விடிந்ததும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்வேதா சாரி ஏதோ அசதில அப்படியே தூங்கி போயிட்டேன் . சரி குளிச்சு ரெடி ஆகு நாம கோவிலுக்கு போகலாம். சரி ஸ்வேதா, கடவுள் சந்நிதானத்தில் நாங்க எந்த தப்பும் செய்யல சீக்கிரம் ஸ்வேதாவை கல்யாணம் பன்னிக்கணும் என்று வேண்டிக்கொண்டான் . சேகர் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. சேகர் தலைமறைவாய் இருப்பதை பற்றி கவலையாய் இருந்தது சிவாவுக்கு . ஸ்வேதாவிடமும் சொன்னான்.ஆனந்த் விஷயத்துல என்ன நடந்திருக்கும்னு என்னால கணிக்கவே முடியல.. சிவா நீ அனாவசியமா பயப்படுறே என்றாள் ஸ்வேதா.இரண்டு நாட்கள் கழித்து சேகர் ஃபோன் செய்தான். அவசரம் நீ உடனே புறப்பட்டு ஹோட்டல் ஜெயண்ட்க்கு வந்துடு என்று சொன்னான். சேகர் இளைத்து போயிருந்தான். அவனுடைய கண்கள் தூக்கத்துக்காக ஏங்கி கொண்டிருந்தன. என்ன நடந்துச்சு ஏன் இப்படி இருக்கே உடம்பு சரியில்லையா என கேள்விகளை அடுக்கினான் சிவா. எனக்கு ஒண்ணும் இல்ல. அன்னைக்கு ஆனந்த் மாடியில் இருந்து கீழே விழுந்தவுடனே எனக்கு ஃபோன் வந்தது அடுத்து நீதான்னு அந்த குரல் சொல்லியது . அது ஒரு லேடீஸ் வாய்ஸ். நான் அதை பெருசா எடுத்துக்கலை . ரெண்டு நாள் கழித்து ஒரு பார்சல் வந்தது. அதில் இருந்த பென் டிரைவ் போட்டு பார்த்தப்ப அதே பெண் குரல் நீயும் உன் ஃபிரண்ட்ஸ் யாருமே தப்ப முடியாது அப்படின்னு சொன்னது. என்னால அந்த வாய்ஸ் யாருதுன்னு கண்டு பிடிக்க முடியல. போலீஸ்கிட்ட சொன்னதுக்கு அவங்க அலட்சியமா இருக்காங்க. இதுதான் அந்த பென் டிரைவ், அதுக்கப்புறம் எங்கே போனாலும் யாரோ என்னை ஃபாலோ பண்ணுற மாதிரியே ஃபீலிங்க் என்றான். அந்த பென்டிரைவ் உடன் கே கே என்ற பெயர் பொறித்த கீ செயின் இருந்தது.
சரி நான் இதை செக் பண்ணுறேன் எனக்கு, இல்லை ஸ்வேதாவுக்கு தெரிஞ்சவங்க வாய்சா இருந்தா நானே உனக்கு கால் பண்ணுறேன். சரி சிவா. ஜாக்கிரதையா இருடா. சேகர் விடைபெற்றுக்கொண்டான் .சிவா ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். நீ உடனே வீட்டுக்கு வா என்றாள்.வீட்டுக்கு வந்து லேப்டாப்பில் போட்டு பார்த்தபோது ஸ்வேதாவுக்கும் அந்த குரல் பழக்கமில்லாத குரலாக இருந்தது. ஒருவேளை ஆனந்தோட எதிரிகள் யாராவது இருக்குமோ நீ எதுக்கும் ஆனந்த் அப்பாகிட்ட கேக்குறியா . சரி சிவா நான் நாளைக்கே விசாரிக்குறேன் . ஆனந்த் இப்போ எப்படி இருக்கான். அதே கண்டிஷன்ல தான் இருக்கான். மறுநாள் ஸ்வேதா அந்த பென் டிரைவ் பற்றி ஆனந்த் அப்பாவிடம் சொன்னாள். எனக்கு யாரும் எதிரிகள் அப்படின்னு இல்லை .
ஆனா ஆனந்த்துக்கு இருக்கலாம். ஆனந்த் பெர்சனல் ரூம் ஒண்ணு நீலாங்கரை வீட்டிலே இருக்கு நீ வேணா அங்கே தேடி பாரு ஏதாவது கிடைக்கலாம். சரி அங்கிள், அதோட கீ கப்போர்ட் ல இருக்கு என்றார்.
ஸ்வேதாவும் சிவாவும் நீலாங்கரை வீட்டுக்கு சென்றனர். சிவா ஏதாவது டைரி மாதிரி கிடைக்குதா பார்க்கலாம். ஆனந்த் லேப்டாப் என்னாச்சு ஸ்வேதா? அதை ரிப்பேர் பண்ண குடுத்திருக்கிறதா சொன்னான். இன்னைக்கு ஈவினிங் வாங்கிக்கலாம். எதுக்கும் ஃபோன் பண்ணி பாரு. சரி அந்த கடை ttk ரோட் லதான் இருக்கு . ஃபோன் பண்ணிய போது சிஸ்டம் ரெடி என்று சொன்னார்கள். ஆனந்த் என்ன ரகசியம் வைத்திருக்க போகிறான் என நினைத்த போது அவனுடைய அந்த வருடத்து டைரி கிடைத்தது . 10 வருடங்கள் கழித்து அவளை மறுபடி நான் பார்த்தேன் அதே பரவசத்துடன். வெறும் ஒற்றை வாக்கியத்தோடு முடித்திருந்தான். அந்த தேதியை பார்த்தான் அது ரம்யா நிச்சயதார்த்தம் நடந்த தேதி. அன்றுதான் அவளை அவன் பார்த்திருக்க வேண்டும். ரம்யா நிச்சயதார்த்த வீடியோ கிடைத்தால் நன்றாக இருக்குமென நினைத்தான். ஆங் ஆனந்த் மொபைல் என்ன ஆனது ஆனந்த் கீழே விழுந்த போது அதுவும் கீழே விழுந்து நொறுங்கி போயிருக்கும், இல்லை நீ விசாரித்தாயா போலீஸ் யாராவது அதை பார்த்திருக்கலாம். சரி நான் விசாரிக்கிறேன். இது ஆனந்த் கையெழுத்துதானா என கேட்டான் சிவா. நிச்சயம் அவனுடைய கையெழுத்துதான். அங்கே இருந்த சிசிடிவி ஃபுடேஜ் எல்லாவற்றையும் போட்டுபார்த்தான். வேறு யாரும் அந்த தேதியில் அவன் கூட வந்த மாதிரி தெரியவில்லை.
சிவாவும், ரம்யாவும் சேர்ந்து வாழ பிளாட் ஒன்றை பார்த்து கொடுத்தாள் ரம்யா. இனிமே நீங்க தனியா இருக்கக்கூடாது . அதனாலதான் இந்த ஏற்பாடு . சரி ரம்யா. எல்லா எவிடெண்ஸ் பத்திரம் . நாளைக்கு சேகர் கிட்ட பேசணும் என்றான் சிவா. சேகரிடம் பேசியபோது ரொம்ப தாங்க்ஸ் டா எனக்காக அந்த குரல் யாருதுன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணுறதுக்கு .. அத விடுடா நாளைக்கு என் பிளாட்டுக்கு ஈவினிங் 7 மணி போல வா லொகேஷன் அனுப்புறேன் என்றான். ஆனா ஆனந்த் எதிரிகள் எதுக்கு நம்மளை மிரட்டனும். போலீசை குழப்ப . மறுபடி உனக்கு ஏதாவது கால் வந்ததா. இல்லை வரலை.
மூவரும் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிட்டனர். நீ எதுக்கும் கவலைப்படாதே சேகர் எல்லாம் சரி ஆயிடும்.
அவளே இவனை அலுவலகத்தில் டிராப் செய்தாள். ஸ்வேதா ஆனந்த் வீட்டுக்கு போன போது ஹோம் நர்சை விசாரித்தாள் . ரம்யா ஃபோன் பண்ணியிருந்தாள் . அவள் ஆனந்த் பற்றி விசாரித்தாள். சீக்கிரம் சிவாவை கல்யாணம் பண்ணிக்கோடி என்றாள். உன் வேலைக்காக சிவா மெனக்கெடுகிறான் அதனாலே நீ கவலைபடவேண்டாம் என்றும் சொன்னாள். சரி ஸ்வேதா நானும் என் ஹஸ்பண்ட்டும் அடுத்த வாரம் ஹனிமூன் போகிறோம் . வாழ்த்துக்கள் ரம்யா .சிவா சொன்னபடி ஸ்வேதாவுக்கு இன்டர்வியூ அரேஞ்ச் செய்து விட்டான். ஸ்வேதாவை ஆனந்த் இருந்த வரை வேலைக்கு போக விடவில்லை. மறுநாள் இன்டர்வியூ முடிந்ததும் சிவாவுக்கு ஃபோன் செய்தாள். என்னவோ அடுத்தவாரம் மற்றொரு இன்டர்வியூ வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள் நீயும் வாயேன் என்றாள் ஸ்வேதா. சரி வருகிறேன். மதியம் லஞ்ச் இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். சேகர் எப்படி இருக்கிறான் அவனிடத்தில் இருந்து ஃபோன் வரவில்லையே என்று கவலைப்பட்டான் சிவா. அதெல்லாம் வேலை பிஸியாக இருப்பான் என்றாள் ஸ்வேதா.
மறுநாள் இன்டர்வியூவில் கொஞ்சம் பெர்சனல் கேள்விகள் கேட்கப்பட்டதாக சொன்னாள் நாங்களே மெயில் அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். ஸ்வேதாவை வீட்டில் விட்டான். உள்ளே வா என்ன அவசரம் போவதற்கு என்றாள். எனக்கு பதட்டமாய் இருக்கிறது சீக்கிரம் நம்ம நிச்சயதார்த்தம் நடந்துச்சுன்னா கூட தேவலை என்றாள். சரி நான் அப்பா அம்மா கிட்ட பேசுறேன். நீ விவாகரத்து பத்தி அங்கிள் கிட்ட பேசு என்றான் சிவா, ம் நிச்சயமா . நெருங்கி அவள் கண்களை பார்த்தவாறே உதட்டில் முத்தமிட்டான் . ஸ்வேதா ஐ லவ் யு ,ஐ லவ் யு சோ மச் என்றான் . சேகர் வீட்டுக்கு போய் விசாரித்தான். அவன் ஆபீஸ் சென்றும் விசாரித்தான். சரியான பதில் இல்லை. இங்குதான் இருக்கிறான் ஆனால் எங்கு இருக்கிறான் என தெரியவில்லை என்று சொன்னார்கள். சேகரிடம் இருந்து ஃபோன் வந்தது . சிவா என்னை தேடாதே போலீஸ் உன்னையும் ஸ்வேதாவையும் ஃபாலோ பண்ணுறாங்க. எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் . என்ன ஆச்சு இவனுக்கு எதுக்கு திடீர்னு இப்படி சொல்லுறான் ஸ்வேதாவுக்கும் ஃபோன் பண்ணி சேகருக்கு ஃபோன் பண்ணாதே என சொன்னான்.
ரம்யாவிடம் விசாரிக்கலாம் என்றால் அவள் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது . ஹனிமூன் சென்றிருப்பாள். இரண்டு நாட்கள் கழித்து சேகரே ஃபோன் செய்தான் . என்ன மச்சான் எங்கேடா இருக்கே என்றான் சிவா . நீ சீக்கிரம் ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க ஆனந்த் சொத்தை அபகரிக்க ஒரு கூட்டமே வேலை செய்யுது ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டு கட் செய்தான். இவனுக்கு புதிய சிக்கல்கள் வருமென்று தோன்றியது . லேப்டாப் ரிப்பேர் கடைக்கு சென்றார்கள். என்ன ப்ராப்ளம் னு சொல்லி லேப்டாப் கொடுத்துட்டு போனாரு ஆனந்த் . சிடி டிரைவ் வேலை செய்யவில்லைன்னு சொன்னாரு அதை சரி பண்ணி விட்டோம் என்றான் கடைக்காரன். இதோட பாஸ்வேர்ட் எனக்கு தெரியும் அதனால ஒண்ணும் ஓபன் பண்ணுறதில பிரச்சனை இல்லை. அதில் அதிகம் ஆபீஸ் ரிலேடெட் ஃபைல்கள் தான் இருந்தன. அவனுடைய அக்கவுண்டஸ் பற்றியும் இருந்தது . சேகர் நாங்க விசாரிச்சிக்கிட்டு இருக்கோம் நீ ஒண்ணும் கவலைபடாதே என்று சேகருக்கு மெசேஜ் அனுப்பினான். மறுநாள்போலீஸ் ஸ்டேஷன் போய் ஆனந்த் மாடியில் இருந்து கீழே விழுந்த அன்று மொபைல் தொலைந்து போய்விட்டதாகவும் அதை கண்டுபிடித்து தருமாறும் கேட்டு ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டு வந்தாள் ஸ்வேதா.
போலீஸ் தரப்பில் இருந்து கால் வந்தது. அந்த ஃபோன் இப்போது கமிஷனர் ஆபீஸில் இருக்கிறது போய் பெற்று கொள்ளவும் என்று சொன்னார்கள். ஸ்வேதா விரைந்து போனாள். சில ஃபார்மாலிட்டிகளுக்கு பிறகு ஃபோன் ஒப்படைத்தார்கள். ஆனந்தின் கைரேகை வைத்தபின்பே மொபைல் ஓபன் ஆனது. அந்த மொபைல் contacts இல் kk என்ற நபரை தேடினாள். அப்படி ஒருவரும் இல்லை. புதிதாக சேர்க்கப்பட்ட காண்டாக்ட்களில் தேடினாள். அவன் கீழே விழுந்த குறிப்பிட்ட டையத்தில் அவனுக்கு கால் வந்திருந்தது . அந்த எண்ணை கவனமுடன் குறித்து கொண்டாள். அந்த கால் ரெகார்ட் ஆகி இருந்தது . டேய் ஆனந்த் ஐ ஹேட் யு சோ மச் என்று பதிவாகி இருந்தது. அந்த குரலும் பென் டிரைவ் குரலும் மேட்ச் ஆனது . சிவா இந்த நம்பர் காண்டாக்ட் டீடெயில்ஸ் நெட்வொர்க் ஆபரேட்டர் மூலமா எடுக்கணும் என்றாள் ஸ்வேதா.சிவா அதற்குள் ரம்யாவின் நிச்சயதார்த்த வீடியோ வாங்கி வந்திருந்தான். அதை பிளே செய்து பார்த்த போது அரவிந்த் உடன் தான் அதிகம் இருந்தான் ஆனந்த். அரவிந்த் உடன் ஒரு பெண்ணும் இருந்தாள் .
அரவிந்த் ஆபீஸ் போய் விசாரித்த போது அந்த பொண்ணு எங்க classmate . நான்,ஆனந்த் அந்த பொண்ணு எல்லாம் ஒண்ணா படிச்சவங்க என்றார். அவங்க பேரு? சுமதி அவங்க அட்ரஸ் ? அரவிந்த் அட்ரஸ் சொன்னார். ஆனால் சுமதி மொபைல் நம்பர் மேட்ச் ஆகவில்லை. சுமதி வீட்டுக்கு போன போது வீடு பூட்டியிருந்தது .