Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 2

ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி ஆனந்த். இனிமேலாவது என் மனைவியை விட்டுவிடுவாய் என நம்புகிறேன் . ஆனந்த் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க . எல்லாம் எனக்கு தெரியும் உன்னைபற்றி என்றவாறு போனை வைத்தான் ஆனந்த். இரண்டு நாட்கள் கழித்து சேகருக்கு ஃபோன் செய்து விசாரித்தான். என்னாச்சு சேகர் அரவிந்த் ஊரில் இருந்து வந்துவிட்டாரா? ம் வந்துட்டாரு நானே உனக்கு ஃபோன் பண்ணணும்னு நெனைச்சேன் . நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு அவரு ஆபீஸ் ல வந்து பார்க்க சொல்லி இருக்காரு நீயும் வரியா என்றான். சரி வரேன். ஒருவேளை ஆனந்தும் வந்து பிரச்சனை ஆயிடுமோ அப்படின்னு யோசிக்கிறேன். அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதப்பா நீ சும்மா வா .

சேகரும், சிவாவும் அரவிந்தின் ஆபீஸ் வந்திருந்தார்கள். எதிர்பார்த்த மாதிரி ஆனந்தும் வந்திருந்தான். அரவிந்த் வாங்க சேகர் என்று வரவேற்றான். நீங்க வெயிட் பண்ணுங்க என்று சிவாவை சொன்னான். அப்போது ஸ்வேதா ஃபோன் செய்தாள். என்னாச்சு சிவா ஏதோ டென்ஷன் மூடுல ஆனந்த் இருந்தான் . ஏதாவது பிரச்சனையா ? அது ஒண்ணுமில்லை அரவிந்த் மூலமா உனக்கு விவாகரத்து குடுக்க சொல்லி கேக்க முடியுமா அப்படின்னு ட்ரை பன்றோம்.சிவா இதெல்லாம் நடக்குற காரியமா ? எனக்கு வேற வழி தெரியல . ஸ்வேதா நான் அப்புறம் பேசறேன் என்று முடித்து கொண்டான் சிவா. சேகர் வெளியே வந்தான். உன்னை உள்ளே கூப்பிடுகிறார் அரவிந்த் . தயங்கியபடியே உள்ளே போனான் சிவா. ஆனந்த் வாப்பா சிவா உன்னால நேரடியா மோத முடியலை அப்படின்னு சேகர் மூலமா ட்ரை பண்ணுறியா ? நீ சும்மா இரு ஆனந்த் நான் பேசிக்குறேன். என்ன இருந்தாலும் இது தப்பு சிவா. விவாகரத்து குடுக்குறதும் குடுக்காததும் சிவா அவங்க மனைவி ஸ்வேதா விருப்பம் நீ அதுல தலையிடுறதுல நியாயம் இல்ல. அவ உன்னோட முன்னாள் காதலியா இருக்கலாம் ஆனா போதும் சார் எனக்கு புரிஞ்சி போச்சு . சாரி சிவா என்னால இந்த விஷயத்துல உங்களுக்கு உதவ முடியல. ஓகே சார் நான் வரேன் .

சேகரும், சிவாவும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அடுத்து என்ன செய்வது என்று யோசித்து பார்த்தான் சிவா. கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரு வழியும் தெரியவில்லை. ஸ்வேதாவை அப்படியே விட்டு விடுவதற்கு மனமில்லை. மணி 9 ஆனது. வீட்டில் அம்மா அப்பா சாப்பிட்டு விட்டு தூங்கி போயிருந்தார்கள். இவன் முன்பே ஃபோன் பண்ணி வெளியில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவதாக சொன்னான். என்ன ஆச்சு சிவா ? என்று ஸ்வேதா மெசேஜ் அனுப்பி இருந்தாள். கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று ரிப்ளை செய்தான். ஸ்வேதா இவனை விரும்பியதை தவிர ஒரு பாவமும் செய்யவில்லை. ரிஸ்க் எடுத்து ஸ்வேதாவுடன் இந்த ஊரை விட்டு போனால்தான் என்ன என்று யோசித்தான். ஸ்வேதாவே போனில் கூப்பிட்டாள் . என்னாச்சு சிவா? அவன் எதேதோ குடிச்சுட்டு உளறி படுக்க போயிட்டான். ஒண்ணுமில்லை ஸ்வேதா இனிமே நாம பேசிக்கறதுல அர்த்தமில்லை. அரவிந்த் முடியாதுன்னு சொல்லிட்டாரு .நாம வேற ஏதாவது வழி பண்ணனும். பேசாம வெளிநாடு போயிடலாமா ?என்ன சிவா இது எனக்கு கொஞ்சம் டைம் குடு நானே ஆனந்துக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்றாள் .

நல்ல நேரம் பார்த்து வேலையில் சேர்ந்தான் சிவா. இனி பொருளாதார ரீதியில் அவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது என நம்பினான். அவன் எழுத வேண்டிய சில கட்டுரைகளுக்காக வெளியூர் போக வேண்டி இருந்தது. இந்த நிகழ்வுகளில் தொடர்ந்து இருந்ததால் ஸ்வேதாவுடன் பேச முடியவில்லை. ரம்யாவிடம் சொல்லி அவளை ஒரு முறை நேரில் பார்த்து தைரியமாக இருக்கும்படி சொல் என்றான். ரம்யா ஸ்வேதாவை சந்தித்தாள்.
அவன் வேலைல கொஞ்சம் பிஸி ஆயிட்டான் அதனாலதான் உனக்கு ஃபோன் பண்ண முடியல . மத்தபடி அவன் உன்னையேதான் நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்றாள் ரம்யா. எனக்கு இப்போ இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரணும் சிவா கூட சேர்ந்து வாழனும் அத தவிர வேற சிந்தனையே இல்லை என்றாள் ஸ்வேதா. உன் கல்யாணம் சம்பந்தமா வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறார்கள் அப்படின்னு சொன்னியே என்ன ஆச்சு ?ஜாதக பொருத்தம் இருந்தா பையன் சரியில்லாம இருக்கான். பையன் நல்லா இருந்தா ஜாதகம் பொருத்தம் இல்ல. ஓ அப்படியா மனசுக்கு பிடிச்சிருந்தா உடனே ஓகே சொல்லிடு ஜாதகம் எல்லாம் பார்க்காதே என்றாள் ஸ்வேதா.


டூர் முடிந்து வீடு திரும்பினான் சிவா. ஸ்வேதாவை பார்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது . அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது . சேகர் வந்து தேடி விட்டு போனதாக சொன்னாள் அம்மா. சேகருக்கு ஃபோன் செய்து பேசினான். மதியம் 2மணிக்கு வீட்டுக்கு வா ஆனந்த் வெளியூர் போயிருக்கிறான் என மெசேஜ் வந்தது. சிவா தயங்கினான். ஆனால் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட துணிந்து போனான். ஸ்வேதா அவனை கட்டிக்கொண்டாள். என்னால முடியல சிவா எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். சுதாரித்து கொண்டு சரி நாம வெளியே போகலாம் வா என்றான். அதெல்லாம் வேண்டாம் உனக்காக சமைத்திருக்கிறேன் சாப்பிடு என்றாள். நீயும் உட்கார் என்றான். வேண்டாம் நான் பிறகு சாப்பிடுகிறேன் என்றாள். எந்த ஊருக்கு போயிருந்தாய் . விவரங்களை சொன்னான். நாம ஒரு மினி டூர் போலாமா . நான், நீ, சேகர், ரம்யா நாலு பேரும். இது சரியா வருமா ?ஏன் சரியா வராது நான் நீ டூர் வறேன்னு ஆனந்த்கிட்ட சொல்ல மாட்டேன் . நாம போறோம் அடுத்த வாரம் ரம்யா ஆனந்த் கிட்ட பர்மிஷன் வாங்கி தறேன்னு சொல்லி இருக்கா . நீ அப்புறமா எங்க கூட ஜாயின் பண்ணிக்க. எந்த ஊரு போறோம் ?அதெல்லாம் உனக்கு இப்போ தெரிய வேண்டாம் .யார்கிட்டயாவது உளறி விடுவாய் . சரி ஸ்வேதா அப்போ நான் கிளம்புகிறேன் .சரி சிவா

சேகர் என்னடா இவ டூர் plan போட்டிருக்கேன் அப்படின்னு சொல்லுறா ஜாலியா போவோம் இதில் என்ன பிரச்சினை ?நான் வருவது தான் . அதெல்லாம் நானும் ரம்யாவும் சமாளிக்கிறோம் நீயும் ஸ்வேதாவும் சந்தோஷமா இருங்க என்றான். ஆனந்திடம் ரம்யா பேசிய போது யார் யார் போறீங்க என்று திரும்ப கேட்டான் நான், சேகர், ஸ்வேதா மூணு பேரும்தான் அப்போ நானும் வரேன் என்றான். சரி வாங்க என்றாள் ரம்யா. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ஸ்வேதா. டூர் plan பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டான் ஆனந்த். என்னடி இது கதையையே மாத்துற என்று ஆதங்கபட்டாள் ஸ்வேதா. நீ ஒரு பக்கம் சிவா கூட டூர் ல இருப்ப நான் இவனை பார்த்துகிக்கிறேன் என்றாள். லாஸ்ட் சமயத்துல நீ எங்க கூட இருக்க மாட்டே. அதுதான் plan. அதுக்கெப்படி ஆனந்த் ஒத்துக்குவான் . அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் . நான் சொல்லுறபடி செய் என்றாள்.

டூர் போகிற நாளுக்கு முதல் நாள் ஸ்வேதா டாக்டர் கிட்டே போகணும் என்றாள். டாக்டர் ஸ்வேதாவை பரிசோதித்து விட்டு சில கேள்விகள் கேட்டார். ஸ்வேதா கர்ப்பமாய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக சொன்னார். ஆனந்த் சந்தோஷத்தின் எல்லைக்கே போனான். டிராவல் பண்ணக்கூடாது என்று டாக்டர் சொன்னார். நீ டூர் போயிட்டு வா ஆனந்த் என்று சொன்னாள் ஸ்வேதா. உன்னை தனியா விட்டுட்டு அதெல்லாம் பரவாயில்லை ரொம்ப நாள் கழித்து சந்தோஷமா இருக்கோம் நீ போயிட்டு வா என்றாள். ரம்யா ஃபோன் செய்து எப்படி நம்ம டாக்டர் ? என்றாள். என்னவோ நீ பண்ண வேலைதானா இது என்றாள். ரம்யா,சேகர், ஆனந்த் மூவரும் டூர் போனார்கள். ஸ்வேதா, சிவாவுக்கு ஃபோன் செய்தாள். நாம டூர் போகிறோமா என்று ஆச்சர்யபட்டான் சிவா . நடந்ததை சொன்னாள் .

சிவாவும், ஸ்வேதாவும் பக்கத்திலிருந்த டூரிஸ்டு ஸ்பாட் ஒன்றுக்கு பயணம் ஆனார்கள். சேகர் அவ்வப்போது சிவாவுக்கு ஃபோன் பண்ணி நிலமையை விவரித்தான். ஸ்வேதா ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் விரிவாக செய்திருந்தாள். உன் கூட இருக்குறதுக்கு எவ்ளோ கஷ்டத்தையும் தாங்குவேன் என்றாள். பயணங்கள் ஒரு தொடர்கதை போலத்தானே இனி ஒருநாளும் ஸ்வேதா தன்னை விட்டு பிரியமாட்டாள் என நினைத்தான் ஆனந்த் . இங்கே ஸ்வேதா பழைய கதைகளை பேசி கொண்டிருந்தாள். அவள் புதிய உற்சாகத்துடன் இருந்தாள். ஸ்வேதாவும் ,சிவாவும் எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தனர். இது நிஜம்தானா என சிவா தன்னையே கேட்டுக்கொண்டான்.அங்கே இருந்தாலும் அவ்வபோது ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணினான் ஆனந்த்.நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ என்று அடிக்கடி சொல்லி வந்தான் ஆனந்த். நீதான் நிரந்தரமா ரெஸ்ட் எடுக்க போற என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள் ஸ்வேதா.


ஸ்வேதா திட்டப்படி ரம்யா, ஆனந்த் கதையை சேகரோடு சேர்ந்து முடிப்பாள். இங்கே வந்ததும் ரம்யாவுக்கு பார்த்திருக்கிற அமெரிக்கா மாப்பிள்ளையோடு சேர்ந்து வெளிநாடு பறந்து விடுவாள். இதை எப்படியோ சாதிக்க வேண்டும் என்பதே ஸ்வேதாவின் விருப்பமாக இருந்தது. ரம்யாவும் சேகரும் இதற்கென மெனக்கெட வேண்டியதில்லை ஆனந்த் உடைய மது பாட்டிலில் மயக்க மருந்து கலந்து விட்டாள். சேகருக்கு குடி பழக்கம் இல்லை . மலை உச்சிக்கு போனால் அவனுக்கு சொர்க்கம் தான். டிரைவர் மாலை 7 மணிக்கே குடித்து விட்டு மட்டையாகி விட்டான். ஸ்வேதாவும் இவனும் வீடு திரும்பினர். ஸ்வேதாவின் பிளானை கேட்டதும் சிவா அதிர்ந்தான். இது தப்பு இல்லையா ஸ்வேதா . எனக்கு வேறு வழி இல்லை. உனக்காக நான் ஜெயிலுக்கு போக கூட ரெடி. என்ன இருந்தாலும் இதை நீ முன் கூட்டியே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்றான் சிவா. நீ இதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு தெரியும்.