ஒரு நாளும் உனை மறவேன்

(0)
  • 2.2k
  • 0
  • 825

அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். கொஞ்ச நேரம் எழுதலாம் என முடிவெடுத்தான்.

1

ஒரு நாளும் உனை மறவேன் - Part 1

அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். ...மேலும் வாசிக்க

2

ஒரு நாளும் உனை மறவேன் - Part 2

ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி இனிமேலாவது என் மனைவியை விட்டுவிடுவாய் என நம்புகிறேன் . ஆனந்த் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க . எல்லாம் எனக்கு தெரியும் உன்னைபற்றி என்றவாறு போனை வைத்தான் ஆனந்த். இரண்டு நாட்கள் கழித்து சேகருக்கு ஃபோன் செய்து விசாரித்தான். என்னாச்சு சேகர் அரவிந்த் ஊரில் இருந்து வந்துவிட்டாரா? ம் வந்துட்டாரு நானே உனக்கு ஃபோன் பண்ணணும்னு நெனைச்சேன் . நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு அவரு ஆபீஸ் ல வந்து பார்க்க சொல்லி இருக்காரு நீயும் வரியா என்றான். சரி வரேன். ஒருவேளை ஆனந்தும் வந்து பிரச்சனை ஆயிடுமோ அப்படின்னு யோசிக்கிறேன். அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதப்பா நீ சும்மா வா . சேகரும், சிவாவும் அரவிந்தின் ஆபீஸ் வந்திருந்தார்கள். எதிர்பார்த்த மாதிரி ...மேலும் வாசிக்க

3

ஒரு நாளும் உனை மறவேன் - Part 3

மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் என்ன நடந்தாலும் நீ என்னை கை விட மாட்டேல சிவா . நிச்சயமா இல்லை என்றான்நான் வேணா ஃபோன் பண்ணி பாக்கட்டுமா சேகருக்கு ஃபோன் செய்தான். நானே உன்னை கூப்பிடுறேன் இப்போதான் பாட்டில் ஓபன் பண்ணியிருக்கான் ஆனந்த். ஆனந்த் நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன் ஸ்வேதா கர்ப்பமாயிருக்கா நான் அப்பாவாகிட்டேன் என்றான் சேகரிடம். சாரி சேகர் உங்க கிட்ட எல்லாம் நான் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன் . அதெல்லாம் பரவாயில்லப்பா .. சரி வா குடிச்சது போதும் இங்கே பக்கத்துல ஒரு ஹில் டாப் இருக்கு அங்கே போவோம். ரம்யா வரல? அவளுக்கு லேசா தலைவலி அதான் வரல என்றான். சரி அவளை ஒருதடவை பார்த்திட்டு போயிடலாம் என்றான் ஆனந்த். ரம்யா ரூமுக்கு போய் ...மேலும் வாசிக்க