வெளியே யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது அவசரமாக இருவரும் வெளியேறினர். சிவா அந்த டைரியை புரட்டினான் . அது சுமதியின் டைரிதான். என்னை ஆனந்த் ஏமாற்றினான். ஆனால் அரவிந்த் துரோகம் இழைத்து விட்டான் என்று எழுதப்பட்டு இருந்தது . அரவிந்த் எதுவும் தெரியாதது போல நடிக்கிறானா என சிவா யோசிக்கும் வேளையில் அரவிந்த்திடம் அந்த டைரியை குடுத்தான். அரவிந்த் எதுவும் பேசவில்லை .
சரி சிவா நானே இனி இந்த விவகாரத்தை பார்த்து கொள்கிறேன் எனக்காக இவ்ளோ தூரம் ரிஸ்க் எடுத்ததற்கு நன்றி என்றான். சிவா குழம்பியவாறு விடைபெற்றான்.
சிவா வீட்டுக்கு வந்தபோது ஸ்வேதா கிச்சன் உள்ளே சமைத்து கொண்டிருந்தாள். சிவா நடந்ததை சொன்னான். சரி சிவா போனது போகட்டும் குளித்துவிட்டு வந்து சாப்பிடு என்றாள். சிவா சாப்பிடும் போது அவளுக்கும் ஊட்டி விட்டான். அரவிந்த் என்பவர் மர்ம நபர்களால் கடத்தல் . போலீஸ் காரணம் தெரியாமல் திணறல் என்ற செய்தி ஓடியது . அப்போது சிவாவுக்கு கால் வந்தது .போலீஸ் நீங்க உடனே b2 ஸ்டேஷன் வாங்க. போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான். அரவிந்த் மனைவி அழுதபடி இருந்தாள் .
அவரு கடைசியா உங்ககிட்டதான் பேசி இருக்காரு, சிவா நடந்ததை சொன்னான். கே கே எங்கே இருக்கான்னு கண்டு பிடிக்க முடிஞ்சுதா என்றார் இன்ஸ்பெக்டர். அவனோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு . சார் அந்த கார் இப்போ மந்தவெளி பக்கத்துல நிறுத்தி இருக்காங்க . உடனே அங்க போகலாம் .சிவாவையும், அரவிந்த் மனைவியையும் ஏற்றிக்கொண்டு
காவல் வாகனம் விரைந்தது .
கார் காலியாக இருந்தது . பின் பக்க டிக்கியில் அரவிந்த் இறந்த நிலையில் கிடைத்தான். துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருந்தான். ரம்யா , சேகர், ஸ்வேதா எல்லோரும் அவன் இறுதி சடங்கிற்கு வந்திருந்தனர் . இன்ஸ்பெக்டர் சிவாவை தனியாக கூப்பிட்டு கே கே யோட வீட்டை சோதனை போட்டதில ஒண்ணும் கிடைக்கல. கே கே வ தேடபடுற குற்றவாளியா அறிவிச்சிருக்கிறோம். நீங்க ஜாக்கிரதையா இருங்க அவங்க அடுத்த டார்கெட் ஆனந்த் ஆ கூட இருக்கலாம். அதனால் அவங்க வீட்டுக்கும் போலீஸ் ஃபோர்ஸ் போட்டிருக்கோம் என்றார். ரொம்ப நன்றி இன்ஸ்பெக்டர் . ஆனந்த் அப்பா நான் டாக்டர் கிட்ட பேசி விட்டேன் . நாம சட்டபடி விவாகரத்துக்கு அப்ளை பண்ணலாம் ஸ்வேதா என்றார். அரவிந்த் வீட்டிலும் போலீஸ் சோதனை போட்டது . அரவிந்தின் பெர்சனல் லேப்டாப்பை கைபற்றி அதையும் செக் செய்து பார்த்தார்கள் . அதில் முரளி என்பவரின் இன்டெர்நெட் சேவை வழங்குபவரின் முகவரி கிடைத்தது . போலீஸ் முரளியை தொடர்பு கொண்டபோது அரவிந்த் என்னிடம் கொஞ்ச நாளைக்கு முன் ஒரு டிஸ்க் கொடுத்து ஒரு வீடியோ இருக்கிறது இதை இணையத்தில் அப்லோட் செய்து விடு என்று சொன்னான். ஆனால் அந்த வீடியோ பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்திருந்தான். அது அரவிந்துக்கு தான் தெரியும். இப்போது அவனே இறந்து விட்டான். இதுதான் அந்த வீடியோ என்று டிஸ்க் கொடுத்தான்.
போலீஸ் எவ்வளவோ முயன்றும் அதை ஓபன் செய்ய முடியவில்லை. சிவா ஸ்வேதா இருவரும் விவாகரத்து சம்பந்தமாக வக்கீலை பார்த்து பேசிவிட்டு வந்தனர். ரம்யா கணவனோடு வெளிநாடு போக தயாராகி கொண்டிருந்தாள். அதற்காக ஒரு பார்ட்டி அரேஞ்ச் செய்திருந்தாள். முரளி மீது போலீசுக்கு சந்தேகம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்வேதா இந்த கேஸ் இப்போதைக்கு முடியாது போல என்றான் சிவா. சேகர் எனக்கும் அதேதான் கவலையாய் இருக்கிறது என்றான். ஒண்ணும் கவலை படாதீர்கள் ஆனந்த் கோமாவில் இருந்து மீண்டு வந்ததும் எல்லா பிரச்சனையும் சரி ஆகிவிடும் என்றாள் ஸ்வேதா. பார்ட்டி நல்ல படியாக முடிந்தது . கே கே இன்னும் கிடைத்தபாடில்லை. போலீஸ் முரளி வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுத்திருந்தது . முரளியை போலீஸ் துருவி துருவி விசாரித்தது . அவன் தனக்கு எதுவும் தெரியாது என சாதித்தான். சுமதியின் தோழிகள் வட்டாரத்திலும் விசாரிக்க பட்டது . அவர்களும் ஒரு தகவலும் தரவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து முரளிக்கு ஃபோன் வந்தது . உன் சர்வர் மூலமாகதான் வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கிறது . உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் அதற்குள் நீ அப்லோட் செய்த பெர்சனல் வீடியோவை எல்லாம் டெலீட் செய்யாவிடில் உன் உயிர் இருக்காது . முரளி முடிந்தவரை தான் அப்லோட் செய்த ஆபாச வீடியோவை டெலீட் செய்தான். போலீஸ் அவனை கண்காணித்து கொண்டிருந்தது . அது சுமதியின் வீடியோவாக இருக்கலாம் என ஸ்வேதா சொன்னாள். முரளி போலீஸ் கண்காணிப்பில் இருந்த போதே கடத்தப்பட்டான் . போலீஸ் கடத்தல் கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் . அந்த டிஸ்க் எங்களுக்கு வேணும் என்று டிமாண்ட் வைத்தான் கே கே . சிவாவிடம் டிஸ்க் கொடுத்து அனுப்பும் படி சொல்லி இருந்தான் கே கே . போலீஸ் அதை சிவாவிடம் கொடுத்தனுப்ப தீர்மானித்தனர். முரளி உனக்கு அந்த டிஸ்க் பாஸ்வேர்ட் தெரியும் அதை சொல்லிவிடு என்றான் கே கே . முரளி அதை சொல்லிவிட்டால் தன்னை கொன்றுவிடுவான் கே கே என்பதும் அவனுக்கு தெரியும்.
சிவா கே கே யை சந்தித்தான். என்னதான் வேணும் உனக்கு . அது உனக்கு தேவையில்லாத வேலை டிஸ்க் கொண்டு வந்திருக்கியா என்றான். முதல்ல முரளியை காட்டு . முரளி அந்த டிஸ்க் பாஸ்வேர்ட் சொல்லிவிடு வீணா உயிரை விட்டு விடாதே என்றான் கே கே . முரளியை துப்பாக்கி முனையில் பிடித்திருந்தான் கே கே. டிஸ்க் கொடுத்தான் சிவா . சிவா நான் உன்னை இப்படியே விடுறதுக்கு காரணம் நீ நியாயமா நடந்துதுக்குவ அப்படின்னுதான். முரளி முன்னாடி சிஸ்டம் வைக்கப்பட்டது. டிஸ்க்கை அதிலே பிளே செய்தான் கே கே . முரளி கடைசியா கேக்குறேன் பாஸ்வேர்ட் போடு என்றான். சிவாவை கே கே யின் ஆட்கள் வெளியேற்றினார்கள். முரளி பாஸ்வேர்ட் போட்டான். அடுத்த நிமிடம் கே கே யிடம் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தான். கே கே அதில் இருந்த வீடியோவை டெலீட் செய்தான். போலீஸ் அந்த பில்டிங் சுற்றி வளைத்தது . கே கே சலனமில்லாமல் ஸரண்டர் ஆனான். போலீசிடம் அரவிந்த்,முரளி இருவரையும் கொன்றது தான்தான் என வாக்குமூலம் கொடுத்தான். காரணம் என்ன என்பதை சொல்ல மறுத்து விட்டான். கே கே அரெஸ்ட் ஆனதும் சிவா நிம்மதி பெருமூச்சு விட்டான். அப்போதுதான் அந்த ஃபோன் கால் ஸ்வேதாவுக்கு வந்தது ஆனந்த் கண்விழித்து விட்டான். கோமாவில் இருந்து கண்விழித்து விட்டான் என்ற செய்தி இடி போல தாக்கியது .
ஆனந்த் கண் விழித்த செய்தி கேட்டு உடனடியாக ஸ்வேதாவும், சிவாவும் வீட்டை நோக்கி விரைந்தனர். ஆனந்தை டாக்டர்கள் பரிசோதித்து கொண்டிருந்தனர். ஸ்வேதா என்னாச்சு அங்கிள் என்றாள். திடீர்னு எழுந்து உக்காந்து தண்ணி வேணும் கேட்டான் . ஹவுஸ் நர்ஸ் நல்ல வேலை பக்கத்திலேயே இருந்தாங்க . கொஞ்ச நேரத்துல மறுபடியும் மயக்கத்துக்கு போயிட்டான். டாக்டர்களை ஃபோன் பண்ணி வர வெச்சேன். டாக்டர் ஸ்வேதா அருகில் வந்து நீங்கதான் அவங்க மனைவியா ?ஆமாம் டாக்டர். அவருக்கு தற்காலிகமா ஒரு நினைவு தோன்றல் ஏற்பட்டு இருக்கு. அவர் கூட நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது பேச்சு குடுங்க. அவரு சுமதினங்கிற பேரை சொல்ல ட்ரை பண்ணினாரு . யார் அந்த சுமதி. அவங்க இவரோட காலேஜ் மேட் சமீபத்துல சூசைட் பண்ணிக்கிட்டாங்க என்றாள் ஸ்வேதா. வெரி சாரி . நீங்க இனிமேத்தான் கவனமா பார்த்துக்கணும் என்றார்.
ஸ்வேதாவும்,சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கே கே வை எவ்வளவோ விசாரித்த போதும் அவன் வாயை திறக்கவில்லை. என்ன காரணத்துக்காக முரளியையும் ,அரவிந்தையும் கொன்றான் என்பதை சொல்லவில்லை. இன்ஸ்பெக்டர் சிவாவுக்கு ஃபோன் செய்தார் . ஆனந்த் கண் முழிச்சு விட்டாராமே ? இல்லை சார் இன்னும் முழுமையாக நினைவு திரும்பவில்லை. ஓ இங்கே கே கே எந்த பதிலும் சொல்ல மாட்டேன் என்கிறான். கொஞ்சம் நீங்கள் ஸ்டேஷன் வரை வர முடியுமா உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறான். சரி வருகிறேன். சிவா கே கே வின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடதில் என்ன சொல்ல வேண்டும் கே கே . நீ எனக்காக ஒரு உதவி செய்யவேண்டும் என்றான். சொல்லு முடிஞ்ச செய்யுறேன் என்றான். என் மனைவி சுமதி தற்கொலை செய்து கொண்டது உனக்கு தெரியும் அதன் சரியான காரணம் எனக்கு பிடிபடவில்லை. என்ன சொல்லுறே கே கே ஏற்கனவே ரெண்டு பேரை கொன்னுட்டியே இன்னும் என்ன இருக்கு அவங்கெல்லாம் ஒரு விதத்துல காரணம் நிஜமான காரணகர்த்தா யாருன்னு கண்டுபிடிக்கணும். நீ இதை போலீஸ் கிட்டயே சொல்லலாமே . நான் முன்னமே கொடுத்த கம்ப்ளைண்ட் போலீஸ் பிராப்பர் ஆ விசாரிச்சி இருந்தா நான் ஏன் இந்த கொலைகளை செய்ய போறேன். நீ போய் நிர்மலா அப்படின்னு சுமதியோட ஃப்ரெண்ட் அவங்களை பாரு அவங்க உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுவாங்க.நான் தூக்குல தொங்க போறது உறுதி எனக்காக இந்த உதவிய செய் சிவா என்றான். அவனுடைய கண்கள் கலங்கி இருந்தன.
ஸ்வேதாவிடம் பேசினான் சிவா. எதுக்கு சிவா நமக்கு இதெல்லாம் என்றாள். கே கே சொல்லுறதுல ஒரு உண்மை இருக்கு . சுமதிய தற்கொலைக்கு தூண்டுனவுங்க யாரோ அவங்க இன்னும் வெளியே தான் இருக்காங்க. அவங்களால இன்னும் பல பேர் பாதிக்கபடலாம் என்றான். ஸ்வேதா சிவாவை அணைத்துகொண்டாள். சேகரை பார்த்து பல நாள் ஆகி விட்டது ஈவினிங் மீட் பண்ண வர சொன்னான் . சேகர் என்னாச்சு சிவா ஸ்வேதா என்னவெல்லாமோ சொல்லுறா ?ஆமாம் நான் இந்த கேஸ் விசாரிக்கிறதா முடிவு பண்ணிட்டேன். அவனுக்கே அந்த குற்றவாளி யாருன்னு தெரியல நம்மால கண்டு பிடிக்க முடியுமா சிவா? நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா முடியும். நானா? என்னால முடிஞ்சதை நிச்சயம் செய்யுறேன் என்றான்.
நிர்மலா ஃபோன் நம்பர் குடுத்திருந்தான் கேகே . ஃபோன் பண்ணினால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது . நிர்மலா அட்ரஸ் தெரிந்த ஒரு நெட்வொர்க் ஆபரேட்டர் மூலமாக வாங்கினான் சிவா. கோடம்பாக்கத்தில்தான் அவளுடைய வீடு இருந்தது. சிவா என்ன தேட போகிறான் என்பது தெரியாமலே காரியத்தில் இறங்கி விட்டான். காலிங் பெல் அழுத்தினான். வெளியே ஒரு 15 வயது பையன் வந்தான். நிர்மலா இருக்காங்களா கே கே அனுப்பிச்சாரு என்றான் . அக்கா கோர்ட் வரை போயிருக்காங்க நீங்க ? என் பேரு சிவா . அக்காவுக்கு ஃபோன் பண்ணி பார்த்தீங்களா ?ஸ்விட்ச் ஆஃப் னு வந்தது. சரி உள்ள வந்து உக்காருங்க. அவங்க வர நேரம்தான். அம்மா, அப்பா ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்லை. நானும் அக்காவும் மட்டும்தான். கொஞ்ச நேரத்தில் நிர்மலா வந்து விட்டாள். தம்பி நீ உள்ளே போய் படி என்று அந்த பையனை அனுப்பினாள். சொல்லுங்க கே கே சொன்னாரு நீங்க வருவீங்க அப்படின்னு. கொஞ்சம் இருங்க வந்து விடறேன் என்று உள்ளே போனாள். சாதாரண உடையில் வந்தாள்.