Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 9

தீப்தி யுவன் விவகாரத்தை மறக்க முயன்றாள். ரஞ்சித் அவளை சமாதானப்படுத்தினான். கொஞ்ச நாளில் நமக்கு நடக்க போகும் marriage function எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்று சொன்னான். அவர்கள் register marriage ஏற்கனவே செய்திருந்தாலும் இடையில் இந்த பிரச்னையால் மன அமைதி போயிருந்தது. தீப்திக்கு அவளுடைய கிளோஸ் friend ரஷ்மியிடம் இருந்து கால் வந்தது . ரஷ்மி என் husband ஐ போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா என அழுதாள் . கண்டிப்பா வரேன். ரஞ்சித்தையும் கூப்பிட்டு கொண்டாள். என்னாச்சு என்றான் ரஞ்சித். ரஷ்மியோட husband பாஸ் murder சம்பந்தமா அவ husband சுரேஷை விசாரிக்க கூப்பிட்டு போயிருக்காங்க. அப்புறம் வக்கீலை கூப்பிட்டீட்டு போயிருக்கா இப்போதைக்கு ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லி இருக்காங்க.

என்ன நடந்துச்சு என சுரேஷை விசாரித்தாள் தீப்தி. நேத்து நைட் பாஸ் எனக்கு கால் பண்ணி யாரோ என்னை மிரட்டுறாங்க . உடனடியா 2 கோடி பணத்தை கொண்டு வர சொல்ராங்க . குடுக்கலேன்னா என்னை கொன்றுவேன்னு சொல்றாங்கன்னு சொன்னார். நான் அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க பாஸ் . எவனோ சும்மா டம்மிதான் உங்களை மிரட்டி இருப்பான் அப்டினு சொன்னேன். மறுநாள் காலையிலே என்னை மீட் பண்ண சொன்னார். காலைல அவர் வீட்டுக்கு போனப்ப தான் அவரை யாரோ துப்பாக்கியால் சுட்டு கொலை பண்ணியிருக்க விஷயமே தெரிஞ்சது. போலீஸ் என்னை விசாரிச்சாங்க, அவங்க என்னை நம்பாம அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்காங்க. ம்ம் உங்களை ஏன் சந்தேகப்படுறாங்க .. மிரட்டுனது நானா கூட இருக்கலாம்னு நெனைக்கிறாங்க .

ரஷ்மி தீப்தியிடம் ஏதாவது பண்ணு அவருக்கு ஒன்னும் தெரியாது என்றாள். இப்போ இருக்குற நெலமைல எனக்கு தெரிஞ்சு ஹெல்ப் பண்ணக்கூடிய ஆள் ராம்தான். அவர் வெளியூர் போயிருக்கிறார் . அவர் வந்தவுடன் காண்டாக்ட் பண்ண சொல்றேன் என்றாள் தீப்தி .அதுவரை என் வீட்டிலேயே இரு என சொன்னாள். ரஷ்மி அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. ராம் எப்படி இருக்கீங்க ? நான் நல்லா இருக்கேன்.நீங்க நல்லா இருக்கீங்களா என விசாரித்தான் . நடந்ததை சொன்னாள் . சரி நான் ரெண்டு நாள்லே வரேன் வந்து விசாரிக்கிறேன் என சொன்னான் ராம்.

ராம் தீப்தியிடம் சுரேஷோட பாஸுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா ? அப்டி எதுவும் இல்லை. சுரேஷ் என்னவா இருந்தார் மேனஜரா இருந்தார். ம்ம் சுரேஷை தவிர வேற யாருக்காவது கால் பண்ணி பேசினாரா பாஸ் . அதை பத்தி தெரியலியே . சரி நான் அவர் கேஸ் ஹிஸ்டரி ஏதாவது இருக்கானு பாக்குறேன். போலீஸ் ஒரு நபரின் படத்தை வெளியிட்டு தேடப்படும் நபராக அறிவித்தார்கள் . ரெண்டு ஆண்டுகளுக்கு முன் பாஸிடம் வேலை செய்து காணாமல் போன பெண்ணின் அப்பாதான் அது . அவர் நம்பர்லேயிருந்துதான் கால் வந்துருக்கு . ஆனா ஆள் எஸ்கேப் . ஆனா அவர் எதுக்காக ரெண்டு கோடி கேக்கணும் ? என்றான் ராம். ம்ம் ஒருவேளை சுரேஷுக்கு அந்த பெண் காணாமல் போன வழக்கில் connection இருக்குமோ ?சே சே சுரேஷ் அப்போது அவர் கிட்டே வேலை பாக்கலை. நிச்சயமா என்றாள் ரஷ்மி.அப்போ சரி சுரேஷ் எதுவும் நம்மகிட்ட மறைக்கல .. நாம வேற மாதிரி proceed பண்ணுவோம் என்றான் ராம். ரஷ்மியிடம் ஏதாவது கால் தெரியாத நபர்கிட்டேயிருந்து வந்தா உடனே சொல்லுங்க அடுத்தது அந்த ஆள் சுரேஷ குறி வைக்கலாம்.

நான் அந்த காணாம போன பொண்ணு பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வரேன். ஜாக்கிரதையா இருங்க என்றான் ராம்.காணாமல் போன பெண் பற்றிய தகவல் அறிய இறந்து போன சுரேஷ் பாஸ் துரை வீட்டுக்கு போனான். அவர்கள் வீட்டில் அவருடைய மகனும், மனைவியும் இருந்தார்கள். அந்த பொண்ணு பேரு ப்ரீத்தி ரெண்டு வருஷம் முன்னாடி எங்க ஆபீசில வேலை பார்த்தது உண்மைதான். என்னவா வேலை பார்த்தாங்க . அக்கௌன்டன்ட்டா வேலை பார்த்தாங்க. அப்புறம் யாரையோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டதா கேள்விப்பட்டோம். அதுக்கப்புறம் இங்கே வேலைக்கு வரலை. ம்ம் அப்புறம் ஏன் அவங்க அப்பா துரை சாருக்கு போன் பண்ணனும் . அன்னிக்கி என்ன நடந்துச்சு . நானும் இவனும் மேல் ரூம்ல இருந்தோம் . இவரு ஜாகிங் போறதுக்காக ரெடி ஆகிகிட்டு இருந்தாரு. திடீர்னு ஏதோ வெடிக்கிற சத்தம் கேட்டுச்சு கீழ வந்து பார்த்தா அவரு அவரு அப்படியென்று அழ தொடங்கினாள் . அந்த ஆளு முகத்தை பார்த்தீங்களா
இல்லை . சிசிடிவி ? என்னவோ அதுல எதுவும் பதிவாகலேன்னு போலீஸ் சொல்றாங்க .

ப்ரீத்தி கல்யாணமான விஷயத்தை வீட்டுக்கு சொல்லவில்லை என்றும் . கிரமத்தில் இருந்த ப்ரீத்தி அப்பாவுக்கு இது தெரியாது என்றும் சொன்னார்கள். ப்ரீத்தி அப்பாவுக்கு துப்பாக்கி கிடைப்பதெல்லாம் சாத்தியமா என யோசித்தான் ராம். ப்ரீத்தி காணாமல் போன complaint எதுவும் போலீசில் பதிவாயிருக்கிறதா என செக் பண்ணி பார்த்ததில் அவளுடைய கணவர் சுந்தர் ஒரு கம்பளைண்ட் கொடுத்திருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவரும் மாயமாகி இருந்தார். இவர்களை கண்டுபிடித்து தர சொல்லி தேடி வந்த அப்பா குமரேசனைதான் தற்போது குற்றவாளியாக போலீஸ் தேடுகிறது . ப்ரீத்திக்கும், சுந்தருக்கும் என்னவாயிற்று . கம்பளைண்ட் லெட்டரில் இருந்த முகவரிக்கு போய் விசாரித்த போது வீடு பூட்டியிருந்தது . அக்கம் பக்கம் விசாரித்த போது ரெண்டு பெரும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அப்புறம் ப்ரீத்தி காணாமல் போகவும் ,சுந்தர் பித்து பிடித்தவன் போல சுற்றி வந்ததாகவும் சொன்னார்கள். இப்போது சுந்தர் இங்கு வருவதில்லை எனவும் சொன்னார்கள் . மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவை கொடுத்தான், அதில் காணாமல் போன ப்ரீத்தியும் , சுந்தரும் என்னவானார்கள் என விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தான் ராம்.

மறுபுறம் சுரேஷ் ஜாமீனில் வெளிவந்து விட்டான். சம்பவம் நடந்த சமயத்தில் சுரேஷ் டிரைவிங்கில் இருந்தது தெரிய வந்ததால் ஜாமீன் குடுத்து விட்டார்கள். சுரேஷ் குமரேசனை உங்களுக்கு தெரியுமா ? எந்த குமரேசன் ? அதான் அந்த ப்ரீத்தியோட அப்பா . ஒரே ஒரு தடவை எங்க ஆபிசுக்கு வந்தாரு . என் பொண்ணை கொன்னுட்டிங்களே அப்படினு பாஸ் பேரை சொல்லி பிரச்னை பண்ணினாரு .. ஓ அவர் கூட யாரும் இருந்தாங்களா . இல்லை அவர் மட்டும்தான் இருந்தாரு . அப்போது சுரேஷின் நம்பருக்கு unknown நம்பரிலிருந்து கால் வந்தது . நான் குமரேசன் பேசறேன்.. அடுத்து நீதான் என சொல்லிவிட்டு கால் துண்டிக்கப்பட்டது. குமரேசன் முகம் பேயறைந்ததை போலாயிற்று . என்னாச்சு சுரேஷ் அந்த குமரேசன்தான் அடுத்து என்னை கொல்ல போறதா சொல்றான். நான் ஒரு தப்பும் பண்ணலியே . ராம் போலீசுக்கு போன் செய்து மிரட்டல் வந்ததாகவும் நம்பர் ட்ராக் செய்யும்படியும் கேட்டுக்கொண்டான். ரஷ்மியிடம் இதை சொல்லவேண்டாம் என ராம் சொன்னான். தீப்தி வந்து என்னாச்சு ராம் ஏதாவது updates என்றாள். குமரேசனும் ,சுந்தரும் சேர்த்துதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடுறாங்க என்ன நடக்குதுன்னு பொறுமையா இருந்துதான் பாக்கணும். இப்போதைக்கு சுரேஷும் உன் வீட்லயே இருக்கட்டும் .

கலெக்டர் உத்தரவுப்படி விசாரணை துரிதப்படுத்தப்பட்டது . போலீஸ் ராமை தொடர்பு கொண்டார்கள் . ராம் உடனே ப்ரீத்தி வீட்டுக்கு போகலாம் என்று சொன்னான். அவர்கள் வீடு பூட்டு சாவி பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி திறந்தார்கள் . எல்லாம் சரியாக இருந்தது . ஒரு மூலையில் சுற்றிவைக்கப்பட்ட பாயில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து நின்றது . ராம் மூக்கை பொத்திக்கொண்டான். போலீஸ் அம்புலன்ஸ்க்கும் போரென்சிக்கும் போன் செய்தார்கள் . ப்ரீத்தி பிணமாக கிடந்தாள் .ப்ரீத்தியின் உடல் ஒரு பொலித்தீன் கவர் கொண்டு சுற்றபற்றிருந்தது . உடம்பில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் சொன்னது . பின்னால் கிணற்றில் இருந்து கத்தியும் எடுக்கப்பட்டது . ராம் தீப்திக்கு இந்த விஷயத்தை சொன்னான். இந்த கொலை பத்து நாட்களுக்கு முன்புதான் நடந்திருக்கிறது என போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் சொன்னது . அப்போது இத்தனை நாள் ப்ரீத்தி எங்கே இருந்தாள்? சுந்தர் எங்கு போயிருந்தான். அப்போ குமரேசன் கேள்விகளால் ராமுக்கு தலை சுற்ற தொடங்கியது