Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 15

ராமை பார்த்ததும் ரஞ்சித் உற்சாகமடைந்தான். சார் அந்த ஆளுங்களை விடக்கூடாது சார். அத நான் பாத்துக்கிறேன். நீங்க ஊருக்கு கிளம்புங்க. அதெல்லாம் வேணாம் சார். இந்த கேஸ் முடியற வரை நாங்க உங்க கூடவே இருப்போம் . ம்ம் அப்போ ஒரு முடிவோடதான் இருக்கீங்க .. என்றபடி ராம் சிரித்தான். சரி போய் ரெஸ்ட் எடுங்க நான் அந்த லேடி லலிதா கூட பேசிட்டு வரேன். ஓகே சார். ராம் லலிதாவை தான் தங்கியிருந்த ஹோட்டல் அருகிலிருந்த ரெஸ்டாரன்ட்டுக்கு வர சொன்னான். நேரம் ஆகியிருந்தது. அவள் வரவில்லை. போன் சுவிட்ச் ஆப் என்று சொன்னது போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து விசாரித்த போது அவள் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக சொன்னார்கள். லலிதா தங்கியிருந்த ஹோட்டலுக்கு போய் சேர்ந்த போது மணி இரவு 10 ஆகி விட்டிருந்தது . reception இல் இருந்து பேரை சொல்லி விசாரித்தான். இப்போதான் உள்ளே போனாங்க . ரூம் no 206 என்று சொன்னான். வேகமாக சென்று காலிங் பெல் அழுத்தினான். திறக்கவில்லை. சிறிது நேரம் கழித்து திறக்கப்பட்டது.ஒரு ஆள் திறந்தான். பார்க்க போலீஸ் மாதிரி தெரிந்தது . லலிதா எங்கே என்ற கேள்விக்கு குளிக்குறாங்க என்று சொன்னான். ஏன் லலிதா எதுவும் கேட்கவில்லை என்ற கேள்வி எழுந்தது .

நீங்க யாரு என்ற தொனியில் ராம் அவனை விசாரித்தான் . தன்னையும் அறிமுகப்படுத்தி கொண்டான். உடனிருந்தவன் இப்போது வந்துவிகிறேன்
என கிளம்பினான். சார் ஒரு நிமிஷம் என்பதற்குள் அவன் ஓட தொடங்கினான். ராம் அவனை துரத்தி கொண்டு ஓடினான். அதற்குள் அவன் பைக்கை எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஏமாற்றத்துடன் ராம் ரூமுக்கு வந்தபோது reception ஆட்களும் வந்து விட்டார்கள் . என்னாச்சு சார். பாத்ரூம் கதவு வெளியே தாழ்ப்பாள் போட்டிருக்கு . லலிதா லலிதா என குரல் குடுத்தான் . வெளியே இருக்கும் தாழ்ப்பாளை திறந்த போது தொப்பென ராம் மீது லலிதா விழுந்தாள். முதுகில் கத்தி சொருவி இருந்தது . லலிதா செத்து பத்து நிமிடங்கள் ஆயிருந்தது .

போலீஸ் விசாரித்தார்கள் . நடந்ததை சொன்னான் ராம். லலிதாவின் செல்போனை கைப்பற்றி செக் செய்தார்கள். அதில் தீப்தி எடுத்த வீடியோ இருந்தது. போலீஸ் இது ஆணவக்கொலையாக இருக்கலாமோ என்ற எண்ணத்தில் விசாரணையை முடுக்கி விட்டது. கடைசியாய் பேசிய நபரின் நம்பரை போலீசார் ட்ராக் செய்தனர். அது ஏதோ ஒரு போலி முகவரி குடுத்து வாங்கப்பட்ட சிம் என போலீசார் உறுதி செய்தனர். கணவன் மனைவி இருவருமே ஒரே வாரத்தில் கொல்லபட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தீப்தியிடம் அந்த வீடியோ லலிதாவிடம் எப்படியோ போய் சேர்ந்துவிட்டது என்றான் ராம்.போலீஸ் காரில் வந்த நபர்களை தேடுகிறது. கார் நம்பரை வைத்தும் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . லலிதாவின் கணவனை சுட்டவர்களும், லலிதாவை கொன்றவர்களும் ஒரே குழுவா என்ற சந்தேகம் எழுந்தது. போலீசுக்கு தெரியாமல் லலிதாவின் handbag கொண்டு வந்திருந்தான் ராம். அதை கொட்டி கவிழ்த்தபோது லெட்டர் ஒன்று கிடைத்தது. அன்புள்ள லலிதாவிற்கு நீ சொன்னபடி எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். இன்னும் ரெண்டு நாளில் வேலை முடிந்துவிடும். நீ மூணாறுக்கு போ . மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன். உன் அன்பு பிரவீன் . இதை பார்த்ததும் தீப்தி அப்போ லலிதாவே அந்த பையன கொல்ல பிளான் பண்ணியிருக்கணும் .

வந்தவன் பிரவீனா இருக்க சான்ஸ் இருக்கு. இப்போ யாரை காண்டாக்ட் பண்ணா பிரவீன் பத்தி டீடெயில்ஸ் கிடைக்கும் . அப்போது கடிதம் இருந்த கவரை திருப்பி பார்த்தான். அது ஒரு ஹோட்டலின் முகவரி இருந்தது . அந்த ஹோட்டல் மூணாறில் இருந்தது . ஹோட்டல் ஸ்டார் என்று இருந்தது. ரஞ்சித்தையும் அழைத்து போனான். ஹோட்டல் ஸ்டாரில் பிரவீன் இருக்கும் அறை பற்றி விசாரித்தான் . ரூம் நம்பர் 208 . மூணு பேர் இருக்கிறார்கள் என்றான் வரவேற்பறையில் இருந்தவன். ரஞ்சித் நீ போய் கதவை தட்டு. வேணாம் நீ போனா உஷாராயிடுவானுக . நானே போறேன் நீ கீழ வெயிட் பண்ணு என்றான். பிரவீன் பிரவீன் என குரல் கொடுத்தான். அவர்கள் அறை கதவை திறந்தார்கள். துப்பாக்கியால் சுட்ட அதே ரெண்டு பேர் இருந்தார்கள்.பிரவீன் குளிக்கிறாரு என்றார்கள். யாரு வந்திருக்கா? என்றான் பிரவீன். யாரோ லலிதாவோட friend பா ..ஓ சரி சரி ஒரு 5 நிமிஷம் வந்துடறேன். என்ன ராம் இவ்ளோ தூரம் வந்துடீங்க ரஞ்சித் வரலையா ? என்றபடி வந்தான் பிரவீன். போனை எடுக்க முயன்ற ராமின் போனை உதைத்து தள்ளினான் பிரவீன் .நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அவளை லவ் பண்ணினா லலிதாவை அவன் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான். அவனை போட்டா லலிதா வழிக்கு வருவான்னு பார்த்தா அதுக்கும் மசியலை. வேற வழியில்லை ரெண்டு பேரையும் கொன்னாச்சு. அப்போ அந்த லெட்டர்? அப்போதானே போலீஸ் confuse ஆவாங்க . நீ எப்படியும் என்னை தேடி வருவேன்னு தெரியும் ராம். லலிதா சாகுறப்போ இதை சொல்லிட்டுதான் செத்தா.
பிரவீன் தப்பு மேல தப்பு பண்ற என்பதற்குள் ராமின் கை,கால் கட்டப்பட்டது. அங்கிருந்து மூவரும் வேகமாக கிளம்பினர். அவசரப்படாதீங்க பிரவீன் கீழ போலீஸ் இருக்கு . நான் போலீஸ் கிட்டே சொல்லிட்டுதான் வந்தேன் என்றான். அப்போ இவனை இங்கேயே போட்டுரலாமா என்றான். வேணாம் இவனை வெச்சே
எஸ்கேப் ஆகலாம் . ராமின் கழுத்தில் கத்தியை வைத்து வெளியே வந்தார்கள். வெளியே வந்தால் ரஞ்சித் போலீசோடு நின்றிருந்தான்.
கிட்டே வராதீங்க வந்தீங்கன்னா இவனை கொன்னுருவோம் என்றான் பிரவீன். பின்னாலிருந்து யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது . ஒரு நிமிடம் திரும்பி பார்த்தான். அடுத்த நிமிடம் ராம் கத்தியை தட்டி விட ,தடுமாறி கீழே விழுந்தான் பிரவீன் . மற்ற இருவரும் ஓட்டம் பிடிக்க போலீசார் அவர்களை வளைத்து பிடித்தனர். எதிர்திசையில் ஓட முயற்சிக்க எதிரே தீப்தி துப்பாக்கியோடு நின்றாள்.மறுபடி அவளை நோக்கி ஓட முயற்சிக்க அவனை காலிலேயே சுட்டாள். கீழே சுருண்டு விழுந்தான் பிரவீன். போலீஸ் வந்து மூவரையும் அரெஸ்ட் செய்து கொண்டு போனது .ராம் தீப்தியை பாராட்டினான். எப்படியோ டையதுக்கு வந்து என் உயிரை காப்பாற்றினீர்கள் என்றான் ராம் . அது எங்க கடமை சார் என்றான் ரஞ்சித் .


ஹனிமூன் ட்ரிப்பிற்கு பிறகு ஒரு வழியாக தீப்தியும் ரஞ்சித்தும் ஊர் வந்து சேர்ந்தனர். ரஞ்சித் எப்போதும் போல் அலுவல் வேலைகளில் மூழ்கி கிடந்தான். தீப்தியிடம் இருந்து போன் வந்தது, என்னாச்சு தீப்தி ஆபீஸ் hours ல போன் பண்ணியிருக்க ஒண்ணுமில்ல ஒரு issue ஆயிடுச்சு அதான் நான் வர லேட்டா ஆகும். என்ன ஆச்சு தீப்தி என் கூட வேலை பார்க்குற மீனா நேத்து நைட் வீட்டுக்கு போகலியாம் . நைட் shift முடிஞ்சு கம்பெனி cab ல தான் போனா . டிரைவர் போனும் சுவிட்ச் ஆப் ல இருக்கு மீனா போனும் சுவிட்ச் ஆப் ல இருக்கு அதான் ஒரே confusion. சரி தீப்தி நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா அதெல்லாம் வேண்டாம் . நானே வந்துடுவேன். மணி இரவு 11 இருக்கும் . தீப்திக்கு போன் வந்தது. மீனா உயிரோட வேணும்னா 5 லட்சம் பணம் கொடுத்துட்டு கூட்டிட்டு போ போலீசுக்கு போனா மீனா திரும்ப வரமாட்டா . பணம் குடுக்க வேண்டிய இடத்தை நாளைக்கு சொல்றேன் . தீப்தி ரஞ்சித்தை எழுப்பி விஷயத்தை சொன்னாள்.நீ ஒன்னும் பயப்படாதே தீப்தி, இது யாரோ பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க, நாளைக்கி பேசி solve பண்ணலாம். எனக்கென்னவோ பதட்டமா இருக்கு ரஞ்சித். நான் ஆபீஸ் போன் பண்ணி விஷயத்தை சொல்லவா ? வேணாம் தீப்தி அவங்க போலீசுக்கு போவாங்க தேவையில்லாம பிரச்சினை உண்டாகும் . மொதல்ல மீனா திரும்ப வரட்டும் . அப்புறம் மத்தத பார்த்துக்கலாம்.