அனன்யாவின் பிரசவ தேதி நெருங்கி கொண்டிருந்தது.விஷால் சற்று பதட்டத்துடனே இருந்தான். தீபா அம்மா அவனுக்கு தைரியம் சொன்னாள் . அனன்யா எனக்கும் பையனுக்கும் ஒண்ணும் ஆகாது விஷால் என்று சொன்னாள். சுபா குழந்தையை எப்போது பார்ப்போம் என ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள். டாக்டர் தேதி சொல்லி விட்டார். எல்லாவித மருத்துவமனை எமர்ஜென்ஸி நம்பர்களையும் செக் செய்து பார்த்து கொண்டான். விஷாலுடைய அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள்.சரியான நேரத்தில் அனன்யாவை ஹாஸ்பிடலில் சேர்த்தான். சுபாவும் விஷால் அம்மாவும் விஷாலுக்கு தைரியம் சொன்னார்கள். அனன்யாவுக்கு நார்மல் டெலிவெரி ஆனது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஷால் சந்தோஷத்தின் உச்சிக்கே போனான். தீபாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லி அனுப்பினான். குழந்தையுடன் வந்து பார்ப்பதாகவும் சொல்லி இருந்தான். அனன்யா இவனை பார்த்ததும் என்ன விஷால் பயந்து விட்டாயா என்றாள்.நம்ம குழந்தையை பாரு உன்னை மாதிரியே அழுகிறான் என்றாள். அவளை கண்ணீருடன் அணைத்து கொண்டான். அனன்யா நெற்றியில் முத்தமிட்டான்.அனன்யாவை இரண்டு நாட்களில் கழித்து ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அனன்யாவை பூ போல பார்த்துகொண்டான் விஷால். எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தான் . சுபா அவனை கட்டிகொண்டு வாழ்த்துக்கள் சொன்னாள். ஊரில் இருந்து சுபா அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள். அவர்கள் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். விஷால் நிம்மதி பெருமூச்சு விட்டான். குழந்தை அழுவதும் , சிரிப்பதும்
பேசுபொருள் ஆனது அந்த வீட்டில் . அனன்யா நன்கு ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர் சொல்லியிருந்தார். அவளுடைய அருகாமையும் தாலாட்டும் குழந்தைக்கு புதியதோர் உலகத்தை காட்டியது.குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்ய தொடங்கினான் விஷால். தீபா எப்படி இருக்கிறாளோ என்ற கவலையும் அவனுக்கு இருந்தது. இன்னும் அவள் சிறையை விட்டு வெளியே வர ஆறு மாதங்கள் இருந்தன. அனன்யா விஷாலை கூப்பிட்டு தீபாவை எப்போது போய் பார்க்கலாம் என கேட்டுக்கொண்டிருந்தாள். இன்னும் குறைந்தது 3 மாதங்கள் ஆன பிறகே குழந்தையுடன் டிராவல் செய்ய வேண்டும் என சொல்லிவிட்டான் விஷால்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு முன் தீபாவை போய் பார்ப்போம் என சுபாவிடம் சொல்லி இருந்தான். நானும் வருகிறேன் என சுபா சொன்னாள். அவளையும் அழைத்து கொண்டு போனான். தீபா ரொம்ப சந்தோஷம் விஷால் எனக்குத்தான் குழந்தை முகத்தை உடனே பார்க்க முடியல என்றாள். அதெல்லாம் இன்னும் 6 மாசம் அப்புறம் நீ எங்களுடனே தான் இருப்பாய் என்றான் விஷால். குழந்தைக்கு என்ன பெயர் யோசித்து வைத்திருக்கிறாய் தீபா என்றான் விஷால்.சாட்விக் என்று சொன்னாள்.விஷாலும், சுபாவும் மகிழ்ந்து போனார்கள். சுபாவிடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தாள் தீபா.அவளிடம் விடை பெற்று பெங்களூர் திரும்பினான். குழந்தைக்கு பொம்மைகள், உடைகள் போன்றவற்றை வாங்கியிருந்தான். எனக்கு ஒண்ணும் இல்லையா என்றாள் அனன்யா எப்போதும் போல அவளுக்கென இசை சம்பந்தமான புத்தகங்களும், ரோஸ் பூவும் வாங்கி வந்திருந்தான். அனன்யா அவனை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.
சாட்விக் பெயரை கேட்டதும் அனன்யாவும், குழந்தையும் மகிழ்ந்தனர். தீபாவின் நினைவாக இந்த பெயரைத்தான் வைக்க வேண்டும் என அனன்யாவிடம் சொன்னான் விஷால். நிச்சயமா விஷால் எனக்கு இந்த பேர் ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள். பெயர் சூட்டும் விழாவிற்கு நண்பர்கள் , உறவினர்கள் எல்லோரையும் அழைத்திருந்தான் விஷால். உணவு பரிமாறுதல் முதற்கொண்டு அவனே செய்தான். மூன்று முறை குழந்தையின் காதில் சாட்விக் என்ற சொல்லப்பட்டது. அனன்யா அவனை அருகில் அழைத்து என்னை மறந்து விடாதே என்றாள் சிரிப்புடன். சாட்விக் செய்யும் குறும்புகளை ரசித்தார்கள். சாட்விக் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான்.
அனன்யா பேர் சூட்டும் விழாவில் எடுக்கபட்ட போட்டோக்களை பார்த்துகொண்டிருந்தாள். தீபாவை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றாள் அனன்யா.
சுபா அப்பா அம்மா ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். விஷால் அப்பாவும் கிளம்பிவிட்டார். விஷால் அம்மா அவன் கூடவே இருந்து குழந்தையை பார்த்து கொண்டாள். தீபா அம்மாவும் ஒத்தாசையாய் இருந்தாள். அவனுடையது இப்போது பெரிய குடும்பம் ஆகிவிட்டது. விஷால் என்ன அனன்யா ? ம்ம் சாட்விக் என்னை விட சுபாவிடம் தான் அதிகம் ஒட்டி கொள்கிறான் என்றாள் சிரிப்புடன். சுபா குழந்தை மேல் கொள்ளை அன்பு வைத்திருக்கிறாள் என்றான். இப்போது குழந்தை பிறந்து சரியாக இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது . விஷால் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான்.குழந்தை இவன் வருவதை போவதை ஆர்வத்துடன் கவனித்து வந்தது. சாட்விக் என்று கூப்பிட்டவுடன் புன்னகை செய்தது. அனன்யாவுடன் செக் அப் போய் வந்தான். டாக்டர் அவளுடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.மூன்று மாதங்களுக்கு பிறகு குழந்தையை அழைத்து கொண்டு குல தெய்வம் கோவிலுக்கு போனார்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
விஷால் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் தீபாவை போய் பார்த்தான் . இன்னும் 3 மாதம் தான் இருந்தது தீபா சிறையில் இருந்து வெளியே வர. தீபா குழந்தையை வாங்கி கொஞ்சினாள் . தீபா அம்மா பாரு.. தீபா அம்மா பாரு என்று அனன்யா சொன்னாள். அனன்யாவும் தீபாவும் ஏதோ பேசிகொண்டிருந்தனர்.அவள் வெளியே வந்ததும் முழு நேரமும் சாட்விக் உடன் இருக்க போவதாக சொன்னாள். சாமி பிரசாதத்தை அனன்யா தீபாவிற்கு வைத்து விட்டாள். தீபா அனன்யாவை உடனே வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னாள். சரி தீபா. தீபா குழந்தையையே ஏக்கத்துடன் பார்த்தாள். பிரியா விடை பெற்று கிளம்பினான் விஷால். அனன்யா முகத்தில் இப்போது ஒரு அமைதி இருந்தது. என்னாச்சு சுபா எதுவும் பேசாம வரே என்றாள். தீபா வெளியே வந்ததும் நம்ம ஊருக்கு போகணும்னு சொன்னா .. கண்டிப்பாக போவோம் சுபா . தீபா அம்மாவுக்கு சற்று உடல் நிலை சரியில்லை டாக்டரிடம் அழைத்து போய் வந்தார்கள்.
அனன்யா வேலைக்கு போக நாள் பார்த்து கொண்டிருந்தாள். விஷால் தீபா வந்த பிறகு போனால் போதும் என்று சொல்லிவிட்டான். ரொம்ப போரடிக்குது விஷால். பையனோட விளையாடு அவன்தான் சுபாவ விட்டு வர மாட்டேன் என்கிறானே, அப்ப என் கூட விளையாடு என்றான். ம்ம் அடுத்த பேபி நிச்சயம் பொண்ணுதான் என்றான் அவளை அணைத்துக்கொண்டே . தீபா விடுதலை ஆவதில் எந்த சிக்கலும் இருக்க கூடாதென வக்கீல் சாரிடம் கேட்டுகொண்டான். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று சொன்னார். விஷால் தீபாவுடைய விடுதலை நாளுக்காக காத்திருந்தான்.சுபா சாட்விக் உலகத்தில் முழுமையாக தன்னை கொடுத்திருந்தாள். குழந்தையை அவளுடையதாக்கி கொண்டாள். என்ன சுபா என்னை கண்டுக்கவே மாட்டேங்குற என்றான் விஷால். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
தீபா ரிலீஸ் ஆகும் தேதியில் காலையிலியே கோவிலுக்கு போய் அவள் பெயருக்கு அர்ச்சனை செய்தான். விஷால், அனன்யா, சுபா, சுபா அம்மா, விஷால் அம்மா,தீபா அம்மா ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்றனர். தீபா விடுதலை ஆவதில் ஒரு பிரச்சனையும் இல்லை என சொன்னார்கள். தீபா வெளியே வந்ததும் விஷாலை கட்டிகொண்டு அழுதாள். குழந்தையை அள்ளி எடுத்து முத்தம் கொஞ்சினாள்.அனன்யாவும் சுபாவும் அமைதியாய் இருந்தனர். இரண்டு வருட சிறை தண்டனை முடிந்து விட்டது. விஷாலும் குடும்பத்தாரும் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் போய் சாப்பிட்டனர். தீபா காரில் போய் புதிய உடை மாற்றிகொண்டு வந்தாள். அவள் தன் குடும்பத்தாருடன் நீண்ட பிரிவுக்கு பிறகு இணைந்ததை கொண்டாட முடிவு செய்தான் விஷால்.அவளை அழைத்து போய் கேக் ஒன்றை ஆர்டர் செய்தான். விஷால் வக்கீலுக்கும் நன்றி சொன்னான்.
தீபா கேக் வெட்டி விஷாலுக்கு ஊட்டினாள். விஷால் அவளை அணைத்து கொண்டு இனிமேல் உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டோம் என்றான்.அனன்யாவும் ,சுபாவும் அவளுக்கு கேக் ஊட்டினார்கள். விஷால் உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தான். தீபா ஊருக்கு போய் வர வேண்டும் என்று சொல்லி இருந்ததை நினைவு படுத்தினாள். ஒரு வாரம் கழித்து போவோம் என்றான். நீ முதலில் ரெஸ்ட் எடு தீபா . உனக்கு பிடித்ததை செய் என்று சொன்னான். எனக்கு சாட்விக் கூட பேசணும் , விளையாடனும் அவ்வளவுதான் வேற ஒண்ணும் இல்லை என்றாள். விஷால் புன்னகைத்தான்.தீபா வந்துவிட்டதால் இனி கவலை இல்லை. அனன்யா வேலைக்கு போக தொடங்கிவிட்டாள் . நீண்ட நாட்கள் கழித்து போனதால் வேலை சுமை இருந்தது. இவனே போய் அழைத்து வந்தான். என்னாச்சு அனன்யா வேலை கஷ்டமா இருக்குதா என்றான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எப்பவும் போல வேலைதான். டீ போட்டு கொடு விஷால் என்றாள். போட்டு குடுத்தான். தாங்க்ஸ் லவ் யு விஷால் என்றாள்.
சாட்விக் கூடவே நிழல் மாதிரி இருந்தாள் தீபா. அவளுடைய தனிமை இப்போது முற்றிலும் ஒழிந்து விட்டது. சுதந்திரமான கொண்டாட்ட மன நிலையில் குழந்தை போல இருந்தாள் தீபா. சாட்விக் தீபா, சுபா ஆகியோரின் அளவற்ற அன்பில் திளைத்திருந்தான் . விஷாலுக்கு இதை பார்க்க ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. தீபா ஆசைப்படி சொந்த ஊருக்கு எல்லோரும் கிளம்பினார்கள். தீபா நானே வண்டி ஓட்டுவேன் என சொன்னாள். விஷால் மறுப்பு சொல்லவில்லை. ரெண்டு வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருகிறாள் தீபா. அவள் பார்வை இப்போது விரிவடைந்திருந்தது. சிறு பெண்ணாக இருந்தவள் இப்போது விஷாலின் மனைவியாக முதல் முறை சொந்த வீட்டுக்கு, சொந்த ஊருக்கு வருகிறாள். அவள் விஷாலின் கையை பிடித்து கொண்டாள். உனக்கு நினைவு வருகிறதா விஷால் மொட்டை மாடியில் நைட் ஸ்டடி பண்ண வருவாயே என்றாள்.ம்ம் அது ஒரு கனாக்காலம் என்றான் விஷால். அனன்யா வீட்டுக்கும். சுபா வீட்டுக்கும் போனார்கள். அனன்யா விஷால் செய்த குறும்புகளை சுபாவுடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள்.
தீபா வீட்டு மாடியில் படுத்திருந்தான் ஒரு புறம் சுபாவும், மறுபுறம் தீபாவும் படுத்திருந்தனர். அவர்கள் தோள் மீது கை போட்டிருந்தான். என்னென்னவோ நடந்து போச்சு என்றான். நீ எங்க கூட இருக்கே இல்ல விஷால் அது போதும் என்றாள் தீபா. அவள் கன்னத்திலும் , சுபா கன்னத்திலும் முத்தமிட்டான். எப்பவும் நாம சேர்ந்து இருக்கணும் என்றான். தீபா நான் கொஞ்சம் தூங்குகிறேன் என்றாள். சரி தீபா. அவனை அணைத்துகொண்டே தூங்கி போனாள். சுபா எழுந்து போய் அனன்யாவுக்கு துணையாக சமையல் வேலைகளை பார்க்க தொடங்கினாள்.விஷால் மூன்று பெண்களையும் சந்தித்த காலங்களை நினைத்து பார்த்தான். அதை என்றுமே அவனால் மறக்க முடியாது. தீபா அம்மா சிறப்பாக சமைத்திருந்தாள்.எல்லோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.விஷால் மனதில் இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என கடவுளை வேண்டி கொண்டான். வேளாங்கண்ணி போகலாம் என முடிவெடுத்தனர். தீபா முன் போல அலையில் ஆட வில்லை. இவனுடன் கை கோர்த்து கரையில் உட்காரந்திருந்தாள். சுபாவும், அனன்யாவும் அலையில் போய் நின்றனர் . காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை வியப்போடு சிந்தித்து கொண்டிருந்தான் விஷால். என்ன யோசனை விஷால் என்றாள் தீபா. நம்முடைய காதல் எவ்வளவு தூரம் நம்மை கொண்டு வந்து விட்டு இருக்கிறது என்றான். ம்ம் ஆமாம் விஷால் என்றவாறு விஷாலை அணைத்தாள்.