Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 1

காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கெஞ்சி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன.

இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான்.

எல்லோரையும் போலத்தான் அவர்களுக்குள்ளும் காதல் உண்டாயிற்று . அடுத்த வாரம் தீப்தி கல்யாணம் . அதற்குள்ளாக வேலை அதற்குள்ளாக அவளை சமாதானபடுத்துதல் ரெண்டும் சாத்தியமா என யோசித்தான் .அவர்களுக்குள் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. அவள் அப்பா ஒரு முடிவெடுத்து விட்டால் அதுக்கு குறுக்கே உலகமே வந்தாலும் தடுக்க முடியாது . இவன் கெஞ்சி மிஞ்சி பார்த்துவிட்டான். தீப்திக்கும் வேறு வழி தெரியவில்லை.இவனுக்கு வேலை இல்லாதது பெரிய பிரச்னையாக இருந்தது .இவனுடைய பின்புலம், அப்பா கிடையாது .அம்மா மட்டும்தான்.. எப்படியோ இன்ஜினியரிங் தேறி வந்திருந்தான் . தீப்தியை சென்னையில்தான் முதன்முதலில் சந்தித்தான் . ஒரு பெரிய வேலை வாங்கி தரும் கம்பெனி ஒன்றில் ஹெச் ஆர் ஆக அறிமுகமாகி இவனுக்கு வேலைகளை சிபாரிசு செய்தாள். இவனுக்கு அவளுடைய உதவும் மனப்பான்மை பிடித்து போய்விட ப்ரொபோஸ் செய்தான். அவளும் ஏற்றுக்கொண்டாள்.தீப்திக்கும் இவனுக்கும் இடைவெளி விழ காரணம் கார்த்திக். அவளுடைய வருங்கால மாப்பிள்ளை . பெயருக்கேத்த மாதிரி எல்லாவித பாவமும் அவனுக்குண்டு . அவனுடைய ஓவர் ஸ்மார்ட்னெஸ் இவனுக்கு எரிச்சலை தரும் . அவனும் ஹெச் ஆர் தான். அவனும் தீப்திக்கு தெரிந்தவன்தான். ப்ரொபோஸ் பண்ணி தீப்தி மறுக்கவே அவருடைய அப்பாவை கன்வின்ஸ் பண்ணி இப்போது கல்யாணம் வரை வந்துவிட்டான் .

தீப்திதான் போன் செய்திருந்தாள். டேய் தூங்கிட்டியா என்றாள்? இவன் அமைதியாய் இருந்தான். உனக்கு எப்படிடா தூக்கம் வருது . மனசாட்சியே இல்லையாடா உனக்கு ? எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்துடா .. உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன். அவள் அழ தொடங்கினாள் . செய்யறதெல்லாம் செஞ்சுட்டு அழறியா ? எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சுதானே லவ் பண்ணினோம் . சரி அழாதே நான் ஒரு வாரத்துல எல்லாம் சரி பண்றேன். நிச்சயமா ? நிச்சயமா . ஐ லவ் யு ரஞ்சித். ஐ லவ் யு தீப்தி . மறுநாள் ஒரு interview இருந்தது . ஒரு technical அசிஸ்டன்ட் வேலை . எப்போதும் போல இல்லாமல் தெம்போடு போக வேண்டுமென ரெண்டு இட்லியும் ஒரு வடையும் சாப்பிட்டான் . இண்டர்வீயூ அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் இருந்தது . தீப்திதான் இந்த இன்டெர்வியூவையும் ஏற்பாடு செய்திருந்தாள் . 15000 சம்பளத்துக்கு எவ்வளவு கேள்விகள் கேட்க முடியுமோ அவ்வளவு கேள்விகள் கேட்டார்கள் .மொபைல் ஷோ ரூமில் வேலை. appointment ஆர்டர் நாளைக்கு மெயில் பண்ணுவதாக சொன்னார்கள்.

தீப்திக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னான் . இந்த வேலைக்கு நீ எப்பவோ போயிருக்கலாம் . ம்ம் மீட் பண்ண முடியுமா ? என்ன விளையாடுறியா.. இங்க கார்த்திக் ஒரு மணிக்கொருதடவை போன் பண்ணி விசாரிக்குறான். அவனுக்கு இதே வேலை .சரி ரஞ்சித் நான் ட்ரை பண்றேன் . கண்ணாமூச்சி ஆட்டத்தை அவளே ஆரம்பித்தாள் . இப்போது அவளே தொடர்கிறாள் . தீப்தி சற்றே இளைத்து போன மாதிரி இருந்தது . என்னடா வர சொல்லிட்டு ஒண்ணுமே பேச மாட்டேங்குற . atleast நிச்சயம் பண்றதுக்கு முன்னாடியாவது தடுத்து இருக்கணும். சரி நீ என்ன பிளான் வச்சிருக்கே ரஞ்சித். ஒரு வேளை இந்த கல்யாணம் நின்னாலும் நீ என்னை கட்டிப்பியா ரஞ்சித். எதுக்கு இப்போ இப்படியெல்லாம் பேசுற ? விண்ணை தாண்டி வா த்ரிஷா மாதிரி . எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்ல . எங்காவது ஓடி போலாமா ? சே சே . நான் ஒரு வழி கண்டு பிடிக்கிறேன் . அதற்குள் கார்த்திக்கின் கால் வந்துவிட்டது . சரி ரஞ்சித் இதுக்கு மேல நான் இங்க இருக்க முடியாது . நான் வரேன் பை என்று கிளம்பி விட்டாள். ரஞ்சித்க்கு மெயில் வந்துவிட்டது . வேலை கிடைத்து விட்டது அடுத்து கல்யாணம்தான் என ஜாபர் கிண்டல் செய்தான். மச்சான் இந்த கல்யாணத்த நிறுத்த ஐடியா கொடுடா என்றான் . ஒரே வழி கார்த்திக் தான். அவன் நெனைச்சா இதை நிறுத்த முடியும். ஆனா அவன் தீப்தி அப்பாவை விடபுடிவாதமா இருக்கானே . எனக்கு தெரிஞ்சு நீங்க ரெஜிஸ்டர் marriage பண்ணியிருக்கலாம் . அப்பவே சொன்னேன் . சரி விடு மச்சான் பழசை பேசி என்ன ஆக போகுது .
முதல் நாள் வேலை கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது . எப்போதுமே தீப்தி நெனைப்பாவே இருக்காதீங்க பிரதர் என கூட வேலை பார்ப்பவர் கூற ஒரே சிரிப்பலை எழுந்தது .தீப்திதான் கால் பண்ணியிருந்தாள்.லஞ்ச் சாப்டியா ? இன்னும் இல்லே? எத்தனை மணிக்கு லஞ்ச் டைம் . என கேள்விகளை அடுக்கினாள். ஒருவேளை உன்னை நான் மீட் பண்ண முடியாம போய்ட்டா .என்ன சொல்ற தீப்தி. கல்யாணத்துக்கப்புறம் வெளிநாடு போக திட்டம் போட்ருக்கான் கார்த்திக். இன்னைக்கி திடீர்னு சொல்றான். எனக்கு ஒன்னும் புரியல .நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன் . என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ பேசாம இருக்கே .பேசாம நீ என் கூட வந்துடு தீப்தி பாத்துக்கலாம் . சும்மா சொல்லுற ..உனக்கு என் மேல interest போயிடிச்சு இல்லேன்னா இன்னும் மூணு நாள்ல கல்யாணத்த வச்சிக்கிட்டு விளையாட்டா இருக்க . போனை வைத்துவிட்டாள். ஒரு வழியாக அந்த நாள் நிறைவுற்றது . பேசாம கார்த்திக் background பத்தி ஏதாவது தகவல் அல்லது கார்த்திக்கோட ex யாரவது இருக்காங்களான்னு விசாரிப்போமா அதெல்லாம் தீப்தி ஏற்கனவே ஒரு agency மூலமா விசாரிச்சுட்டா . இப்போ என்னதான்டா பண்ண போற . ஒரு வழி இருக்கு . கல்யாண மண்டபத்துல பாம் இருக்குனு சொன்னா? கோவில்ல தாலி கட்டுவான். நீ வேற . சரி தூங்கு மச்சான் என்றான். கார்த்திக்கிடம் இருந்து போன் வந்தது . என்ன பிரதர் இன்னும் தூங்கலியா ? நானும் தூங்கலை.. நீ என்னதான் பிளான் பண்ணுனாலும் ஒன்னும் நடக்காது . அடுத்தவாரம் இந்நேரம் நாங்க யு எஸ் ல இருப்போம் . கவலைப்படாம தூங்குங்க பிரதர் . இவன் போனை துண்டித்தான் . கல்யாணத்துக்கு முதல் நாள் எல்லா ஏற்பாடுகளும் துவங்கின . நாதஸ்வரக்காரர்கள் ,மேளம் எல்லாம் எல்லாமே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . எங்கடா போய் தொலைஞ்சே ரஞ்சித் .. இங்கேதான் மண்டபத்துலதான் இருக்கேன் . என்ன சாப்பிட்டு போக வந்தியா ? உன்னாலே நான் விஷத்தை குடிச்சி சாகப்போறேன் . நீ நிம்மதியா யாரையாவது கல்யாணம் பண்ணு என்றாள் . நீ ஒன்னும் கவலைப்படாதே இன்னைக்கு நயிட் நம்ம ஓடி போறோம் .முடியாது ரஞ்சித் . எனக்கு வேற வழி தெரியல . டுமீல் எனும் சத்தம் கேட்க மணவறையில் இருந்து வெளியே ஓடி வந்து எட்டி பார்த்தாள். யாரோ கார்த்திக்கை துப்பாக்கியால் சுட்டிருந்தார்கள் . குண்டு தோள்பட்டையை துளைத்திருந்தது . தீப்தி திகைத்துப்போய் முகம் வெளிறினாள். ரஞ்சித் அப்போதுதான் மண்டபத்துக்குள் நுழைந்தான் .