இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றாள் ஷெரின் . உன் அப்பா உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை இப்போது பயணம் செய்யும் நிலையில் இல்லை. அதனால்தான் அவரை அழைத்துக்கொண்டு வர முடியவில்லை என்றான் சிவா. ஆனந்த் தலைமறைவு அதிகாரிகளுக்கு பெரிய தலைவலி கொடுத்தது. கிரண் ஆனந்திற்கு எதிராக செயல்பட முடிவு செய்தான். எழிலை சந்திக்க விரும்புவதாக சொன்னான். எழில் இப்போவாவது உனக்கு தோன்றியதே என்றான். கிரண் இப்போது ஆனந்த் பெங்களூர் அருகே பதுங்கி இருப்பதாக சொன்னான். அவனால் போலீஸ் கெடுபிடியால் வெளிநாடு போக இயலவில்லை என்றும் சொன்னான். அவன் சமீபத்தில் தன்னை தொடர்பு கொள்ளவில்லை தான் அவன் குடுத்த நம்பரில் முயற்சி செய்த போதும் அவன் போனை எடுக்கவில்லை என்றான். எழிலும் ஷிவானியும் பெங்களூர் பயணம் செய்ய தயார் ஆயினர். கிரணையும் அழைத்து செல்லலாம் என நினைத்தபோது ஆனந்தால் கிரண் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் தவிர்த்துவிட்டான்.
ஷெரினின் தண்டனை குறைப்பு பற்றிய மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எப்படியும் 3 ஆண்டுகளாக குறைக்க முடியும் என்ற நம்பிக்கை எழிலுக்கும், ஷிவானிக்கும் இருந்தது. உதித் தன்னுடைய டாக்டர் படிப்பை முடித்து விட்டான். ஸ்வேதாவுக்கும், சிவாவுக்கும் மகிழ்ச்சியை தந்தது. ஷெரினும் விஷயத்தை கேள்விப்பட்டு மகிழ்ந்தாள் . பெங்களூர் சென்று சேர்ந்த ஷிவானிக்கும், எழிலுக்கும் ஃபோன் பண்ணி சொன்னான் உதித். ஷிவானி பார்த்தியா எழில், உதித் சின்ன பையன் இன்னைக்கு டாக்டர் ஆயிட்டான் என்றாள். கமலன் இருந்தால் கொண்டாடி இருப்பான் என்றான் எழில். பெங்களூர் ஏற்கனவே எழிலுக்கு பரிச்சயமான இடம் என்பதால் அதிகம் சிரமப்படவில்லை. ஷெரினுடைய அப்பாவை ஒரு முறை போய் பார்த்து வந்தார்கள். ஷெரின் எதிர்காலத்திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்தார் ஷெரின் அப்பா. ஷெரின் விடுதலை ஆன பின் என்ன செய்ய வேண்டும் என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை எழிலால். ஷெரினிடமே ஆனந்தின் பெங்களூர் connections பற்றி தெரிந்து கொண்டிருந்தான்.அதன்படி அவன் வேலை பார்த்த அலுவலகம் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டான். அங்கு போய் விசாரிக்க முடிவு செய்தான்.
விசாரித்து பார்த்ததில் ஆனந்த் அங்கு உள்ள அவன் நண்பன் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என தகவல் வந்தது. ஆனந்தை போலீஸ் தேடுவதாக போஸ்டர்கள் அந்த ஏரியா முழுக்க ஒட்டப்பட்டு இருந்தது. அப்போது இன்னும் ஒரு கம்ப்ளைண்ட் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தது. அது ஆனந்த் மேலும் ஒரு கொலை செய்து பிணத்தை எரித்து விட்டதாகவும் சொன்னார்கள். எழில் அவர்கள் குறிப்பிட்ட ஸ்பாட் நோக்கி விரைந்தான். பாதி எரிந்த நிலையில் இருந்த பாடியை கைப்பற்றி போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வாங்குவதற்கு ஏற்பாடு செய்தான். அது ஒரு 24 வயது திருமணமான பெண்ணின் உடல் எந்த தெரிய வந்தது, கடைசியில் அது மிருணாளினியின் உடல் தான் என தெரிய வந்தது. அவளுடைய கணவரை விசாரித்தபோது எங்கள் திருமணத்துக்கு முன்பே ஆனந்துக்கும் அவளுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது என்றார். இப்போது காத்திருந்து பழி வாங்கிவிட்டான் ஆனந்த் என்றான் . அவன் பெயர் ரஞ்சித் என்றும் சொன்னான். எழில் அதை நம்பவில்லை. வேறு ஏதாவது உங்களுக்கிடையில் பிரச்சனை இருந்ததா என்று கேட்டான். நானும் அவளும் ஒற்றுமையாகதான் இருந்தோம் என்றான் ரஞ்சித்.
மிருணாளினி ஏற்கனவே பெண்களின் ஆபாச வீடியோ விவகாரத்திலும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த ஆனந்த் மேல் வெறுப்பாக இருந்தாள் என்பது எழிலுக்கு நினைவு வந்தது. மிருணாளினியின் ஃபோன் கைப்பற்றப்பட்டது. ரஞ்சித் மற்றும் ஆனந்த் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரிக்குமாறு சொன்னான் எழில். நிர்மலாவின் ஃப்ரெண்ட் என்பதால் ஆனந்த் அதே பகையை மனதில் வைத்து மிருணாளினியை கொன்று இருக்கலாம் எனவும் நினைத்தான். பெட்ரோல் ஊற்றி எரிக்கபட்டதாக ரிப்போர்ட் சொன்னது. சாவதற்கு முன் அவள் நிறைய போராடி இருக்கிறாள் என்பதும் தெரிய வந்தது. ஷிவானிக்கு மெசேஜ் வந்தது மிருணாளினி கொலை கேஸ் சம்பந்தமாக உங்களை சந்திக்க வேண்டும் குறிப்பிட்ட இடத்தையும் நேரத்தையும் பிறகு மெசேஜ் மூலமாக சொல்கிறேன் என சொல்லப்பட்டு இருந்தது. நீ தனியாக போக வேண்டாம் நானும் வருகிறேன் என்றான் எழில். அதெல்லாம் வேண்டாம் நமக்கு கிடைத்திருக்கிற ஒரு வாய்ப்பு அதை சொதப்ப வேண்டாம் என்றாள் ஷிவானி.நான் உனக்கு அங்க என்ன நடக்குதுன்னு அப்டேட் பண்ணுறேன் என்றாள். ஒரு மணி நேரம் கழித்து அந்த மெசேஜ் வந்தது.
ஷிவானி ஆனந்திடம் மாட்டி விடக்கூடாது என்பதில் எழில் உறுதியாய் இருந்தான். அந்த பெண்ணுக்கு 22 வயதிருக்கும். ஷிவானி என்ன விஷயம் என்று ஆங்கிலத்தில் கேட்க நான் தமிழ்தான் இங்கே ஒரு ஃபேக்டரி ல வேலை பார்க்கிறேன் மிருணாளினி என்னோட சூப்பர்வைசர் தான். அன்னைக்கு அவங்களை வேலை முடிஞ்சு நான்தான் சுங்கசாவடி கிட்டே டிராப் பண்ணினேன் .அப்போ ஒரு ஆள் ஜீப் ல வந்து இறங்குனான். அவனை பார்த்ததும் திரும்ப என்கிட்ட வந்து என்னை வீட்ல விட்டுடு அப்படின்னு சொன்னாங்க. அவன் போட்டோ இதுவா பாரு அது ஆனந்த் தான் என்பதை உறுதிப்படுத்தினாள் அந்த பெண் ரஷ்மி. என்னாச்சு மேடம் ஏதாவது பிரச்சனையா அப்படின்னு நான் கேட்டப்ப அதெல்லாம் ஒன்னுமில்லைனு சமாளிச்சாங்க . அவங்க இறக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி இந்த லொகேஷன் அனுப்பி விட்டாங்க. அவங்க கணவர் மேலயும் எனக்கு சந்தேகம் அதனாலேதான் நான் யார்கிட்டயும் இதை பத்தி சொல்லல என்றாள். சரி ரஷ்மி நான் பார்த்துகிறேன். அந்த லொகேஷனை ஷிவானிக்கு அனுப்பினாள் ரஷ்மி. அதில் நான் ஆபத்தில் இருக்கிறேன் எனவும் அந்த மெசேஜ் சொன்னது.
எழில் உடனடியாக அந்த லொகேஷன் போய் விசாரித்தான். மிருணாளினி
போட்டோ மற்றும் ஆனந்தின் போட்டோ இரண்டையும் காட்டி விசாரித்தான். மிருணாளினி போட்டோவை பார்த்ததும் தெரியாது என சொன்னார்கள். ஆனந்த் போட்டோ பார்த்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டை காட்டினர், ஆனந்த் தப்பித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது இந்த கொலை நடந்திருக்கிறது. அந்த வீட்டை அணுகுமுன் துப்பாக்கியை தொட்டுபார்த்துக்கொண்டான். ஷிவானி அந்த வீட்டை சோதனை போட உயர் அதிகாரியிடம் பர்மிஷன் கேட்டுக் கொண்டிருந்தாள். ரஷ்மி தனக்கு ஃபோன் செய்ய வேண்டாம்என்று கேட்டு கொண்டிருந்த படியால் அவளை தொந்தரவு செய்யவில்லை ஷிவானி. ஆனால் ரஷ்மியை ஜாக்கிரதையாக இருக்கும் படி எச்சரித்து விட்டு வந்திருந்தாள். அந்த வீடு பின்புறம் வழியாக நுழைய முடிவு செய்தான் எழில் . உள்ளே டிவி ஓடும் சத்தம் கேட்டது. துப்பாக்கியை எடுத்துகொண்டு உள்ளே நுழைந்தவன் அங்குமிங்கும் வேகமாக பார்வையை செலுத்தினான். ஒருவரும் அங்கு இல்லை என தெரிந்தது. போலீஸ் பர்மிஷன் வாங்கி அந்த வீட்டை சோதனை போட்டனர். ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். அங்கு இருந்த மூடி இருந்த ஜீப்பை எழில் கண்டுபிடித்தான். ரஷ்மி அந்த ஜீப்பில் தான் ஆனந்த் வந்ததாக சொன்னாள். ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வீட்டை கண்காணிக்க ஏற்பாடு செய்தான் எழில்.
சுங்கசாவடி அருகே போய் விசாரித்தான். மிருணாளினி ஆனந்த்தை பார்த்ததாக சொன்ன சிசிடிவி ஃபுடேஜ் கிடைத்தது. அதில் ஆனந்த் உடன் மற்றவனும் இருந்தான். அது ரஞ்சித். ரஞ்சித்தை போலீஸ் பிடித்து விசாரித்த போது எனக்கு அவனை கொஞ்ச நாளாகத்தான் தெரியும். நான் ஒரு மோட்டார் இன்சூரன்ஸ் விற்பனை பிரதிநிதி. அதனால் அவன் என்னிடம் ஹெல்ப் கேட்டான். நானும் அன்று அவன் கூட போயிருந்தேன். ஆனால் அவனே என் மனைவியை கொல்லுவான் என எதிர்பார்க்கவில்லை. நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்து போயிருக்கிறாய் என்றான். ஆமாம் சார் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது . எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதை பயன்படுத்தி என வீட்டுக்கு வந்தான். வேற எதுவும் தெரியாது சார் என்றான் ரஞ்சித், ரஷ்மி கூறிய தகவல்கள் உண்மை என தெரிய வந்தது. உங்க மனைவி ஆபத்துல இருக்குறது கூட தெரியாம போதைல இருந்தேன் அப்படின்னு சொல்லறீங்க அப்படின்னா நீங்களும் ஒரு வகையில அவங்க கொலைக்கு காரணம் என்றான் எழில். ரஷ்மி வீட்டை ஒரு கான்ஸ்டபிள் கண்காணித்து வந்தார்.
ஆனந்த் எப்படி நடந்துகொண்டான் உங்க மனைவிகிட்ட. அவன் அப்போ மரியாதையாதான் பேசினான். ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் இல்லாத மாதிரி நடந்துக்கிட்டாங்க . மிருணாளினி இறந்தப்போ நீங்க எங்க இருந்தீங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க. உங்களுக்கு அந்த லொகேஷன் ஏன் அவங்க அனுப்பலை . இப்படி பல கேள்விகளை கேட்டதும் ரஞ்சித் பதில் சொல்லவில்லை. அப்போ நான் வந்து நான் வந்து என்று தடுமாறினான். ரஷ்மி வீட்டில் இருந்து கான்ஸ்டபிள் பேசினார். அவங்க எங்கேயும் போகல வீட்டுலதான் இருக்காங்க சந்தேகப்படுற மாதிரி யாரும் வரலை சார். அப்போது ஒரு கூரியர் வந்தது. அவனை மடக்கினார் கான்ஸ்டபிள். உள்ளேயிருந்து ரஷ்மி வெளியே வந்தாள் . யாரக்கிட்டேயிருந்து கூரியர். யாரோ மிருணாளினி அப்படின்னு போட்டிருக்கு மேடம். அவசரமாக அதை பிரிக்க முயன்றாள். கான்ஸ்டபிள் அதை தடுத்து ஷிவானிக்கு ஃபோன் செய்தார். அடுத்த அரைமணி நேரத்தில் ஷிவானி அங்கு வந்து சேர்ந்தாள்.கான்ஸ்டபிள் மயங்கி கிடந்தார். கூரியர் பார்சல் காணாமல் போய் இருந்தது . ரஷ்மி,ரஷ்மி என குரல் கொடுத்தவாரே உள்ளே நுழைந்த ஷிவானிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.