தீப்தியும் ரஞ்சித்தும் ஸ்னேஹாவின் பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தனர்.சினேகா தீப்தியின் நெருங்கிய தோழியின் மகள். சினேகா கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள். மிக அருமையாக keyboard வாசித்து காண்பித்தாள் .எல்லோரும் சினேகா துல்லியமாக வாசித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். சினேகா 5 வது படித்து வந்தாள். ஒரு சிலர் யார் அந்த keyboard மாஸ்டர் என கேட்டு அட்ரஸ் வாங்கிக்கொண்டனர்.பர்த்டே க்கு சற்று தாமதமாக அந்த மியூசிக் மாஸ்டர் வந்து விட்டார். சாரி மா கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு என்றார். மறுபடி ஒருமுறை அவருக்காக keyboard வாசித்து காட்டியபோது ரஞ்சித் பெரிதும் மாஸ்டரை பாராட்டினான். தன் பெயர் ராமநாதன் என்றும் சொந்தமாக மியூசிக் அகாடமி வைத்திருப்பதாக சொன்னார். அவருடைய விசிட்டிங் கார்டை வாங்கி வைத்துக்கொண்டான் ரஞ்சித்.
ரொம்ப நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காரு என்று தீப்தி சொன்னாள். நீயும் வேணா மியூசிக் கிளாஸ் போறியா ஆனா பாட மட்டும் செஞ்சுடாதே என்று கிண்டலாக சொன்னான் ரஞ்சித். இது நடந்து இரண்டு நாட்களில் அந்த விபரீதம் நடந்து விட்டது. ராமநாதன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அவருக்கு சொந்தமாக ஷாப்பிங் complex ஒன்றும் இருந்தது அதனுடைய extension வேலைகளை மேற்பார்வை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மழை வந்ததால் அருகில் இருந்த கைப்பிடி சுவர் உடைந்து விழுந்ததால் கீழே விழுந்து மரணம் என்று பேப்பரில் செய்தி வெளியாகி இருந்தது.
ரஞ்சித் அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தான். நிறைய கூட்டம் வந்திருந்தது . ராமநாதனுடைய மனைவி,மகனுக்கு ஆறுதல் கூறினான்.ஸ்னேஹாவும் அவளுடைய அப்பா அம்மாவும் வந்திருந்தனர்.சினேகா அழுது கொண்டிருந்தாள்.அவர்கள் ஸ்னேஹாவை சமாதானப்படுத்தினர்.ராமநாதனுடைய மகனிடம் பேசிய போது எங்களுக்கு இன்னும் சந்தேகம்தான் இருக்கு சார். இந்து விபத்துனு எங்களால நம்ப முடியலை என்றான். ராமநாதன் பொதுவாகவே ரொம்ப மென்மையான குணம் கொண்டவர். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு கொண்டவர் என்றெல்லாம் வந்திருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
தீப்தி நாம இந்த விஷயத்தை ராம் கிட்டே சொல்லி விசாரிக்க சொல்லலாமா ? வேண்டாம் அவர் பிஸி ஆஹ் இருப்பாரு. ஸ்னேஹாவுக்காகவாது இதை நாம செஞ்சுதானே ஆகணும்.ம்ம் அவர்கிட்டே ஈவினிங் பேசுறேன் என்றாள் தீப்தி.என்ன ரொம்ப நாளா போனையே காணோம் என்றான் ராம்.அதெல்லாம் ஒண்ணுமில்லை என்று ராமநாதன் பற்றி சொன்னாள்.நானும் கேள்விப்பட்டேன் அது ஒரு mysterious டெத் மாதிரி தெரியுது. நீங்க இந்த கேஸ் solve பண்ணி குடுக்கணும் அவர் பையனை பார்த்தா பாவமா இருக்கு 10th படிக்கிறான். அவர்க்கு ஏகப்பட்ட ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் இப்ப நல்ல நிலமைல இருக்காங்க. சரி தீப்தி இந்த கேஸ் நான் எடுத்துகிறேன் பட் உண்மை எப்படி இருந்தாலும் ஏத்துக்கணும் சரியா என்றான். எதுக்கு ராம் அப்படி சொல்லறீங்க? உங்களுக்கே தெரியும் சில கேஸ் நாம நெனைக்கிறத விட depth அதிகமா இருக்கும் சில கேஸ் ஒண்ணுமே காரணம் இருக்காது என்றான்.
ராமநாதனுடைய ப்ரொபைல் ரொம்ப எளிமையான பின்னணியில் இருந்து வந்து சொந்தமாக அகாடமி வரைக்கும் வந்திருந்தார். அவருடைய ஸ்டூடெண்ட்ஸிடம் கேட்ட போது எல்லோருமே அவர் மறைவுக்காக வருந்தினார்கள். ராம் அவர் விழுந்த கட்டிடத்தை பார்வையிட சென்றிருந்தான்.என்ஜினீயர் ரவிக்குமார் சோகமே உருவாக உட்கார்திருந்தார்.இந்த கட்டிடம் extension என்னைத்தான் பண்ண சொல்லியிருந்தாங்க கடைசியில இப்படி ஆயிடுச்சே என்றான். ரொம்ப நல்ல மனுஷன் என்றான். என்னோட friend மாதிரி பழகி வந்தாரு சார் அவரு. ராம் அவனிடம் உங்ககிட்டே கேட்டா தப்பா நெனைக்க மாடீங்களே ? சொல்லுங்க சார் பொண்ணுங்க விஷயத்துல அவர் எப்படி.?சே சே தங்கம் சார். அவ்ளோ மரியாதையா நடந்துக்குவாரு என்றான்.
ராம் அவருடைய முன்னாள் ஸ்டுடென்ட்ஸ் இப்போது டீச்சராக பணிபுரியும் சிலரை சந்தித்தான். அவர்கள் எல்லோருமே அதே விஷயத்தை சொன்னார்கள். தீபுவை விட்டு பேச சொல்லலாம் என்று நினைத்தான். தீபுவிடம் இது பற்றி சொன்ன போது ஒருத்தர் கூட அவரை பத்தி தப்ப சொல்லலே என்றான். எல்லோரும் இப்போ நல்ல பொசிஷன்ல இருக்காங்க. நீதான் விசாரிக்கனும் தீபு எதை எல்லோரும் மறைக்கிறாங்கனு தெரியல ஒருவேளை அவங்க சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்னு அவர்கிட்ட இருக்குமோ சே சே அதெல்லாம் இருக்காது நானே விசாரிக்கிறேன் என்றாள். மியூசிக் அகாடமியில் வேலை பார்த்த மற்ற டீச்சர்களிடம் விசாரித்தாள் தீபு. ஒரு டீச்சர் மட்டும் தனியாக பேசவேண்டும் என சொல்லியிருந்தாள். அவள் தீபுவை சந்தித்தாள். என் பெயர் வாணி. நீங்க சந்தேகபட்டது சரிதான். அவர் லேடீஸ் விஷயத்துல வீக் தான்.என்னால அவ்ளோதான் சொல்ல முடியும் என்றாள்.நீங்க இப்போ சொல்ல போற விஷயத்துலதான் குழந்தைகளோட எதிர்காலமே இருக்கு என்றாள் தீபு. அவர் என்னையும் பாலியல் ரீதியா துன்புறுத்தி இருக்காரு ஆனா அதை இப்போதான் மறந்துட்டு வரேன் .உங்களுக்கு தெரிஞ்ச வேற யாராவது இதே மாதிரி பாதிக்கப்பட்டு இருக்காங்களா ? தெரியல மேடம் அவரு மியூசிக் எக்ஸாம் டைம்லதான் வேலைய காட்டுவார் மத்த நேரத்துல ஒன்னும் செய்ய மாட்டாரு . நான் இப்போ கூட ஏன் சொல்றேன்னா அவரை மாதிரி நெறைய பேரு இருக்காங்க.
பாஸ் நாளைக்கு அவங்க மனைவியை ஒருதடவை பார்த்துட்டு வந்துடலாம்னு இருக்கேன் என்றாள் தீபு. சரி போய் பாரு அப்படியே ஏதாவது எவிடென்ஸ்
கெடைக்குமானு பாரு என்றான் ராம்.ராமநாதன் மனைவி கீதா அழுதழுது முகம் சிவந்து போய் கிடந்தது . எப்படி கேட்பது என்று தீபுவுக்கு புரியவில்லை இருந்தாலும் தயங்கியவாறே சாருக்கு கெட்ட பழக்கம் ஏதாவது உண்டா மேடம் என்றாள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் friends யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? இல்லை சரி அவருக்கு வேண்டாதவங்க யாராவது இருந்தாங்களா ?அவர் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காதவரு அவருக்கு போய் இப்படி ஆயிடுச்சே . அவர் ரூமை பார்க்கலாமா ? சரி பாருங்க. ரூம் மிக ரசனையோடு வடிவைக்கமைப்பட்டு இருந்தது . யாரை பற்றியாவது அடிக்கடி பேசுவாரா ? அவர் குருநாதர் பற்றி பேசுவார் ஆங் அவர் ஸ்டுடென்ட் கீர்த்தி பத்தி பேசுவார். சின்ன குழந்தையிலிருந்து பழக்கம் சமீபத்துலதான் அவளுக்கு கல்யாணம் ஆச்சு. ஓ அவங்க அட்ரஸ் தர முடியுமா ? தரேன் என்றாள் .
கீர்த்தியை தீபு சந்தித்த போது பேச மறுத்துவிட்டாள்.என்கிட்டே எதுவும் கேக்காதீங்க . வெளியே போங்க என்று சொல்லிவிட்டாள்.ராமிடம் இது பற்றி தெரிவித்த போது கம்பெல் பண்ண வேண்டாம் நாம பார்த்துக்கலாம் வந்துடு என்று சொன்னான் ராம். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். வாணியிடம் கீர்த்தி பற்றி விசாரித்த போது கீர்த்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என சொல்லிவிட்டார்.கீர்த்தியும் மியூசிக் டீச்சராக பணிபுரிந்து வந்தாள். ரெண்டு நாட்கள் கழித்து கீர்த்தியுடைய அப்பா போன் பண்ணியிருந்தார். அவ கொஞ்ச நாளா இப்படித்தான் இருக்கா அவ நல்லாத்தான் இருந்தா ஒரு மியூசிக் எக்ஸாம்ல fail ஆனதுலேயிருந்து ஆளே மாறிட்டா . எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுந்தா .எங்களுக்கு எதுவும் புரியல. அவளை மருத்துவர்களிடம் காண்பிச்சோம் ஆனா அப்பயும் பேச மறுத்துட்டா ..இப்போ கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சோம் அதுவும் புடிக்கலைனு வந்துட்டா . சரிங்க சார் மறுபடியும் அவங்க வேற யார்கிட்டயாவது மியூசிக் கத்துக்கிட்டாங்களா? சந்திரன்னு ஒருத்தர் கிட்ட கத்துக்கிட்டாங்க. அவர் போன் நம்பர் தரமுடியுமா .. தரேன் மேடம்.