Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 43

அனன்யாவுடனான காதல் வாழ்க்கை தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாட நினைத்தான் விஷால்.அனன்யா, சுபா, தீபா மூவருமே உற்சாகமடைந்தனர். வெளியே எங்காவது போகலாம் என்று சொன்னார்கள். சிம்பிள் ஆக கொண்டாடுவோம் என்றான் விஷால்.
அனன்யாவுக்கு மோதிரம் வாங்கி அணிவித்தான். தீபாவுக்கும்,சுபாவுக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பரிசளித்தான் . எல்லோரும் லவ் யு விஷால் என்று கூறினார்கள் . சாட்விக்குக்கு சாக்லேட் பாக்ஸ் ஒன்று வாங்கி வந்திருந்தான். அனன்யா காதலை சொன்ன தினத்தை அவனால் என்றுமே மறக்க முடியாது. பிரதிப்பை நினைத்து கொண்டான். வீடு முழுவதும் வண்ண பலூன் கொண்டு அலங்கரித்து இருந்தனர்.நான்கு பெரும் கோவிலுக்கு போய் வந்தனர். அனன்யா ,சுபா , தீபா , சாட்விக் நால்வருமே வரமாய் வந்தவர்கள் அவர்களை அளித்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான் விஷால்.

சுபாவை சந்திக்க ஸ்வாதி என்ற டான்ஸ் டீச்சர் வந்திருந்தார். அவர் சிங்கப்பூரில் டான்ஸ் ஸ்கூல் நடத்துபவர். சுபா எங்க ஸ்கூல் பசங்க உங்க டான்ஸ் வீடியோவெல்லாம் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க.. நீங்க எங்க சிங்கப்பூர் ஸ்கூலில் டான்ஸ் டீச்சரா ஜாயின் பண்ண முடியுமா நல்ல pay, தங்குகிற இடம் எல்லாமே நான் அரேஞ்ச் பண்ணி தருகிறேன் என்றாள். சுபா இப்போதான் நாங்க எல்லாம் ஒண்ணா இருக்கோம் அந்த நிம்மதியை இழக்க தயாரா இல்லை சாரி மேடம் என்றாள். எதுக்கும் நீங்க மனசு மாறுனா இந்த நம்பர் ல கூப்பிடுங்க என்றாள்.அனன்யாவுக்கும், தீபாவுக்கும் அவள் சொல்வது சரிதான் என பட்டது. விஷால் வேலையில் இருந்து வந்ததும் விஷயத்தை சொன்னாள் சுபா. ம்ம் எதுக்கும் நீ நல்லா யோசிச்சு பாரு சுபா இது ஒரு நல்ல சான்ஸ் மிஸ் பண்ண வேணாம் . அதெல்லாம் வேணாம் விஷால் சாட்விக் விட்டு என்னால பிரிய முடியாது என்றாள். விஷால் அவளை வற்புறுத்தவில்லை.

அனன்யா ஏன் விஷால் அவளை சிங்கப்பூர் போக சொல்லுற என்றாள் . நீயே யோசிச்சு பாரு அவளுக்கு ஒரு நல்ல வெளிநாட்டு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் அதுவும் சிங்கப்பூர் ல டான்ஸ் டீச்சர்னா நல்ல மதிப்பு இருக்கும் என்றான். ம்ம் நான் அவளிடம் பேசுகிறேன் என்றாள் அனன்யா. வேண்டாம் அனன்யா அவளா மனசு மாறி போகிறதுன்னா போகட்டும். நாம யாரும் கட்டாயபடுத்த வேண்டாம் என்றான். சரி விஷால். சில தினங்கள் கழித்து சுபாவே இவனிடம் பேசினாள். நான் பிடிக்கலை என்றால் உடனே வந்து விடுவேன் அப்படின்னா சிங்கப்பூர் போறேன் என்றாள். ம்ம் வாவ் சுபா நீதான் சொல்லுறியா ? ஆமா விஷால் ஆனா நீ என்னை மறந்துடாம வந்து பார்க்கணும் என்றாள். நிச்சயமா என்றான். இங்கே இருக்கிற டான்ஸ் ஸ்கூல் தீபா பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கிறா . அவளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு விஷால் என்றான். நிச்சயமா சுபா .அனன்யாவுக்கும், தீபாவுக்கும் அவள் போவதில் வருத்தம் என்றாலும் இது எதிர்காலத்துக்கு பெரிய சப்போர்ட் ஆக இருக்கும் என்பதால் ஒத்துக்கொண்டார்கள்.

சுபா அவள் அப்பாவிடம் விஷயத்தை சொன்னாள் . அவரும் அவளை வாழ்த்தினார்.சுபா ஸ்வாதியை நேரில் பார்த்து விஷயத்தை சொன்னாள். விஷால் அவளுக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக ஸ்வாதிக்கு மனமார நன்றி சொன்னான். இன்னும் மூன்று மாதங்களில் எல்லாம் தயார் ஆகிவிடும் என்று சொன்னாள் ஸ்வாதி. விஷால் அதற்கான எல்லா ஏற்பாடுகளை செய்ய தொடங்கினான். சுபா என்னை நைசா கழட்டி விடலாம்னு நெனைக்காதே விஷால் என்றாள்.. எப்ப உனக்கு என்னை பார்க்கணும்ணு தோணுதோ அப்போ நான் சிங்கப்பூர்ல இருப்பேன் என்றான் விஷால். தாங்க்ஸ் விஷால் .சாட்விக்கை விட்டு எப்படி பிரியபோகிறாள் என்பதும் அவனுக்கு கவலையாய் இருந்தது. தீபாவிடம் டான்ஸ் ஸ்கூல் பொறுப்புகளை மாற்றி குடுத்தாள் சுபா.தீபா இருக்கும் தைரியத்தில்தான் இந்த டான்ஸ் ஸ்கூல் விட்டு நான் சிங்கப்பூர் போகிறேன் என்றாள் சுபா. அனன்யா அவளுடைய மியூசிக் ஸ்கூல் மீண்டும் நடத்த தொடங்கினாள். மூன்று பெண்களும் பிஸியாக இருப்பது விஷாலுக்கு நிம்மதியும் , மகிழ்ச்சியும் தந்தது.
நால்வரும் ஷாப்பிங் போனார்கள். சுபாவிற்கு தேவையானவற்றை வாங்கினர்.

சுபா சிங்கப்பூர் செல்ல இன்னும் ஒரு வாரமே இருந்தது. விஷால் முடிந்தவரை அவளுடன் நேரம் செலவிட்டான். அவளுக்கு குழந்தை தள்ளி போவதை பற்றி கவலை இருந்தது. விஷால் அவளை சமாதான படுத்தினான். நீ ஒண்ணும் கவலைபடாதே சுபா நாம நாளைக்கே டாக்டர் போய் பார்ப்போம் என்றான். மறுநாள் அனன்யாவும் வந்திருந்தாள். டாக்டர் சில ஆலோசனைகளை வழங்கி இருந்தார் அத்தோடு அவசரப்பட வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார்.சுபா சிங்கப்பூர் செல்லும் நாள் வந்தது . எல்லோரும் ஏர்போர்ட் சென்று அவளை ஸ்வாதி டீச்சருடன் வழி அனுப்பி வைத்தனர். விஷால் போன உடனே ஃபோன் பண்ணு என்று சொல்லியிருந்தான். அனன்யாவும், தீபாவும் சற்றே வாடிய முகத்துடன் இருந்தனர். சாட்விக் எல்லோருடைய முகங்களை பார்த்து சுபா இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்தான்.

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் இங்கே எல்லாம் நல்லாயிருக்கு .. ஆனா பொருள் எல்லாம் கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாள்.ஸ்வாதி டீச்சர் தன்னை நன்றாக பார்த்து கொள்வதாகவும் சொன்னாள்.சாட்விக் சுபாவை வீடியோ காலில் பார்த்ததும் மகிழ்ந்தான். டான்ஸ் கிளாஸ் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பம் ஆகிவிடும் என்றும் அதுவரை சிங்கப்பூர் சுற்றி பார்க்க போகிறேன் என்றும் சொன்னாள். சரி சுபா என்றான் விஷால்.விஷால் தன் பிரிவின் வருத்தத்தை வெளிக்காட்டி கொள்ளவில்லை. சுபாவும் அவனிடம் சந்தோஷமாக இருப்பது போல காட்டி கொண்டாள். இரண்டு வாரங்கள் கழித்து சுபா அப்பா அம்மா சிங்கப்பூர் போய் சுபாவை பார்த்தார்கள். தங்கும் இடம், டான்ஸ் கிளாஸ் எல்லாம் பார்த்தார்கள். நல்லாதான் இருக்கு என்றார் சுபா அப்பா. கொஞ்ச நாள் அவள் கூடவே தங்கி இருந்தார்கள். விஷால் சுபா அப்பாவிடம் பேசினான் . ரொம்ப சந்தோஷம் என்றான்.


சுபா சிங்கப்பூர் போய் ஆறு மாதங்கள் ஆகி இருந்தது . விஷால் நீ எப்போ சிங்கப்பூர் வருகிறாய் என்று கேட்டவாறு இருந்தாள். விஷால் இன்னும் ஒரு மாதத்தில் வருகிறேன் என்று சொன்னான். அதெல்லாம் முடியாது சீக்கிரம் வா என்று சுபா சொன்னாள். அனன்யாவும், தீபாவும் நீ மட்டும் போய்விட்டு வா விஷால் என்றனர். நான் எல்லோரையும் அழைத்து கொண்டு போகலாம் என நினைத்தேன் என்றான். வேண்டாம் விஷால் அப்புறம் சுபா ரொம்ப எமோஷனல் ஆகி விடுவாள் நீ மட்டும் போ என்றாள் அனன்யா. தீபாவுக்கும் டான்ஸ் கிளாஸ் வேலைகள் சரியாய் இருந்தது. விஷால் அடுத்த வாரம் வருவதாக சுபாவுக்கு மெசேஜ் பண்ணி இருந்தான். சுபா தாங்க்ஸ் விஷால் நானே வந்து உன்னை ஏர்போர்ட்டில் பிக்அப் பண்ணி கொள்கிறேன் என்றாள்.
விஷால் அனன்யா எல்லாத்தையும் உன்னால சமாளிக்க முடியுமா நான் ஒரு வாரத்தில் திரும்ப வந்து விடுவேன் என்றான். அதெல்லாம் கவலைபடாதே விஷால் நான் பார்த்துகொள்கிறேன் என்றாள்.

விஷால் குறிப்பிட்ட தேதியில் சிங்கப்பூர் போய் சேர்ந்தான்.சுபா இவனை கட்டிக்கொண்டாள். எப்படி மாறிவிட்டாய் நீ என்றான். சற்றே குண்டாக இருந்தாள். ம்ம் கிண்டல் பண்ணாதே விஷால் . நானும் வெயிட் லாஸ் பண்ணனும்தான் பார்க்கிறேன் என்றாள். ஸ்வாதியை சந்தித்தான். இங்கே சுபா வந்ததுக்கப்புறம் பசங்க நல்லா இண்டரெஸ்ட் ஆ டான்ஸ் கத்துக்கிறாராங்க என்றாள். சுபா அவனை அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்றாள். விஷால் அவளை அள்ளி எடுத்து உதட்டில் முத்தமிட்டான். என்ன விஷால் சாட்விக் எப்படி இருக்கான்? அவனை அழைத்து கொண்டு வருவாய் என நினைத்தேன் என்றாள் . நான் எல்லோரையும் அழைத்துகொண்டு வரலாம்னு நெனைச்சேன் ஆனா நெக்ஸ்ட் டைம் பார்த்து கொள்ளலாம்னு விட்டுட்டேன் என்றான். எப்படி இருக்கு சிங்கப்பூர் என்றான். இங்கே எல்லாமே கிளீன் என்றாள். எனக்கு பிடிச்சிருக்கு என்றாள். விஷால் அவள் கூட பீச்க்கு போனான். இன்னும் சில இடங்களை சுற்றி காட்டினாள். டான்ஸ் கிளாஸ் பசங்களுக்கு தன்னுடைய ஹஸ்பண்ட் என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

சுபா தன்னுடைய டான்ஸ் திறமையை பலமடங்கு வளர்த்திருந்தாள். அங்கிருந்தவர்கள் அவளிடம் அன்பாய் பழகினார்கள். அப்பா என்ன சொன்னாரு என்று கேட்டான் விஷால். எப்போ பேர புள்ளை தர போறேன்னு கேட்டாரு . விஷால் அமைதியாக இருந்தான். நீ ஒண்ணும் வருத்தபடாதே விஷால் . நமக்கு twins தான் பொறக்கும் அதுதான் லேட் ஆகுது என்றாள். விஷால் மனதிலும் அந்த ஏக்கம் இருந்தது.விஷாலை முருகன் கோவிலுக்கு அழைத்து போனாள். அவளுக்கு சீக்கிரம் குழந்தை வேண்டும் என்பதே விஷாலின் பிரார்த்தனையாய் இருந்தது.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை. இன்னும் இரண்டு வருட contract இருந்தது. விஷாலுக்கு சுபாவை பிரிய மனமில்லை. ஆனால் சுபா அடிக்கடி வந்து பார் விஷால் என கேட்டுக்கொண்டாள். நிச்சயம் நெக்ஸ்ட் டைம் சாட்விக் அழைத்து கொண்டு வருகிறேன் என்றான். சுபா அவனறியாமல் கண்களின் நீரை துடைத்து கொண்டாள்.
விஷால் பெங்களூர் திரும்பியதும் சிங்கப்பூர் பயணம் போட்டோக்களை அனன்யாவிடமும், தீபாவிடமும் காண்பித்தான். ரொம்ப அழகாயிட்டா சுபா என்றாள் அனன்யா. ம்ம் அவளும் அழகுதான் நீங்க ரெண்டு பெரும் அழகுதான் என்றான்.


அனன்யா சொன்ன மாதிரி சுபா சற்றே அழகு கூடித்தான் இருந்தாள். விஷால் அவளிடமே இதை சொன்னான். தாங்க்ஸ் விஷால் . சாட்விக் நினைப்பாவே இருக்குது என்றாள். ம்ம் எல்லாம் சரி ஆயிடும் அவனும் உன்னை தேடத்தான் செய்யுறான் என்றான் விஷால்.சீக்கிரம் ரெண்டு வருஷம் கடந்து போகணும் என்றாள் சுபா. சுபா டான்ஸ் கிளாஸ் வீடியோக்களை அவ்வப்போது அனுப்பி வந்தாள். அவளுடைய செலவு போக மிச்ச பணத்தை விஷாலுக்கும் அனுப்பி வைத்தாள். விஷால் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. அனன்யா சாட்விக் இப்போது கொஞ்சம் கொஞ்சம் நடக்கிறான் என்றாள். ம்ம் அவனும் டான்ஸ் பண்ண ட்ரை பண்ணுகிறானோ என சொன்னான் விஷால்.விஷால் அம்மாவும், அப்பாவும் வந்திருந்தார்கள். விஷால் அப்பா பேரனோடு விளையாடினார். விஷால் அம்மா ஒரு கோல்ட் செயின் சாட்விக்க்கு போட்டார்.எதுக்காக அம்மா இதெல்லாம் . அதெல்லாம் நல்லதுக்குத்தான் என்றாள். விஷால் அவனுடைய அப்பா அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை என்றாலும் அவர்கள் செலுத்தும் அன்பில் குறை இல்லாமல் இருந்தது. வர தீபாவளிக்கு எல்லோரும் ஊருக்கு வரணும் என்றாள் விஷால் அம்மா. இன்னும் ஒரு மாதமே இருந்தது தீபாவளிக்கு. சரி கட்டாயம் வருகிறோம் என்றாள் அனன்யா.


தீபா அம்மா, சுபா, அனன்யா, சாட்விக் உடன் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட போனான் விஷால். சொந்த ஊருக்கு போவதை பற்றி சுபாவிடம் சொல்லி இருந்தான். அவளும் அது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தாள். விஷால் வீடு இப்போது சற்று இடித்து கட்டப்பட்டிருந்தது . விஷால் அவனுடைய அப்பா அம்மாவுடன் சற்றே நெருக்கமாய் இருந்த தருணங்கள் குறைவு. இந்த தீபாவளியோடு அந்த குறை போகட்டும் என நினைத்தான். அனன்யா வீட்டுக்கு போனான். வீட்டை தீபாவோடும் , அனன்யாவோடும் சேர்ந்து சுத்தபடுத்தினார்கள். அனன்யா விஷால் நம்முடைய காதல் நினைவுகள் இன்னும் இந்த வீட்ல தான் இருக்கு. அவளுடைய அப்பாவை நினைத்து பார்த்து வருத்தப்பட்டாள். அவருடைய போட்டோவுக்கு மாலை அணிவித்தாள். விளக்கேற்றி வைத்தாள். சாட்விக்கிடம் தாத்தா வீடு என்று விஷால் சொன்னான். தீபா வீட்டுக்கும் போனார்கள். நைட் ஸ்டடி பண்ணி ரொம்ப நாளாகிறது தீபா என்றான். ம்ம் நான் எப்பவும் ரெடி என்றாள் தீபா .