Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 3

ஜாபர் அப்படி எந்த பொருளை வைத்திருந்தான் என தெரியவில்லை. ரஞ்சித் சென்னைக்கு பயணமானான் . எப்போதும் போல வேலைக்கு போனான். இது போல unknown நம்பரில் இருந்து கால் வந்தது என்ற போது இது ஒரு ஸ்கேம் என்றார்கள் கூட வேலை பார்ப்பவர்கள் . தீப்தியை சந்தித்தான் . ஜாபர் சம்பந்தமா உனக்கு ஏதாவது மறுபடி கால் வந்துச்சா என்றான் . இல்லே அன்னிக்கி வந்தது தான். நாம டிடெக்ட்டிவ் யாரையாச்சும் பாக்கலாமா என்றாள்?. கொஞ்சம் பொறு தீப்தி அந்த பொருள் என்னனு கண்டுபிடிக்கணும் அதுக்கு அப்புறமா நாம டிடெக்ட்டிவ் பார்க்கலாம் . கார்த்திக் என்ன சொல்றான். அந்த துப்பாக்கி சம்பவத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்டான் . என்னை கண்டாலே விலகி போறான் . என்னனு தெரியல . ஒரு வேளை அவனை குறி வெச்சவங்க உனக்கும் வைக்கலாம்னு நினைக்கிறானோ என்னவோ ? சரி ரஞ்சித் நான் வரேன்.ஏன் இவ்ளோ அவசரம் என இழுத்து அணைத்தான். நான் இன்னோருத்தருக்கு நிச்சயமான பொண்ணு . ஆனா இப்போ இல்லை என்றவாறு விடுவித்தான் .

ரூமில் இருந்த ஜாபருடைய பொருட்களையெல்லாம் எடுத்து ஒரு பக்கமாய் வைத்தான் . எதற்காக 10 லட்சம் போட்டிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தான். அவன் வேலை பார்த்தது ஒரு export கம்பெனி அதில் supervisor ஆக இருந்தான் . அவனுடைய சூட்கேசை திறந்து பார்த்தான் . சிறிய டைரி ஒன்றும் லாக்கர் key ஒன்றும் இருந்தது . டைரியில் போன் நம்பர் எழுதியிருந்தது . துணிகளுக்கிடையில் புதிய ஐபோன் ஒன்றும் கிடைத்தது . டைரியில் இருந்த நம்பருக்கு போன் செய்தான் . ஹலோ ரஞ்சித் அந்த ஐபோனை பிடிபிசி பேங்க் லாக்கர் ல வெச்சிடுங்க . நான் வந்து எடுத்துக்கறேன் . நீங்க யாரு சார் . அது உங்களுக்கு அனாவசியம் . ஜாபர் எப்படி செத்தான் தெரியுமா ? சரி சார் நான் கொண்டு வந்து கொடுக்கிறேன். இந்த ஐபோன் தான் பொருளா என குழம்பினான் .

தீப்திக்கு போன் செய்தான் பிஸி என வந்தது . இப்போது இதை குடுத்து விட்டால் ஜாபரை கொலை செய்தவனை கண்டுபிடிப்பதும் கஷ்டம் . எனவே ஒரு முடிவு எடுத்தான் . போனை unlock செய்து பார்த்து விடுவதென முடிவெடுத்தான் . மறுபடி போன் அடித்தது தீப்திதான் பேசினாள். என்னாச்சு ரஞ்சித் ஏதாவது கெடைச்சுதா ?ஐபோன் ஒன்னு கிடைச்சுது .யாரோ ஒருவர் கால் பண்ணி அவரிடம் குடுக்க சொன்னதையும் சொன்னான் . கொடுக்காதே ரஞ்சித் . அவன் உன்னை ஏதாவது செஞ்சிட்டா ?நாம டிடெக்ட்டிவ் ராமை போய் பாப்போம் என்றாள். நான் இந்த போனை unlock பண்ணி பாக்குறேன் . சரி ஓகே பை என்றாள்

போன் unlock பண்ணுவது அவ்வளவு ஈஸியாக இல்லை. இன்னைக்குள்ள நீ போனை தரலேன்னா தீப்தியை நீ மறந்துட வேண்டியதுதான் என மெசேஜ் வந்தது.அவசர அவசரமாக பேங்க் போய் லாக்கரை திறந்து போனை வைத்தான். மறுபடி அந்த நம்பர்க்கு போன் செய்த போது உபயோகத்தில் இல்லை என தகவல் வந்தது . தீப்தியிடன் பேசினான் . unlock பண்ணியா இல்லையா என கேட்டாள் .இல்லை என நடந்ததை சொன்னான் . எங்கே இருக்க நீ இங்க நுங்கம்பாக்கத்துலதான் அங்கேயே இரு வரேன் என்றாள்.கார்த்திக் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டான். என்னாச்சு அவனுக்கு? என்னவோ தோனிருக்கு. அப்பா என்ன சொன்னார் நாளைக்கு மறுபடியும் உன்னை வர சொல்லி இருக்காரு . இந்த பிரச்னை முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாமே . சரி உன் இஷ்டம் . நாளைக்கு கண்டிப்பா வந்து பாரு.தீப்தி அப்பா எனக்கு உங்க கல்யாணத்துல பரிபூர்ண சம்மதம் என்றார் . சார் எனக்கொரு request . சொல்லுங்க அந்த ஜாபர் மேட்டர் தான. உங்க விருப்பப்படி அது தீர்ந்தவுடன் கல்யாணத்தை வெச்சுக்கலாம் . ரொம்ப நன்றி சார் என்றான்.மறுபடி ஐபோன் பார்ட்டிக்கு போனை அடித்தான் . ரிங் போனது யாரும் போனை எடுக்கவில்லை . சரி தொல்லை விட்டது என நினைத்தான் . மனம் உற்சாகத்தில் திளைத்தது . எப்படியோ இந்த கேஸ் முடிந்தால் தீப்தியுடன் திருமணம் என மகிழ்ந்தான்.

மணி இரவு 11 இருக்கும் . போன் அடித்தது ஐபோன் பார்ட்டி தான். வணக்கம் போன் பண்ணியிருந்தீங்களா? நீங்க? நாங்க இங்க செல்வம் சார் வீட்ல இருந்து பேசறோம் . நேத்து நைட் ஒரு விபத்துல அவர் இறந்துட்டாரு . ஏதாவது முக்கியமான விஷயமா ? அப்டி எதுவும் இல்லை சார். சரி சார் போனை வைக்குறேன் . என்னாச்சு அவருக்கு அந்த iPhone எடுத்தாரா இல்லையா ? தெரியலியே என யோசித்தான். தீப்தியும் ரஞ்சித்தும் டிடெக்ட்டிவ் ராமை சந்திப்பதென தீர்மானித்தார்கள் . தீப்தி ராமை ரஞ்சித்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். நடந்ததையெல்லாம் ரஞ்சித் சொன்னான். இப்போ நாம அந்த செல்வம் வீட்டுக்கு போவோம் . என்ன ஸ்டேட்டஸ் னு தெரிஞ்சுப்போம் என்றான் ராம். அந்த ஐபோன் ? அத அவர் எடுத்திருக்க மாட்டார்னு தோணுது . அப்போ லாக்கர் லேயே இருக்குமா ? ஒருவேளை அந்த இன்னொரு கீயை வைச்சு வேற யாராவது கூட எடுத்திருக்கலாம் . உங்ககிட்ட ஒரு சாவி இருக்குல்ல ம்ம் இருக்கு சார். செல்வம் வீட்டு அட்ரஸ் விசாரித்து தெரிந்து கொண்டார்கள் . ரஞ்சித்தும் ராமும் ஷாமியான போட்ட வீட்டில் துக்கம் விசாரிப்பது போல் கலந்து கொண்டார்கள் . செல்வம் ஜாபர் கூட வேலை பார்த்தவர் என்று தெரிந்தது .நேற்று நைட் டூ வீலரில் வரும் போது லாரில அடிபட்டு இறந்துட்டார். செல்வத்துக்கு ஒரு மகளும் மகனும் இருந்தனர். மகன் பிரதீப் காலேஜ் படித்து வந்தான். அவனை அழைத்து அப்பா ஏதும் சேதி சொன்னாரா என்றான் . நீங்க ? நான் ரஞ்சித் இவர் ராம். நீங்கதான் ரஞ்சித்தா உங்ககிட்ட கொடுக்க சொல்லி ஒரு ஐபோன் குடுத்தார். வேற என்ன சொன்னார் இந்த லெட்டர் குடுக்க சொன்னார்.

ரஞ்சித்துக்கு, என் குடும்பத்தை காப்பற்ற வேறு வழி தெரியவில்லை. இந்த ஐபோனை உரியவரிடம் சேர்க்கவும் . எனக்கு ஏதோ நடக்குமென்று தோன்றுகிறது . அதனால் திரும்ப உங்களிடமே கொடுக்கும்படி சொல்லி இருக்கிறேன். எனக்கேதாவது நேர்ந்தால் என் export முதலாளியே பொறுப்பு .இப்படிக்கு செல்வம் .அங்கிருந்து கிளம்பினார்கள் export கம்பெனியில்தான் ஏதோ நடந்திருக்கிறது .முதலில் இந்த ஐபோனை ஓபன் செய்ய வேண்டும் என்றான் ராம். அந்த export கம்பெனி கிண்டியில் இருந்தது . appointment இல்லாமல் பார்ப்பது கடினம் . ராம் reception இல் export முதலாளி ஐபோன் தங்களிடத்தில் இருப்பதாகவும் இந்த நம்பருக்கு கால் பண்ணும்படியும் சொல்லிவிட்டு வந்தான். சார் ஊரில் இல்லை நீங்க வேணா எங்க மேனேஜர் கிட்ட பேசறீங்களா என்றாள். அவர்கிட்ட நான் இன்போர்ம் பண்றேன் அவரே உங்களை கூப்பிடுவாரு என்றாள் .அடுத்த ஒரு மணி நேரத்தில் ராமுக்கு போன் வந்தது. ஐபோன் உங்ககிட்டத்தான் இருக்கா ? நீங்க யார் சார் பேசறீங்க ? நான் exports கம்பெனிலேயிருந்து பேசுறேன் என் பெரு பிரதீப் . எனக்கு சில விஷயங்கள் தெரியணும் என்றான் ராம் . நேர்ல மீட் பண்ணலாமா ? கண்டிப்பா என்றான் .ஐபோன் எங்க பாஸ் மாதவனுக்கு சொந்தமானது . பேக்டரி ல அதை எங்கேயோ மிஸ் பண்ணிட்டார். வேற ஒன்னும் அதுல secret இல்ல. சமீபத்துல ஜாபர், செல்வம்னு ரெண்டு பேர் உங்க கம்பெனி ல மர்மமான முறையில செத்துருக்காங்க . அது பத்தி பேசுவோமா . அதை பேச நேரமில்லை . நம்மள யாரவது வாட்ச் பண்ணிட்டு இருக்கலாம் . ஐபோன் இப்போ என்கிட்டே இல்லை . நீங்க ஏதாவது சொன்னாதான் என்னால அதை எடுத்து தர முடியும். சரி நாளைக்கு நீங்க எங்கே சொல்லறீங்களோ அங்க வரேன் பேசுவோம் என்றான். நிச்சயமா , நிச்சயமா சார் என்றான் பதட்டத்தோடு .