Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 5

வாட்ச்மேன் அவங்க ஊருக்கு போயிருக்காங்களே .. இல்லைனா அவங்களுக்கு ஃபோன் பண்ணி பாருங்களேன் என்றார் . ஃபோன் ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. அவங்க ஹஸ்பண்ட் சமீபத்துலதான் காணாம போனாரு அதனால ரொம்ப மன உளைச்சலோட இருந்தாங்க. உள்ளே லைட் எரிவது போல தெரிந்தது. நாம போலீஸ் கிட்ட போகலாம். அதெல்லாம் வேணாம் சார் அசோசியேஷன் செகரெட்டரி கிட்ட இன்னொரு கீ இருக்கு அதை வைத்து திறந்து பார்ப்போம் என்றார், சுமதி மேடம், மேடம் என கூப்பிட்டு கொண்டே உள்ளே போனார்.

அங்கே சுமதி தூக்கில் தொங்கியவாறு இருந்தாள் அரவிந்த்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான் சிவா. போலீஸ், ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டது .போலீஸ் சிவாவையும், ஸ்வேதாவையும் தனி தனியே விசாரித்தனர் . பிறகு எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும் என்றனர். அரவிந்த் தடுமாறி போனார், சிவா தான் அவருக்கு ஆறுதல் கூறினான். இதுக்கு மேல நீங்க எதுலேயும் involve ஆகாதீங்க சிவா . சுமதிக்கு குழந்தைகள் இல்லை. சுமதி பற்றி அதிகம் விவரங்கள் அக்கம் பக்கத்தினரிடம் கூட கிடைக்க வில்லை. சிவாவும் , ஸ்வேதாவும் சோர்ந்து போயினர். எங்கெங்கேயோ நாம தேடிட்டு இருக்கோம் . ரம்யா ஹனிமூன் முடிந்து வந்துவிட்டாள். நடந்ததையெல்லாம் சொல்லி முடித்தான் சிவா. சுமதியை எனக்கு நேரடியா தெரியாது . அன்னைக்குத்தான் அரவிந்த் இன்ட்ரொடியூஸ் பண்ணி வெச்சார் . ஒரே குழப்பமா இருக்கே என்றாள் ரம்யா. சரி உன் விவாகரத்து என்ன ஆச்சு என்று கேட்டாள் ரம்யா, ஆனந்த் இன்னும் 6 மன்த்ஸ் ல கண் முழிச்சிடுவான் அது வரை வெயிட் பண்ணலாம்னு சொல்லுறாரு அங்கிள். அதெல்லாம் வேணாம் அவன் கூட இருக்க இருக்க உனக்குதான் ஆபத்து. அதனாலே சீக்கிரம் விவாகரத்து வாங்க பாரு என்றாள் ரம்யா.

எப்போதும் போல வேலைக்கு போன சிவாவுக்கு பார்சல் ஒன்று வந்திருந்தது . அதில் ஒரு லெட்டர் இருந்தது . நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்போ நான் இப்போதைக்கு தற்காலிகமாதான் இந்த மிஷனை ஸ்டாப் பண்ணி வெச்சிருக்கேன் . நீயா ஒதுங்கி போய்விடு . இல்லையேல் உனக்கு வேண்டியவர்களை இழப்பாய் . இதை பார்த்தவுடன் போலீசுக்கு போகலாமா என்ற குழப்பம் ஏற்பட்டது . ஸ்வேதாவும். ரம்யாவும் பேசாமல் விட்டு விடு என்றார்கள். நாம சும்மா இருந்தாலும் அவன் சும்மா இருக்க மாட்டான் .. சேகரும் இத்தோடு விட்டு விடு என்று சொன்னான். சரி நீங்க எல்லாரும் சொல்லுறதால இத்தோட நிறுத்திக்கிறேன்.அடுத்து எது நடந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். சிவா நாளைக்கு அங்கிள் உன்னையும் என்னையும் வந்து பார்க்க சொல்லி இருக்காரு. எத்தனை மணிக்கு ஈவினிங் 6 ஓ கிளாக் . ஆபீஸ் முடிஞ்சு நானே உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன் என்றாள்.அவளுக்காக காத்திருந்தான். ஃபோன் எடுக்கவில்லை ரிங் போய் கொண்டிருந்தது . அப்போது ஒரு கால் சிவாவுக்கு வந்தது . முன்பு எச்சரிக்கை குடுத்த அதே குரல் . ஸ்வேதா இன்னும் கொஞ்ச நாளைக்கு என் கூடத்தான் இருப்பா . நீ நான் சொல்லுற விஷயங்களை முடிக்கிற அது நல்ல படியா முடிஞ்சதுக்கப்புறம் ஸ்வேதா பத்திரமா வந்து சேருவா உன்கிட்ட.

சிவாவுக்கு தலை சுற்றியது . ஸ்வேதாவை கடத்தி வைத்து தன்னை என்ன செய்ய சொல்ல போகிறார்கள் . வேறு யாரையும் இப்போதைக்கு உதவிக்கு கூப்பிட வேண்டாம் என எண்ணினான். சிறிது நேரம் கழித்து அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. சிவா நீ சுமதி வீட்டுக்கு போ . அங்கிருக்கும் வாட்ச்மேன் கீ தருவார். வீட்டை திறந்து சுமதியின் டைரி ஒன்று சாமி படத்துக்கு அருகில் இருக்கும் அதை எடுத்து படித்து பார்க்க நினைக்காதே அதை வாட்ச்மேனிடம் குடு . திரும்பி பார்க்காமல் வந்து விடு . என்னை ஏமாற்ற நினைக்காதே அப்புறம் ஆனந்துக்கு நேர்ந்த கதிதான் ஸ்வேதாவுக்கும் ஏற்படும் என்றது குரல். சுமதி வீட்டுக்கு போனான் . வாட்ச்மேன் கீ கொடுத்தான். அதை எடுத்துக்கொண்டு வீட்டை திறந்தான். எல்லாம் துடைத்து வைத்திருந்தது போல இருந்தது. சாமி அலமாரியின் அடியில் இருந்த டிராயரில் அந்த டைரி கிடைத்தது . வாட்ச்மேன் வசம் அதை ஒப்படைத்தான். அப்போது வெள்ளை நிற கார் ஒன்று வந்தது. அதில் இருந்தவரை பார்த்து வாட்ச்மேன் வணக்கம் வைத்தான். அந்த காரில் இருந்தவரிடம் டைரியை ஒப்படைத்தான். சிவா தன்னுடைய டூ வீலரை
முறுக்கினான்.ஸ்வேதாவிடம் இருந்து ஃபோன் வந்தது என்னாச்சு ஸ்வேதா எங்கிருக்க என்றான் பதட்டதுடன். நான் வீட்டுக்கு வந்துட்டேன் என்றாள். சிவா நிம்மதி பெருமூச்சு விட்டான். அந்த டைரியில் இருந்து கிழித்த ஒரு பக்கத்தை பாக்கெட்டில் தொட்டு பார்த்து கொண்டான்.
சிவா ஸ்வேதாவை சந்தித்தான். உனக்கொன்னும் ஆகலியே ஸ்வேதா இல்ல சிவா நான் நல்லாத்தான் இருக்கேன். சுமதியோட டைரிலேருந்து இந்த பேப்பர் கிழிச்சேன் அது ஒரு லிஸ்ட் மாதிரி இருந்தது . அந்த லிஸ்டில் ஆனந்த் பெயரும் அரவிந்த் பெயரும் இருந்தது. அரவிந்துக்கும் இந்த விஷயத்துல ஏதோ சம்பந்தம் இருக்கு என்றான் சிவா. மறுநாள் காலையில் ஸ்வேதாவும், சிவாவும் ஆனந்தின் அப்பாவை சந்தித்தார்கள். வாங்க சிவா என்னால இப்போதைக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாத சூழ்நிலைல இருக்கேன். இவன் ஒரு பக்கம் கோமால இருக்கான். நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன் ஸ்வேதா, ஆனந்த் விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். டாக்டர் கிட்டே கலந்து பேசி அதை செய்யுறேன் . நீங்க ரெண்டு பெரும் அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க . சரி அங்கிள் . ஸ்வேதாவும், சிவாவும் விடை பெற்று கொண்டனர்.

ரம்யா இந்த விஷயத்தை கேட்டதும் மகிழ்ந்து போனாள் . ஸ்வேதா இருந்தாலும் நாளைக்கு ஆனந்த் கோமாலேயிருந்து மீண்டு வந்தா பிரச்சினை பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம் என்றாள். அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டான். சேகருக்கும் இந்த விவாகரத்து விஷயத்தை சொல்லி இருந்தான் சிவா. சிவாவின் அப்பா, அம்மாவுக்கும் இதில் சம்மதம்தான். அப்போதுதான் அந்த ஃபோன் வந்தது. அரவிந்த்தான் கால் பண்ணியிருந்தார். சிவா நீ உடனே வந்து என்னை மீட் பண்ண முடியுமா . எங்கே வரணும் . ஆபீஸ் வந்துடு என்றார். ஸ்வேதா நீ எதுவும் அந்த டைரி மேட்டர் இப்போ அரவிந்த் கிட்டே சொல்ல வேண்டாம் . அது நமக்கே ஆபத்தா முடியலாம் என்றாள். சரி . மாலை நேரம் என்பதால் அலுவலகத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். இந்த சுமதி பத்தி வேற ஏதாவது இன்ஃபர்மேஷன் உங்ககிட்ட இருக்கா சிவா . 10 லட்சம் பணம் கேட்டு இந்த மெசேஜ் வந்தது . சுமதிக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை . அப்போ ஆனந்த் . ஆனந்தும் சுமதியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்க . ஆனா ஆனந்த் சொத்துக்கு ஆசைப்பட்டு ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்போ சுமதி விஷயத்துல ஆனந்த் ஏதோ பண்ணியிருக்கான்னு தோணுது . அதனால எனக்கு சிக்கல் . நீங்க போலீஸ் கிட்ட போலாமே . அவங்க குடுத்துருக்க மெசேஜ் புல்லா படிங்க சிவா . போலீசுக்கு போனா நான் உயிரோட இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்லுறாங்க.

சிவா யோசித்தான். சுமதியோட ஹஸ்பண்ட் மேல எனக்கொரு சந்தேகம் என்றான். அவர் பெயர் கூட கிருஷ்ணகுமார் அதாவது கே கே ன்னு கூப்பிடுவோம் என்றான் அரவிந்த். அந்த கே கே தான் சேகரையும் மிரட்டி இருக்கான். சிவா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. 10 லட்சம் பணத்தை எங்க வந்து தர சொல்லி இருக்காங்க. பணத்தை ரெடி பண்ணதும் அதை சொல்லுவாங்க. இப்போதைக்கு என்கிட்ட அவ்ளோ பணமும் இல்லை . சிவா அவங்ககிட்ட பணம் ரெடி பண்ண ஒன் வீக் டைம் கேளுங்க. அதுக்குள்ள நான் என்ன செய்ய முடியுமோ பார்க்கிறேன். சரி சிவா நான் பேசி பார்க்கிறேன் . ஸ்வேதா நீ ஏண்டா அதுக்கெல்லாம் ஒத்துகிட்ட ஏற்கனவே நமக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை என்றாள் ஸ்வேதா. விடு ஸ்வேதா எப்படியும் இந்த விஷயத்துல ஆனந்த் என்ன பண்ணி இருக்கான்னு தெரியணும் . அப்புறம் எல்லாம் கிளியர் ஆயிடும் என்றான். இப்போ என்ன பண்ண போறே அந்த ஒயிட் கார் நம்பர் நோட் பண்ணி வைத்து இருக்கிறேன் அங்கிருந்து தான் என்னோட வேலையை தொடங்க போறேன் என்றான்.

சேகர் இப்போது தேறி இருந்தாலும் எப்போது என்ன நடக்குமோ என யோசித்தவாறே இருந்தான். தெரிந்த நண்பரிடம் சொல்லி அந்த வண்டி ஓனர் டீடெயில்ஸ் எடுத்தான். அது வாடகை டாக்ஸி . அன்று வண்டி ஓட்டிய நபரை பிடித்தான். அன்னைக்கு டிராவல் பண்ணுணவரு பேரு கே கே ன்னு சொன்னாரு சார். கடைசியா அவரை எங்க டிராப் பண்ணுனீங்க கோடம்பாக்கம் உள்ளே ஒரு வீட்டுக்கு . கூட வேற யாராவது டிராவல் பண்ணினாங்களா இல்லை சார். வழில எங்கேயாவது வண்டி நிறுத்தி டீ ஏதாவது குடிச்சிங்களா . நான் ரெகுலரா போற டீ கடையிலதான் குடிச்சேன் . அந்த கடைல சிசிடிவி இருக்கா இருக்கு சார் சரி அங்கே போவோம் என்றான் சிவா. அன்று பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்த்தான் . இவர்தான் சார் . அந்த பதிவை தன்னுடைய மொபைல் ஃபோன் எண்ணுக்கு அனுப்பி கொண்டான் சிவா. கோடம்பாக்கம் வீட்டுக்கு போங்க என்றான். வீடு பூட்டியிருந்தது . சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் .

அக்கம் பக்கம் விசாரித்தான் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அரவிந்த் ஃபோன் பண்ணியிருந்தான் . ஒரு வாரம் டைம் குடுத்திருக்காங்க என்றான். நான் கே கே வோட வீட்டு வாசலிலே தான் இருக்கிறேன் . போலீசிடம் ஹெல்ப் கேட்டு வீடு உள்ளே போய் பார்க்கலாமா என்றான். அதெல்லாம் வேண்டாம் நான் இப்போ அங்கே வருகிறேன் என்றான். லொகேஷன் ஷேர் செய்தான் சிவா. அரவிந்த் வந்ததும் பின் பக்க மதில் சுவர் வழியாக உள்ளே குதித்தனர் இருவரும். பின் பக்க கதவு தாழ் போடாமல் இருந்தது . யாரும் இருப்பதாக தெரியவில்லை. சுமதி போட்டோவுக்கு மாலை போடப்பட்டு இருந்தது . அப்போது அந்த டைரியை எடுத்து பார்த்தான் சிவா.