Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 26

ராம் எலிகண்ட் ஸ்விம்மிங் பூல் உரிமையாளரை சந்தித்தான். பிரியாங்கிற பேருல யாரவது இங்க நீச்சல் கத்துக்க வந்திருந்தாங்களா அவங்க ரெகார்டஸ் எதுவும் ஸிஸ்டெம்ல இருக்கா ? நீங்களே செக் பண்ணிக்கோங்க சார் ஆனா நெறைய பிரியா இருப்பங்களே. நான் சொல்ற ப்ரியாவுக்கு 20 வயசுக்குள்ளேதான் இருக்கும் .சரி பார்க்கலாம். லிஸ்டில் பிரியா 10 வயது என்று பேர் மட்டும் இருந்தது . மற்ற விவரங்கள் இல்லை.அந்த போது பத்தி ஏதாவது தெரியுமா ?சார் நான் இந்த நீச்சல் குளத்தை சமீபத்தில்தான் வாங்கினேன் .இதுக்கு முன்னாடி உரிமையாளர் இறந்து போயிட்டாரு என்றார். இப்போ உங்ககிட்டே coach யாராவது புதுசா சேர்ந்தார்களா ? இல்லையே சார்.வேற யார் கிட்ட கேட்டா அந்த பிரியா பத்தி தெரியும் அதே தேதி ல join பண்ணுனவங்கள கேட்டா தெரியும் அது ஒரு சம்மர் வொகேஷன் டைம் நெறைய பெரு join பண்ணி இருப்பாங்க. அதில் அதே தேதியில் ஜாயின் செய்த சஞ்சனாவின் போன் நம்பரும் அட்ரெஸ்ஸும் இருந்தது. சஞ்சனாவை தொடர்பு கொண்ட போது அந்த பொண்ணு முகம் இப்பவும் ஞாபகம் இருக்கு முத நாள்தான் வந்துச்சு அன்னிக்கே அந்த நீச்சல் குளத்திலே இறந்தும் போச்சு. என்ன சொல்லறீங்க?ஆமா சார் ஆழம் தெரியாம தானா இறங்கிட்டா . நாங்க யாரும் பக்கத்துல இல்லை . ரஞ்சன் அண்ணாதான் காப்பாத்த ட்ரை பண்ணாரு. ஆனா அவராலயும் முடியல . ரஞ்சனை உங்களுக்கு தெரியுமா ?நல்லா தெரியும். சமீபத்துல ஸ்விம்மிங் பூல் ல இறந்து கிடந்தாரே.. ம்ம் பிரியா கூட இருந்தவங்க டீடெயில்ஸ் எதுவும் ஞாபகம் இருக்கா? இல்லை சார் நாங்க 10 நிமிஷம்தான் பேசி இருப்போம்.அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சி என்றாள்.தேங்க்ஸ் சஞ்சனா அப்போ coach ஆஹ் இருந்தவரு யாரு ?செல்வம்தான் coach ஆஹ் இருந்தாரு . அவரு அப்போ எங்க போயிருந்தாரு .அது பத்தி அதிகம் தெரியல. ஒரு வாரத்துக்கு ஸ்விம்மிங் பூல் மூடி இருந்தது சார். சஞ்சனா கார்த்திக்னு யாரையாவது தெரியுமா ? எந்த கார்த்திக்னு தெரியலியே ?அதுவும் சரிதான்.ப்ரியாவோட பிரதர் கார்த்திக் .. தெரியலை சார்.

செல்வம் எதையும் மறைக்காதீங்க .. அவங்க சொன்னது உண்மைதான் அந்த பொண்ணு தானாவே தண்ணீல இறங்கிடுச்சு . ரஞ்சன்தான் தண்ணியிலே குதிச்சு காப்பாத்த போனான். ஆனா எந்த பிரயோஜனமும் இல்லை. ம்ம் நீங்க அப்போ எங்க இருந்தீங்க.நான் அப்போ வெளியே புதுசா சேர்ந்தவங்களோட என்ட்ரி போட்டுட்டு இருந்தேன்.இது நடந்து ரெண்டாவது நாள் செல்வம் மறுபடி மாயமானார்.வீடியோ ஒன்று வாட்சப்பில் வந்தது.என் பேரு கார்த்திக் இவனை வெளியே விட்டா திருந்திடுவானு பார்த்தா திருந்தல அதனால நானே இவனுக்கு தண்டனை கொடுக்கிறேன், ஜலசமாதியாய் போ என்று செல்வத்தை நீச்சல் குளத்தில் தள்ளினான். செல்வத்தின் கைகள் பின்பக்கம் கயிறு கட்டப்பட்டு இருந்தது.உடனடியாக எலிகண்ட் ஸ்விம்மிங் பூல் சென்று பார்த்தனர்.அங்கே இறந்த நிலையில் செல்வத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. எதையோ மறைந்திருக்கிறார் செல்வம். கார்த்திக் எப்படி நீச்சல் குளத்துக்கு வந்து போகிறான் என்பதே ஆச்சர்யமாய் இருந்தது.இரண்டாவது உயிரும் போய் விட்டது.போலீஸ் தனிப்படை அமைத்து கார்த்திக்கின் உருவ மாதிரி வரைந்து தேடினார்கள்.மேகலாவும்,குமாரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

போலீசார் செல்வத்தின் வீட்டை சோதனை போட்டார்கள்.செல்வத்துக்கு ஒரு மகனும், மகளும் இருந்தார்கள். அவருடைய மனைவியிடம் பேசிய போது அவருக்கு திருமணத்துக்கு முன்பு குடிப்பழக்கம் இருந்ததாக சொன்னார்.உங்களுக்கு ஏதாவது தெரியுமா அந்த எப்போயாவது அந்த accident பத்தி சொல்லி இருக்காரா ?.இல்லையே சார். சஞ்சனாவிடம் இருந்து போன் வந்தது.பிரியா இறந்த அன்று இன்னொரு ஆளும் கூட இருந்தார் சார்.செல்வத்துடைய உதவியாளர் ப்ரவீன்னு ஒருத்தர் இருந்தார். அவரும் அப்போ அந்த சம்பவத்துக்கு பிறகு வேலைக்கு வரலை.செல்வத்தின் நண்பர்களிடம் விசாரித்தபோது செல்வம் இறந்த அன்று பிரவீன் செல்வம் வீட்டுக்கு வந்திருந்ததாக சொன்னார்கள். அன்று வந்து போனவர்களின் சிசிடிவி விடியோவை பார்த்தான் ராம். அதில் சஞ்சனா பிரவீனை அடையாளம் காட்டினாள்.போலீஸ் பிரவீனை பிடித்து விசாரித்தார்கள். அந்த சம்பவம் நடந்தப்போ நானும் செல்வமும் drinks சாப்பிட்டு இருந்தோம். அப்போ ஸ்டுடென்ட்ஸ் யாரும் இல்லை. ரஞ்சனும் ப்ரியாவும் மட்டும்தான் இருந்தாங்க. எங்களால் அதனாலே உடனே போய் காப்பாத்த முடியல. ம்ம் அதுக்கு ஏன் ரஞ்சன அவன் கொல்லனும்? பிரவீன் எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க. சரி சார்.நீங்க இப்போ என்ன பண்ணுறீங்க. எனக்கு சொந்தமா ஒரு ஜிம் இருக்கு சார். ம்ம் ஏதாவது எமெர்ஜெண்சினாஉடனே கூப்பிடுங்க.போலீஸ் பாதுகாப்பும் ப்ரவீனுக்கு கொடுக்கப்பட்டது.

ராம் அவ்வப்போது பிரவீனை சந்தித்து வந்தான். கார்த்திக்கிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. ப்ரவீனுக்கு இருந்த போலீஸ் பாதுகாப்பு விலகி கொள்ளப்பட்டது. கார்த்திக்கிடம் இருந்து போன் வந்தது. என்ன சார் பயம் போயிடுச்சா ? பிரவீனை நான் இன்னும் மன்னிக்கல என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.ப்ரவீனுக்கு அவசரமாக போன் செய்தான் ராம் . எங்கே இருக்கீங்க இங்க வீட்லதான்.. ஓ சரி சரி ஒன்னும் பிரச்னை இல்லையே ? இல்லை சார்.அன்று சாயங்காலமே பிரவீன் வீட்டிலே மது அருந்திய நிலையில் இறந்து கிடந்தான். யாரோ ஒரு பையன்தான் கொண்டு வந்து விட்டு போனாப்ல . அப்போவே full போதைல இருந்தாரு பிரவீன் என்று அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள்.பிரவீன் குடித்த மதுவை சோதித்த போது அதில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.
ராம் எலிகண்ட் நீச்சல் குளத்தின் டேட்டா சென்டருக்கு போனான். பிரியா இறந்த அன்று join செய்தவர்களின் லிஸ்டை மறுபடி செக் செய்தான்.பூஜாவின் பெயரும் அதில் இருந்தது.பூஜாவை விசாரித்தான் நீங்க ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க அவர் எப்பவோ வேலையை முடிச்சுட்டார். எதனால இப்படி பண்ணீங்க ? குமார் சாரையே கேளுங்க என்றால். குமாரிடம் பேசிய போது இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போறீங்க உண்மையை சொல்லுங்க என்றான் ராம். பிரியாவுக்கும் உங்க பையனுக்கும் என்ன சம்பந்தம் அன்னிக்கி என்ன நடந்தது .நீங்க அப்போ எங்கே இருந்தீங்க? என்னை எதுவும் கேக்காதீங்க ..நடந்த தப்புக்கு நான் கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் .அதுக்கு தண்டனையா என் பையனையே பறி கொடுத்துட்டேன் இன்னும் என்ன வேணுமாம் அவனுக்கு ? உங்க wife இப்போ எங்கே ? கோவிலுக்கு போயிருக்கா? நல்லா தெரியுமா அப்போது கார்த்திக்கிடம் இருந்து போன் வந்தது . என்ன Mr. குமார் இன்னும் உங்க மனசாட்சி வேலை செய்யலியா ? அது செய்யாதுன்னு தெரியும்.அதான் உங்க மனைவியை கடத்திட்டேன்.வேணாம் கார்த்திக் நீ தப்பு மேல தப்பு பண்ற என்றான் ராம். இப்போவாவது உண்மையை சொல்லி மீடியா முன்னாடி மன்னிப்பு கேக்க சொல்லுங்க என்றான் கார்த்திக். மீடியாவை கூப்பிட்டு பேசினார் குமார். 10
வருஷத்துக்கு முன்னாடி என் பையன் ரஞ்சன்vப்ரியாங்கிற பொண்ணு நீச்சல் குளத்துல join பண்ண வந்தப்போ தண்ணில பிடிச்சு விளையாட்டா தள்ளிவிட்டான். அதுல அவ ஆழத்துக்கு போய் இறந்துட்டா . அந்த நேரத்துல அங்க இருந்த செல்வமும், ப்ரவீனும் ட்ரிங்க்ஸ் சாப்பிட போயிருந்தாங்க. அதனால் உடனடியா அந்த பொண்ண காப்பாத்த முடியல . என் பையனும் அந்த பொண்ண காப்பாத்த முயற்சிக்கலை. நடந்தத நாந்தான் மறைச்சேன் எல்லோருக்கும் பணத்தை கொடுத்து செட்டில் பண்ணினேன். என் மனைவியை விட்டுடு கார்த்திக் என்று கூறினார்.போலீஸ் குமாரை கைது செய்தது .

மேகலா பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார். யார் அந்த கார்த்திக் என்பது புரியாத புதிராக இருந்தது. சஞ்சனா, பூஜா ஆகியோரிடம் கேட்ட போது எங்களுக்கும் தெரியாது. அவர் கிட்டேயிருந்து மெசேஜ் வரும் அவர் சொல்றதை நாங்க செய்வோம் என்றனர். அந்த மெசேஜ் வந்த நம்பருக்கு ராம் போன் பண்ணிய போது நான் ப்ரியாவோட father மூர்த்தி பேசுறேன் சொல்லுங்க சார் என்றார்.