யுவனுக்கு தான் நிச்சயம் தன்னால் முடிந்ததை செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ராம். சாமியார் நரசிம்மன் லேசுப்பட்ட ஆளுமில்லை. யுவனுக்காக இதை செய்துதான் ஆக வேண்டுமென ராம் நினைத்தான். தீப்தியிடமும் , ரஞ்சித்திடமும் நடந்ததை சொன்ன பொது அவர்களும் வருத்தப்பட்டார்கள் . ராம் சாமியாரை சந்திப்பதென முடிவெடுத்தான். மாந்த்ரீகம், மந்திரம் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது ராமுக்கு தெளிவில்லாமல் இருந்தது .தீபுவிடம் பேசும்போது நாமளே ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணி கையும் ,களவுமா பிடிச்சா என்ன என்றாள் . அது அவ்வளவு சுலபமில்லை . வேற ஒரு தம்பதிகள் மூலம்தான் அது நடக்கணும் நம்ம ரஞ்சித். தீப்தியவே நடிக்க வெச்சா என்ன . அது சரியாய் வருமா ? தீப்தி நிச்சயமா ஒத்துப்பாங்க . சாமியார் மோசமான ஆளா இருக்கறதுனால கொஞ்சம் தயக்கமா இருக்கு . தீப்தியவே கேட்டு பார்ப்போம் . நான் தீப்தியோட அண்ணனாகவும், நீ ரஞ்சித்தோட தங்கையாகவும் இருப்போம் . அதே சமயம் யுவன் மனைவியை கொன்னது நரசிம்மன்தான்ன்னு நாம prove பண்ணனும் . அவரோட சென்னை வருகை எப்போன்னு போன் பண்ணி கேளு .நேர்ல போய் பாப்போம் .
வருகிற 11 வெள்ளிக்கிழமை வருகிறாராம் . அன்னிக்கி ஹோட்டல் diamond ல பக்தர்களை சந்திக்கிறாராம் . அன்னிக்கே பார்த்துடலாம் . appointment வாங்கிடு தீபு .சரி பாஸ், பாஸ் இல்லே இனிமே ராம் னு கூப்பிடு. சரி ராம். தீப்தியும் ,ரஞ்சித்தும் சாமியாரை சந்திக்க சம்மதித்தார்கள் . நிச்சயமா நான் யுவன் சாருக்காக இதை செய்றேன். கொஞ்ச நாளில் ரெஜிஸ்டர் marriage நடந்தது .கொஞ்சம் பயபக்தியுடன் நான்கு பேரும் காரிலே போய் இறங்கினார்கள். டோக்கன் நம்பர் 8 இருந்தது. தீப்தி என்று குரல் கொடுத்தார்கள் . இவர்கள் போய் அந்த அறை வாசலில் நின்றவுடன் உள்ளே வா தீப்தி என்றான் நரசிம்மன். உக்காருங்கள். என்றான். ரஞ்சித்தும், தீப்தியும் அமர்ந்தவுடன் என்ன பிரச்னை குழந்தை இல்லை அவ்ளோதானே இதுக்கு ஏன் இவ்ளோ தூரம் வரணும் சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்து யாகம் பண்ணி இருப்பேன் . இப்போ ஒன்னும் கெட்டுபோகலை வீடு எங்க . அண்ணா நகர்ல சொந்த வீடா? ஆமாம் நான் தீப்தி கிட்டே பேசணும் எல்லாம் வெளிய போங்க என்றான் நரசிம்மன். அப்பா? அம்மா? அப்பா மட்டும் இருக்கார். சரி நான் சொன்னபடி செய்யணும் என்றான்.சரி சாமி .
தீப்தி வெளியே வந்தவுடன் என்ன சொன்னாரு என்று ஆர்வமாய் விசாரித்தார்கள் தீபுவும், ராமும் . அவர் அப்பா அம்மா பத்தி கேட்டாரு அவ்ளோதான். பூஜைக்கு நாள் குறித்தார்கள் . என்னென்ன சாமான் வாங்க வேண்டுமென ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார் சாமியார். தீப்தி எனக்கு பயமா இருக்கு என்றாள். ஏன் பயப்படுறே நாங்கல்லாம் இருக்கோம்ல என்று ரஞ்சித் கூறினான். என்னோட பயமெல்லாம் அவர் ரஞ்சித்த ஏதாவது பண்ணிடுவாரோ அப்டின்னுதான். ம்ம் அப்பாகிட்டே பேசிட்டியா தீப்தி. அவர் கிட்டே சொல்லிட்டேன். அன்னிக்கி அவர் வெளியூர் போய்டுவாரு . அதுவும் நல்லதுதான்.
இது ஒர்க் அவுட் ஆகுமா ராம். உங்க பிளான் தான் என்ன எனக்கு ஒன்னும் புரியல என்றாள் தீபு .நாம ஒன்னும் செய்ய போறதில்லை தீப்தியோட கையிலதான் எல்லாமே இருக்கு. அவ பேசுற விதத்துலதான் அந்த சாமியார் உண்மையை சொல்லுவான். எனக்கு நம்பிக்கை இருக்கு. சாமியார் பாலியல் ரீதியா தொல்லை பண்ண மாட்டான். ஏன்னா அவன் நோக்கம் நகைகள் தான். அத எடுத்துக்கிட்டா அதுக்கப்புறம் திரும்பி கூட பாக்கமாட்டான். ஆனா யுவன் மனைவியை கொன்னு தூக்குல ஏத்துனானு சொன்னீங்க . அது எவ்ளோ தூரம் உண்மைன்னு கண்டுபிடிக்கணும். இப்போதைக்கு வேற வழி இல்ல பொறுமையா இருப்போம் .
இடையில் யுவனை போய் பார்த்து வந்தான் ராம் . அவன் ரொம்ப danger ஆன ஆளு ராம். பார்த்து handle பண்ணுங்க என்றார். மேலும் சில தகவல்களை சொன்னார். பூஜைக்கு இன்னும் ரெண்டு நாட்களே இருந்த நிலையில் சின்ன சாமியார் வந்து பூஜைக்கு நகைகள், தாலி ரெண்டுமே அவசியம் என சொல்லிவிட்டு போனார். இவன் டூப்ளிகேட் நகைகளை தயாராக வைத்திருக்க சொன்னான். சமயத்தில் அவன் நகைகளை நெருப்பில் போடுவதாக பாவனை செய்து அபேஸ் செய்து விடுவான். ரூமில் கேமரா பொருத்தலாம் என தீபு யோசனை சொன்னாள். அவன் உஷாராகி விடுவான். அந்த நாளும் வந்தது தீப்தியும், ரஞ்சித்தும் பூஜை பலகையில் அமர்ந்தனர். ராமும் தீபுவும் ஓரமாக கொஞ்சம் டென்ஷன் ஆகவே நின்றனர். மந்திரங்களை ஜபிக்க சொன்னான். சாமியாரும் சின்ன சாமியாரும் மட்டுமே வந்திருந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டது . தீப்தி எல்லா குறையும் சரி ஆயிடும் .. கடவுளை வேண்டிக்கோ என்றார் சாமியார்.
திடீரென தீப்தி தீப்தி என அரற்றினார் . தீப்தி தப்பு பண்ணிட்டியே தப்பு பண்ணிட்டியே உன் மேல குறைய வச்சிக்கிட்டு தம்பி மேல தப்பு சொல்லிட்டியே ? அதுக்குதான் அந்த கடவுள் உனக்கிந்த தண்டனையை குடுத்திருக்கான். என்கிட்டே சொல்லு அது என்ன தப்புனு எங்கிட்ட சொல்லு .,, தனியா சொல்லுரியா சொல்லு எல்லாரும் வெளிய போங்க .. தீப்தி என்கிட்ட பேசணுமாம் . தீபு ராமை பார்த்தாள். ராம் ரஞ்சித்தை பார்த்தான். பிறகு சின்ன சாமியார் உட்பட எல்லோரும் வெளியே வந்து நின்றார்கள் .கொஞ்ச நேரம் கழித்து என்னை விட்டுவிடு நான் வேணும்னு பண்ணல என்ற சாமியார் குரல் கேட்டது . சாமி உக்கிரம இருக்காரு அவர்கிட்ட இப்போ போக வேண்டாம் என சின்ன சாமியார் கேட்டுக்கொண்டார்.
எல்லாரும் உள்ள வாங்கடா பயப்படாம வாங்கடா ..தீப்தி குரல் கேட்டு அதிர்ந்து போனான் ராம். நீங்க எல்லாம் இருக்கீங்க என் புருஷன் யுவன் எங்கடா? நான் போட்டிருந்த நகை எங்கடா? சாமியார் என்ன சொல்ற தீப்தி ? நான் தீப்தி இல்லடா .. மல்லிகா யுவனோட மனைவி மல்லிகா?யாரு மல்லிகா யாரு யுவன் நீ யாரு தாயீ ? என்றான் சாமியார் . ம்ம் உனக்கு புரியல இல்லே . நீ அடிச்சி தொங்க விட்டு போனியே அந்த மல்லிகா ? நானா உனக்கு ஏதோ பைத்தியம் புடிச்சிருக்கு ?அப்ப சரி உன்னோட செயற்கை கால் ஒப்பரேஷனுக்கு பணம் குடுத்தது எப்படிடா ?பரதேசி .. அது வந்து உன்னோட வீட்டை இடிச்சி பெருசா கட்டினியே அது எப்படிடா ?ம்ம் இன்னும் புரியல என் நகையை கேட்டதுக்கு என்னைய கொன்னு புதைச்சுடுவேன்னு சொன்னியே ? இப்போ நான் உன்னை கொன்னு புதைகிறண்டா வா .,ram தீப்தி இட்ஸ் ஓகே என்றான். சாமியார் மயங்கி விழுந்தார். தீப்தி அவரை ஓங்கி மிதிக்க முயன்றாள். சாமியார் என்னை விட்டுடுங்க நான் நகையை குடுத்துட்றேன் . நான் உன்னை கொல்லலை யுவன் தான் உன்னை தூக்க மாத்திரை குடுத்து கொல்ல சொன்னாரு. இதை கேட்ட தீப்திக்கு சகலமும் ஒடுங்கிவிட்டது. ஏண்டா என் புருஷன் என்ன கொல்லனும். ஏற்கனவே இருக்குற நகைகளையெல்லாம் எனக்கு நீ கொடுத்தே .அது போதாதுன்னு வீட்டை விக்க பிளான் பண்ணினே . அவராலே தாங்க முடியலே .கடைசியா நாம ஒண்ணா இருந்ததை அவர் பார்த்துட்டாரு . அதனாலதான் உன்னை கொல்ல சொன்னாரு . இதை வெளில சொன்னா என்னையும் கொன்னுருவேன்னு சொன்னாரு . ராம் முகம் வெளிறியது. சாமியாரை அங்கிருந்து போய்விடும்படி சொன்னான். தீப்தி அழுது கொண்டிருந்தாள் . இன்னொருமுறை அவள் நிச்சயம் யுவனை சந்திக்க மாட்டாள் என்றே தோன்றியது ராமுக்கு . தன் மேல போலீஸ் சந்தேகப்படுறத தெரிஞ்சிகிட்ட யுவன் சாமியாரை மிரட்டத்தான் கேரளா போயிருக்காரு . வேணும்னே ராமை அனுப்பி அந்த சாமியாரை ஒழிச்சு கட்ட முடிவு பண்ணினார். ஆனா விதி அவர் ரசிகை ரூபத்துல வந்து விளையாடிட்டு . யுவன் ஜெயிலுக்கு போனார். தீப்தி கொஞ்ச நாளைக்கு யாருடைய புத்தகங்களையும் படிப்பதில்லையென முடிவெடுத்தாள்.