்த பதிவை காண்பிங்க . அதை அப்புறமா டெலிட் பண்ணிட்டேன். வேற யாரவது லைக் போட்டுருந்தாங்களா ? ஆமா சார் ஒருத்தன் லைக் பண்ணியிருந்தான் தங்கபாண்டினு . இப்படி மொட்டையா சொன்னா எப்படி சார் ? அவன் பேரு பட்டாக்கத்தி தங்கபாண்டி. ப்ரொபைல் தேடி பார்த்தபோது திருவான்மியூர் என்று இருந்தது. இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அவனை விசாரிக்க சொன்னான் ராம் .
போலீஸ் அவனை பிடித்து விசாரித்த போது அவன் பெரிய ரவுடியெல்லாம் இல்லை, சும்மா வெட்டி பந்தாவுக்காக பட்டாக்கத்தியில் கேக் வெட்டுவது போன்று போட்டோக்களை போஸ்ட் செய்பவன் என தெரிந்தது . மதியை கொன்றவர்களை சிசிடிவி விடியோவை வைத்து போலீஸ் அரெஸ்ட் செய்துவிட்டது . எதுக்காக கொன்னீங்க ? யார் சொல்லி அவனை தீர்த்திங்க . நாங்க அந்த facebook பதிவை பார்த்தோம் . அவன்கிட்ட ஒரு குடும்பத்தை கெடுக்காதேன்னு சொன்னோம் கேக்கலை . எங்க பேச்சை அவன் மதிக்கலை . கடைசியா அவனுக்கொரு மெசேஜ் அனுப்புனோம். நாங்க உன்னை எப்படியும் தீர்க்க போறோம் நீ முடிஞ்சா மன்னிப்பு கேளுன்னு போன்ல சொல்லி இருந்தோம் . அப்புறம் அவன் மன்னிப்பு கேட்டான் . ஆனா அவன் gang ஆளுங்க அங்க ரெடியா இருந்தாங்க ரகுராமை போட. எங்களுக்கு வேற வழி தெர்ல . தேவையில்லாம ஒரு கொலை பண்ணிட்டு விளக்கம் வேற குடுக்கறீங்களா ? பாவம் அந்த பையன்.. அந்த பொம்பளைய போட்டு தள்ளலாம்னு நினைச்சோம் . ஆனா இவனை போட்டாத்தான் கொஞ்சமாவது மத்தவன் பயப்படுவான்னு நினைச்சோம் என்றார்கள்.
ராமும், ரகுராமும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஒரு facebook பதிவு இப்படி தன் வாழ்க்கையை மாற்றும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான் ரகுராம் . ராம் எதுவும் சொல்லாமல் ரகுராமை அழைத்து கொண்டு வந்தான் . ராம் நான் ரொம்ப கோழை . அதெல்லாம் இல்ல சார். உங்க பையனுக்காக நீங்க பொறுத்துகிட்டீங்க . இனிமே நீங்க சேந்து வாழறதும் வாழாததும் உங்க விருப்பம் . நான் வரேன் சார் என விடை பெற்றான் ராம். தீப்தியும் , ரஞ்சித்தும் ஒரு ட்ரிப் போக இருப்பதாகவும் அதில் join செய்துகொள்ள தீபுவையும், ராமையும் அழைத்தனர். வரோம் ஆனா facebook ல எந்த பர்சனல் போட்டோவும் போட கூடாதென கேட்டுக்கொண்டான் .ராம் ஏன் அப்படி சொன்னான் என தீப்தி தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள் .ராம் ரகுராம் கேஸ் பொறுத்தவரையில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டான். விட்டுக்கொடுப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது . அதே போல பொறுமையாய் இருப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது. யாரோ முன்பின் தெரியாதவர்கள் தலையிட்டதாலேயே ரகுராம் பிழைத்தான் . ராஜி திருந்தி விட்டால் தேவலை என்று மனப்பூர்வமாக கடவுளை வேண்டிக்கொண்டான்.