Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 13

ஷெரின் உனக்கு என்னதான் வேணும் என்று எழில் கேட்டான். இப்போதைக்கு இவனை கொல்லாம விடுறேன் அந்த முக்கிய புள்ளிகள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி குடுப்பீங்களா எழில் சார். நிச்சயமா ஷெரின். சேகர், சுமதி, திலகவதி இவங்க சாவுக்கு காரணமான இவனுக்கும்
ஆனந்துக்கும் தண்டனை வாங்கி தாங்க அது போதும் என்றாள். கமலன் உன்னை வார்ன் பண்ணி இத்தோட விடறேன். எனக்கு சட்டத்து மேல நம்பிக்கை இருக்கு என்றாள் ஷெரின். கமலனை அரை மயக்க நிலையில் நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வாசலில் கண்டெடுத்தார்கள் போலீஸ் . கண் விழித்ததும் போலீசார் அவனை அரெஸ்ட் செய்தனர். என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணுறீங்க ? அவ சொன்னா உடனே நம்பி விடுவீர்களா . இல்லை உங்களை விசாரிக்கணும்னு மேலிடத்து ஆர்டர்.

அடுத்து யார் கடத்தபடுவார்களோ என்ற எண்ணம் பரவலாக பேசபட்டு கொண்டிருந்தது. அதற்குள் ஷெரீனை கைது செய்ய உயரதிகாரியிடம் இருந்து பிரஷர் வந்து கொண்டிருந்தது. எழில் திரும்ப சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டான். ஷிவானி மகிழ்ச்சி அடைந்தாள் . ஷெரீனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சிவா,ஸ்வேதா இருவரும் ஷெரின்போலீஸிடம் கிடைத்து விட கூடாது என கடவுளிடம் வேண்டி கொண்டனர். ஷிவானி எழிலை சந்தித்தாள். ம் எனக்கு புரியுது நீ எனக்காக காத்திருக்க ஆனா அதை விட இங்க உயிர் பயத்தோட நிறைய பேர் இருக்காங்க. சற்றும் எதிர்பாராமல் ஆனந்த் ஜாமீனில் வெளியே வந்து விட்டான். என்ன சார் அநியாயம் இது என்றான் எழில் உயரதிகாரிகளிடம் . அவன் வெளில வந்தாதான் ஷெரினும் வெளியே வருவாயா. நமக்கு ஷெரின் ரொம்ப முக்கியம். நீங்க ஆனந்தை ஃபாலோ பண்ணுங்க . நீண்ட கால ஜெயில்வாசத்துக்கு பிறகு வெளியே வந்தவன் நேராக ஸ்வேதா வீட்டுக்கு போனான். என்ன ஸ்வேதா என்னை அப்படியே ஜெயில் உள்ளேயே இருக்க வைக்க ரொம்ப கஷ்டபடுற போல . அதெல்லாம் நடக்காது. ஒவ்வொரு சட்டத்தோட ஓட்டையிலும் நான் வெளியே வருவதற்கான வாய்ப்பு இருக்கு என்றான். சிவா வந்து நீ போ ஆனந்த் நாங்க உன் விவகாரத்திலே தலையிடலை. எங்களை வாழ விடு என்றான். ம் இனி நீ நிம்மதியா வாழறது கஷ்டம். என்றான்,


ஆனந்த் இன்னும் சில பேரை நேரில் போய் பார்த்தான். அவன் அப்பா அவன் மேல அளவுக்கு மேல் பாசம் கொண்டிருந்ததால் அவன் பேச்சை மீற முடியவில்லை. அவன் கோமாவில் இருந்து மீண்டு வந்தாலே போதும் என நினைத்தார்.ஆனால் அவனை திருத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஷிவானிக்கும் ஆனந்த் வெளியே வந்தது அதிர்ச்சியாய் இருந்தது. ரம்யா கொல்லபட்டதன் விளைவுகள் அப்படியேதான் இருந்தன. ஸ்வேதா என்ன சிவா அவன்கிட்ட போய் கெஞ்சுறியே அவனையெல்லாம் ஒரு மனுஷனா கூட மதிக்க கூடாது என்றாள். கொஞ்சம் பொறுமையா இரு எல்லாம் அவனுக்கு எதிரா இருக்கு நாம செய்ய நெனைக்கிறத அந்த ஷெரின் செய்து முடிப்பா. என்ன சொல்லுற நீ ஷெரீனை பார்த்தியா ? ம் அவ நம்மளை விட நூறு மடங்கு எதிர்ப்பு உணர்வோட இருக்கா. இனி நாம அமைதியா இருந்து ஆனந்த் அழிய போறதை பார்க்கலாம் என்றான்.


ஆனந்த் அடுத்து நிர்மலாவுக்கு ஃபோன் பண்ணினான். என்ன இன்னும் உன்னையும் உன் தம்பியையும் விட்டு வெச்சு இருக்கேன்னு பார்க்கிறாயா ? ஆட்டத்துல ஏதாவது ஒரு காய் இருந்தாதான் வெட்டுறதுக்கு ஸ்வாரஸ்யமாய் இருக்கும். அந்த மாதிரிதான் உங்களை விட்டு வெச்சு இருக்கேன். நீ இந்த மாதிரி வேலையெல்லாம் இன்னும் நிறுத்தலையா ? சும்மா பூச்சாண்டி காட்டாதே என்றாள் நிர்மலா. ஆனந்த் தன்னுடைய சுயத்தை தானே கேள்வி கேட்டுக்கொண்டான். பயம் போயிடுச்சா ? இல்ல இருக்கணும் என் மேல பயம் இருக்கணும் என நினைத்தான். அப்போது கால் வந்தது. ஷெரின் ஆங் புரட்சி போராளி ஷெரின் சொல்லும்மா எங்க இருந்து வித்தை காட்டிக்கிட்டு இருக்க என்றான். டேய் உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் உன்னோட முடிவை நீயே எழுதிப்ப என்றாள். இன்னும் எண்ணி ரெண்டு நாளிலே உன்னை தூக்குறேன் என சவால் விட்டான் ஆனந்த். ஆனந்த் நீ பழைய ஷெரீனா நினைத்து பேசறே போய் அந்த கமலன் கிட்ட கேளு .சீக்கிரம் உன்னை சந்திக்கிறேன் என்றாள்.


என்னடா இது எனக்கு வந்த சோதனை இவ எல்லாம் மிரட்டுறா ? நாம நம்ம வேலையை காட்ட வேண்டியதுதான். கமலனை ஜெயிலிலே வைத்து முடிக்க திட்டம் போட்டான் ஆனந்த். அவன்தான் இவன் ரகசியங்களை முழுமையாக தெரிந்தவன். அவனை தீர்த்து கட்டினால் ஓரளவுக்கு பிரச்சனைகள் தீரும் என நினைத்தான். அது வேண்டாம் ஜெயிலுக்கு வெளியே ஷெரின் செய்தது போல இருக்க வேண்டும் அப்போதுதான் போலீஸ் இன்னும் தீவிரமாக அவளை தேடுவார்கள் என்று யோசித்தான். அவன் யோசிக்கும் போதே ஜெயிலில் இருந்து கமலன் தப்பித்து விட்டதாக செய்தி ஓடியது. இதென்ன விசித்திரமாக இருக்கிறதே கோர்ட்டுக்கு கொண்டு போகும் வழியில் என்கவுண்டர் பயத்தில் தப்பி ஓடி விட்டதாக செய்தி வந்தது. கமலன் இவனுக்கு ஃபோன் செய்தான் ஆனந்த் என்னை எப்படியாவது காப்பாத்து ஆனந்த் அந்த எழில் வேண்டுமென்றே என்னை தப்பிக்க விடுவது போல கொல்ல பார்க்கிறான் என்றான். நீ நம்ம சேஃப் பிளேஸ் வந்துடு . மத்ததை நான் பார்த்துகொள்கிறேன் என்றான்.


எழில் இதை எதிர்பார்த்திருந்தான். அவன் ஓடி ஓடி அவனாகவே தான் புதைகுழியை அடைவான் என நினைத்தான். போலீஸ் ஆனந்த் வீட்டை சுற்றி வளைத்தது. ஆனந்த் அவன் எங்கே எனக்கு தெரியாது என்று சொன்னான் . கமலன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் கண் தெரியாமல் சிக்கி கொண்டான். ஆனந்த் ஃபோன் போலீஸ் கண்காணிப்பில் இருந்தது. கமலன் ஆனந்துடைய சேஃப் பிளேஸ் ஒன்றில் பதுங்கி இருந்தான். ஆனந்த் அவனை அழைக்கவில்லை. கொஞ்ச நாள் இப்படியே இருப்போம் என நினைத்தான் கமலன். ஆனந்த் போய் முக்கிய புள்ளிகளில் ஒருவரான ஜட்ஜ் ஒருவரை பார்த்தான். இந்த நேரத்துல ஏன் வந்தே ஆனந்த் நானும் ஒரு குற்றவாளி கூட தொடர்பு வைத்திருக்கிறேன் என்றால் பிரச்சனை பல மடங்கு வெடிக்கும் என்றார். அப்போ நான் கூட்டி வந்த பெண்களோட உல்லாசமாய் இருந்தப்போ ? ஆனந்த் அதை பத்தி பேசாதே அதுக்கு பதிலா தான் நீ இப்போ வெளியே இருக்கிற . இல்லேன்னா உன்னை இந்நேரம் எப்பவோ போலீஸ் அடிச்சு துவைச்சு இருப்பாங்க. ம் இப்ப உனக்கு என்ன வேணும். என் வீட்டை சுத்தி போலீஸ் இருக்க கூடாது நான் கமலனை பார்க்கணும் என்றான்.


இரண்டு நாட்கள் கழித்து கமலனை சந்திதான் ஆனந்த். எனக்கெதிரா வாக்குமூலம் கொடுத்திருப்ப போல அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ இங்கேயே இருக்கலாம் எவ்வளவு நாள் வேணா. நான் வெளியே நிலைமை சீரானதும் உன்னை கூப்பிட்டுக்கிறேன். சரி ஆனந்த். ஆனந்த் இப்போ இவனை கொன்னா அது அவ்வளவு சரியா இருக்காது. முதலிலே அந்த எழிலை கவனிப்போம்னு நெனைச்சான். சில உயரதிகாரிகளிடம் பேசினான் எழில் ட்ரான்ஸ்பர் ஏதாவது பண்ண முடியுமா ? அகெல்லாம் இப்போ நேரிடையா செய்ய முடியாது என கை விரித்து விட்டார்கள். ஷிவானி எழில் காதல் பற்றியும் அவனிடம் சொன்னார்கள். ஷிவானியும், எழிலும் சேர்ந்துதான் ஷெரீனை தப்ப விடுகிறார்கள் என்கிற மாதிரி சொல்லி வைத்தார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது ஷெரின் சரணடைய இருப்பதாக செய்திகள் வந்தன. ஷெரின் சரணடைய சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக சொன்னார்கள். குறிப்பிட்ட ஜட்ஜ் முன்னால் தான் சரணடைய இருப்பதாகவும், ஒரு தனியறையில் வாக்குமூலம் கொடுக்க இருப்பதாகவும் சொன்னாள்.

போலீஸ் அலர்ட் ஆனது. ஷெரின் சரணடைய மாலை 4 மணியை தேர்ந்தெடுத்திருந்தாள். போலீஸ் அவளை கை விலங்கிட்டு அழைத்து வந்தது . அந்த ஜட்ஜ் ஆனந்திற்கு வேண்டிய ஜட்ஜ். அவளுடைய கை விலங்கு அவிழ்க்கபட்டது. ஷிவானி தலைமையில் பெண் போலீஸ் புடை சூழ கோர்ட்டுக்குள் நுழைந்தாள் ஷெரின். கதவுகள் சாத்தப்பட்டன. அவளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னாள். மணியை கொலை செய்ததை ஒப்புகொள்கிறீர்களா என்ற கேள்விக்கும் ஆமாம் என்று ஒப்பு கொண்டாள். 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றார் ஜட்ஜ். ஆனந்த் ரொம்ப நாள் உயிரோடு இருக்க கூடாது என்றாள். இதை எதற்கு இங்கு சொல்கிறாய் என்றார் ஜட்ஜ். அவன் செய்த அக்கிரமங்களை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாள். அதெல்லாம் அனாவசியம் . நீங்களும் அவனுடைய ஆள் தானே என்றாள். நீ அதிகம் பேசுகிறாய். நான் உண்மையை தான் சொல்கிறேன் மிஸ்டர் நீலகண்டன். இனி நீ தப்ப முடியாது என்று மறைத்து வைத்த துப்பாக்கி கொண்டு சுட்டாள். சுருண்டு விழுந்தான். அங்கிருந்த ஷிவானி ஓடி வந்து பார்த்தாள். ஷிவானி அவளை நோக்கி துப்பாக்கி உயர்த்த மற்ற பெண் போலீஸ் அதை தடுத்து விட்டனர். இந்த மாதிரி ஆட்கள் நீதித்துறைக்குத்தான் அவமானம் என்றனர். ஷிவானியும் அவளை விரட்டி சென்றாள். தயாராய் இருந்த வண்டியில் ஏறி பறந்து விட்டாள் ஷெரின். விஷயம் கேட்டு அதிர்ந்தான் ஆனந்த் இனி யார் அவனுக்கு உதவி செய்ய போகிறார்கள். கமலன் என்னப்பா நீலகண்டனை கொன்னுட்டாங்களே ? என்ன பண்ணுறது என்றான் . நீ கொஞ்ச நேரம் வாயை மூடு . இனி அவளுக்கெதிரா யாரும் எந்த ஆர்டர் கொடுக்கமாட்டாங்க. நான் கொஞ்சம் வெளிலே போயிட்டு வரேன் நீ ஜாக்கிரதை என்றான்.

ஷெரின் ஆனந்திடம் பேசினாள் .என்ன மிஸ்டர் ஆனந்த் கமலனை எத்தனை நாள் ஒளித்து வைப்பாய் . அவனுக்கு உன் கையால்தான் சாவு . அந்த தீர்ப்பையும் நானே எழுதுகிறேன். ஷெரின் ஷிவானி இருக்கிற தைரியத்தில்தானே ஆடுகிறாய் உனக்கு எதிராக கண்டதும் சுட உத்தரவு வந்திருக்கிறது. ம் நான் என் சாவை பற்றி கவலைப்படவில்லை உன் நாட்களை எண்ணிக்கொண்டிரு என்றாள். நீ பேசு உனக்கு உதவி செய்யும் ஒவ்வொருவருக்கும் இனி ஆபத்துதான் என்றான் ஆனந்த்.