ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

(5)
  • 58.3k
  • 0
  • 25.1k

அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி வரும்போது கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான்.

1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது பகுதி 1 அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான். இவனுடைய விருப்பமெல்லாம் அவள் கூட சகஜமாக பழக வேண்டும் என்பதுதான் ஆனால் ...மேலும் வாசிக்க

2

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 2

தான் தோற்றுப் போய் விட்டோம் என்பதை விஷால் நம்பவில்லை. மறுபடியும் முயற்சிக்க மனம் வரவில்லை. ரேணுகா டீச்சரின் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏனோ இவன் மனம் ஒட்டாமல் இருந்தது. சுபா இவனுக்கு உறுதுணையாக இருந்தாள் . ஏதாவது ஒன்றை செய்து அவனை அந்த தோல்வியில் இருந்து விடுபட செய்வதற்கு முயற்சி செய்தாள். ஒருவேளை அனன்யாவிடம் பிரதீப் விஷாலுடைய காதலைப் பற்றி சொல்லி இருப்பானோ என்று நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் இப்பொழுது அதைப் பற்றி பேசி என்ன பயன் இவன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். இப்போது அவன் முன்னே இருப்பதெல்லாம் அவனுடைய எதிர்காலம். கடந்த காலம் எல்லாம் வெறும் மாயையாக தோற்றமளித்தது. அனன்யாவை நினைத்து நினைத்து தான் முழுக்க வெறும் கண்ணாடி பிம்பமாகவே மாறிவிட்டதாக நினைத்துக் கொண்டான். அவள் எதை செய்தாலும் அதை தனக்காகவே செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். மேலும் பிரதீப் மூலமாக இன்னும் ...மேலும் வாசிக்க

3

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 3

அனன்யாவிடம் இருந்து கால் வந்ததும் இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளே பேசினாள் விஷால், சுபா எல்லாமே சொல்லி இருப்பாள் நீங்க ஒன்னும் அவசரப்பட தேவையில்லை யோசிச்சு சொல்லுங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். பிரதீப் ...அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அவன்கிட்ட ஏற்கனவே நான் பேசிட்டேன் அவன் இதுல தலையிட மாட்டான், அனன்யா நீங்க முழு மனசோட தான் இத சொல்றீங்களா? அவசரப்பட வேண்டாம் என்றான். விஷால் என் மனசாட்சிக்கு விரோதமா எதையும் என்னால செய்ய முடியாது நான் உங்களை விரும்புவது நிஜம் அதை தடுக்க என்னால முடியல என்றாள் . அனன்யா, காட்சிகள் மாறுவது போல் அனன்யாவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டாள். சரி அனன்யா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, சரி விஷால் ஃபோனை வைக்க இவனுக்கு மனம் வரவில்லை அனன்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆதலால் பொறுமையாக இருப்பதே நல்லது ...மேலும் வாசிக்க

4

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 4

விஷால் மறுபடி கண் விழித்து பார்த்த போது அவனுடைய வீட்டில் இருந்தான். சுபா கவலையோடு அவன் அருகில் இருந்தாள் . அனன்யா எங்கே என்று கேட்டான் மருந்து வாங்க போயிருக்கா இப்போ வந்து விடுவாள் யார் உன்னை இப்படி பன்னாங்க ? டான்ஸ் class பசங்களா ? ஆமாம் ..பிரதீப் அவங்க கூட இருந்தானா ? விஷால் அமைதியாய் இருந்தான். டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். சரி சுபா . அனன்யா வந்து விட்டாள் . பிரதீப் தான் இவனை இப்படி பண்ணி இருக்கான் என்றாள் சுபா .அனன்யா விஷால் அருகில் அமர்ந்தாள். சுபா வெளியே போய் விட்டாள் . அனன்யா என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்றாள் .மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள் . தாங்க்ஸ் அனன்யா என்றான். பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாமென நினைத்தான் ...மேலும் வாசிக்க

5

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 5

ஒரு கணம் அவனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. சுபாவும் தன்னை விரும்புகிறாள் என்பதை உணரவே சற்று நேரம் பிடித்தது. அவளுடைய அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டான். என்னாச்சு சுபா உனக்கு என்றான் விஷால். நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் நான் உன்னை விரும்புகிறேன் என்றாள் சுபா. அனன்யா என்ன சொல்வாளோ என யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன அனன்யா சிரிக்கிற என்றான் விஷால். எதுக்கு நீ பயப்படுற விஷால் என்னிடம் அவ முன்னாடியே சொல்லிட்டா என்னால அதை மறுக்க முடியல எங்க ரெண்டு பேரையும் நீ ஏத்துக்க தான் வேணும். என்ன அனன்யா சொல்ற இது யாராவது கேள்விப்பட்டால் உங்கள தான் தப்பா நினைப்பாங்க .நினைச்சுட்டு போகட்டும்.சுபா நீ மறுபடி யோசிச்சிட்டு சொல்லு. நானும் அனன்யாவும் நல்லா யோசிச்சுட்டு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன் கூடத்தான் இருப்பேன் ...மேலும் வாசிக்க

6

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 6

மறுநாள் காலையில் சுபாவும் விஷாலும் அருகில் இருந்த கோயிலுக்கு சென்றிருந்தனர். இருவரும் அனன்யா வேகமாக குணமாக மனம் உருகி பிரார்த்தனை செய்தனர் .பிறகு அனன்யா வீட்டுக்கு அனன்யா இப்போ எப்படி இருக்க? பரவால்ல விஷால் கொஞ்சம் தேவலாம். சுபா நீ தைரியமா இரு அனன்யா எல்லாம் சரியாகிவிடும் இந்தா கோயில் பிரசாதம் என்று கொடுத்தாள் . விஷால் எனக்காக கோயிலுக்கு எல்லாம் போனியா என்று சிரித்தாள். உனக்காக சர்ச், மசூதிக்கு கூட போவேன் என்று சொன்னான்.சரி அனன்யா ரெஸ்ட் எடுத்துக்கோ நான் அப்புறம் வந்து பார்க்கிறேன் என்றான் விஷால்.இரண்டு நாளில் அனன்யாவுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது பழையபடி காலேஜுக்கு வந்தாள் . சுபாவும், விஷாலும் ஏன் அதுக்குள்ள வந்த இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே என்றனர். என்னால முடியாதுப்பா என்னவோ இத்தனை நாள் ரெஸ்ட் எடுத்தது போதும் என்றாள் அனன்யா.சுபாவும் அனன்யாவும் ஏதோ கதைகளை பேச தொடங்கினர் இவன் ...மேலும் வாசிக்க

7

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 7

ஒரு வழியாக சுபாவை சமாளித்து ஊருக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு தான் செய்வது சரிதான். தான் சுயநலமாக இருந்தால் அவளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என அனன்யாவும் இதற்காக ரொம்ப வருத்தப்பட்டாள். இவனுக்கு காலேஜ் போகவே பிடிக்கவில்லை . சுபா நினைப்பாவே இருந்தது. அனன்யா நீ தேவை இல்லாம கவலை படுற எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றாள். சுபா நான் அவளை ஏமாத்திட்டதா நினைக்கிறாள். அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. இந்த வார கடைசியில் நாம அவள போய் பார்க்கலாம் நான் சுபா அம்மாகிட்ட பேசி இருக்கேன் அவர்களும் சரி என்று சொல்லி இருக்காங்க. ரொம்ப தேங்க்ஸ் அனன்யா. தினமும் அனன்யா உடன் பழகி வந்தாலும் சுபாவின் நினைப்பு விஷாலை விட்டுப் போகவில்லை. சுபாவுக்கு போன் செய்யலாமென நினைத்தான் . அனன்யா அதை தடுத்து விட்டாள். நாம தான் நேரில் பார்க்க போறோமே அப்புறம் என்ன, அவங்க அப்பாவுக்கு ...மேலும் வாசிக்க

8

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 8

புதிய உடையில் அனன்யாவும், சுபாவும் காலையிலேயே இவன் வீட்டுக்கு வந்து விட்டனர் ஹாப்பி தீபாவளி விஷால் என்று சொன்னார்கள். ஹேப்பி தீபாவளி அனன்யா ஹாப்பி தீபாவளி என்ன காலையிலேயே வந்துட்டீங்க வீட்ல வேலை எதுவும் இல்லையா ..எங்களுக்கு இதுதான் முழுநேர வேலையே என்று சிரித்தார்கள். உட்காருங்கள் நான் போய் ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரேன். அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாம இப்போ கோயிலுக்கு போறோம். இருங்க குளிச்சிட்டு வரேன் உட்காருங்க என்றான் சரி வெயிட் பண்றோம் சீக்கிரம் வா என்றாள் அனன்யா.பக்கத்தில் இருந்த முருகன் கோயிலுக்கு மூவரும் போயினர் சுவாமி உன்ன மாதிரி என்னையும் இரண்டு பொண்டாட்டிகாரனாக்கு..என வேண்டிக் கொண்டான். அனன்யா முதலில் எங்க வீட்டுக்கு தான் போகணும் அப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பார் என்றாள் . அதுவும் சரிதான் என்றாள் சுபா.அனன்யா வீட்டுக்கு போனபோது அவள் அப்பா வா சுபா, வா தம்பி என இருவரையும் வரவேற்றார். நான் கொஞ்சம் ...மேலும் வாசிக்க

9

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 9

அனன்யா அப்படி சொன்னதும் இவனுக்கு சற்றே பயமாக இருந்தது .ஆனால் துணிந்து தான் ஆக வேண்டும் மறுபடி அவளுக்கு போன் செய்தான். அனன்யா நீ நிச்சயமா கிட்ட சொல்ல போறியா? ஏன் விஷால் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா அப்படி சொல்ல வரல அனன்யா, நீ பயப்படாதே எது நடந்தாலும் நம்ம காதல் ஜெயிக்கும். சரி அனன்யா காலேஜ்ல பார்க்கலாம் .ஓகே விஷால் அனன்யா ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து விட்டாள், அவள் நிச்சயம் சொல்லத்தான் போகிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நிச்சயம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.அனன்யா சுபாவிடமும் பேசினாள். இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்பதே சுபாவின் வேண்டுகோளாக இருந்தது .நீயும் விஷால் மாதிரி பயப்படுற ,எதுக்கு பயப்படுற ?நான் பயப்படவில்லை ஆனா எதிர்காலத்தில் நல்ல விதமா விஷால் கூட சந்தோஷமா வாழ ஆசைப்படுகிறேன் எதுக்கும் யோசிச்சு செய் என்றாள் சுபா பொங்கல் எப்போது வரும், சுபாவை ...மேலும் வாசிக்க

10

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 10

சுபா நியூ இயர் லீவுக்கு வருவது உறுதியாகி விட்டது . இதை அனன்யாவே சுபா சொன்னதாக சொன்னாள் .இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்றான் விஷால். எனக்கு நியூ இயர் டிரஸ் எடுக்கணும் சண்டே வரியா என்றாள். தீபாவும் வரா, அப்ப நான் வரலை . சும்மா சொன்னேன்.. நானும் நீயும் மட்டும் போவோம் ஓகே .சுபாவுக்காக நீ எவ்வளவு வருத்தபடுறேன்னு எனக்கு தெரியும் விஷால்.சண்டே கடைக்கு போனார்கள் . அவளுக்கு பிடித்தமான ஆடைகளை எடுத்தார்கள். சுபாவுக்கும் ஒன்று எடுத்தாள் .விஷால் உனக்கு எதுவும் வேணாமா இல்லை அனன்யா தீபாவளிக்கு எடுத்ததே நிறைய இருக்கு .சரி போவோமா.. இந்த நியூ இயர் மறுபடியும் 3 பேரும் ஒண்ணா இருக்கணும் என்றாள் அனன்யா.வீட்டுக்கு வந்ததும் ,சரி நான் வரேன் அனன்யா நாளைக்கு காலேஜில் பார்க்கலாம் என்றான் . ஓகே விஷால் பைஅனன்யா எவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறாள் அவள் மனதிலும் ஆசை ...மேலும் வாசிக்க

11

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 11

மணி 12 தொட்டதும் எங்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது . ஹாப்பி நியூ இயர் விஷால் என அனன்யாவும் சுபாவும் சொன்னார்கள் . தொடர்ந்து கால் வர தொடங்கியது . எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி சொன்னார்கள் . சுபா பிளேயர் இல் பாட்டை போட்டு விட்டு ஆட தொடங்கினாள் . விஷாலும் அவள் கூட கொஞ்ச நேரம் ஆடினான். பிறகு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார்கள். ஸ்வீட் கொடுத்தாள் அனன்யா.இரவு முழுவதும் கொண்டாடினார்கள் . விடிகாலையில் அனன்யாவும், சுபாவும் தூங்க போனார்கள்.விஷால் மாடியிலேயே படுத்து கொண்டான். வீட்டுக்கு போய் குளித்து முடித்து உடை மாற்றினான். மூவரும் கோவிலுக்கு போனார்கள். காலை டிபன் சுபா வீட்டில் .ரொம்ப நல்லா இருந்தது கேக் என்றான் விஷால்.விஷாலுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. நான் ஒரு அரை மணி நேரம் தூங்குகிறேன் என்னை அப்புறமா எழுப்பி விடுங்க என்றான். அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கினான். ...மேலும் வாசிக்க

12

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 12

சுபா என்ன சொன்னாள் விஷால்? பொங்கலுக்கு வரப்போ பேசிக்கலாம்ன்னு சொன்னாள் .விஷால் தேவையில்லாத குழப்பத்தை திவ்யாவும், தீபாவும் ஏற்படுத்தி விட்டதாக நினைத்தான். அனன்யா பர்த்டேவுக்கு ஷாப்பிங் வேண்டும் என்று சொல்லி இருந்தாள். இவன் மறந்து விட்டான். அவளே ஃபோன் பண்ணி நினைவு படுத்தினாள். எங்க இருக்க நீ இதோ வந்துட்டேன் அனன்யா . ஒண்ணும் அவசரமில்லை நிதானமாவே வா என்றாள். அவள் வீட்டிற்கு வந்தான். அவள் தயாராக இருந்தாள்.போலாமா? போகலாம் . அனன்யா என்ன இன்னும் நீ அதையே நினைத்து கொண்டு இருக்கிறாயா ? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மேக் அப் ஐட்டங்கள் வாங்கினாள் அனன்யா. பர்த்டே டிரஸ் சிறப்பாக அமைந்திருந்தது .பொங்கல் முடிந்துதான் அனன்யா பர்த்டே வருகிறது. சுபா அப்போது இருக்க மாட்டாள் . என்ன யோசனை? சுபா உன் பர்த்டேவுக்கு இருக்க மாட்டாளே அதை பத்தி யோசித்து கொண்டிருந்தேன். ம் அவளுக்காக ஒரு முறை கேக் ...மேலும் வாசிக்க

13

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 13

விஷாலுக்கு புது லேப்டாப் வந்துவிட்டது . சுபா அதை எடுத்துக்கொண்டு ஆவலுடன் விஷால் வீட்டுக்கு சென்றாள். அனன்யாவுக்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருந்தாள். எப்படி விஷால். நல்லா இருக்கு தாங்க்ஸ் சுபா. அனன்யா வந்து பார்த்தாள். சூப்பர் என்றாள். ட்ரீட் குடு விஷால் என்றனர் இருவருமே . கண்டிப்பாக என்றான் விஷால்.அன்று இரவு மூவரும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றனர்.என்ன வேணுமோ வாங்கிக்குங்க என்றான் விஷால். நான் டயட் ல இருக்கேன் என்றாள் சுபா , நானும் தான் என்றாள் அனன்யா.சாப்பிட்டு முடித்ததும்,வீட்டுக்கு கொண்டு போய் விட்டான் இருவரையும். அனன்யா ஃபோன் பண்ணினாள். என்ன விஷால் தூங்கி விட்டாயா .. இல்லை சொல்லு அனன்யா. அப்பாகிட்ட சொல்லவா வேண்டாமா .. வேண்டாம் அனன்யா . இப்போதான் நாம மூணு பேரும் சந்தோஷமா இருக்கோம். அதை கெடுத்துக்க வேணாம். சரி விஷால் good நைட். அனன்யாவுக்கு ஒரு சாரி எடுத்துக்கொடுக்க வேண்டும் ...மேலும் வாசிக்க

14

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 14

அனன்யா விடை பெற்றுக் கொண்டு விட்டாள் இனி அடுத்த வாரம் தான் அவளை பார்க்க முடியும். விஷாலும் வீட்டுக்கு கிளம்பினான். சுபாவுக்கு போன் பண்ணி விஷயத்தை . எல்லாம் சரியாயிடுச்சு இல்ல கொஞ்ச நாளைக்கு இப்படியே இருங்க என்றாள் சுபா. நீ எப்படி இருக்க சுபா நான் நல்லா இருக்கேன் என்றாள் . இனி எப்ப வருவ சுபா எக்ஸாம் முடிஞ்சு தான் வர முடியும். சரி சுபா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்றான்வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றினான் அனன்யாவின் மணம் இப்போதும் அவனிடத்தில் இருந்தது. கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனான் அங்கு தீபாவை பார்த்தான் ரொம்ப தேங்க்ஸ் தீபா லெட்டர் கொடுத்ததுக்கு என்ன நடந்துச்சு என்றாள் தீபா அனன்யா அப்பாவுக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு ஓ அப்படியா அதான் அவளை பார்க்கவே முடியல ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு விஷால். சரி தீபா திவ்யாவுக்கு போன் ...மேலும் வாசிக்க

15

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 15

அந்த வாரம் வகுப்புகள் ஸ்வாரஸ்யமாக போனது. சுபா வர இன்னும் சில நாட்களே இருந்தன . அனன்யா இவனிடம் அதிகம் பேசுவதில்லை என்ற போதும் உற்சாகமாக தீபா இவனுக்கு ஃபோன் பண்ணினாள் . என்ன விஷயம் தீபா ஒரு டான்ஸ் competition வருது . நீயும் நானும் கலந்துக்கலாமா இல்லை தீபா அது வந்து நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நான் அனன்யா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் . ஓகே விஷால். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். அவ எனக்கும் ஃபோன் பண்ணினா நீ போய் கலந்துக்க. சரி அனன்யா. இன்னும் ஒரு வாரமே இருந்ததால் டான்ஸ் பிராக்டிஸ் பண்ண வேண்டும் நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்றாள் தீபா. சரி வா என்றான் விஷால். அவள் ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிகொண்டு வந்திருந்தாள் . காப்பி குடிக்கிறியா தீபா .. சரி விஷால். ...மேலும் வாசிக்க

16

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 16

விஷாலால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . இப்போது அவள் இருக்கும் நிலையில் அவளை விட்டு செல்லவும் மனமில்லாமல் தவித்தான் . நீ ஏன் இப்படி பண்ணுண ? அவள் பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள் .அவளை படுக்கையில் படுக்க வைத்தான்.அவனுடைய கையின் பிடியை அவள் விடுவதாய் இல்லை. நான் அழகா இல்லையா விஷால்? யார் அப்படி சொன்னது .. ம் எனக்கு தெரியும் விஷால் .. நான் இந்த தனிமையிலே இருந்து இருந்து சாக போகிறேன் என்றாள். அவள் வாயை மெதுவாக மூடினான். ஏன் இப்படி எல்லாம் பேசுற. எல்லாரும் இருக்கோம் உனக்கு .அவள் அம்மா வந்து விட்டாள். காப்பி போட்டு குடுத்தாள் .சுபாவுக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொன்னான். நான் வரேன் இப்போ என்றாள். நீ ஏதும் கடுமையா பேசிடாதே என்றான் விஷால். இல்லை பேசலை . சுபா பழங்கள் வாங்கி வந்திருந்தாள் . வா சுபா ...மேலும் வாசிக்க

17

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 17

மூன்று பெண்கள் என்பதெல்லாம் அசாதாரணம் என்று நினைத்தான் விஷால். தீபா இன்னமும் கட்டிக்கொண்டு இருந்தாள். தீபா தீபா என்றான்.மெல்ல விடுவித்து கொண்டாள். சரி நான் வருகிறேன் ஓகே விஷால்.மறுநாள் சுபா வீட்டுக்கு போயிருந்த போது தீபாவும் அங்கு இருந்தாள். நேத்து என்ன நடந்தது விஷால்? ஒன்னுமில்லையே.. எங்களுக்கு எல்லாம் தெரியும் . சரி . வாழ்த்துக்கள் தீபா வாழ்த்துக்கள் விஷால் என்றார்கள் அனன்யாவும் ,சுபாவும். தீபா கிச்சன் உள்ளே சென்றாள். சுபாவும் அவளும் ஏதோ பேசி கொண்டிருந்தனர். அனன்யா நல்ல முடிவுதான் என்றாள்.சும்மா கிண்டல் பண்ணாதே என்றான் விஷால். அருகில் வந்து அமர்ந்தாள். இப்போ என்ன நடந்துச்சு ? இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு என்றாள். அவனுடைய கையை பிடித்து கொண்டாள். நீ நல்லவன் விஷால் அதனாலே ஒரு பிரச்சனையும் வராது .அனன்யா நீ என்னை பார்த்து எப்படி டைப் அடிச்சே இப்போ என்னென்ன வேலை செய்யுறே என்றாள். அவள் முதுகில் ...மேலும் வாசிக்க

18

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 18

இரண்டு நாட்கள் கழித்து தீபா புது சிஸ்டம் வாங்க வேண்டுமென அனன்யாவையும் , விஷாலையும் அழைத்து கொண்டு கடைக்கு போயிருந்தாள். இருவரும் தற்போதுதான் புது லேப்டாப் இருந்ததால் ,அவர்கள் இருவரும் சொன்ன மாடல் லேப்டாப் வாங்கி கொண்டாள் தீபா. ட்ரீட் ஒண்ணும் இல்லையா என்றான் விஷால். நாளைக்கு ஐஸ் கிரீம் ஷாப் கூட்டிட்டு போ என்றான். சரி நாளைக்கு ஈவினிங் 7 மணிக்கு, அதோட நைட் ஸ்டடி என்றாள் அனன்யா. எதுக்கு அனன்யா நைட் ஸ்டடி? இப்பல்லாம் நீ இல்லாம தூங்கவே முடியலடா அதான் சொன்னேன்.7 மணிக்கு வந்து விட்டார்கள் மூவரும் . சுபாவுக்கு வீடியோ கால் பண்ணி பேசினார்கள் . என்ஜாய் பண்ணுங்கள் என்றாள். தீபா லேப்டாப் எப்படி இருக்கு ? நல்லா ஸ்பீட் ஆக இருக்கு என்றாள். நெட் கனெக்ஷன் குடுத்து விட்டாயா ? நாளைக்குதான் வராங்க .அப்ப ஓகே.அனன்யாவும் இவனும் ஒரு ஐஸ் கிரீமை பகிர்ந்து ...மேலும் வாசிக்க

19

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 19

விஷால் ரோஸ் வாங்கிகொண்டு காலேஜ் போனான். அனன்யாவுக்கும் , தீபாவுக்கும் ரோஸ் வைத்து விட்டான். ரோஸ் அம்சமா இருக்குது உனக்கு என்று தீபாவை பார்த்து சொன்னான். அமைதியாக இருந்தாள்.தீபா ஏதோ வேலையாக வெளியே போனாள். நீ ஒண்ணும் என்னை தப்பா நினைக்கலையே . நிச்சயமா இல்லடா என்றாள்.சுபா மறுபடி எப்போது வருவாள் என்று கேட்டான் அனன்யாவிடம். இப்போதைக்கு இல்லை. ஆனால் காதலர் தினத்துக்கு எப்படியாவது வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறாள். இந்த முறை தீபாவும் இருக்கிறாள் . ஒரே கொண்டாட்டம்தான் என்றாள் அனன்யா. அனன்யா உன் மனசுல எனக்கு இப்பவும் அதே இடம் இருக்கா? சுபா , தீபா வந்ததுக்கு அப்புறம் ஏதாவது change இருக்கா . அதெல்லாம் மாறாது .அதெல்லாம் சீக்ரட் என்றாள். சுபாவிடம் காதலர் தினத்துக்கு என்ன வேண்டும் என கேட்டான் விஷால். அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.தீபாவிடமும் இதே கேள்வியை கேட்டான். நான்தான் உனக்கு ...மேலும் வாசிக்க

20

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 20

ஊட்டி ட்ரிப் முடிந்து மூவரும் ஊர் திரும்பினார்கள். சுபா அப்படியே ஹாஸ்டல் போய்விட்டாள் . நால்வருக்கும் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபா ஃபோன் பண்ணினாள். மறுபடி ஒரு முறை அதே மாதிரி இன்னும் குளிரான இடத்துக்கு போக வேண்டும் என்று சொன்னாள். அனன்யா போட்டோக்களை பகிர்ந்து கொண்டாள். விஷால் இன்னும் உலகமறியா பையனாகவே தோற்றமளித்தான்.மூன்று பெண்களும் அவனுடைய உலகில் பேரழகிகள் ஆகிய வலம் வந்தனர். சுபாவுக்கு ஃபோன் பண்ணி நன்றி சொன்னான் விஷால். 3 நாள் ரொம்ப குறைச்சல். ஒரு வாரமாவது இருந்திருக்கலாம் என்றாள் அனன்யா.அவளுக்குத்தான் எவ்வளவு ஆசை . மதியம் போல விஷாலுக்கு ஃபோன் செய்து விசாரித்தாள் . என்ன பண்ணுற விஷால் .என்னவோ போல இருக்கிறது. மூணு நாளா உன்கூட இருந்துட்டேனா இப்போ எல்லாத்துக்கும் உன் யோசனைதான் வருது. 4 மணி போல வரியா தீபா வீட்டுக்கு . சரி வரேன். தீபா ...மேலும் வாசிக்க

21

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 21

விஷால் கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தான். சுபாவும் தீபாவும் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். பிறகு விஷாலும் அதில் கலந்து கொண்டான் . இரவு அங்கேயே தங்குமாறு மூவரையும் கேட்டுக்கொண்டாள் சுபா.சுபா ரொம்ப ஹாப்பி யா இருக்கு என்றான். கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கினேன் ஹாஸ்டல் warden கிட்டே என்றாள். அவளுக்கு ஒரு சாரி வாங்கி வைத்திருந்தான். அதை போய் கட்டிகொண்டு வந்து காட்டினாள். சூப்பர் ஆக இருக்கு என்றார்கள் அனன்யாவும் தீபாவும்.நாம கீழே போவோம் என்றாள் அனன்யா தீபாவை பார்த்து அதெல்லாம் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க . குழுவாக போட்டோ எடுத்து கொண்டனர். சுபா தோளில் ஒரு கையும் அனன்யா தோளில் மறு கையும் போட்டிருந்தான். தீபா நல்லா வந்திருக்கு . தீபாவுக்கு கேக் ஊட்டுவது போல ஒரு புகைப்படம் எடுத்தார்கள். மணி காலை 2 ஆகி விட்டிருந்தது. இன்னைக்கு ஈவினிங் போகணும் என்றாள் சுபா. கொஞ்ச ...மேலும் வாசிக்க

22

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 22

சரி அனன்யா நான் கிளம்புகிறேன் என்றான். இப்போதானே வந்த என்ன அதுக்குள்ளே போற.. நாம ஷாப்பிங் மால் போவோம் என்றாள். எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க என்றாள். சரி இரு டிரஸ் மாத்திட்டு வரேன். ஷாப்பிங் மாலில் வீட்டுக்கு தேவையான சாமான்கள் சிலவற்றை வாங்கினாள். அங்கேயே ஒரு கடையில் லஞ்ச் சாப்பிட்டார்கள். வீட்டுக்கு கொண்டுவந்து விட்டான். மணி மதியம் 3 ஆகி இருந்தது.விஷால் 3 மாசம் ரொம்ப அதிகம் என்றாள்.அவளுடைய கைகளை பிடித்து கொண்டான். நான் மட்டும் என்ன சந்தோஷமாவா போறேன் ? அவள் அழுதுகொண்டே உள்ளே போனாள். பிளீஸ் அழாதே உடம்புக்கு நல்லது இல்லை. அவள் அவனை கட்டிக்கொண்டாள்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுகிறேன். நிச்சயமா ? நிச்சயம். அவள் கன்னங்களை துடைத்து விட்டான். அவளை சோபாவில் படுக்க வைத்து கால்களை பிடித்து விட்டான். அவள் தூங்கும் வரை அங்கே இருந்தான். நெற்றியில் முத்தமிட்டான்.பிறகு கதவை ...மேலும் வாசிக்க

23

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 23

விஷாலை ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள் மூவரும். போயிட்டு ஃபோன் பண்ணு விஷால் என்றாள் சுபா.சுபா ரொம்பவும் கவலைப்பட்டாள் . அனன்யா அதெல்லாம் சமாளிப்பான் என்றாள்.ஒரு ரெண்டு வாரம் கழித்து நான் போய் அவனை பார்த்து வருகிறேன் என்றாள் சுபா. தனியாகவா? வேண்டும் என்றால் என் ஃப்ரெண்ட் யாரையாவது கூட்டிபோகிறேன் என்றாள். சுபாவும் அன்று இரவே புறப்பட்டு ஹாஸ்டல் போய் சேர்ந்தாள். அனன்யாவும் தீபாவும் தங்கள் ஸ்டடியை தொடர்ந்தனர். விஷால் அனன்யாவை நினைத்துதான் அதிகம் கவலைப்பட்டான் . அவள் வெளியே சிரித்து கொண்டிருந்தாலும் உள்ளே விஷால் என்ன செய்கிறான் என்பதையே நினைப்பாள். இவன் போய் சேர்ந்தவுடன் எல்லோருக்கும் ஃபோன் பண்ணினான். அடுத்தடுத்த வேலைகளில் பிஸி ஆனான். சுபா ப்ராஜக்ட் சென்னையில் செய்ய வேண்டும் என தன் நண்பர்களை கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுடைய முயற்சி பலிக்குமா என்பது தெரியாது.தீபா இப்போதெல்லாம் நேரத்தோடு தூங்கி விடுகிறாள். ஆனாலும் விஷால் நினைப்பு வாட்டி ...மேலும் வாசிக்க

24

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 24

ஒரு வழியாக சுபாவை சமாதானப்படுத்தி விட்டு ரூமுக்கு வந்தான் விஷால். சுபாவுக்காக அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது. இப்போது அவனுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய மறுபடியும் சுபாவுக்கு போன் பண்ணினான் சுபா சாப்பிட்டியா என்றான். இல்லை சுபா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்றான். தயவு செஞ்சு சாப்பிட்டு படுத்துக்கோ என்றான். சரி விஷால், நாளைக்கு போன் பண்றேன்.அனன்யாவுக்கு போன் பண்ணி சுபாவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுமாறு சொன்னான். நீ கவலைப்படாத விஷால் நான் பேசுறேன் அன்றைய தின வேலைகளில் மூழ்கினான்.இரவு 8 மணி போல சுபா ஃபோன் செய்தாள். என்ன விஷால் பண்ற என்றாள். கொஞ்சம் வேலையா இருக்கேன் பத்து மணிக்கு பிறகு கூப்பிடட்டுமா என்றான் சரி விஷால். பத்து மணிக்கு போன் செய்தான் சொல்லு சுபா போன் பண்ணி இருந்தாயே நான் ஊருக்கு போயிட்டு அம்மாவை பார்த்து பேசிட்டு வரேன் ...மேலும் வாசிக்க

25

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 25

நாளைக்கு எங்கேயாவது போவோமா விஷால் என்றாள். பீச்சுக்கே போவோம் என்றாள் தீபா . இவ வேற எப்ப பார்த்தாலும் பீச் பீச்சுன்னு என்றாள் அனன்யா. பரவாயில்லை போவோம் என்றான் விஷால்.அனன்யா கீழே போய் படுக்கலாம் விஷால் என்றாள். வேணாம் உன் மடியே சவுகரியமாய் இருக்குது என்றான். இரு போய் தலையணை எடுத்து வருகிறேன் என்றாள் தீபா. இன்னும் இரண்டு மாசம் அப்புறம் எப்பவும் உன் கூடத்தான் என்றான் விஷால். அனன்யா முன்ன மாதிரி இல்லே விஷால் நீ என்றாள். என்னாச்சு அனன்யா? கவனிக்கவே மாட்டேங்குர .. ஓ என்றவாறு அவளை தூக்கினான். அவளுடைய உடல் பஞ்சு போல இருந்தது . அனன்யா செல்லம் என்ன வேணும் என்று அவள் மேலே படுத்தான். போதும் நீ கொஞ்சுனது . அவள் இடையில் முத்தமிட்டான். பிறகு கன்னங்களிலும் , கழுத்திலும் முத்தமிட்டான். தீபா வந்து விட்டாள். விஷால் எழுந்து கொண்டான். போதும் ரொம்ப ...மேலும் வாசிக்க

26

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 26

சுபாவுக்கும், இவனுக்கும் ஒரே சமயத்தில் ஜுரம் வந்துவிட்டது. இருவருமே அவரவர் ரூமில் இருக்கும்படி ஆகிவிட்டது. என்ன சுபா உனக்கும் ஜுரமா, எல்லாம் உன் வேலைதான் என்றாள்.டாக்டரை விஷால். பார்த்தேன் சுபா. நீ ? இல்லை விஷால் தானாகவே சரி ஆயிடும். இது தப்பு சுபா உடனே டாக்டர் போய் பாரு. சரி விஷால். நான் வேணா வரவா . வேணாம் விஷால் நான் கீதாவை கூப்பிட்டுக்கிட்டு போகிறேன். போயிட்டு வந்து எனக்கு ஃபோன் பண்ணு சுபா . ஓகே விஷால். அனன்யா ஃபோன் பண்ணினாள் . நல்லா மழைல ஆட்டம் போட்டீங்களா .. அதெல்லாம் ஒண்ணும்இல்லை. ரூம் கிட்ட வரும்போது மழை வந்து விட்டது. விஷால் உடம்பை பார்த்துக்க வெந்நீர் குடி என்றாள். சுபாவுக்கு ஜுரம் சரியாகி விட்டது. இவனுக்கு ஜுரம் லேசாக இருந்தது .சுபாவை போய் பார்த்தான். என்னடா இன்னும் சரி ஆகலையா? உள்ளே வா என்றாள். நான் ...மேலும் வாசிக்க

27

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 27

ஈவினிங் 4 மணி போல தீபாவும் சுபாவும் எழுந்தனர். அனன்யா டீ அரேஞ்ச் செய்தாள். எங்க போன அனன்யா என்று கேட்டாள் சுபா . பக்கத்துல கூட இருந்தேன் என்றாள். சரி கடைக்கு போவோமா கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டும் என்றாள். விஷால் நீயும் வா என்றாள். பர்த்டே party கொண்டாட தேவையான பொருட்களை வாங்கினாள் அனன்யா. தீபா மேக்அப் சாமான்கள் சிலவற்றை வாணங்கினாள். தீபா அவள் அம்மாவுக்கும் சில பொருட்களை வாங்கினாள் . இங்கே நெறைய பீச் இருக்கு நாம சண்டே போய் பார்ப்போம் என்றான். ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து 10 மணிக்கு ரூம் திரும்பினார்கள். அங்கே இருந்த party ஹாலில் பர்த்டே கொண்டாட பேசி வைத்திருந்தான் விஷால். நான்கு பேரும் அந்த ஹாலை அலங்கரிக்க தொடங்கினர்.அனன்யா நேர்த்தியாக செய்து முடித்தாள். மணி 12 அடித்த போது ஹாப்பி பர்த்டே சுபா என்று பாடி வாழ்த்தினார்கள். கேக் ...மேலும் வாசிக்க

28

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 28

தீபா செக் அப் காக சென்னை வந்திருந்தாள். சுபா போன் பண்ணி சொல்லி இருந்தாள் அவள் அம்மாவும் வந்திருந்தார் நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன் சுபா ஓகே விஷால் என்ன சொன்னாரு டாக்டர் என விசாரித்தான் இப்ப பரவாயில்ல இருந்தாலும் ட்ரீட்மெண்ட் கண்டினியூ பண்ண சொல்லி இருக்காரு. நான் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன் என்றாள் தீபா அவள் அம்மாவிடம். தம்பி கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கங்க நான் போயிட்டு வரேன் என்றாள். சரி ஆன்ட்டி என்று சொன்னான் .சுபாவும் விஷாலும் ஸ்டேஷன் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர். தீபா சுபா ரூமிலேயே தங்கி கொண்டாள். சரி தீபா ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கிறேன் என்றான் பாண்டிச்சேரி அழைச்சிட்டு போறேன்னு சொன்னியே ஓ மறந்து போயிட்டேன். நாளைக்கு போவோமா சரி சுபா நீயும் வரியா நான் வரல விஷால் கொஞ்சம் வேலை இருக்கு அப்படியா . நாளை மறுநாள் மூணு ...மேலும் வாசிக்க

29

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 29

ப்ராஜக்ட் எதிர்பார்த்தபடி அந்த வாரத்தில் முடியவில்லை. சுபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நீ ஊருக்கு போ சுபா நான் அடுத்த வாரம் வருகிறேன் என்றான். இன்னும் வாரம்தானே நான் இருக்கிறேன் என்றாள். அனன்யா கவலைப்படுவாள். நீ இருந்தாலாவது அவளுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும். சரி விஷால் நான் டிக்கெட் புக் பண்ணிவிட்டு உனக்கு சொல்கிறேன் . சரி சுபா. அனன்யா இரவு ஃபோன் செய்தாள். சுபா சொன்னாள். பரவாயில்லை விஷால் நீ வேலையை முடித்து விட்டு வா என்றாள். இவனுக்கு அப்போதுதான் நிம்மதியாய் இருந்தது .சரி அனன்யா பிறகு கூப்பிடுகிறேன் என்று சொன்னான். சுபாவை டிரைன் ஏத்தி விட சென்று இருந்தான். எனக்கு போகவே மனசு இல்லை என்றாள். நீ பத்திரமா போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு என்றான். தீபாவையும் பார்த்துக்கொள் என்றான். சரி விஷால். ப்ராஜக்ட் முடிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன. பிரசன்டேஷன் பண்ணுவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. ...மேலும் வாசிக்க

30

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 30

எக்ஸாம்ஸ் தொடங்க இன்னும் ஒரு மாதமே இருந்தது. அனன்யாவுக்கும் இது தெரியும் என்பதால் கவனத்துடன் அவனுக்கு சொல்லி தந்தாள். சுபா ஒரு வாரம் கழித்து அவளுடைய போனாள். தீபாவும் பொறுப்புடன் படித்து வந்தாள். விஷால்.. என்ன அனன்யா? ரொம்ப மாறி விட்டாய் நீ என்றாள். நீயும் தான் என்றான் . இது நல்லதுக்கா விஷால் எல்லாம் நல்லதுக்குத்தான்.விஷால் சட்டையை அவள் வீட்டில் மாட்டி அழகு பார்த்தாள் அனன்யா. இந்த சட்டை எனக்குத்தான் என விஷாலிடம் சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தாள். சுபா எனக்கும் ஒரு சட்டை குடு என்று விஷாலிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் . சுபா ப்ராஜக்ட் சப்மிட் செய்ய போயிருந்தாள். இன்னும் ஒரு வாரம் கழித்து வருவேன் என சொல்லி போயிருந்தாள் அதுவரை ஹாஸ்டலில் இருப்பாள். அனன்யா பொறுப்புடன் இவனை வழி நடத்தும் போது இன்னும் அழகாய் தெரிந்தாள். விஷால் நாம ஹையர் ஸ்டடீஸ் பண்ணலாமா ? அப்போ கல்யாணம் ...மேலும் வாசிக்க

31

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 31

அன்றைய தினம் காலையிலேயே விஷால்,சுபா, தீபா மற்றும் அனன்யா கோவிலுக்கு போய் வந்து விட்டார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்துவிட்டான் விஷால். ஆனால் காதல் மாறவில்லை. அவளின் அன்பும் மாறவில்லை. விஷால் கையை இறுக பற்றிக்கொண்டாள். விஷால் வாழ்நாளெல்லாம் கொண்டாடக்கூடிய காதலை அவள் தந்திருந்தாள். தீபாவும், சுபாவும் அதே அளவு காதல் இவன் மீது கொண்டிருந்தனர். விஷாலுக்கு சென்னையில் வேலை கிடைத்து விட்டது. மெயில் வந்திருந்தது . அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லி இருந்தார்கள். அனன்யா,சுபா, தீபா மூவருமே மகிழ்ந்து போனார்கள். அனன்யாவை தூக்கி சுற்றினான் விஷால். இனிமேல் நாம இன்டிபெண்டன்ட் ஆக இருக்கலாம் என்றான். அனன்யா வாழ்த்துக்கள் சொன்னாள்.சென்னை போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நான் போய் நீங்கள் தங்க வீடு பார்க்கிறேன் இப்போது நான் போகிறேன் என்றான் விஷால். விஷால் சீக்கிரம் வீடு பார்த்துவிட்டு ஃபோன் பண்ணு அடுத்த டிரைன்லேயே வந்து விடுகிறோம் ...மேலும் வாசிக்க

32

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 32

விஷால் பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு அழைத்து போனான். பூங்காக்களில் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். பிறகு மைசூர் அழைத்து போனான். இயற்கை அழகு நிறைந்த மெய் மறந்து போனார்கள்.ஊர் திரும்பும் நாள் வந்ததும் தீபா நான் போகலை ஊருக்கு என்றாள். சுபாவும், அனன்யாவும் அவளை கஷ்டப்பட்டு சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். சுபா தீபா பாவம் தானே எவ்வளவு நாள்தான் விஷாலை பிரிந்து இருப்பாள் என்றாள் .விஷால் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தான். விஷால் நாம மூணு பேருமே ஆஸ்ட்ரேலியா போனா என்ன ? என்றாள் அனன்யா. அது கஷ்டம் அனன்யா. உனக்கு scholorship எளிதில் கிடைத்து விடும் . சுபாவுக்கு கூட ட்ரை பண்ணினா கிடைத்துவிடும் ஆனா எனக்கு கிடைக்காது என்றான். எனக்கு இன்டர்வியூ கால்ஸ் எல்லாம் வருது அதை முதல்லே அட்டென்ட் பண்ணுகிறேன் என்றாள் அனன்யா. சுபாவும் டான்ஸ் ஸ்கூல் தொடங்க முயற்சிகள் செய்து கொண்டுதான் இருந்தாள். ...மேலும் வாசிக்க

33

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 33

அனன்யா அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக வந்த செய்தி கேட்டு அதிர்ந்தான். அனன்யா மனமுடைந்து போனாள்.இவனை கட்டிகொண்டு அழுதாள் . எல்லா வித சடங்குகளையும் விஷால் செய்தான். அனன்யாவுக்கு தீபாவும், சுபாவும் ஆறுதல் கூறினர். அனன்யா அப்பாவின் எதிர்பாராத இழப்பை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அனன்யாவுக்கு ஆறுதல் கூற அவனிடத்தில் வார்த்தைகள் இல்லை.அனன்யா அப்பா சொத்து முழுவதையும் அனன்யாவுக்கும் , விஷாலுக்கும் சேர்த்து எழுதி இருந்தார். சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று அனன்யாவின் உறவினர்கள் சொல்லி வந்தனர். விஷால் அனன்யா ஆஸ்ட்ரேலியா போய் வந்த பிறகுதான் கல்யாணம் என்று உறுதியாக சொல்லிவிட்டான். இரண்டு மாதங்கள் கழித்து நிச்சயம் வைத்து கொள்ளலாம் என்று பேசி முடித்தார்கள். அனன்யாவும்,விஷாலும் சென்னை திரும்பினார்கள். சுபா ஏற்கனவே சென்னை போய் பாரமரிப்பின்றி கிடந்த வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தாள். அனன்யா உடலாலும் மனதாலும் சோர்ந்து போயிருந்தாள் . அவளை வேலைக்கு ...மேலும் வாசிக்க

34

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 34

விஷால் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தான். அனன்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . தீபாவும்,சுபாவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்களுடைய உலகம் இன்னும் விரிவடைந்தது . அனன்யா போக இன்னும் 2 வாரங்களே இருந்ததால் தீபாவையும், சுபாவையும் சென்னை வர சொல்லி இருந்தான். அவர்கள் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லி இருந்தார்கள். புதிய கார் எடுத்துகொண்டு குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.தீபாவும் , சுபாவும் சொன்ன மாதிரி சென்னை வந்து விட்டார்கள். விஷால் பயணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நால்வரும் ஷாப்பிங் போனார்கள். அனன்யா நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் விஷால் என புலம்பி கொண்டே இருந்தாள். சுபாவும், தீபாவும் அவளுக்கு தைரியம் சொன்னார்கள்.இரண்டு வருடங்கள் எப்படி அவளை விட்டு பிரிந்து இருக்க போகிறோமோ என்று உள்ளுக்குள் கவலையோடு இருந்தாலும் அனன்யாவின் எதிர்காலம் கருதி இந்த பிரிவை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அனன்யாவுக்கு மெல்போர்ன் யூனிவர்சிட்டியில் இடம் ...மேலும் வாசிக்க

35

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 35

சொல்லுங்க ரேவந்த் ம்ம் அனன்யா உங்ககிட்ட எல்லாமே சொல்லி இருப்பா .. நான் தப்பு செய்து விட்டதா நினைக்கலை .. என் மனசுல இருக்குறத அவ சொன்னேன் அவ்ளோதான். அவளும் பெருசா react பண்ணலை. அவ மனசு மாறுனா நீங்க அதை தடுக்க கூடாது இது என்னோட request என்றான். ரேவந்த் உங்க நம்பிக்கையை நினைச்சா ஆச்சரியமாய் இருக்குது. அவளோட விருப்பம் அதுன்னா நான் தடையா இருக்க மாட்டேன். thank you so much விஷால்.விஷால் சுபாவிடம் ரேவந்த் பற்றி சொன்னான். இதெல்லாம் என்ன விளையாட்டு விஷால் ? நீயும் அவனை கண்டிக்காம விட்டுருக்க என்றாள். அனன்யாகிட்ட நான் பேசுறேன் என்ன துணிச்சல் இந்த ரேவந்துக்கு.. விடு சுபா என்னவோ எனக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு என்றான் விஷால். அனன்யா எப்போதும் போல ரேவந்துடன் பழகி வந்தாள். ரேவந்த் இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தான்.அனன்யாவுக்காக வீடு ஒன்றை வாங்க திட்டமிட்டான் ...மேலும் வாசிக்க

36

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 36

விஷாலும் சுபாவும் பெங்களூர் போக தயார் ஆயினர். வீடு ரெடி ஆகி விட்டது. பேலன்ஸ் பணத்துக்கு கொஞ்சம் சிரமப்பட்டான். சுபா அப்பா கொஞ்சம் பணம் கொடுத்து செய்தார். சீக்கிரமே வந்து பெங்களூர் வீட்டை பார்க்க வருவதாய் சொல்லி இருந்தார்.தீபா சென்னை வந்து வீட்டு சாமான்களை பேக் செய்ய உதவினாள். இரண்டு நாட்களில் வீட்டை காலி செய்து விட்டு காரில் பெங்களூர் போனார்கள். அவர்களுடைய புது வீடு எல்லோருக்கும் பிடித்திருந்தது . ஆனால் மொழி தெரியாத ஊர் என்பதும் ஒரு குறையாக இருந்தது. அனன்யா வீடு சூப்பர் என்றாள். அவள் சுபாவிடம் எதை எங்கே வைக்க வேண்டும் என சொல்லிகொண்டிருந்தாள்.பால் காய்ச்சி குடித்தார்கள். அதிகம் இல்லாவிட்டாலும் அக்கம்பக்கத்தினர் 4 பேர் வந்திருந்தனர். விஷால் பொறுப்புணர்வுடன் எல்லாவற்றையும் கவனித்தான். அடுத்த வாரமே சுபா அப்பா, அம்மா வந்திருந்தனர். வீடு நல்லா இருக்கு என்றனர். சீக்கிரம் ஒரு பேர புள்ளைய குடுங்க என்றனர். சுபா ...மேலும் வாசிக்க

37

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 37

இன்னும் ஒரு வாரத்தில் அனன்யா வரபோகிறாள் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் விஷால். சுபாவும், தீபாவும் உற்சாகமடைந்தார்கள். அனன்யா படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு ஊர் அனன்யா வந்தவுடன் எங்காவது ட்ரிப் போக வேண்டும் என்று சொன்னாள் தீபா. அனன்யா விஷாலுக்கு ஃபோன் செய்தாள் இனி ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிந்திருக்க முடியாது விஷால். சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய் என்று சொன்னாள்.நிச்சயம் செய்கிறேன் என்றான்.மூவரும் ஏர்போர்ட் சென்றிருந்தார்கள். அனன்யா இவனை கட்டிக்கொண்டாள். எப்படி இருக்கே சுபா ? எப்படி இருக்கே தீபா என்று இருவரையும் விசாரித்தாள். உன்னை எப்படா பார்ப்போம்னு இருந்துச்சு என்றார்கள் இருவரும். விஷாலின் கையை கோர்த்துக்கொண்டாள் அனன்யா. வீட்டுக்கு வந்தவுடன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு அனன்யா நான் ஆபீஸ் வரை போய்விட்டு வருகிறேன் என்றான். ம்ம் சீக்கிரம் வந்துவீடு என்றாள் . அனன்யா இந்த வீடு நன்றாக இருக்கிறது . ரோஸ் பூக்களை ...மேலும் வாசிக்க

38

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 38

விஷால், அனன்யா ஹனிமூன் plan பண்ணியிருந்தனர். ஆனால் இப்போது போக வேண்டாம் என்றான் விஷால். லாங் லீவுக்கு பிறகு இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருப்பதால் இரண்டு மாதம் போகலாம் என்றான். சரி விஷால் எனக்கு ஓகே என்றாள் அனன்யா. சுபாவிடமும் ,அனன்யாவிடமும் பேசி தீபாவை சிங்கப்பூர் ஒரு வாரம் அனுப்ப ஏற்பாடு செய்தான். அவள் எங்குமே போவதில்லை இந்த ட்ரிப் அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்றான் விஷால். சுபாவும், அனன்யாவும் மகிழ்ச்சியுடன் அவளை சிங்கப்பூர் அனுப்ப தயார் ஆயினர். தீபா முதலில் தயங்கினாலும் பிறகு ஒத்துக்கொண்டாள் . அவளுக்கு பிடித்த இடங்களை பட்டியலிட்டு அதன் படி பயண திட்டத்தை அமைத்து கொண்டாள் தீபா. உங்களையெல்லாம் விட்டு போக கஷ்டமாயிருக்கு என்றாள் தீபா. அங்கே போன உடனே எங்களையெல்லாம் மறந்து விடாதே என்றாள் சுபா. மூவரும் ஏர்போர்ட் சென்று தீபாவை வழி அனுப்பி வைத்தனர். அனன்யா தான் ஒரு சிறிய அளவிலான ...மேலும் வாசிக்க

39

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 39

இன்ஸ்பெக்டரிடம் இருந்துதான் ஃபோன் வந்திருந்தது . விஷால் உங்களை ஆக்சிடென்ட் பண்ணி கொல்ல பார்த்தவனும் , ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ணி கொன்னவனும் ஒரே ஆள் தான்னு ஆமா சார் அவன் நேத்து நைட் பாய்ஸன் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான்.எங்களுக்கு இப்போதான் information கிடைச்சது. வேற ஏதாவது தகவல் கிடைச்சா உடனே உங்களை கூப்பிடுறோம் என்றார். ரொம்ப தாங்க்ஸ் சார் என்றான் விஷால். என்னாச்சு விஷால் என்றாள் அனன்யா ஒண்ணும் இல்லை அந்த ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ண டிரைவர் சூசைட் பண்ணி இறந்து போயிட்டானாம் . எதுக்காக அவன் தற்கொலை பன்னிக்கணும்? போலீஸ் அதை விசாரிக்கிறாங்க.நான்கு பேரும் பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பெங்களூருக்கு மகிழ்ச்சியாய் திரும்பினர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டிரைவர் மொபைலில் ரெகார்ட் ஆகியிருந்த ரேவந்துடனான உரையாடல் பற்றி தெரிய வந்தது. அதில் தெளிவாக ரேவந்த் விஷாலை கொல்ல திட்டம் தீட்டியிருப்பதும் பதிவாகி இருந்தது. விஷால் இருக்குற ...மேலும் வாசிக்க

40

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 40

இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் விஷால். அவனுக்கு தலையே சுற்றியது. தீபா என்ன ஆச்சு விஷால் உனக்கு என்றாள். ஏன் தீபா இப்படி பண்ணினே என்றான். கொல்ல பார்த்தவனை சும்மா விட சொல்லுறியா விஷால் அதான் பணம் கொடுத்து அதே டிரைவர் மூலமா ரேவந்தை தீர்த்து கட்டினேன் என்றாள். உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா சொல்லு விஷால் . உன்னையும் இழந்து விட்டு இந்த உலகத்துல வேற என்ன இருக்கு அதுதான் அப்படி பண்ணினேன். போலீஸ் கிட்ட ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன் என்றாள். தீபா என்று அவளை கட்டிகொண்டு அழுதான் விஷால். அனன்யாவும், சுபாவும் இதை எப்படி தாங்க போகிறார்களோ மேலும் தீபா அம்மாவுக்கு இந்த செய்தியை எப்படி சொல்வதென தவித்து போனான் விஷால். எவ்ளோ வருஷம் ஆனாலும் எனக்கு கவலையில்லை விஷால் நான் வெளியே வரும்போது எனக்காக ஒரு ரோஸ் வாங்கிட்டு வா விஷால் அது போதும் ...மேலும் வாசிக்க

41

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 41

தீபாவை சென்னைக்கு அழைத்து சென்றான். தீபா சிறைக்கு பெயில் முடிந்து சென்றாள். கோர்ட்டில் வாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தார்கள். விஷால் பெங்களூர் விஷால் தீபாவின் இந்த நிலமையை எண்ணி வருந்தினான். இரண்டு மாதங்களில் தீபாவின் பர்த்டே வருகிறது. அப்போது போய் பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். அனன்யாவிடமும் , சுபாவிடமும் இதை சொன்னான். தீபா அம்மா அவர்களுடன் இருப்பது ஆறுதலாக இருந்தது. ஒரு மாதம் கழித்து அனன்யா தனக்கு பெண் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அவளையும் சுபாவையும் செக் அப் அழைத்து போயிருந்தான். டாக்டர் அனன்யா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.சுபா, அனன்யா இருவரும் மகிழ்ந்து போனார்கள். விஷால் இனிப்புகள் எல்லோருக்கும் வழங்கி கொண்டாடினான். தீபாவுக்கு இந்த செய்தியை உடனடியாக சொல்ல வேண்டும் என நினைத்தான். அனன்யா நானும் சென்னை வரேன் என்றாள். இப்போ அதிக தூரம் டிராவல் பண்ண கூடாது அடுத்த ...மேலும் வாசிக்க

42

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 42

அனன்யாவின் பிரசவ தேதி நெருங்கி கொண்டிருந்தது.விஷால் சற்று பதட்டத்துடனே இருந்தான். தீபா அம்மா அவனுக்கு தைரியம் சொன்னாள் . அனன்யா எனக்கும் பையனுக்கும் ஒண்ணும் ஆகாது என்று சொன்னாள். சுபா குழந்தையை எப்போது பார்ப்போம் என ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள். டாக்டர் தேதி சொல்லி விட்டார். எல்லாவித மருத்துவமனை எமர்ஜென்ஸி நம்பர்களையும் செக் செய்து பார்த்து கொண்டான். விஷாலுடைய அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள்.சரியான நேரத்தில் அனன்யாவை ஹாஸ்பிடலில் சேர்த்தான். சுபாவும் விஷால் அம்மாவும் விஷாலுக்கு தைரியம் சொன்னார்கள். அனன்யாவுக்கு நார்மல் டெலிவெரி ஆனது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஷால் சந்தோஷத்தின் உச்சிக்கே போனான். தீபாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லி அனுப்பினான். குழந்தையுடன் வந்து பார்ப்பதாகவும் சொல்லி இருந்தான். அனன்யா இவனை பார்த்ததும் என்ன விஷால் பயந்து விட்டாயா என்றாள்.நம்ம குழந்தையை பாரு உன்னை மாதிரியே அழுகிறான் என்றாள். அவளை கண்ணீருடன் அணைத்து கொண்டான். அனன்யா நெற்றியில் முத்தமிட்டான்.அனன்யாவை ...மேலும் வாசிக்க

43

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 43

அனன்யாவுடனான காதல் வாழ்க்கை தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாட நினைத்தான் விஷால்.அனன்யா, சுபா, தீபா மூவருமே உற்சாகமடைந்தனர். வெளியே எங்காவது போகலாம் என்று சொன்னார்கள். ஆக கொண்டாடுவோம் என்றான் விஷால்.அனன்யாவுக்கு மோதிரம் வாங்கி அணிவித்தான். தீபாவுக்கும்,சுபாவுக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பரிசளித்தான் . எல்லோரும் லவ் யு விஷால் என்று கூறினார்கள் . சாட்விக்குக்கு சாக்லேட் பாக்ஸ் ஒன்று வாங்கி வந்திருந்தான். அனன்யா காதலை சொன்ன தினத்தை அவனால் என்றுமே மறக்க முடியாது. பிரதிப்பை நினைத்து கொண்டான். வீடு முழுவதும் வண்ண பலூன் கொண்டு அலங்கரித்து இருந்தனர்.நான்கு பெரும் கோவிலுக்கு போய் வந்தனர். அனன்யா ,சுபா , தீபா , சாட்விக் நால்வருமே வரமாய் வந்தவர்கள் அவர்களை அளித்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான் விஷால். சுபாவை சந்திக்க ஸ்வாதி என்ற டான்ஸ் டீச்சர் வந்திருந்தார். அவர் சிங்கப்பூரில் டான்ஸ் ஸ்கூல் நடத்துபவர். சுபா எங்க ஸ்கூல் பசங்க உங்க டான்ஸ் ...மேலும் வாசிக்க