Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 38

விஷால், அனன்யா ஹனிமூன் plan பண்ணியிருந்தனர். ஆனால் இப்போது போக வேண்டாம் என்றான் விஷால். லாங் லீவுக்கு பிறகு இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருப்பதால் இரண்டு மாதம் கழித்து போகலாம் என்றான். சரி விஷால் எனக்கு ஓகே என்றாள் அனன்யா. சுபாவிடமும் ,அனன்யாவிடமும் பேசி தீபாவை சிங்கப்பூர் ஒரு வாரம் அனுப்ப ஏற்பாடு செய்தான். அவள் எங்குமே போவதில்லை இந்த ட்ரிப் அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்றான் விஷால். சுபாவும், அனன்யாவும் மகிழ்ச்சியுடன் அவளை சிங்கப்பூர் அனுப்ப தயார் ஆயினர். தீபா முதலில் தயங்கினாலும் பிறகு ஒத்துக்கொண்டாள் . அவளுக்கு பிடித்த இடங்களை பட்டியலிட்டு அதன் படி பயண திட்டத்தை அமைத்து கொண்டாள் தீபா. உங்களையெல்லாம் விட்டு போக கஷ்டமாயிருக்கு என்றாள் தீபா. அங்கே போன உடனே எங்களையெல்லாம் மறந்து விடாதே என்றாள் சுபா. மூவரும் ஏர்போர்ட் சென்று தீபாவை வழி அனுப்பி வைத்தனர்.

அனன்யா தான் ஒரு சிறிய அளவிலான மியூசிக் ஸ்கூல் தொடங்கலாம் என நினைப்பதாக விஷாலிடம் சொன்னாள். சூப்பர் ஐடியா அனன்யா தாராளமாக செய் என்றான். அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள் அனன்யா. சுபாவும் அதற்கு முழு மனதோடு ஒத்துழைத்தாள் . அனன்யா மியூசிக் அகாடமி என்ற பெயரை வைத்தனர். சில சிறுவர் சிறுமியர் வந்து சேர்ந்தனர். விஷால் போக போக நிறைய பேர் வருவார்கள் என்றான்.அனன்யா அலுவலக வேலை நேரம் போக மீதி நேரத்தில் மியூசிக் கிளாஸ் எடுத்தாள்.தீபா போய் சேர்ந்ததும் உற்சாகமாய் போட்டோக்கள், வீடியோ போன்றவற்றை அனுப்பினாள் .சுற்றி பார்த்த இடங்களை பற்றி குறிப்பும் அனுப்பினாள் . அவளை தனியாய் அனுப்ப ஆரம்பத்தில் விஷால் தயங்கினாலும் பின்னர் அவள் சுதந்திரமாக சுற்றி வரட்டுமே என்று எண்ணினான்.

போலீசார் ஆரம்பத்தில் விஷால் விபத்து கேசில் காட்டிய சுறுசுறுப்பை பின்னர் காட்டவில்லை .இது அனன்யாவுக்கு கவலையாய் இருந்தது. விஷால் போகட்டும் விட்டு விடு என்று சொல்லிவிட்டான். அதெப்படி விஷால் விட முடியும் என்று ஆதங்கபட்டாள் அனன்யா. அனன்யா இப்போ நமக்கு நெறைய பொறுப்பு இருக்கு என்றான். ம்ம் சரி . சுபா டான்ஸ் கிளாசிலும், அனன்யா மியூசிக் கிளாசிலும் பிஸியாக இருப்பது இவனுக்கு மகிழ்ச்சியை தந்தது. ரெண்டு பேரையும் ஸ்பெஷல் டின்னர் கூட்டிக்கொண்டு போனான். அனன்யா, சுபா இருவரும் ரொம்ப நாள் ஆச்சு நாம ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு என்றனர்.ஆமாம் அனன்யா கல்யாண வீடியோ எல்லாம் வந்து விட்டதா என விசாரித்தான். நாளைக்கு வந்து தரேன்னு சொல்லி இருக்காங்க என்றாள்.

அடுத்த ஒரு வாரத்தில் சிங்கப்பூர் சுற்றுலா முடித்து திரும்பி விட்டாள் தீபா. அவள் முகத்தில் புது பொலிவு தெரிந்தது . ரொம்ப தாங்க்ஸ் விஷால் நல்லா என்ஜாய் பண்ணினேன் என்றாள்.ரெஸ்ட் எடுத்துக்கொள் தீபா என்றான். அவள் என்னென்னவோ பொருட்களை தீபாவுக்கும், அனன்யாவுக்கும் வாங்கி வந்திருந்தாள். இவனுக்கு ஒரு காமிரா வாங்கி வந்திருந்தாள். நல்லா இருக்கு தீபா தாங்க்ஸ் என்றான்.
அவன் எதிர்பார்க்காத செய்தி ஒன்று கிடைத்தது .ரேவந்த் ஆக்சிடென்ட் ஆகி சென்னையில் இறந்து விட்டான் என்பதுதான் அது. உடனே நால்வரும் சென்னை புறப்பட்டு சென்றார்கள். ரேவந்த் வீட்டில் அனன்யாவை கட்டிகொண்டு அழுதார்கள். உன் மேல உயிரையே வச்சிருந்தான்மா இப்படி அநியாயமாக உயிரை விட்டு விட்டானே என்றனர். விஷாலுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது அனன்யா வயசுதான் அவனுக்கும். பாவம் என்றான்.நால்வரும் இறுதி மரியாதை செலுத்திவிட்டு பெங்களூர் திரும்பினர்.

அனன்யா ரேவந்த் தனக்கு பல உதவிகள் செய்ததை மறக்க முடியாது என்று சொன்னாள். தீபாவும், சுபாவும் கூட சோகத்தில் ஆழ்ந்தனர். நெருங்கிய நண்பன் போல பழகி வந்தான் ரேவந்த் என அனன்யா கூறினாள். போலீசார் விபத்தை சந்தேக மரணம் என பதிவு செய்தனர்.விஷாலையும் போலீசார் விசாரித்தனர். தான் முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னான். சில நாட்கள் கழித்தே அனன்யா பழையபடி வேலைகளை தொடங்கினாள். அவனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது என்று அனன்யா சொன்னாள். சில ஆஸ்ட்ரேலியா நண்பர்களும் அனன்யாவை தொடர்பு கொண்டு ரேவந்த் மரணம் பற்றி விசாரித்தனர். இரண்டு மாதம் கழித்து விஷாலும்,அனன்யாவும் திட்டமிட்டபடி ஹனிமூன் கிளம்பினார்கள். இந்த முறை மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு போவதாக முடிவெடுத்தார்கள். கொடைக்கானல் ,ஏற்காடு போன்ற இடங்களுக்கு போனார்கள்.அனன்யாவுக்கு கொடைக்கானல் ஏரியில் போட்டிங் ரொம்ப பிடித்திருந்தது. இரவுகள் பனியில் நனைந்தன.

போலீசார் விஷால் ஆக்சிடென்ட் செய்ததும், ரேவந்த் ஆக்சிடென்ட் செய்ததும் ஒரே ஆள்தான் என கண்டுபிடித்தனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்தியவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர் .விஷாலுக்கு ஃபோன் செய்து சில விவரங்களை கேட்டனர்.விஷாலும் அனன்யாவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்கள் . பழமுதிர்சோலை சென்று முருகனை தரிசனம் செய்தார்கள் . நாயக்கர் மஹால் தூண்களின் அழகை ரசித்தார்கள். அனன்யா உனக்கு இந்த ட்ரிப் பிடிச்சிருக்கா? ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள். அனன்யா அடுத்த முறை சுபாவையும், தீபாவையும் அழைத்து வரவேண்டும் என்று சொன்னான் விஷால். ஏற்காடு பூங்காக்கள் சிறப்பாக இருந்தது.விஷால் அவளுடனான ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்தான்.இன்னும் ராமேஸ்வரம் ,தனுஷ்கோடி போன்ற இடங்களையும் பார்க்க வேண்டுமென்று சொன்னாள். ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற இடங்களையும் பார்த்தார்கள்.புகைப்படங்கள் எடுத்து கொண்டார்கள்.

அனன்யா இப்போது முற்றிலும் புதியவளாக தோன்றினாள் . வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்தது. மியூசிக் கிளாஸ். டான்ஸ் கிளாஸ் மூலமாக பெரிய வருமானம் இல்லாவிட்டாலும் அவர்கள் அந்த கலையை நேசித்தார்கள். தீபா இப்போது பெங்களூர் நன்கு அறிந்தவள் ஆகிவிட்டாள். ஹனிமூன் ட்ரிப் போட்டோக்களை தீபாவும் , சுபாவும் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். அனன்யாவும், விஷாலும் டூட்டிக்கு கிளம்பினர். என்ன அதுக்குள்ள வேலைக்கு போறீங்க ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாமே என சொன்னாள் சுபா. ஏற்கனவே நிறைய நாள் லீவு போட்டுட்டேன் என்றான் விஷால். அனன்யாதான் இப்போது காரை ஓட்டுகிறாள் . இவன் டூ வீலர் வைத்திருந்தான்.விபத்து நடந்ததில் இருந்து இவனை கார் ஓட்ட விடவில்லை அனன்யா.

போலீசார் ரேவந்த் மொபைலின் காண்டாக்ட்களை ஆராய்ச்சி செய்தனர். பெரிதாக எதுவும் சிக்கவில்லை. விஷால் கேசிலும் , ரேவந்த் கேசிலும் உள்ள ஒரே ஒற்றுமை அந்த டிரைவர் மட்டுமே சிசிடிவி உதவியுடன் அவனுடைய போட்டோவை அடையாளம் கண்டார்கள். விஷாலும் அவன்தான் என உறுதி படுத்தி இருந்தான். அனன்யாவுக்கு குழந்தைகள் என்றாள் கொள்ளை ஆசை . விஷால் நமக்கு எப்போ என்றாள். இப்போ இருக்குற சூழ்நிலையில் வேண்டாம் அனன்யா தீபா இன்னும் வெயிட் பண்ணிட்டு இருக்கா என்றான். அதுவும் சரிதான் என்றாள். தீபாவை கல்யாணம் பண்ணிக்கொள்வதில் ஒரு சிக்கலும் இல்லையென்றாலும் அவள் இன்னமும் சின்ன பெண்ணாகத்தான் இருக்கிறாள் என்று நினைத்தான். தீபாவிடமே பேசினான். எனக்கு புரியுது விஷால் . நாம பொறுமையாவே கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள். நான்கு பேரும் அங்கு கிருஷ்ணர் டெம்பிள் சென்று வந்தனர். வரும்போது தீபாதான் கார் ஒட்டி வந்தாள். அவளுடைய வேகம் அவனை வியக்க வைத்தது. தீபா எதுக்கு இவ்வளவு வேகம் என்றான். எனக்கு இப்படி ஓட்டத்தான் பிடிக்கிறது என்றாள்.

பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றி வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. அனன்யா, சுபா இருவருமே அவனுடைய சூழ்நிலைக்கேற்ப நடந்து கொண்டனர். அடுத்த வருஷ பொங்கலை ஊரில் விஷால் வீட்டில் கொண்டாடுவது என முடிவெடுத்தனர். அதை விஷால் அப்பா அம்மாவிடம் தெரிவித்தனர். அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பொங்கல் விழாவை அனன்யா,சுபாவுடன் கொண்டாடிய காலங்கள் நினைவுக்கு வந்தன. சுபாவுக்கும், அனன்யாவுக்கும் , தீபாவுக்கும் புது உடைகள் எடுக்க வேண்டும் என நினைத்தான். பொங்கல் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்தான் விஷால்.இன்னும் இரண்டு வாரங்களே இருந்தது . நியூ இயர் party எப்பவும் போல சிறப்பாக நடந்தது.தீபா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஃபோன் வந்ததும் கிளம்பி விட்டாள். நான் வருகிறேன் என்று விஷால் சொன்ன போது அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை விஷால் நான் பார்த்துகொள்கிறேன் . பொங்கலுக்கு நீ வரப்போ வந்து பார்த்தா போதும் என்றாள். போயிட்டு எனக்கு ஃபோன் பண்ணு என்றான் விஷால். விஷால் தீபாவின் அம்மாவை நினைத்து கவலை அடைந்தான்.

தீபா அம்மா இப்போ எப்படி இருக்காங்க இப்போ பரவாயில்லை என்றாள்.பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு போனார்கள் விஷால், சுபா , அனன்யா மூவரும். விஷால் வீட்டிலேயே தங்கினார்கள்.அது சிறிய வீடாக இருந்த போதும் சுபாவும், அனன்யாவும் அவனுடனான நெருக்கத்தை அதிகபடுத்த அந்த வீடே சரியானது என்று சொன்னார்கள். தீபா வீட்டுக்கு போய் அவள் அம்மாவை பார்த்தான். அவள் கவலையில் இளைத்திருந்தாள். நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க தீபாவை நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றான். தீபா அவள் அம்மா அருகிலேயே இருக்க வேண்டி இருந்ததால் அனன்யாவையும் சுபாவையும் அழைத்து கொண்டு பொங்கல் ஷாப்பிங் போயிருந்தான். அவர்கள் இப்போது பல மடங்கு பொறுப்புள்ள பெண்ணாக மாறிவிட்டிருந்தனர் . பொருட்களை பேரம் பேசி வாங்கினர். விஷால் என்ன அப்படி பார்க்குற என்றார்கள். ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்த அதே பெண்களா என பார்த்தேன் என்றான்.


வீட்டில் கோலம் போட்டு பொங்கல் பானைக்கு குங்குமம் , மஞ்சள் வைத்து அலங்கரித்தார்கள். பொங்கல் பொங்கியதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தீபா எல்லா நிகழ்வுகளையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தாள். விஷாலின் அப்பாவும், அம்மாவும் இந்த பொங்கல் மறக்க முடியாத பொங்கல் என்றனர்.
அனன்யாவும், சுபாவும் பட்டு சேலையில் இருந்தனர். தீபாவுக்கு சேலையில் அவ்வளவு விருப்பமில்லை அவளுக்கு ஜீன்ஸ் தான் பிடிக்கும். அனன்யா வேளாங்கண்ணி போகலாம் என்றாள் .தீபாவுக்கு வேளாங்கண்ணி பீச் என்றால் ரொம்ப பிடிக்கும். சர்ச்சில் வழிபாடு செய்தார்கள். அனன்யாவும் ,தீபாவும் கடலில் விளையாடி கொண்டிருந்தார்கள். சுபாவும் , இவனும் கை கோர்த்து கொண்டு பீச் மணலில் அமர்ந்திருந்தார்கள். நீயும் வா விஷால் என்றாள் அனன்யா.விஷாலும் விளையாடினான். சுபா மனம் முழுக்க குழந்தை பற்றிய சிந்தனையாய் இருந்தது. விஷால் நமக்கு குழந்தைகள் இருந்தாள் எவ்வளவு அழகாயிருக்கும் என்றாள். எனக்கு மட்டும் ஆசையில்லையா அடுத்த வருடம் நிச்சயம் நாம குழந்தைகளோட இதே பீச் வருவோம் என்றான்.
சுபா நிச்சயமா ? என்றாள் நிச்சயம் என்னை நம்பு என்றான்.

அனன்யா வீட்டுக்கு போனார்கள். அனன்யா வீட்டில் முதன் முதலில் படிக்க போன நினைவுகள் வந்தது விஷாலுக்கு. அனன்யாவும், சுபாவும் ஏதோ சமைத்து கொண்டிருந்தார்கள். என்னால்தான் உனக்கு கஷ்டம் என்றாள் தீபா .அவளை அணைத்துகொண்டான்.அப்படியெல்லாம் எதுவுமில்லை தீபா .அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டான். எப்போதுமே நீ ஏன் கடல் தேவதை தான் என்றான். அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். விஷால் எப்பவுமே இதே போல இருப்பியா என்றாள். என்ன தீபா நான் ஏதாவது தப்பா நடந்துகிட்டேனா
இல்லை விஷால் என்னவோ தோனிச்சு . அவளை மடியில் படுக்க வைத்துக்கொண்டான். அனன்யா சாப்பாடு ரெடி என்றாள். விஷாலுக்கு ஃபோன் வந்தது.