Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 3

மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் ஸ்வேதா. என்ன நடந்தாலும் நீ என்னை கை விட மாட்டேல சிவா . நிச்சயமா இல்லை என்றான்நான் வேணா ஃபோன் பண்ணி பாக்கட்டுமா சேகருக்கு ஃபோன் செய்தான். நானே உன்னை கூப்பிடுறேன் இப்போதான் பாட்டில் ஓபன் பண்ணியிருக்கான் ஆனந்த். ஆனந்த் நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன் ஸ்வேதா கர்ப்பமாயிருக்கா நான் அப்பாவாகிட்டேன் என்றான் சேகரிடம். சாரி சேகர் உங்க கிட்ட எல்லாம் நான் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன் . அதெல்லாம் பரவாயில்லப்பா .. சரி வா குடிச்சது போதும் இங்கே பக்கத்துல ஒரு ஹில் டாப் இருக்கு அங்கே போவோம். ரம்யா வரல? அவளுக்கு லேசா தலைவலி அதான் வரல என்றான். சரி அவளை ஒருதடவை பார்த்திட்டு போயிடலாம் என்றான் ஆனந்த். ரம்யா ரூமுக்கு போய் பெல் அழுத்தினான். அவள் வெளியே வந்தாள். ஹில் டாப்க்கு போறோம். போயிட்டு வந்து விடுகிறோம் . ஸ்வேதாவ ஃபோன் பண்ண சொல்லுங்க சிஸ்டர் . சரி நான் சொல்லுறேன் நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க.

மணி 10 ஆனது என்னாச்சுன்னு தெரியலையே ? இப்போ ஃபோன் பண்ண வேண்டாம் அது நாளைக்கு என்குயரி அப்படின்னு வந்தா பிரச்சனை ஆகும். சரி ஸ்வேதா அதுக்காக ஏன் அப்படியே ஃப்ரீஸ் ஆயிட்டே நீ ஏதாவது சாப்பிடு என்றான். வேண்டாம் சிவா இப்போ ஒண்ணும் வேண்டாம் டீ போட்டு தரவா என்றான் சிவா. சரி போடு . சிவா கிச்சன் உள்ளே சென்று டீ போட்டு எடுத்து கொண்டு வந்தான். என்னாச்சு இந்த ரம்யாவுக்கு இவ்ளோ நேரம் ஆகியும் ஃபோன் பண்ணல ஒரு மெசேஜ் கூட பண்ணல. சிவா எனக்கென்னவோ ஏதோ குழப்பம் நடந்திருக்கும்னு தோணுது . நான் சேகருக்கு ஃபோன் பண்ணுறேன் . சேகர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது .
சேகர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்றதும் பதட்டமானான் சிவா. ரம்யாவுக்கு ஃபோன் செய்தான். என்னாச்சு அப்படின்னு தெரில நான் டிரைவர் அனுப்பி பார்க்க சொல்லுறேன். நீ பதட்டப்பட வேண்டாம் என்றாள் . ரம்யா போய் டிரைவரை அனுப்பி பார்த்து வர சொன்னாள். எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை டிரைவர், சேகர், ஆனந்த் மூவரும் ஹோட்டல் ரூமுக்கு திரும்பினர் . என்னாச்சு சேகர் என்ற கேள்விக்கு அவனுக்கு மயக்கம் வரவில்லை ரம்யா . நல்ல தெளிவா இருந்தான் என்னால ஒண்ணும் பண்ண முடியல என்றான். சரி சரி காலையில பேசிக்கலாம் . ஸ்வேதாவுக்கு தகவலை சொன்னாள் . மணி இரவு 11 இருக்கும் ஆனந்த் ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணினான். ஏதோ என்னை சுத்தி நடக்குது நான் நாளைக்கே ஊருக்கு திரும்ப வரேன் என்றான். மறுநாள் காலையில் ரம்யாவிடமும் இதையே சொன்னான். சரி போகலாம் என்றாள் . ஸ்வேதா ரொம்பவும் ஏமாற்றமடைந்தாள் . விடு ஸ்வேதா பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ரம்யா தைரியம் சொன்னாள் .

சேகர் ஊரில் இருந்து வந்தவுடன் சிவாவை சந்தித்தான். எனக்கு தெரியாம நீயும் ரம்யா கூட சேர்ந்து இந்த பிளானை போட்டியா என்றான் சிவா . அப்படியெல்லாம் இல்லை எனக்கும் வேற வழி தெரியல. சரி ஆனந்த் என்ன சொன்னான் ? அவன் எப்படியோ அந்த ஹில் டாப் போனதும் சுதாரிச்சு கொண்டான். இல்லேன்னா இந்நேரம் அவன் எலும்பு கூட கிடைத்து இருக்காது . இப்போ ஸ்வேதா கர்ப்பம் அப்படின்னு வேற போய் சொல்லி இருக்கோம் அவ என்ன கஷ்டபடுறாளோ ? அதெல்லாம் ஒன்னுமில்ல அதே டாக்டர் கிட்ட மறுபடி போகும்போது எதையாவது சொல்லி சமாளித்து கொள்ளலாம் . என்னவோ போடா ரெண்டு நாளும் ஒரே ஜாலி தானே என்றான் சேகர். அதெல்லாம் ஒன்னுமில்லடா டென்ஷன் தான் அதிகமாச்சு
சரிடா நான் கிளம்புறேன் என விடை பெற்றுக்கொண்டான். ரம்யாவுக்கு தான் மீதே ஆத்திரம் வந்தது . சேகரை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்க கூடாது .
ரம்யாவை அலுவலகத்தில் பார்த்து மையமாக சிரித்தான் சிவா. இருவரும் லஞ்ச் டைமின் போது சந்தித்து கொண்டார்கள். ரிலாக்ஸ் இத்தோட போச்சே என்றான் சிவா. ம்ம் அவனுக்கு முடிவு என் கையாலதான் என சொன்னாள் . ஒண்ணும் அவசரப்படாதே எல்லாம் தானா நடக்கும் . ஸ்வேதா மறுபடி நாம வேற டாக்டர் பார்க்கலாம் என்று சொன்னாள். சரி உன் விருப்பத்துக்காக இன்னொரு டாக்டரை பார்த்திடுவோம் என்றான் ஆனந்த். ஆனந்த் ஸ்வேதா கர்ப்பம் இல்லை என தெரிந்ததும் அதிர்ச்சி அடையவில்லை தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டான் .விடு ஸ்வேதா நாம எனக்கு ட்ரீட்மெண்ட் கன்டினியூ பண்ணுவோம் என்றான் . ஸ்வேதாவுக்கு அப்போதைக்கு நிம்மதி கிடைத்தது .

ரம்யாவுக்கு கல்யாண மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது . ஒரு அமெரிக்கா மாப்பிள்ளையை செலக்ட் செய்து விட்டாள். கல்யாணத்துக்கு பிறகு அமெரிக்கா போவதாக பிளான். அங்கேயே செட்டில் ஆவதாய் முடிவு . நிச்சயதார்த்த தேதி குறிக்கப்பட்டது . நிச்சயத்துக்கு அவசியம் வரும்படி ஸ்வேதாவையும், ஆனந்தையும் கூப்பிட்டிருந்தாள் . சேகரும் , சிவாவும் அவர்கள் வீட்டு ஃபங்சன் போல வேலை செய்து கொண்டிருந்தனர். சிவா ஆனந்தை வரவேற்றான், ஸ்வேதா சிவாவிடம் எதுவும் பேசாமல் போனாள். சேகர் வந்தவர்களுக்கு கூல் டிரிங்க்ஸ் கொடுத்து கொண்டிருந்தான். ஆனந்தை பார்த்ததும் அவனிடம் ஒன்றை நீட்டினான். என்ன சேகர் எனக்கு மட்டும் எப்பவுமே ஸ்பெஷல் தானா என்றான்? அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆனந்த் .

நான் கார் பார்க்கிங்ல இருக்கேன் வா என்று ஸ்வேதாவிடம் இருந்து சிவாவுக்கு மெசேஜ் வந்தது . இவ என்னத்துக்கு கூப்பிடுறா என்று யோசித்தவாறே போனான். என்ன சார் கவனிப்பே இல்லை என்றாள். நீதான் மூஞ்சை திருப்பிக்கிட்டு போனியே என்றான். என்னை பார்த்தா பாவமா இல்லையாடா என்றவள் அவனை இறுக அணைத்துகொண்டாள் .
அப்போது ஐயோ அம்மா என்ற சத்தம் கேட்டது .. மூன்றாவது மாடியில் இருந்து யாரோ விழுந்து விட்டார்கள் என்ற செய்தி தீயாய் பரவியது . இருவரும் ஓடி போய் பார்ப்பதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது . அவசரமாக ஆனந்த்துக்கு ஃபோன் செய்தாள் ஸ்வேதா . அவன் ஃபோன் ஸ்விட்ச்ஆஃப் என்று வந்தது . பதட்டத்துடன் ரம்யாவை தேடினாள் ஸ்வேதா. பதட்ட படாதே கீழே விழுந்தது ஆனந்த்தான் உயிருக்கு ஆபத்தில்லை என்று சொன்னாள். ஸ்வேதாவின் ஃபோன் அடிக்க தொடங்கியது .

ரம்யாவின் நிச்சயதார்த்தம் தள்ளி போனது . போலீஸ் வந்து விசாரித்தார்கள் . ஆனந்த் இப்போது கோமா நிலையில் இருப்பதாக சேதி வந்தது . சேகர், ரம்யா, ஸ்வேதா , சிவா நால்வரும் ஹாஸ்பிடல் விரைந்தார்கள். ஐசியு வில் இருந்ததால் உடனே பார்க்க முடியவில்லை . ஆனந்த் அப்பா உடைந்து போய் அழுது கொண்டிருந்தார். அவரை ஸ்வேதா சமாதானப்படுத்தினாள். எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை டாக்டர் என் பையனை திரும்ப பழையபடி நடமாட வைங்க என கதறி கொண்டிருந்தார். இனிமே நீதான் ஸ்வேதாவை பார்த்துக்கணும் என்றாள். என்ன ரம்யா சொல்லுறே ? ஆல் தி பெஸ்ட் என்றாள் . டாக்டர்கள் அவர் கோமாவில் எவ்வளவு நாள் வேணா இருக்கலாம் அவர் எப்போ கண் முழிப்பாருன்னு சொல்ல முடியாது . நாங்க எங்க பெஸ்ட் ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கோம் என்றார்கள்.


ஸ்வேதாவுக்கு ஒருபுறம் அதிர்ச்சி மறுபுறம் விடுதலை அடைந்த உணர்வு ஏற்பட்டது . இனி பிடிக்காதவன் கையை பிடித்துக்கொண்டு சுற்ற வேண்டாம் என நினைத்தாள் . சிவாவோ ரம்யா என்ன செய்திருப்பாள் என்பதிலேயே நிலைத்து நின்றிருந்தான் . ஒரு வேலை ஆனந்த் கண்விழித்து ரம்யா மீது பழியை போட்டால் அவள் வாழ்க்கையே வீணாகி விடும் இப்படி பலவாறாக யோசித்தான். சேகர் மச்சான் ரூட் கிளியர் என்று சொன்னான். டேய் நீ வேற நான் இப்போ கொண்டாடுற மனநிலையில் இல்லை . ஸ்வேதா ரம்யாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் . ரம்யா அவளை கட்டாய படுத்தி கேண்டீன் அழைத்து போய் சாப்பிட செய்தாள். ஸ்வேதா இனிமேதான் நீ தைரியமாய் இருக்கணும் என்றாள். சரி ரம்யா போலீஸ் என்ன சொல்லுறாங்க ஆனந்த் குடி போதைல கீழே விழுந்துட்டதா சொல்லுறாங்க . டாக்டர் ரிப்போர்ட் அதை உறுதி படுத்துது. சாரி ரம்யா உன்னோட நிச்சயதார்த்தம் வேற தள்ளி போகுது.

போலீஸ் சிவாவையும் விசாரித்தார்கள். ஆனந்த் கீழே விழும் போது எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ஸ்வேதாவுடன் பேசிக்கொண்டு இருந்தேன் என சொன்னான். பார்க்கிங்கில் இருந்த சிசி டிவி உதவியுடன் அதை உறுதிபடுத்தினார் இன்ஸ்பெக்டர். 3 வது மாடிக்கு ஆனந்த் எப்படி போனார் அவரை யாராவது தள்ளி விட்டார்களா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்தது . போலீஸ் விசாரணை முடியும் வரையில் ஸ்வேதா தனியாய் வீட்டில் இருக்க வேண்டாம் ரம்யா வீட்டில் கொஞ்ச நாள் தங்கி இரு என்றான் சிவா . சரி சிவா .ஆனந்தை சில நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். வீட்டிலேயே ஹோம் நர்ஸ் வைத்து பார்த்து கொள்ளும்படி சொல்லி விட்டார்கள். ஸ்வேதா தினமும் அவனை ரம்யா வீட்டில் இருந்து போய் பார்த்து வந்தாள் .

சிவா வேலையில் பிஸி ஆனான். சிவாவும் ஸ்வேதாவும் சந்திப்பதை கொஞ்ச காலத்திற்கு நிறுத்தி வைகக ரம்யா சொல்லியிருந்தாள் . ரம்யா கல்யாண நிச்சயதார்த்தமும் அதை தொடர்ந்து கல்யாண தேதியும் குறிக்கபட்டது .
கல்யாணத்துக்கு வந்த ஸ்வேதா சற்றே வாடி இருந்தாள் . சிவாவும், சேகரும் ஆனந்த் பற்றி விசாரித்தனர். அதே நிலைதான் நீடிக்கிறது என்றாள் . விவாகரத்து பற்றி பேசினாயா ஸ்வேதா என்றான் சேகர். அவன் அப்பா இப்போது பேசும் நிலையில் இல்லை. அவர் சற்று தெளிவானதும் பேசலாம் என்றாள் ஸ்வேதா. ஸ்வேதாவும் சிவாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். என் மேல கோவமா ஸ்வேதா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை எனக்கொரு வேலை பார்த்துக்கொடு சிவா .. நானும் உன்னை போல பிஸி ஆகிவிட்டால் அப்புறம் கவலை இல்லை என்றாள். நான் ஏற்பாடு பண்ணுறேன் . நீ கவலைப்படாதே என்றான். ரம்யா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது . அடுத்து உன் கல்யாணம் தாண்டி என்று ரம்யா ஸ்வேதாவை கிண்டல் செய்தாள் .

இன்னைக்கு நைட் ரம்யா வீட்டுல சொந்தக்காரங்க எல்லோரும் தங்கி இருப்பாங்க . நான் அதனாலே என் வீட்டுக்கு போறேன் நீயும் வரியா சிவா ? சரி வரேன். ஸ்வேதா காரில் எறிக்கொண்டான் . சிவா அவன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். சரிப்பா பார்த்து ஜாக்கிரதை என்றார் சிவா அப்பா . ஸ்வேதாவும் இவனும் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினார்கள். நான் இந்த ஹாலிலே படுத்துக்குறேன் என்றான் சிவா. அதெல்லாம் வேண்டாம் இந்த பெட்ரூம் கெஸ்ட் வந்தா தங்குறத்துக்குதான் நாம இங்கேயே படுத்துக்கலாம் என்றாள். அவளை அணைத்தவாறே உறங்கி போனான்.