இன்னும் நிறைய இருக்கு நீ அவசரப்படாதே கமலன் பையனை 5 வது லான்ச்க்கு கொண்டு வா. நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் என்றாள். சரி . 5 வது லாஞ்சுக்கு கமலனுடைய பையனை அழைத்து சென்றான் ஆனந்த். மாஸ்க் போட்டிருந்ததால் ஷெரினை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க் கழட்டு உன் கூட இன்னொரு லேடி இருக்குரங்க அவங்க யாரு என்றான். அதெல்லாம் உனக்கு அனாவசியம் சிவப்பு மாஸ்க் போட்டிருக்கிறதுதான் நான் .அப்போது திடீரென கமலன் பையன் தப்பித்து ஓட முயன்றான். அவனை விரட்டி சென்றான் ஆனந்த். ஓடி பிடிக்க முடியாமல் துப்பாக்கியால் அந்த பையனுடைய காலில் சுட்டான். அலறி கொண்டு விழுந்தான் கமலன் பையன். போலீஸ் அலர்ட் ஆகி ரவுண்ட் அப் பண்ணியது, ஷிவானி ஆனந்தை மடக்கி பிடித்தாள். ஆனந்த் திகைத்து போனான். அப்போ ஷெரின் எங்கே என்ற கேள்வி அவனை துளைத்து எடுத்தது. கமலன் பையனை அவசரமாக முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பினார்கள். ஷிவானியும் ஷெரினும் ஏதோ கேம் ஆடுகிறார்கள் என நினைத்தான் ஆனந்த். கமலன் தங்கியிருந்த ஹாஸ்பிடலிலே கமலன் பையனும் ட்ரீட்மெண்ட்டுக்காக தங்க வைக்க பட்டான் . கமலன் உணர்ச்சிவசபட்டவனாக இருந்தான் . ஆனந்துக்கு எதிராக சாட்சி சொல்ல தீர்மானித்தான்.
ஆனந்த் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கமலன் பையனை கொல்ல முயன்ற கேஸ் கூடுதலாக போடப்பட்டு வழக்கு பதியப்பட்டது. மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டான் ஆனந்த். சிறையில் இருந்தவாறே அடுத்த திட்டத்தை போட்டான் ஆனந்த். ஷிவானி எப்படி அங்கு வந்தாள் என்பது எழிலுக்கு ஆச்சரியம் ஆகிய இருந்தது. அப்போது எழிலுடைய சீனியர் ஆபிசரிடம் இருந்து ஃபோன் வந்தது. எழில் ஒரு sad நியூஸ் . ஷிவானியை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. ஷெரினை தப்ப உதவி செஞ்ச குற்றத்துக்காக . யார் சார் நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுதான். அவன் பேரு கிரண். ஆனந்தோட கையாளா இருக்குறவன் அவன். நீங்க உடனே ஷிவானிய ஜாமீன் ல எடுக்க ட்ரை பண்ணுங்க என்றார். எழில் வீட்டுக்காரர்கள் கல்யாணத்தை நிறுத்தும்படி ஆகி விடுகிறது. எழில் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அதை தடுக்க முடியாமல் போகிறது, சிறையில் இருக்கும ஷிவானியை போய் பார்க்கிறான் எழில். என்னால எதுவுமே செய்ய முடியாதபடி இருக்கும போது எதுக்கு இந்த காக்கி டிரஸ் என வேதனையுடன் கூறுகிறான். ஷிவானி நீ என்னை கை விட மாட்டே அப்படின்னு தெரியும் என்றாள்.
கிரணை சந்திக்கிறான் எழில். எதுக்காக இப்படி ஒரு வேலையை பண்ணுணீங்க என்றான். நீங்கதான் பெரிய க்ரைம் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே நீங்களே கண்டுபிடியுங்க என்றான். ஷெரின் தப்பிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பதே இந்த ஷிவானிதான் அதாவது உங்க வருங்கால மனைவிதான். உங்க கல்யாணமே நின்னு போச்சாமே வெரி சாரி சட்டத்துக்கு முன்னாடி உங்க வருங்கால மனைவி குற்றவாளி. அவங்க பதவியே போக போகுது முடிஞ்சா அதை தடுக்க பாருங்க என்றான். சிவாவும், ஸ்வேதாவும் ஷெரினை சந்தித்து நிலமையை விளக்கினர். இதை கேட்டு ஷெரின் மிகுந்த வேதனை அடைந்தாள். எனக்கு உதவ போய் எழில் ஷிவானி திருமணம் நின்னு போச்சே என்றாள். ஸ்வேதா ஏதோ சொல்லி சமாதானபடுத்தினாள். ஆனந்த் வெளிநாடு தப்ப முயற்சிக்கிறான் . ஆனந்த் வெளிநாடு தப்ப கிரண் உதவிகள் செய்கிறான். ரம்யாவை கொன்ற ஜான் கேஸ் நிலுவையில் இருப்பதால் அது சம்பந்தமாக அமெரிக்கா பயணிக்க வேண்டும் என சொல்லி ஆனந்த் தப்பிக்க ஏற்பாடுகள் செய்தான் கிரண்.
காலில் குண்டு பாய்ந்த கமலனின் பையன் உதித் கமலன் அனுமதிக்கபட்ட அதே ஹாஸ்பிடலில் சேர்க்கப்படுகிறான். இதை அறிந்த கமலன் உணர்ச்சிவசப்படுகிறான் . எப்படியும் ஆனந்த்க்கு எதிராக சாட்சி சொல்ல தயாராகிறான். உடல் நலம் தேறி சிறைக்கு செல்லும் கமலனை சிறையில் வைத்தே கொல்ல தீர்மானிக்கிறான் ஆனந்த். கிரண் அதற்கும் ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறான். ஷிவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டாள். அவளுக்கெதிராக கிரண் சாட்சி அளித்தான். சிசி டிவி ஃபுடேஜ் களும் அவளுக்கு எதிராகவே இருந்தது. ஷிவானியை போலீஸ் பதவியில் இருந்து நீக்கும்படி உத்தரவு வந்தது. இதை கெட்ட ஷிவானி கதறி அழுதாள். சிறை தண்டனை எதுவும் விதிக்க படாததால் நிம்மதி அடைந்தான் எழில்.கோர்ட் விட்டு வெளியே வந்த ஷிவானி எழிலை கட்டிக்கொண்டாள். அவளுக்கு பேச வார்த்தைகள் இல்லை. எழிலும் எதுவும் கேட்கவில்லை. சிறையில் கமலன் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படியோ தப்பித்து கொண்டான் கமலன். ஆனந்த்துக்கு எதிராக சாட்சி சொல்லும் நாளும் வந்தது. அமைதியாக இருந்தான் கமலன். அவன் செய்த செயல்கள் அவன் மகனை பாதிக்கும் என்று அவன் என்றுமே நினைத்ததில்லை. கமலன் நினைத்தது போல அல்லாமல் கிரண் ஒரு படி மோசமானவனாகவே இருந்தான். கமலனின் பேச்சுக்கள் ஒன்றும் அவனை ஏதும் செய்ய முடியவில்லை.
என்னவோ தோன்ற தன் மகன் உதித்தை ஒரு தடவை பார்க்க வேண்டுமென்று சொன்னான் நீதிபதியிடம், அதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உதித் இவனை பார்த்ததும் ரொம்பவும் வேதனை பட்டான். எனக்கு ஒண்ணும் இல்லை அப்பா என்றான் ஆறுதலாக. அந்த ஆனந்திடம் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினான் கமலன். கிரண் என்னை எப்படியும் சாட்சி சொல்லும் முன் கொன்று விடுவான் அதுதான் உன்னை கடைசியாய் காண வந்தேன் என்றான். இதை கெட்ட உதித் அப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்பா என்றான். கமலன் விடை பெற்று கொண்டான். கமலன் உன் கடைசி ஆசை என்ன என்றான் கிரண். என் பையன் உன்னை சும்மா விடமாட்டான் என்றான். சும்மா சொல்லு கமலன் உன்னை என்கவுண்டர் பண்ண சொல்லி ஆர்டர் வந்துடுச்சு இப்போவாவது சொல்லு உன்னோட கடைசி ஆசை என்ன. நாளைக்கு நீ கோர்ட்டுக்கு போய் சேர மாட்டே. அதனாலே கேக்குறேன் . என் பையன்தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என்றான் கமலன். ம் ஏற்பாடு பண்ணுறேன் என்றான் கிரண்.
எழில் வீட்டில் ஷிவானியை கல்யாணம் செய்து கொல்ல எதிர்ப்புகள் வலுத்த நிலையில் கோவிலில் வைத்து திருமணம் நடக்கிறது. சிவா, ஸ்வேதா மற்றும் நிர்மலா கலந்து கொள்கிறார்கள். எழில் கை பிடித்து அக்கினி குண்டம் வலம் வந்தாள் ஷிவானி. அவள் கண்கள் கலங்கியிருந்தன. தாங்க்ஸ் எழில் என்றாள். எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் ஷிவானி, எழில் இரு வீட்டாரும் கலந்து கொள்ளவில்லை. நீ கவலைப்படாதே ஷிவானி சீக்கிரமே நீ போலீசில் மறுபடி ஜாயின் செய்வாய் என்றான் எழில். நான் ஷெரினை பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றான் . திட்டம் போட்டபடி கோர்ட்டுக்கு கொண்டு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான் கிரண். அப்போது அங்கு வந்து சேர்ந்தான் எழில். ஏதோ பிரச்சனை இருக்குறதுனால என்னை அழைத்து கொண்டு போக சொல்லி இருக்காங்க என்றான் எழில். இந்த ஆர்டர் என்று கிரணிடம் நீட்டினான் . வேறு வழியில்லாமல் கமலனை எழில் கூட காவல் வண்டியில் அனுப்பி வைத்தான் கிரண்.
கிரண் எதிர்பார்த்தது போல நடக்காதது கண்டு ஏமாற்றம் அடைந்தான். ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வரும் உதித் கோர்ட்டுக்கு வருகிறான். அங்கு எழிலை சந்தித்து நன்றி தெரிவித்தான். கமலன் பேசியதை பற்றி சொல்லி வருத்தப்பட்டான் உதித். கிரணுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும்படி உதித் எழிலை கேட்டுக்கொண்டான். கிரண் பின்புலம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தான். கோர்ட்டில் சாட்சியம் அளித்த பின்பு வெளியே வந்த கமலனை ஒரு கும்பல் விரட்ட தொடங்கியது. கமலன் மிரண்டு போய் உடனே ஓட தொடங்கினான். எழில் எவ்வளவோ முயன்றும் கமலன் வெட்டுப்பட்டு சாவதை தடுக்க முடியவில்லை.உதித் துடித்து போனான். என்ன சார் அநியாயம் என்றான் உதித் எழில் சட்டையை பிடித்து. என்னை மன்னிச்சிடு உதித். நாம எவ்வளவோ மயற்சி செய்தாலும் அவங்க அவங்க செய்யுற குற்றங்கள் அவங்களை காப்பாத்த முடியாம போயிடுது என்றான். கமலன் ஆசைப்பட்ட மாதிரி உதித்தே அவனுக்கு கொள்ளி வைத்தான்.
சிவா, ஸ்வேதா இருவரும் ஷெரினுக்கு தகவல் அளித்த வண்ணம் இருந்தனர். கிரண்தான் கமலனின் முடிவுக்கு காரணம் என்பதில் உதித் உறுதியாய் இருந்தான். அவனை பழி வாங்க துடித்து கொண்டிருந்தான். ஷிவானி எழில் தனி பிளாட் எடுத்து தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க தொடங்கியிருந்தனர் . எழில் என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. உதித்தை நினைத்து கவலையா இருக்கு . அவனும் ஷெரின் மாதிரி இறங்கி விட்டால் அப்புறம் நம்மளால அவனையும் ஆனந்த் கிட்டேயிருந்து காப்பாத்த முடியாது. நீ சொல்லுறதும் சரிதான் எழில். கிரண் இவ்ளோ மோசமா கோர்ட்டு வாசலிலே கமலனை கொல்லுவான்னு எதிர்பார்க்கல.
கிரணிடம் இருந்து ஃபோன் வந்தது. இதுதான் ஆரம்பம் இனிமே நீ எடுக்குற ஒவ்வொரு நடவடிக்கையும் உனக்கே ஆபத்தாதான் முடியும் என்றான். கிரண் நீ ரொம்ப தப்பு பண்ணுறே . நீயே போலீஸ் ஆக இருந்துகிட்டு குற்றவாளிக்கு உதவி பண்ணுறே என்றான். அப்படியா நீ இனிமேலாவது என்கிட்ட ஜாக்கிரதையா இரு அதை சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன். உதித்துக்கு ஃபோன் பண்ணினான். அவன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஷெரினை பிடிக்க ஒரு வழியும் இல்லை என்பதே எழிலுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஷிவானியிடம் நேரிடையாக கேட்க தயங்கினான். ஷிவானிக்கும் ஷெரினுக்கும் தகவல் தொடர்பு இருக்குமோ என சந்தேகப்பட்டான். என்னாச்சு எழில் இன்னும் என்ன யோசனை மணி ரெண்டு ஆகுது . எனக்கு எப்படியாவது இந்த ஷெரினை பிடிக்கணும் என்றான் மனதுக்குள். பேசாம படு எழில் என்றாள். உதித்துக்கு அப்போது ஷெரினிடம் இருந்து கால் வந்தது. உதித் போனை எடுக்கவில்லை.