Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 46

அனன்யா அவள் ஆசைப்பட்ட மாதிரி இரண்டாவது மியூசிக் ஆல்பம் பற்றிய பணிகளில் இறங்கினாள் . விஷாலும் அவளை ஊக்க படுத்தினான்.ஷெரினே இரண்டாவது ஆல்பம் தயாரிக்கவும் ஒப்பு கொண்டிருந்தாள். விஷால் அவ்வப்போது சாட்விக்கொடு பேசி வந்தான். சாட்விக் மழலை மொழியில் எப்ப அப்பா வருவீங்க என்று கேட்டு கொண்டிருந்தான்.ஸ்ருதியும் நாளொரு குறும்போடும் எல்லோருடைய அன்போடும் வளர்ந்து வந்தாள் .சுபா அப்பாவும், விஷால் அப்பாவும் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.விஷால் இரண்டு வருடத்தை கடந்திருந்தான்.லீவு கேட்டிருந்தான். கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு மாத விடுமுறையை பெற்றிருந்தான். அனன்யா இந்த செய்தியை கேட்டு மகிழ்ந்தாள். சுபா, தீபா மற்றும் விஷாலின் குடும்பத்தார் ஆவலுடன் அவன் வருகைக்காக காத்திருந்தனர். எல்லோருக்காகவும் சில கிப்ட் களை வாங்கினான் . சாட்விக்க்கும், ஸ்ருதிக்கும் விளையாட்டு பொருட்கள் வாங்கினான்.

விஷால் வந்து இறங்கியதும் வீட்டில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். எப்படி இருக்கே விஷால் என்றாள் அனன்யா. நல்லா இருக்கேன் அவளுடைய இரண்டாவது ஆல்பம் ரிலீஸ் ஆவதில் சற்று தாமதம் ஆனது. தீபாவையும், சுபாவையும் ரொம்ப மிஸ் பண்ணியதாக சொன்னான். குழந்தைகள் அப்பா என்று அவனை கட்டிக்கொண்டன. அவன் மனம் உற்சாகத்தில் நிரம்பி வழிந்தது. தீபா அம்மா தம்பி இந்த வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம் இங்கேயே இருங்கள் என்றாள். ம்ம் நீங்க சொல்லுறது புரியுது ஆனா இப்போதைக்கு வேற வழியில்லை என்றான்.
விஷால் சற்றே இளைத்திருந்தான். அதுவும் நல்லது தானே என்றாள் தீபா. அவனுக்காக ஸ்பெஷல் ஆக சமைத்திருந்தாள் அனன்யா. எங்காவது ட்ரிப் போகலாமா விஷால் என்று கேட்டாள் தீபா. கன்யாகுமாரி போகலாம் என சுபா சொன்னாள். அனன்யாவுக்கும் அதில் சந்தோஷம்தான். குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊரிலிருந்து விஷால் அப்பா, அம்மா , சுபா அப்பா, அம்மா ஆகியோர் வந்திருந்து நலம் விசாரித்தனர்.

கடல் அலை என்றால் தீபாவுக்கு கேட்கவா வேண்டும் அவள் உற்சாகத்தில் மிதந்தாள் . குழந்தைகளும் அவளும் கடலில் ஆட்டம் போட்டனர். விஷால் அமைதியாக அவற்றை படமெடுத்து கொண்டிருந்தான். பிறகு விஷாலும் குழந்தைகளுடன் விளையாட தொடங்கினான். அனன்யா, சுபா விஷாலையே பார்த்து கொண்டிருந்தனர். திருவள்ளுவர் சிலை , விவேகானந்தர் தியான மண்டபம் போன்றவற்றை கண்டனர்.பிறகு நாகர்கோவில் சென்றனர் அங்கிருந்த சில கோவில்களுக்கும் அருகில் இருந்த அருவிகளுக்கும் சென்றனர்.

விஷாலின் விடுமறை முடிய இன்னும் 2 வாரங்களே இருந்தன.தீபா கர்ப்பம் என்று டாக்டர் உறுதிபடுத்தினார். தீபா மகிழ்ச்சியில் திளைத்தாள் . விஷால் நான் உன்னை ரொம்பவும் காக்க வைத்து விட்டேனா தீபா. அதெல்லாம் ஒன்றுமில்லை விஷால் .இந்த குழந்தை நல்ல படியாய் பிறக்க வேண்டும் அதுதான் என் ஆசை என்றாள். அனன்யா , சுபா இருவரும் தீபாவுக்கும், விஷாலுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். சாட்விக் ,ஸ்ருதி இருவரும் இன்னொரு தங்கச்சி பாப்பாவுக்காக காத்திருந்தனர். தீபா உடனான உறவு பற்றி நினைத்து பார்த்தான் . அவள் தனக்காக சிறை சென்றது முதல் இத்தனை காலம் காத்திருந்தது வரை அவன் மனதில் நிழலாடியது. அவனையும் அறியாமல் கண்கள் கலங்கின. எதுக்கு விஷால் இப்போ பீல் பண்ணுறே என்றாள் தீபா. இப்பவும் அவன் அவள் கூட இருக்க முடியாமல் விடுமுறை முடிந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. தீபா அவனுக்கு தைரியம் சொன்னாள். நீ ஒண்ணும் கவலை படாதே விஷால். எப்பவுமே உன் அன்பு எனக்கு துணை இருக்கும் அப்படித்தான் இத்தனை வருஷம் ஓடியது. குழந்தை பிறந்த உடன் உடனே வா விஷால். நம்ம குழந்தைகள் எல்லோருமே உனக்காக ஏங்கி கொண்டிருப்பார்கள் என்றாள். விஷால் வார்த்தைகள் இன்றி அவளை அணைத்து கொண்டான்.

விஷால் கிளம்பும்போது போகாதே அப்பா என குழந்தைகள் காலை கட்டிக்கொண்டன . அவர்களை அனன்யா சமாதானபடுத்தி கூட்டி போனாள். முன்பாக விஷால் குவைத் செல்லும் முன் குலதெய்வம் கோவிலுக்கு அவர்களுடன் சென்று வந்திருந்தான்.விஷால் உடம்பை பார்த்துக்க நான் இந்த வருட கடைசியில் வந்து உன்னை பார்ப்பேன் என்றாள் அனன்யா. தீபாவை பத்திரமாக பார்த்துக்கொள் என்றான்.
தீபா கர்ப்பமாக இருக்கும்போது அருகில் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் விஷாலுக்கும் இருந்தது.தீபாவுக்கு வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது . அவளுக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாமே செய்யபட்டிருந்தது .அனன்யாவும், சுபாவும் எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக செய்திருந்தனர். விஷால் வீடியோ காலில் வந்து தீபாவை பார்த்து மகிழ்ந்தான்.தீபாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது . விஷால் ஒரு வார விடுமுறையில் வந்து பார்த்து விட்டு போனான். லயா என பெயர் சூட்டி இருந்தார்கள். என்ன விஷால் ஒரு வாரம்தான் லீவு கிடைத்ததா என்றாள் தீபா ? விஷால் மௌனமாக இருந்தான்.

லயா ,சாட்விக், ஸ்ருதி மூவரையும் நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே விஷாலுக்கு இருந்தது. தீபா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னாள் அனன்யா. செலவுக்கு பணம் இருக்கிறதா நான் வேணா பணம் அனுப்பவா என்றான். அதெல்லாம் பிரச்சனை இல்லை விஷால். இந்த முறை கொஞ்சம் சீரியஸ் ஆக இருக்கிறார் என்றாள். விஷால் தீபாவுக்கு ஆறுதல் சொன்னான். பயப்படாதே தீபா எப்படியும் அவர் நம்ம கூட இருப்பார் . அவர் பார்த்து வளர்த்த பிள்ளைகளை அவர் விட்டு விட்டு போக மாட்டார் என்றான். ம்ம் நீ ஒரு முறை வந்து பார்த்து விட்டு போ விஷால் என்றாள் தீபா. சரி தீபா நான் நிச்சயம் முயற்சி பண்ணுகிறேன் என்றான். தீபா அம்மா இவனுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார் .அவனுடைய மனைவிக்கு பிரசவ நேரத்திலும்,அதன் பிறகும் எவ்வளவோ உதவி இருக்கிறார். அவற்றையெல்லாம் நினைத்து பார்த்தான் விஷால். விஷால் தீபா அம்மா உங்களை பார்க்கணும்னு சொல்லுறாங்க நீ வா விஷால் . டாக்டர் டைம் சொல்லிட்டாங்க . இன்னும் ரெண்டு நாள் தான். உன்னை அவங்க பாக்கணும்னு சொல்லுறங்க என்றாள் அனன்யா. விஷால் எப்படியோ லீவு வாங்கிகொண்டு ஹாஸ்பிடல் ஓடினான்.

தம்பி என் பெண்ணை உடம்பு சரியில்லாதப்ப அப்பவும் நீ தான் பார்த்து கொண்டாய் , இப்பவும் நீ தான் பார்த்துகொள்கிறாய். எப்பவும் அவகிட்ட இதே அன்போட இருப்பா என்றாள். நிச்சயமா அம்மா என்றான். சாட்விக், ஸ்ருதி, லயா மூவரையும் அருகில் அழைத்து ஆசீர்வாதம் செய்தாள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் தீபா அம்மா உயிர் பிரிந்தது. தீபா அம்மா விடை பெற்றுக்கொண்டு விட்டாள். விஷால் இறுதி சடங்குகளை செய்தான். தீபா அழுதுகொண்டிருந்தாள் .அவளை கட்டிகொண்டு ஆறுதல் கூறினான் விஷால். தீபா உங்க அம்மா எப்பவும் நிழலா நம்ம கூடவே இருப்பாங்க என்றான். அனன்யாவும், சுபாவும் கூட கலங்கி நின்றனர். தீபாவுக்கு ஆறுதல் கூறினர்.விஷால் 15 நாட்களில் குவைத் திரும்பினான்.

காலங்கள் ஓடியது. விஷாலின் பிள்ளைகள் ஸ்கூல் போகும் பருவத்தை எட்டியிருந்தனர். ஸ்ருதி, சாட்விக்,லயா செய்யும் குறும்புகளை அவ்வப்போது வீடியோவாக எடுத்து அனுப்புவாள் தீபா. அவர்களை நேரில் பார்த்து முத்தமிட வேண்டும் போல இருக்கும் விஷாலுக்கு. அவர்களுடைய தாத்தாக்களும் அடிக்கடி பெங்களூர் வந்து போனார்கள். இவனிடம் பேசும்போது லயா இன்னும் கூச்ச சுபாவத்துடனே பேசுகிறாள். தீபாவை போலவே அவள் நடவடிக்கைகள் இருக்கிறதென்று அனன்யா சொன்னாள். சாட்விக் டான்ஸ் மீதும், ஸ்ருதி மியூசிக் மீதும் ஆர்வமாக இருப்பதாக சுபா சொன்னாள்.இந்த விஷாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீபா சொன்னாள். அனன்யா குவைத் சென்று அவனுடைய பிறந்தநாளில் அவனோடு இருக்க முடிவு செய்தாள்.

அனன்யா குவைத் செல்ல டிக்கெட் புக் செய்தாள். பிள்ளைகள் நாங்களும் வருவோம் என அடம் பிடித்தனர். தீபாவும் சுபாவும் ஏதோ சொல்லி சமாளித்தனர்.அனன்யா அவனுக்கு பிடித்த சில ஸ்வீட் சிலவற்றை வீட்டிலேயே செய்தாள் . எடுத்துகொண்டு போவதற்கு தீபா அவற்றை பேக் செய்து கொடுத்தாள். சுபா அவனுக்கு ஒரு அழகிய கைக்குட்டை ஒன்றை வேலைப்பாடுடன் செய்து கொடுத்தாள். தீபா குழந்தைகள் பர்த்டே வாழ்த்து சொல்லும் வீடியோவை தயார் செய்து அதை கொடுத்தாள்.அனன்யா 15 நாட்கள் அவனோடு அங்கே தங்கி இருக்க ஏற்பாடுகளை செய்திருந்தான் விஷால். முதலில் அவளை வர வேண்டாம் என்று சொன்னாலும் அனன்யாவின் பிடிவாதமே இறுதியில் வென்றது. தீபா , சுபா இருவரும் கவனத்தோடு இருக்குமாறு கேட்டுக்கொண்டாள் அனன்யா.எல்லோரும் வந்து அனன்யாவை வழி அனுப்பி வைத்தனர்.

அனன்யாவுக்கு நீண்ட நாட்கள் கழித்து விஷாலை பார்க்க போகிற பரவசம் இருந்தது. அவனிடம் உடனே பேசக்கூடாது அவன் இந்தியா வந்து 5 வருடங்கள் ஆகி விட்டது என்பதெல்லாம் அவனை ஏர்போர்ட்டில் பார்த்த அடுத்த நொடி அவளுடைய கோபம் எல்லாம் பறந்து போய்விட்டது. ஹாப்பி பர்த்டே விஷால் என்று அவனை கட்டிக்கொண்டாள்.அவளை அவனுடைய தங்கும் இடந்துக்கு அழைத்து சென்றான். அது ஒரு தனி வீடாக இருந்தது. அவளுக்காக ஏற்பாடு செய்ததாக கூறினான். பிள்ளைகளை வீடியோ காலில் அழைத்து பேசினான். அனன்யா விஷால் நான் உன் கூட பேசமாட்டேன் என்றாள் எங்கள் நினைப்பே உனக்கு இல்லை என்றாள். என்ன அனன்யா இப்படி சொல்லுகிறாய் தினம் தினம் உன்னையும் குழந்தைகளையும் நினைக்காத நேரமேயில்லை என்றான். அவளை அள்ளி எடுத்து கொஞ்சினான். உதடுகளில் முத்தமிட்டான். எங்கே என்னுடைய கிப்ட் என்றான். சுபா, தீபா வழங்கிய கிப்ட்களை ரசித்து பார்த்தான் விஷால்.

விஷாலுக்கு ஸ்வீட் ஊட்டினாள் அனன்யா. அன்று இரவு சில நண்பர்கள் சூழ பர்த்டே கேக் வெட்டி கொண்டாடினான். அனன்யா அன்று இரவு அவனுக்காக அவள் வெளியிட உள்ள மியூசிக் ஆல்பத்திலிருந்து ஒரு பாடலை பாடினாள். ஏன் ஆல்பம் லேட் ஆகுது என்றான். என்னவோ சில சமயம் நாம எதிர்பார்த்த மாதிரி அமையறதில்லை . அது கொஞ்சம் லேட் ஆனா தப்பில்லை என்றாள். புதையல் எடுத்து ரொம்ப நாள் ஆச்சு என்றான். அவள் வெட்கபட்டாள். அடுத்தது எனக்கு பையன்தான் வேணும் என்றான். உன் விருப்பமே என் விருப்பம் என்றாள் அனன்யா. அவளுடைய தோற்றம் நிறையவே மாறி இருந்தாலும் அவளுடைய உள்ளன்பு குறையாதிருந்தது. அவளை முதலில் பார்த்த காதல் இன்னும் குறையாமல் இருந்தது விஷாலுக்கு. அனன்யா இதென்ன புளூ சாரி உனக்கு பிடிக்குமே என்று கட்டி வந்தேன் என்றாள். இன்னும் நீ எதையும் மறக்கவில்லை. அதெப்படி விஷால் உன்னை மறந்தால் என்னை மறப்பதற்கு சமம் என்றாள். அவளை வாரி அணைத்து கொண்டான்.

15 நாட்களும் நீண்ட காலத்துக்கு பிறகு சேர்ந்து வாழ்ந்த சந்தோஷத்தை அனன்யாவுக்கு குடுத்தது . சீக்கிரம் வந்து விடு விஷால். பிள்ளைகள் நீ எப்போ வருவாய் என கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றாள். அனன்யா நமக்கு நிச்சயம் எதிர்காலம் நல்லா இருக்கும் . அதுக்காக சில நாள் இப்படி இருந்துதான் ஆக வேண்டும் என்றான். அனன்யாவுடன் போட்டோக்கள், வீடியோ எடுத்துக்கொண்டான். அவர்கள் குவைத் சுற்றி பார்த்தார்கள் . தீபாவும், சுபாவும் பர்த்டே அன்று வாழ்த்தியதை அவனால் மறக்கவே முடியவில்லை. அடுத்த முறை சுபா வருவதாக சொல்லியிருக்கிறாள். அனன்யாவை பிரிவது ரொம்ப கஷ்டமாக இருந்தது விஷாலுக்கு. விஷால் நீ எப்பவும் ஹாப்பி யா இருக்கணும் அதுதான் என் ஆசை என்றாள் அனன்யா. விஷால் அவளிடம் மூன்று குழந்தைகளுக்கும் தேவையானவற்றை வாங்கி கொடுத்து அனுப்பினான். அனன்யா அழுதவாறே அவனிடம் இருந்து விடை பெற்று பெங்களூர் வந்து சேர்ந்தாள்.