இன்னும் ஒரு வாரத்தில் அனன்யா வரபோகிறாள் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் விஷால். சுபாவும், தீபாவும் உற்சாகமடைந்தார்கள். அனன்யா படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு ஊர் திரும்புகிறாள். அனன்யா வந்தவுடன் எங்காவது ட்ரிப் போக வேண்டும் என்று சொன்னாள் தீபா. அனன்யா விஷாலுக்கு ஃபோன் செய்தாள் இனி ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிந்திருக்க முடியாது விஷால். சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய் என்று சொன்னாள்.நிச்சயம் செய்கிறேன் என்றான்.மூவரும் ஏர்போர்ட் சென்றிருந்தார்கள். அனன்யா இவனை கட்டிக்கொண்டாள். எப்படி இருக்கே சுபா ? எப்படி இருக்கே தீபா என்று இருவரையும் விசாரித்தாள். உன்னை எப்படா பார்ப்போம்னு இருந்துச்சு என்றார்கள் இருவரும். விஷாலின் கையை கோர்த்துக்கொண்டாள் அனன்யா.
வீட்டுக்கு வந்தவுடன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு அனன்யா நான் ஆபீஸ் வரை போய்விட்டு வருகிறேன் என்றான். ம்ம் சீக்கிரம் வந்துவீடு என்றாள் . அனன்யா இந்த வீடு நன்றாக இருக்கிறது . ரோஸ் பூக்களை ஆர்வமாக பார்த்தாள். சுபா வீட்டை சுற்றி காண்பித்தாள். ஏதாவது சாப்பிட்டுவிட்டு தூங்கு என்றாள் சுபா. தீபா அனன்யாவின் அறையை தயார் செய்தாள். இனிமேல் எல்லாம் நானும் கவனித்துகொள்கிறேன் தாங்க்ஸ் தீபா என்றாள். விஷால் சுபா கல்யாண புகைப்படம் ஒன்று அவளது அறையில் மாட்டியிருந்தது . அதை கையில் எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். அதை நெஞ்சோடு அணைத்தவாறே தூங்கி போனாள்.அனன்யாவுக்கு ஆஸ்ட்ரேலியா இந்தியா கால நேரம் அட்ஜஸ்ட் செய்வதில் சில தினங்கள் பிடித்தது. கொஞ்ச நாட்களில் இந்தியா நேரத்துக்கு பழகி விட்டாள்.
விஷால் அவளை எங்கும் போக விடவில்லை. போதும் அனன்யா நீ சுற்றியது என்றான். அப்படியும் சில இடங்களுக்கு அவனை அழைத்து கொண்டு போனாள். ரேவந்த் எப்படி இருக்கிறான் அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டான் விஷால். அவன் சென்னையில் இருக்கிறான் என்று சொன்னாள். சீக்கிரம் ஒரு வேலைக்கு போக வேண்டும் என அனன்யா சொன்னாள். இப்போதானே வந்தே என்ன அவசரம் என்றான் விஷால். எல்லா சுமையையும் நீயே சுமக்கணுமா விஷால் ?என்றாள்.அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. மாடியில் அனன்யா ரூம் இருந்தது . கீழே சுபாவுக்கும் விஷாலுக்கும் ஒரு ரூம் ,தீபாவுக்கு ஒரு ரூம் இருந்தது. அனன்யா உன்னுடைய ஆஸ்ட்ரேலியா ட்ரிப் பற்றி ஒரு புத்தகம் எழுதேன் எல்லோருக்கும் பயன்படும் என்றான் . நிச்சயமா நான் சில நோட்ஸ் எடுத்து வைத்து இருக்கிறேன் . நாம கண்டிப்பா புக் ரிலீஸ் பண்ணுவோம் என்றாள்.
அப்பா இறந்து ஒரு வருடமாகிறது அவருக்கு சில பூஜை காரியங்கள் செய்ய வேண்டும் என்றாள் அனன்யா. ரெண்டு நாள் பயணமாக சொந்த ஊர் போக வேண்டும் என்றாள்.அனன்யாவும், விஷாலும் சொந்த ஊருக்கு பயணித்து அனன்யா அப்பாவுக்கு ஈம சடங்குகள் செய்தனர். அனன்யா வீட்டுக்கும் சென்றனர். என்னென்னவோ நினைவுகள் வருது விஷால் . அவர்கள் சொத்தில் அந்த வீடும் இருந்தது. அப்பா இருந்திருந்தா நம்ம கல்யாணம் எப்பவோ நடந்திருக்கும் என்றாள். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் . எல்லாம் நல்லபடியா முடிஞ்சது நாளைக்கு ஈவினிங் வந்துவிடுவோம் என்று சொன்னாள். தீபா வீட்டுக்கும், சுபா வீட்டுக்கும் போய் வந்தனர்.விஷால் சென்னை ஆபீஸ்லேயிருந்து கால் பண்ணினாங்க அவசரமா வர சொல்லுறாங்க என்றான். நீ கார் எடுத்துட்டு போ விஷால் நான் டிரைன்ல பெங்களூர் போறேன் என்றாள். அவளை ஸ்டேஷன் சென்று வழி அனுப்பி வைத்தான்.
மணி இரவு 11 30 இருக்கும் சுபாவுக்கு ஃபோன் வந்தது நீங்க விஷால் வொய்ஃப்பா ஆமா சார் சொல்லுங்க சென்னை மலர் ஹாஸ்பிடல் கொஞ்சம் வர முடியுமா என்னாச்சு சார் விஷாலுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்.. ஆக்சிடென்ட்டா என பதறினாள் சுபா. அவர் உயிருக்கு ஆபத்தில்லை ஐசியு ல இருக்கார். நான் உடனே வரேன் என்றாள். அனன்யாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள். தீபாவை கூட்டிக்கொண்டு சென்னை விரைந்தாள் சுபா. அனன்யாவும் ஹாஸ்பிடல் வந்துவிட்டாள். சுபா அப்பாவுக்கு தகவல் சொல்லியிருந்தாள். அவர் மறுநாள் காலையில் வந்துவிட்டார். சுபா கண்ணீரை அடக்கி கொள்ள ரொம்பவே சிரம பட்டாள் . அனன்யா இன்ஸ்பெக்டருடன் பேசிக்கொண்டிருந்தாள். யாரோ லாரி டிரைவர்தான் குடித்து விட்டு வண்டி ஓட்டி இருக்கிறான். அவன் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி விட்டான் என்றார். சென்னை அலுவலக நண்பர்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு போயினர்.விஷாலுடைய அப்பா அம்மாவும் வந்திருந்தார்கள். தீபா அம்மாவும் வந்து பார்த்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து விஷால் கண்விழித்து பார்த்தான். சுபாவும், அனன்யாவும் , தீபாவும் அழுது கொண்டிருந்தனர். சுபா அப்பா அவர்களை சமாதானபடுத்தினார். விஷால் இப்போ எப்படி இருக்கு என்றாள் அனன்யா . காலிலே வலி இருக்கு என்றான். அனன்யா பயப்படாதே எனக்கு ஒண்ணும் இல்லை என்றான். சுபா கோவில் பிரசாதத்தை நெற்றியில் பூசி விட்டாள்.சுபா அப்பாவை அருகில் அழைத்து மூவரையும் சாப்பிட செய்யுமாறு கேட்டுகொண்டான். அனன்யா நான் இங்கேயே இருக்கேன் என்றாள். அனன்யா சொன்னா கேக்கணும் என்றான். சரி விஷால். இன்னும் 6 மாதங்கள் ஓய்வு தேவை என்று சொல்லிவிட்டார்கள். நடந்த கார் விபத்தில் பிழைத்ததே அதிசயம் என்றார்கள் .ஒரு வாரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். பெங்களூருக்கு ஆம்புலன்ஸ் மூலமாக விஷாலை அழைத்து சென்றார்கள்.
நான் உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டபடுத்துறேன் சாரி என்றான் விஷால். அதெல்லாம் ஒண்ணும் இல்லை விஷால் என்றாள் தீபா. அனன்யா அதிகம் பேசவில்லை . அவள் மனம் விஷால் பழையபடி குணமாக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. சுபாதான் அவன் கூடவே இருந்தாள். அனன்யா இன்டர்வியூ போனாள். நம்பிக்கையுடன் வேலை கிடைத்து விடும் என்றாள். விஷால் கொஞ்சம் கொஞ்சமாக குணமானாலும் அந்த விபத்தின் அதிர்ச்சி இன்னும் அவனை விட்டு விலகவில்லை. அனன்யா இவனுடைய மருத்துவ செலவுக்காக சொத்தின் ஒரு பகுதியை விற்று இருந்தாள். விஷால் ரொம்ப வருத்தபட்டான். அனன்யாவுக்கு வேலை கிடைத்து விட்டது. ரொம்ப சந்தோஷம் அனன்யா என்றான். நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை விஷால். நாம யார் தடுத்தாலும் முன்னேறிக்கிட்டு தான் இருப்போம் என்றாள்.
டாக்டர் செக் அப் அழைத்து போனார்கள். கால் கட்டை பிரித்து விட்டார்கள். இனி வீட்டிலே physiotherapy செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.அதற்கான ஏற்பாட்டையும் அனன்யா செய்தாள். விஷால் மெதுவாக நடக்க பழகினான். அருகில் இருந்த பீச் சென்றனர். அவர்களிடத்தில் அந்த பழைய கடற்கரை நினைவுகள் இருந்தன. விஷால் எவ்வளவோ முயன்றும் மூவரையும் உற்சாக படுத்த முடியவில்லை.இவன் தடுமாறிய போது தீபாவும், சுபாவும் இவனை தாங்கி பிடித்தனர். அனன்யா கடலில் கால் நனைத்தவாறே அவன் தானாகவே நடக்கட்டும் அதுதான் நல்லது என்றாள். கொஞ்ச நாளைக்கு எந்த வண்டியும் ஓட்ட வேண்டாம் என்றாள் அனன்யா. சுபா அப்பாவும், விஷால் அப்பாவும் அவ்வப்போது ஃபோன் பண்ணி விசாரித்தனர். தீபா அம்மா இவர்களுடனேயே கொஞ்ச நாள் தங்கி விட்டு போனாள்.
சுபா ஏன் டான்ஸ் கிளாஸ் நடக்கலை .. எனக்கு நீதான் முக்கியம் விஷால் என்றாள் சுபா. அவளை வற்புறுத்தி மறுபடி டான்ஸ் கிளாஸ் நடத்த ஏற்பாடு செய்தான். எல்லாம் சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும் என நினைத்தான். அனன்யாவுடனான கல்யாணம் தள்ளி போவதை அவன் விரும்பவில்லை. அனன்யா முதல் சாலரி வாங்கி எல்லோருக்கும் ட்ரீட் வைத்தாள். இவனுக்கு அது புதிய தெம்பை அளித்தது. physiotherapy நல்ல பலனை அளித்தது. டாக்டர் இவனை வேலைக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார். அனன்யா இவனை அலுவலகத்தில் காரில் சென்று இறக்கி விட்டாள் . அனன்யாவை நினைத்து பெருமையாய் இருந்தது.எப்போதும் போல இருக்க முடியாவிட்டாலும் அலுவலக வேலைகள் அத்தனை சுமையாய் இருக்கவில்லை.மாலை திரும்ப அனன்யாவே அழைத்து கொண்டு வந்தாள். ரோஸ் பூ வாங்க வேண்டும் என சொன்னான்.ரோஸ் பூ வாங்கி அவளுக்கு வைத்து விட்டான்.
இப்போது துணையில்லாமல் நடக்க முடிந்தது அவனால். ஆனால் விபத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தியது யார் என்ற கேள்வியை அவன் மனம் கேட்டுக்கொண்டிருந்தது . அனன்யா அவனை குழந்தை போல அரவணைத்து கொண்டாள். ஒரு பாட்டு பாடேன் அனன்யா என்றான். இப்போவா ? ம்ம் எனக்கு அந்த மன நிலையே போய்விட்டது விஷால் என்றாள். எனக்காக முயற்சி செய் என்றான். ஒரு பழைய பாடல் ஒன்றை அழகாக பாடினாள். அவளை நெருங்கி முத்தமிட்டான். தாங்க்ஸ் அனன்யா. சுபா ஜோசியரை பார்த்து அனன்யா , விஷால் கல்யாணம் பற்றி கேட்டாள். அவர் நடந்த சம்பவங்கள் குறித்து ஆச்சர்யபட்டார். இன்னும் 2 மாதத்தில் வைத்து கொள்ளலாம் என்றார். மண்டபம் புக்கிங், கேட்டரிங் ,மியூசிக் எல்லாவற்றையும் சுபா ஏற்பாடு செய்தாள். முன்னதாக அவள் சில தோஷ பரிகாரங்கள் கோவிலுக்கு சென்று செய்து வந்திருந்தாள்.
அனன்யா தீபாவிடம் பேசினாள். தீபா எனக்கு விஷால் உடன் இருப்பதுதான் முக்கியம் என்றாள். அனன்யாவின் கல்யாணம் என்பது அவளுடைய கனவு மட்டுமல்ல விஷாலின் வாழ்க்கை . சுபா கொஞ்சம் ஓய்வெடுத்து கொண்டு இந்த கல்யாண வேலைகளை செய்ய கூடாதா என்றான். இது எனக்கு பிடிச்சிருக்கு என்றாள் சுபா. அன்று இரவு அனன்யாவை அணைத்தபடி படுத்திருந்தான் விஷால். அனன்யா என்ன விஷால் இன்னும் ஒரு வாரத்திலே கல்யாணம் . உன் மனசுல என்ன தோணுது .. உனக்கும் எனக்கும் இடைவெளியே இருக்க போறது இல்ல அப்புறம் குட்டி குட்டி குழந்தைங்க என்னை சுத்தி .. ம்ம் அனன்யா எனக்கேதாவது ஆயிட்டாலும் நீ தைரியமாய் இருக்கணும். ஏன் விஷால் அப்படி சொல்லுறே .. என்னவோ எனக்கு தோணுது. இனிமே அப்படி சொல்லாதே விஷால். நான் இருக்குற வரை அப்படி ஒண்ணு உனக்கு நடக்க விட மாட்டேன். அனன்யா அவனை உதட்டோடு முத்தமிட்டாள்.
சுபா கல்யாணத்தை பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்தாள் . நெருங்கிய நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட்டிருந்தாள்.சுபா அப்பாவும், விஷால் அப்பாவும் முன்னமே வந்திருந்து வேலைகளை செய்தனர்.தீபா அம்மாவும் வந்திருந்தாள்.விஷால் இன்ஸ்பெக்டர் மூலமாக அந்த ஆக்சிடென்ட் செய்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தான். அவரும் நாங்களும் ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கோம் என்றார்.அனன்யா , தீபா, சுபா மூவரும் இப்போது உற்சாகமாய் இருந்தனர். அனன்யா விஷால் கல்யாணம் என்பது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த படி. ரேவந்த் கல்யாணத்துக்கு முதல் நாள் ரிசப்ஷன் வந்து விட்டு போய்விட்டான். வாழ்த்துக்கள் விஷால் என்னால அனன்யா மனச மாத்த முடியல என்றான். மேளங்கள் முழங்க விஷால் அனன்யா கழுத்தில் தாலி கட்டினான் .விஷால் மனம் காதலால் நிரம்பி வழிந்தது. எவ்வளவோ காத்திருப்புகளுக்கு பிறகு அனன்யா அவனுக்கு சொந்தமாகிவிட்டாள் என்றென்றும். அனன்யா அவன் கையை பிடித்து கொண்டு ஹோமத்தை சுற்றி வந்தாள் . அவள் இப்போது வெட்க சிவப்பில் இருந்தாள்.
தீபாவும்,சுபாவும் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடுகளை செய்தனர். அனன்யா மனதில் விஷாலிடத்தில் உறுதியான அன்பும், நம்பிக்கையும் இருந்தது. வா அனன்யா என்றான். அவளை அணைத்து கொண்டான். நிஜமான தேவதைகள் கூட உன் அழகுக்கு முன்னாடி நிற்க முடியாது என்றான் .போதும் விஷால் கிண்டல் பண்ணாதே என்றாள். விளக்கை அணைக்கட்டுமா என்றான். கொஞ்ச நேரம் விளக்கு எரியட்டுமே.. எனக்கு உன் முகத்தை எப்போதுமே பார்க்கவேண்டும் என்றாள்.அனன்யா புது உலகத்தில் பயணிக்க தயாரானாள் விஷாலுடன்.