ராகுல் வீட்டுக்கு போய் விசாரித்த போது அவர்களும் இடம் மாறி இருந்தார்கள்.மேரியும் இடம் மாறி இருந்தார்கள்.அவர்களை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.ராம் சென்னை திரும்பினான். ரத்தினத்திடம் ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லும்படி சொல்லி கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விட்டு வந்தான் .இது நடந்து ஒரு வாரம் ஆகியும் ரத்தினத்திடமிருந்து பதில் இல்லை. நேரில் போய் பார்க்கலாம் என முடிவெடுத்தான் . போனை முதலில் எடுக்காத ரத்தினம் சிறிது நேரம் கழித்து எடுத்தான்.. சார் அவன் இங்கதான் இருக்கான் ..யாரு? ராகுல் அப்படியா அதுக்கு ஏன் பயப்படுறீங்க ஆளே மாறிட்டான் சார்.எனக்கு என்னவோ பயமா இருக்கு சார் அவன் நம்பர் நோட் பண்ணிக்குங்க சார். ராகுலுக்கு போன் போட்டான். என்ன சார் என்ன விஷயம் நான் உங்களை பார்க்கணுமே என்ன விஷயமா ? இளங்கோ டீச்சர் விஷயமா . எனக்கு நெறைய வேலை இருக்கு நானே கால் பண்ணுறேன் என்றான். ரத்தினம் எதையோ மறைப்பதாக ராம் நினைத்தான். மறுபுறம் போலீஸ் எந்த துப்பும் கிடைக்காமல் திணறி கொண்டிருந்தார்கள். தீப்தியிடம் இது வரை நடந்ததை சொன்னான் ராம். ராகுலை மீட் பண்ண வேண்டும் அப்போதுதான் உண்மை தெரியும் என ராம் நினைத்தான். இந்த முறை ராகுல் பேசினான். நீங்க நினைக்கிற மாதிரி இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சார் என்றால். மேரி டீச்சர் அவங்க மேல அபாண்டமா பழி போட்டவங்களை ஆண்டவனா பார்த்து பழி வாங்கிட்டான் என்றான் ராகுல்.என்ன சொல்லறீங்க ராகுல் ப்ளீஸ் நாம நேர்ல பாத்து பேசலாம். சரி நாளைக்கு பேசலாம் நான் அட்ரஸ் வாட்ஸாப்ப் பண்றேன் . ராகுல் என்ன நடந்துச்சு ? டீச்சருக்கும் உங்களுக்கும் காண்டாக்ட் இருந்ததா சொல்றாங்களே அந்த வதந்தியை கிளப்புனதே இளங்கோ சார்தான். ஏன் அப்படி செஞ்சாரு?அவர் மேரி டீச்சரை விரும்புனாரு அவங்க அதை ஏத்துக்க மறுத்துட்டாங்க.அந்த கோவத்துல அப்படி செஞ்சுட்டாரு. நான் வேற ஸ்கூல் சேர்த்தேன் ஆனா என்னால தொடர்ந்து படிக்க முடியல. ரத்தினமும் இளங்கோ சாரும் கூட்டாளிங்க என்றான் ராகுல். உங்களுக்கு அவர் மேல கோவம் இல்லையா இருந்தது ஆனா எனக்கு முன்னாடி யாரோ அவரை பழி தீர்த்துட்டாங்க.
ரத்தினத்தை அதே போல கார்பென்டரி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக செய்தி வந்தது. ராம் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் பேசினான். இளங்கோ சாரை கொன்னை அதே முறையைத் தான் இங்கேயும் பண்ணயிருக்காங்க .ரத்தினத்துக்கு எதிரிகள் யார் இருக்க முடியும் ?ரத்தினத்தின் குடும்பத்தாரை சந்தித்து பேசினான் ராம். அவரு கொஞ்ச நாளா கவலையாதான் இருந்தாரு . நேத்து டூட்டிக்கு போயிட்டு வர வழியிலதான் இது நடந்துருக்கு என்றனர். ராகுல் எனக்கெதுவும் சத்தியமா தெரியாது என்றான். நான் எதையும் மறைக்கலே என்றான். ரத்தினம் வேலை பார்த்த ஸ்கூலுக்கு போனான். அங்கே ரத்தினம் மறைவுக்காக விடுமுறை அறிவித்திருந்தார்கள். headmaster கிட்டே பேசியபோது நான் இப்போதான் join பண்ணி ஒரு வாரம் ஆகுது டீடெயில்ஸ் எதுவும் தெரியலே . வேணும்னா டீச்சர்ஸ் கிட்ட கேட்டு பாருங்க என்றார். சரி சார் அங்குள்ள டீச்சர்களில் ஒருவர்
மேரியோட ஆவிதான் இவர்களை பழி வாங்குதோ என்றார் சீரியசாக .ராகுலிடம் இருந்து போன் வந்தது. எனக்கு மேரி மேடம் இருந்த இடம் பற்றி தகவல் கிடைச்சிருக்கு .நேர்ல வாங்க சொல்றேன் என்றான். ராகுல் மேரி டீச்சர் அப்பா சென்னையிலதான் இருக்காரு அவங்க முன்னாடி இருந்த அட்ட்ரஸ்ல போய் விசாரிச்சப்போ இதை சொன்னாங்க என்றான். ராகுல் நீங்களும் என் கூட சென்னை வாங்களேன் என்றான் ராம். சரி வரேன் என ஒத்துக்கொண்டான். ராகுலும் ராமும் மறுநாள் மாலையே அவரை சந்தித்தனர். ராகுலை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது .இவனுக்காகத்தான் அவ உயிரையே விட்டா. இவனோட எதிர்காலத்துக்காக அவ பழியை ஏத்துக்கிட்டா என்றார்.இப்போ நீங்க மட்டும் தனியா இருக்கீங்களா ? ஆமாம். ரத்தினமும், இளங்கோவும் செத்துட்டாங்க.அப்படியா ? எனக்கு யார் மேலயும் எந்த வன்மமும் இல்லை . நான் நினைச்சாலும் அவங்களை ஒன்னும் பண்ண முடியாது.மேடம் சாவுக்கு பழி வாங்க யாராவது உங்களுக்கு ஏதாவது தோணுதா ? அப்படி யாரும் இல்லை . வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான் ராம். ராகுல் ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு போப்பா என்றார் பெரியவர். சரிங்க சார் என்றான்.
ரத்தினத்தின் போனையும் , இளங்கோவின் போனையும் ஆய்வு செய்ததில் ஒரே ஒரு நம்பர் போடுவில் இருப்பதாகவும் அந்த நம்பரை trace செய்ய சொல்லி இருப்பதாகவும் சொன்னார் இன்ஸ்பெக்டர். அந்த நம்பர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமானது . அவர் சென்னையை சேர்ந்தவர். உடனடியாக போலீஸ் அவரை விசாரித்ததில் இளங்கோவையும், ரத்தினத்தையும் எனக்கு நன்றாக தெரியும் சார் .நான் அவர்களோடு ஸ்கூலில் வேலை பார்த்தேன் .மேரி குறித்து கேட்டபோது ராகுல் சொன்னது உண்மைதான் அந்த
வதந்தியை கிளப்புனது இளங்கோதான் . நானும் அதுக்கு உடந்தையா இருந்தேன். இளங்கோ எனக்கு போன் பண்ணி அந்த பையனை அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் பார்த்தேன் அதனால அதிர்ச்சியில் மயக்கமாயிட்டேன்னு சொன்னார். நான் யாரை பார்த்தீங்கன்னு கேட்டதுக்கு பதில் ஏதும் சொல்லல. இப்போ ரத்தினமும் செத்துட்டான். அவனும் எனக்கு போன் பண்ணி யாரோ என்னையும் மெரட்டுறாங்கன்னு சொன்னான். இதை தவிர ஒன்னும் தெரியாது என்றார்.
ராம் அன்று நடந்த விழாவின் வீடியோ காட்சிகளை பார்த்துக்கொண்டே வந்தான், அதில் இருந்த முகத்தை பார்த்ததும் அதிர்ந்தான். உடனடியாக ராகுலை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சொன்னான். அவனுடைய போட்டோவையும் அனுப்பி இருந்தான். இந்த பையன் மேரி டீச்சர்கிட்ட படிச்ச பையன்தான் அப்போ 7th படிச்சிட்டு இருந்தான். ராகுலை அழைத்துக்கொண்டு ஓல்ட் ஸ்கூலுக்கு உடனடியாக பயணம் ஆனான்.என்ன சார் எல்லா கொலையும் பண்ணிட்டு இங்கே வந்து silent ஆஹ் பாடம் எடுக்கறீங்களா ?என்றான் ராம். நான் ஏன் சார் கொலை பண்ணனும் . மேரி டீச்சர் சாவுக்கு பழிவாங்க . ம்ம் நீங்க சொல்றது சரிதான். நீங்க ஏன் அந்த விழாவுக்கு போனீங்க. உங்களை பார்த்த உடனே தான் இளங்கோ மயங்கி விழுந்துந்திருக்காரு .எனக்கும் இன்விடேஷன் வந்தது அதான் போனேன். ஆனா அவர் எதுக்காக மயங்கி விழுந்தார்னு தெரியலியே . போன் அடித்தது எடுத்து பேசுங்க .. பிரிட்டோவையும் யாரோ கொன்னுட்டாங்க சார் என்றார் இன்ஸ்பெக்டர். ராம் உண்மையை சொல்லுங்க யார் இதுக்கெல்லாம் பின்னணியா இருக்கா? என்றான். மேரி டீச்சர் சாகும்போது அவங்களுக்கு ஒரே லட்சியம்தான் இருந்தது எங்களையெல்லாம் நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சாங்க. நீங்க நினைக்கிற மாதிரி நாங்க யாரும் அந்த கொலைகளை செய்யலை.
இளங்கோவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய பாதர் கிட்டேயிருந்து போன் வந்தது. இதுக்கு மேலயும் நான் எதையும் மறைக்க விரும்பல. ஏற்கனவே மூணு உயிர் போனப்புறமும் இதை நான் சொல்லலேன்னா நான் மனுஷனா இருக்குறதுக்கே அர்த்தம் இல்லை. திலீப் இளங்கோவோட சொந்த பிள்ளையில்லை. அவர் தத்தெடுத்து வளர்த்த பிள்ளை. அவனும் அந்த மேரி டீச்சர்கிட்ட படிச்சு வளர்ந்த பிள்ளைதான். அன்னிக்கி இளங்கோ மயங்கி விழுந்தப்பவே என்ன நடந்ததுங்கிறத விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டான் திலீப். உடனே இளங்கோவை தீர்த்துக்கட்டினான்.நீங்க விசாரிச்சு குடுத்த தகவல் மூலமா ஒவ்வொருத்தரா கொன்னு போட்டுட்டான். என்னை நீங்க மன்னிக்கணும் என்றார். இதெல்லாம் நேத்து வந்து திலீப் என்கிட்டே பாவமன்னிப்பு கேட்க வந்த போது சொன்னான்.
திலீப் போலீசில் சரணடைந்ததாக செய்திகள் வந்தது. தான்தான் இளங்கோவையும், ரத்தினத்தையும் , பிரிட்டோவையும் கொன்றதாக ஒப்புக்கொண்டான். மேரி டீச்சர் மேல பழி சுமத்துனதுக்கு பழி வாங்கவே இப்படி செய்ததாகவும் சொன்னான்.