ஷிவானி தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உயரதிகாரிகளால் கட்டாயபடுத்தப்பட்டாள் . எழிலும் அப்படி நீ அலட்சியமா இருந்திருக்க கூடாது என்றான். சாரி எழில் அப்போ இருந்த டென்ஷன் ல ஷெரினோட நிலைல இருந்து யோசிச்சுட்டேன். இப்போ எனக்குத்தான் தலைவலி என்றான் எழில். எனக்கொரு முடிவு சொல்ல மாட்டேங்குறீங்க ? இப்போ அதுதான் ரொம்ப முக்கியம். ஆமா எனக்கு அதுதான் முக்கியம். சரி நான் ஐஜி ஆபீஸ் வர போக வேண்டியிருக்கு. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு என்றான். ஷெரினை பிடிக்க புதிதாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன கூடவே கமலனை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஷெரினுக்கு அடைக்கலம் கொடுப்பது யார் என்ற கேள்வியே மிஞ்சி நின்றது. அதற்கு விடை ஸ்வேதாவிடம் இருந்தது. ஷெரின் கொஞ்ச நாளைக்கு என் கசின் ஒருத்தன் ஆந்திராவுல இருக்கான் அங்க போய் இரேன் என்றாள் ஸ்வேதா. இங்க போலீஸ் தொந்தரவு அதிகமா இருக்கும். ம் எனக்கு ஓகே தான். என்னால உங்களுக்கும் சிரமம் என்றாள். உங்க அப்பாவை பார்த்துட்டு அப்புறமா ஆந்திரா போ. இப்போ இருக்குற நிலமைல அவரை பார்க்க வேண்டாம்னு நினைக்கிறேன் என்றாள் ஷெரின் .
சிவா எதுவும் சொல்லவில்லை. போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஆந்திரா போய் சேர்ந்தாள் ஷெரின். எழில் கமலனை தேடும் பணியில் பிஸி ஆனான். எழில் வீட்டில் ஷிவானியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அவளை நேரில் பார்த்து விஷயத்தை சொல்ல விருப்பம் கொண்டான். ஷிவானி வீட்டுக்கு போன போது அவள் அங்கு இல்லை, உன்னை பார்க்கத்தானே அவ உங்க வீட்டுக்கு வந்தா என்றாள் ஷிவானி அம்மா. ஷிவானிக்கு ஃபோன் செய்தான். அவள் ஃபோன் எடுக்கும் வரை அவனுக்கு உயிரே இல்லை. என்னாச்சு வீட்ல இல்லை அப்படின்ன உடனே பயந்துட்டீங்களா ? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்றான். எப்போ பார்க்கலாம் . இன்னொரு அரைமணியில . ஓகே என்றான். அவளுக்காக காத்திருப்பது பரவசமாக இருந்தது. விஷயத்தை இந்நேரம் கண்டுபிடித்திருப்பாள் என்றே நினைத்தான். ஷிவானி வந்ததும் அவனை கட்டிக்கொண்டாள். ஐ லவ் யு எழில் என்றாள். அவன் எதுவும் பேசுவதற்கில்லை.
இன்னும் ரெண்டு மாசத்திலே கல்யாணம் . நிச்சயதார்த்தம் அடுத்த வாரம் நீங்க ரெண்டு பெரும் கட்டாயம் வரணும் என்றாள் ஷிவானி . சிவாவும், ஸ்வேதாவும் நிச்சயமா வரோம் என்றனர். நிர்மலா கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்றான் எழில்.ஷிவானியும், எழிலும் விடை பெற்றனர்,
என்ன ரெண்டு பேரும் கல்யாணம் வரைக்கும் போயிட்டாங்க என்றான் கமலன். அவன் ஹாப்பி மூடுலேயே இருக்கட்டும் என்றான் ஆனந்த். ஷிவானி கல்யாண வேலைகளில் மூழ்கினாள். ஷெரின் ஃபோன் பண்ணியிருந்தாள் சிவாவுக்கு. ஷெரின் அப்பாவை பெங்களூர் சென்று பார்த்து வரும்படி கேட்டு கொண்டாள்.சரி கண்டிப்பா பார்க்கிறேன் என்றான். ஸ்வேதாவையும், நிர்மலாவையும் தனியாய் விட யோசனை செய்தான். ரெண்டு நாளைக்கு ஷிவானி மேடம் கூட இருக்கீங்களா என்றான். சரி என்றாள் ஸ்வேதா. ஷிவானியும் சந்தோஷப்பட்டாள்.
சிவா பெங்களூர் சென்று பார்த்தபோது ஷெரின் அப்பா மிகவும் முடியாமல் இருந்தார். அவரை ஹாஸ்பிடல் அழைத்து சென்றான். அவர் இனிமேல் நான் ஷெரீனை பார்க்கவே முடியாதா என்றார். சிவா அவரை சமாதானபடுத்திவிட்டு ஊர் திரும்பினான்.
ஸ்வேதாவும், நிர்மலாவும் ஷிவானியின் நெருங்கிய தோழிகள் போல வலம் வந்தனர். இன்னும் ரெண்டு நாள்தானே நிச்சயதார்த்தத்துக்கு இருக்கு இவர்கள் இங்கேயே இருக்கட்டும் என்றாள் ஷிவானி. சரிதான் என்றான் சிவா. எழில் நேரமில்லாமல் சுற்றி வந்தான் . கமலனை தேட தனிப்படைகள் அமைத்தும் பலனில்லை.எழில், ஷிவானி நிச்சயதார்த்தம்
சிறப்பாக நடைபெற்றது. சிவா, ஸ்வேதா, நிர்மலா வந்திருந்து வாழ்த்தினார்கள். ஃபங்சன் முடிந்ததும் தனியாக விடப்பட்டார்கள். எழில் இன்னைக்கும் ஏன் டென்ஷன் ஆ இருக்க என்றாள் ஷிவானி, இன்னும் இந்த கமலன் சிக்கலை. ம் அதெல்லாம் அப்புறம் என்னோட ஸ்பெஷல் கிப்ட் எங்கே என்றாள். இப்போவே குடுக்கவா என்றான் .ஓகே என்று கண்களை மூடினாள். அவள் உதட்டில் முத்தமிட்டான் அவளுடைய விரல்களில் மோதிரத்தை மாட்டினான் . வெட்கம் மின்ன எப்பவுமே இதே அன்போட இருப்பியா எழில் ? என்றாள். நிச்சயமா ஷிவானி.
சிவாவுக்கு ஆனந்திடம் இருந்து ஃபோன் வந்தது. என்ன சார் கனவுல இருக்கீங்களா ? என்ன விஷயம் ஆனந்த். ஷெரின் அப்பாவை போய் பார்த்துட்டு வர அளவுக்கு நெருக்கமாகி விட்டீர்களா அது உனக்கு தேவையில்லாத விஷயம் ஆனந்த். சீக்கிரம் அவருக்கு சங்கு ஊதறேன் அப்போ ஷெரின் வருவாயில்ல என்றான். ஆனந்த் நீ எல்லை மீறி பேசுற என்றான். அவளை வெளில வரவைக்குறேன் நீ அதை பார்ப்ப. ஷெரினுக்கு போன் பண்ணி எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொன்னான் சிவா. கமலன் இருக்கும் இடம் தெரிந்து விட்டது, அவன் மனைவியிடம் நடத்திய விசாரணையில் தெரிந்து விட்டது. அவளை கமலனுக்கு ஃபோன் பண்ண சொன்ன போது லொகேஷன் தெரிந்து விட்டது. உடனடியாக போலீஸ் குவிக்கப்பட்டது. கமலனை உயிரோடு விடுவதால் எந்த பயனும் இல்லை அதே சமயம் போலீஸ் கவனத்தை முழுக்க கமலன் பக்கமே இருக்குமாறு பார்த்து கொள்ள முடிவு செய்தான் ஆனந்த் . போலீஸ் பிடியில் இருப்பதை விடவும் ஹாஸ்பிடலில் இருக்க முடிவு செய்தான் கமலன். பிடிபட்டதும் நெஞ்சு வலி வந்தது போல நடித்தான். அவசரமாக அட்மிட் செய்தனர். ட்ரீட்மெண்ட் தொடர்ந்தது.
கமலன் உன்னை இங்கேயே வெச்சு முடிக்க எங்களால் முடியும். ஆனா நீ ஆனந்துக்கு எதிரா சாட்சி சொல்லலேன்னா எங்களுக்கு அதை வேற வழி இல்லை என்றான் எழில்.உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன் என்றான். கமலன் பையனை காணவில்லை என்ற செய்தி கேட்டு கமலன் துடித்தான். பையன் என்கிட்டதான் இருக்கான் நீ வாயை திறந்தா பையன் குளோஸ் என்று போனில் எச்சரித்தான் ஆனந்த். இதை கேள்விபட்ட எழில் ஆனந்த் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போவான் என நினைத்துக்கொண்டான். கமலன் எப்படியாவது என் பையனை காப்பாத்துங்க எழில் என கெஞ்சினான். ஆனந்த் தான் இதை செய்தான் என்பதற்கு எந்த சாட்சியுமில்லை. உனக்கு என்ன வேணும் ஆனந்த் பையனை விட்டுடு என்றான் எழில். எனக்கு ஷெரின் வேணும் என்றான் ஆனந்த். அது நாங்க இன்னும் அவளை தேடிட்டுதான் இருக்கோம். பொய் சொல்லாத எழில் அவ எங்க இருக்கான்னு சிவாவுக்கு நிச்சயமா தெரியும். அவ்வளவு ஏன் உனக்கும் தெரியும். அவ இருக்குற லொகேஷன் சொல்லு போதும் . நான் அவ கதையை முடிக்கிறேன் என்றான். எனக்கு கொஞ்சம் டைம் குடு. ஓகே. அது வரை பையன் சேஃப் ஆ இருப்பான்.
ஷிவானி உள்ளிட்ட யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனந்த் ஜாமீனை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை வைத்தான் எழில். அது மறுக்கப்பட்டது.
ஷெரின் நான் வேணும்னா ஸரண்டர் ஆகிறேன் என்றாள் சிவாவிடம். அவங்க உன்னை என்கவுண்டர் பண்ணிடுவாங்க அப்புறம் நீ போராடுனதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். இப்போ அந்த பையனை ரிலீஸ் பண்ண என்ன வழி என்றாள் ஷெரின். எழில் ரகசியமாக சில பேரை விட்டு ஆனந்தை கண்காணிக்க செய்தான். ஆனால் பையன் உள்ளூரில் இல்லை என்பது தெளிவானது. அவனை ஆந்திராவுக்கு கடத்தியிருக்கலாம் என சொன்னார்கள். விஷயம் ஷெரின் காதுக்கு போனது. கமலன் நிலைமை நிஜமாகவே மோசமாய் போனது. எழிலுக்கு வேறு வழி எதுவும் தோன்றவில்லை. ஷிவானியை ஆந்திராவுக்கு பயணிக்க சொன்னான். நாம போய் அந்த பையனை தேடித்தான் ஆகணும் என்றான் எழில். சரி நான் போறேன் அங்க லோக்கல் போலீஸ் சப்போர்ட் பண்ணுவாங்களா ? நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் நிச்சயம் பண்ணுவாங்க.
ஷிவானியை அனுப்ப மனமில்லாத போதும் அந்த பையனை காப்பாற்ற துடித்தான் எழில். நீ போனதும் என்னை காண்டாக்ட் பண்ண வேண்டாம் . நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோ என்றான். அந்த பையனை பற்றிய டீடெயில்ஸ் அடங்கிய ஃபைல் ஒன்றையும் கொடுத்தான். ஷிவானி ஆந்திராவுக்கு பயணமானாள் . ஷெரின் தன்னால் உதவ முடியாததை எண்ணி வருத்தப்பட்டாள். லோக்கல் போலீசின் உதவியுடன் கமலன் பையனை தேட தொடங்கினாள் ஷிவானி . மறுபடி ஆனந்த் உடன் பேசி பார்த்தான் எழில். எனக்கு ஷெரின் வேணும் அவ்வளவுதான் என்றான் விடாப்பிடியாக . நாம ஏன் பையனை ஆந்திரா முழுக்க தேடனும் ஒருவேளை பையன் ஆந்திரா பார்டர் ல எங்கேயாவது இருந்தா ? என்றாள். ஒரு டீம் ஆந்திரா பார்டர் விரைந்தது. இப்போதான் மேடம் அவங்க பையனை சென்னைக்கு திரும்ப கொண்டு போறாங்க என்று தகவல் வந்தது. சிவா என்னை தடுக்காதீங்க நான் போறேன் என்றாள் ஷெரின். அவசரப்பட வேண்டாம் பையன் சென்னைக்கு போயிட்டதாலே ஃபுல் கண்ட்ரோல் எழில் வசம் இருக்கும என்றான் சிவா.சிவா நீங்க ஒண்ணு செய்யுங்க நான் சொல்லுற மாதிரி ஆனந்துக்கு சொல்லுங்க. சரி. ஆனந்துக்கு ஃபோன் செய்தான் சிவா. ஷெரின் உங்களை பார்க்கணுமாம். நாளைக்கு அவ சென்னை வரா .ஏர்போர்ட் ல வெச்சி நான் அவளை உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் பையனை நீங்க ஒப்படைங்க . சிவா இதுல டிரிக்ஸ் எதுவும் இல்லையே நிச்சயமா இல்லே. எத்தனை மணிக்கு வரணும்னு நான் மெசேஜ் பண்ணுறேன் என்றான் ஆனந்த்,
துடிக்கும் இதயத்துடன் ஷெரின் ஆந்திராவை விட்டு கிளம்பினாள் . சிவாவுக்கு என்ன செய்ய போகிறாள் ஷெரின் என்று தெரியாது. விஷயம் எழிலுக்கும் ஷிவானிக்கும் தெரியாது, ஏர்போர்ட் வாசலில் ஷெரினுக்காக காத்திருந்தான் ஆனந்த். அப்போது அந்த கால் ஷெரினிடம் இருந்து வந்தது. அதை எடுத்து பேசினான் என்ன ஷெரின் உன் ஆட்டமெல்லாம் அவ்வளவுதானா என்றான்.