தீப்தியும் , ரஞ்சித்தும் தியான வகுப்பில் சேர்ந்தார்கள்.குருஜியை பார்த்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். வருகிற வெள்ளிக்கிழமை முதல் யோகாசன வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.முதலில் அடிப்படை பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. ஆசிரமத்திலேயே தங்கி பலர் தியான வகுப்பில் பங்கேற்று வந்தனர். சில யோகா டீச்சர்களும் அங்கேயே தங்கியிருந்தனர்.சரண்யா வயது 30 இருக்கும் அவர்தான் இவர்களுக்கு யோகா டீச்சர். ரஞ்சித்தும் , தீப்தியும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
ஒரு வார பயிற்சிக்கு பிறகு ரொம்ப refreshing ஆ இருக்கு இப்போ என்றாள் தீப்தி. ஆமா இதை நாம முன்னாடியே செஞ்சிருக்கலாம் என்றான் ரஞ்சித். சரண்யா அங்கேயே தங்கி வகுப்பெடுப்பவர் என தெரிந்தது.அவளை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தாள் தீப்தி. அதற்கு குருஜியிடம் permission கேட்க வேண்டும் இப்போது வேண்டாம் பிறகு ஒரு நாள் வருகிறேன் என்றாள். சரண்யாவிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து சரண்யாவிற்கு பதிலாக வேறு ஒரு instructor வந்திருந்தார். சரண்யா தற்காலிக விடுப்பில் சென்று இருப்பதாகவும் அதுவரை இவர் தான் வகுப்பெடுப்பார் எனவும் கூறப்பட்டது. ரெண்டு வாரம் கழித்து சரண்யா ஜாயின் செய்த போது நிறைய தடுமாற்றம் இருந்தது. தீப்தி அவளிடம் என்ன பிரச்னை சரண்யா எங்ககிட்ட சொல்ல கூடாதா என்றாள். அப்படியெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. எதுக்கும் என் நம்பர் எடுத்துக்கோங்க எதுவும் உதவி தேவைப்பட்டா கூப்பிடுங்க என்றாள் தீப்தி. ரஞ்சித்தும், தீப்தியும் சரண்யாவின் நிலையை நினைத்து கவலை அடைந்தனர்.
இது நடந்து மூன்றாவது நாள் காலையில் போலீஸ் ஆசிரமத்துக்குள் வந்தது . என்ன ஆச்சு என எல்லோரும் குழம்பினர்.யோகா டீச்சர் சரண்யாவை காணோம்னு குருஜி complaint கொடுத்திருக்கார்.. உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா தெரிவிக்கலாம். அதோடு அந்தகிருந்த சக யோகா டீச்சர்களையும் விசாரித்தனர். அவங்க ஒரு மாதிரி கவலையா இருந்தாங்க அது மட்டும்தான் தெரியும் என தீப்தி சொன்னாள். போலீஸ் அதோடு ஆசிரம வளாகத்தையும் சோதனை செய்தது.
தீப்திக்கு மெசேஜ் வந்திருந்தது. அவசரம் உதவவும் என்று சரண்யாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. திரும்பவும் கால் செய்தபோது போன் not reachable என்று வந்தது. உடனே போலீசுக்கு தெரிவித்தான் ரஞ்சித். போலீஸ் அந்த நம்பரை காண்டாக்ட் செய்ய முயற்சித்தார்கள் ஆனால் பலன் ஏதும் இருக்கவில்லை. நம்பரை லொகேட் செய்யும் முயற்சியில் தொடந்து ஈடுபட்டு வந்தனர். மறுபடி காலோ மெஸேஜோ வந்தால் எங்களை கூப்பிடுங்க என்று போலீஸ் சொன்னார்கள்.
சரண்யாவிடம் இருந்து கால் வந்தது பயப்படவேண்டாம் நான் எப்படியும் வந்துடுவேன்.. போலீசுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று சொன்னாள். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே ? இல்ல என்னோட ex லவர் மறுபடி என்னை தொந்தரவு பண்ணினதாலே ரொம்ப stressful ஆஹ் இருந்தேன் அவனுக்கு பயந்துதான் கொஞ்சம் தலைமறைவா இருந்தேன். ஆனா குருஜி அதை புரிஞ்சிக்காம போலீஸ்கிட்டே என்னை காணோம்னு சொல்லிட்டார். நான் கூடிய சீக்கிரம் வந்துடுவேன் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள். இப்போ என்ன பண்றது தீப்தி, போலீசுக்கு போறதா வேணாமா அதான் அவங்களே சொல்லிட்டாங்களே போலீசுக்கு போக வேண்டாம்னு அதனாலே கொஞ்ச நாள் பொறுமையா இருப்போம்.
யோகா வகுப்புகளுக்கு தொடர்ந்து போய் வந்த போதும் இன்னும் சரண்யா வராதது கவலை அளித்தது. போலீசும் அவரை தேடி கொண்டுதான் இருந்தது. சரண்யாவுக்கு கால் செய்தாள் தீப்தி. போனை வேறு யாரோ எடுத்தார்கள் சரண்யா இல்லையா சரண்யா இனிமே பேசமாட்டா, இனிமே இந்த நம்பருக்கு கால் பண்ணாதீங்க .. போன் பேசியது ஒரு ஆணின் குரல் என்பதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. தீப்திக்கு இது கலக்கத்தை உண்டு பண்ணியது. அதுக்கும் நாமளே அவங்க வீட்டுக்கு போய் பார்ப்போமா ? போலீசில் தெரிந்த நண்பர்களிடம் பேசி சரண்யாவின் முகவரி வாங்கினான் ரஞ்சித்.
சரண்யா வீட்டில் அவருடைய அப்பா மட்டும் இருந்தார்.குருஜி சொல்லித்தான் என் பொண்ணு காணாமப்போனதே எனக்கு தெரியும் . அவ எனக்கு போன் பண்ணலே. எல்லாம் அந்த கிஷோர் கிறுக்கு பயலால வந்த வினை. கிஷோர்னு ஒருத்தனை என் பொண்ணு விரும்புனா அவனும் என் பொண்ணை விரும்புனான் . ஆனா என் பொண்ணை விட்டுட்டு அவன் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான். வெறுத்து போன என் பொண்ணு ஆசிரமத்திலேயே தங்கிட்டா.ஆனா கொஞ்ச வருஷம் கழிச்சு திரும்ப வந்து என் பொண்ணை வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி கலாட்டா பண்ணினான். அப்போ போலீஸ்கிட்ட சொல்லி சமாளிச்சோம். அவன் இப்போ மறுபடியும் தொந்தரவு
பண்றானோன்னு ஒரே கவலையா இருக்கு.
எல்லாம் சரியாயிடும் என்றாள் தீப்தி. பெரியவருடைய போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டாள் .
ரெண்டு நாள் கழித்து பெரியவரிடம் இருந்து போன் வந்தது என் பொண்ணு நம்மளையெல்லாம் விட்டுட்டு போயிடாம்மா இனி நான் என்ன செய்ய போறேன் என்று அழுதார். அழாதீங்க நாங்க உடனே வரோம் என்றாள் தீப்தி. போலீசார் சரண்யாவை சடலமாக கண்டெடுத்திருந்தனர். இந்த பாவியாலதான் அவ செத்தா இப்போ எதுக்காக திரும்ப வந்தே வெளியே போடா என கத்திக்கொண்டிருந்தார். கிஷோர் ஒரு மூலையில் நின்று அழுது கொண்டிருந்தான். போலீஸ் அவனை இழுத்துக்கொண்டு போனது. குருஜி வந்து இறுதி மரியாதையை செலுத்தினார்.போலீஸ் சரண்யா ஏதோ ஒரு ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்ததாக சொன்னார்கள்.இது சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டதாகவும் சொன்னார்கள்.
சரண்யாவின் போன் ஒப்படைக்கப்பட்டதும் அதை தீப்தி வாங்கி பார்த்தாள். இந்த நம்பர்லேயிருந்துதான் கூப்பிட்ருக்காங்க. அப்போது குருஜியிடம் இருந்து தீப்திக்கு போன் வந்தது, நீங்க ரெண்டு பெரும் இனிமே வகுப்புக்கு வர வேண்டாம் .ஏன் என்னாச்சு குருஜி ? ரூல்ஸ் மீறி சரண்யாவோட காண்டக்ட்ல இருந்திருக்கீங்க. இணைப்பு துண்டிக்கப்பட்டது . குருஜியை நேரில் பார்த்து பேசுவோமா ? இல்ல அவசியம் இல்ல என்றான் ரஞ்சித். கிஷோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. அவனுக்கும் இதற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லையென தகவல் வந்தது. அப்போது இத்தனை சரண்யா எங்கிருந்தாள்? அவளுடன் இருந்த அந்த நபர் யார் என்று தீப்தியும் ரஞ்சித்தும் குழம்பினர். சரண்யா தங்கியிருந்ததாக சொன்ன ஹோட்டலுக்கு ரஞ்சித் போனான்.
சரண்யா அங்கு தங்கியிருந்தது உண்மைதான் ஆனால் தனியாக இருக்கவில்லை என்பது தெரிந்தது. சரண்யா கூட தங்கியிருந்த ஆளின் போட்டோவை சிசி டிவி காட்சிகளை பார்த்து எடுத்து கொண்டான். அவருக்கு 40 வயதிருக்கும் . போலீசிடம் இது பற்றி சொன்ன போது இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்று சொன்னார்கள். முகவரியும் போலி முகவரியாய் இருந்தது . சரண்யா தங்கியிருந்த அறையை போலீஸ் பூட்டி சீல் வைத்திருந்தது. அங்கிருந்த ரூம் பாயிடம் விசாரித்த போது அந்த பொண்ணு ஒரு நாள் மட்டுமே அங்கு தங்கியிருந்ததாகவும் அதுவும் அந்த ஆள் தங்க வைத்துவிட்டு போனவர் திரும்ப வரவில்லை. எப்படி சரண்யா இறந்தது தெரியவந்தது என்ற கேள்விக்கு எங்களுக்கு போன் வந்தது சரண்யா போனை எடுக்கவில்லை எனவும் அவள் அறைக்கு சென்று உடனே பார்க்கும் படியும் சொன்னார்கள். கதவை உடைத்துதான் திறந்தோம். உள்ளே போய் பார்த்தால் மயங்கிய நிலையில் இருந்தார். ஆனால் ஆஸ்பத்திரி கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த ரூம் key வேற யார்கிட்டயாவது இருந்ததா ? இல்லை சார் எங்கிட்டே இருந்த டூப்ளிகேட் key போட்டுத்தான் திறந்தோம்.