கனவு 28
எக்ஸாம்ஸ் தேதி நெருங்க நெருங்க ஹரிதாவுக்கு பயம் பற்றிக்கொண்டது. சௌமியா எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக இருந்தாள். என்னடி பண்ணுறது எப்படிடி எக்ஸாம் எழுதுவது? எனக்கு படிச்சது எல்லாம் ஆவியாய் போய் விட்ட மாதிரி ஃபீலிங்க் என்றாள் ஹரிதா. சும்மா புலம்பாதே என்னை விட நல்ல மார்க் வாங்குவாய் பார் என்றாள் சௌமியா. ம் கேட்க நல்லாத்தான் இருக்கு நடக்கனுமே .. நீ ஒண்ணும் கவலைப்படாதே நாளைக்கு ஜெயித்து வைப்போம் புரோகிராம் ஒண்ணு ஒரு இன்ஜினியரிங் காலேஜ் சார்பாக நடத்துறாங்க .. நாம அதிலே கலந்து கொள்வோம் என்றாள். சரிடி நீ சொல்லுறதுல நம்பிக்கை இருக்கு நாளைக்கு அந்த புரோகிராமிலே கலந்துப்போம் . அதில் மாணவர்கள் மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இவளும் சில சந்தேகங்கள் கேட்டாள். சில பேர் புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது என்றனர். அவர்கள் தன்னம்பிக்கை ஸ்பீச் கொடுத்தனர். முன்னாள் மாணவர்கள் இந்நாள் டாக்டர்கள்,இஞ்சீனியர்கள் பேசினார்கள் . மனதை திடமாக வைத்துக்கொள்ள அறிவுரை கூறினர். இது தேர்வு தானே தவிர வாழ்வின் முடிவுரை அல்ல என்றும் சொன்னார்கள். ஹரிதாவுக்கு இப்போது சற்று தைரியம் வந்த மாதிரி இருந்தது. சௌமியாவும் சில கேள்விகள் கேட்டாள் அதற்கு அவர்கள் பதிலும் அளித்தனர்.
என்னடி இப்போவாவது உனக்கு உன் மேல் நம்பிக்கை வந்ததா என்றாள் சௌமியா. ம் பரவாயில்லை. நாம நல்லா பரீட்சை எழுதினா போதும் அப்படின்னு சொல்லுறாங்க. ஆனா எல்லா வீட்டுலயும் அப்படி சொல்ல மாட்டாங்களே .. நீ சொல்லுறதும் சரிதான். நடக்குறது நடக்கட்டும் எனக்கு தெரிஞ்சதத்தான் நான் எழுத முடியும் என்றாள் ஹரிதா. சௌமியா நீ ஒரு தடவை படிச்சதை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சி பண்ணு . மேல மேல அது மேல பாரத்தை ஏத்தாதே என்றாள். சரி சௌமியா. வீட்டுக்கு வந்த போது அப்பா என்னம்மா எப்படி இருந்தது அவர்கள் அட்வைஸ் நான் சொன்னால் கோவித்து கொள்வாயே என்றார். எனக்கு பிடித்திருந்தது பயனுள்ளதாகவும் இருந்தது என்றாள். சரி போய் டீ ,ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு படி என்றார். இவள் இந்த முறை புத்தகத்தை எடுத்த போது தூக்கம் வரவில்லை. இன்னும் சில நாட்கள் இருந்த போது அதே மாதிரி ஒரு தன்னம்பிக்கை வகுப்பு குமார் குரு எடுப்பதாக சிந்து டீச்சர் சொன்னாள். சௌமியா தயங்கினாள். ஹரிதா ஒரு அரைமணி நேரம் இருந்துவிட்டு வந்து விடலாம் என்றாள்.
இந்த தன்னம்பிக்கை வகுப்பில் கூட்டமில்லை. இவளும் சௌமியாவும் முன் வரிசையில் அமர்ந்து கொண்டனர். குமார் தன்னம்பிக்கைக்கும் , தவறாய் புரிந்து கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியசாத்தை சொன்னார். இது கேள்விகளுக்கும், பதில்களுக்கும் உள்ள இடைவெளிக்கும் பொருந்தும் என்றார். நாம் அவர்கள் இடத்தில் இருந்து சிந்திப்பது நல்லது. கேள்விகளை உள்வாங்கி கொள்வது என்பது பாதி விடைகளை நாம் தேர்ந்தெடுப்பது போன்றது. வேகம் இது இன்னொரு பாடம். நாம் நிதானமாகவே இருந்தாலும் காலம் போதாமை இருக்கத்தான் செய்யும். அதை சரி செய்ய தவறுகளை குறைப்பதுதான் நல்லது என்றார். எல்லோரும் கைதட்டி நன்றி தெரிவித்தார்கள். இவர்கள் இருவருக்கும் கொஞ்சம் விபூதி கொடுத்தார். வாங்கிக் கொண்டார்கள். அவர் போன் நம்பர் அங்கே எழுதப்பட்டு இருந்தது. அதை சேவ் செய்து கொண்டாள் ஹரிதா. மற்றவர்களும் சேவ் செய்து கொண்டார்கள். அவசியம் ஏற்பட்டால் என்னை அழையுங்கள் நீங்கள் உங்களை நம்புங்கள் என்றார் குமார். சௌமியா ம் உன் ஆசைப்படி இந்த வகுப்பையும் கடந்து வந்தாயிற்று என்றாள். எனக்கு மன நிறைவாக இருந்தது என்றாள் ஹரிதா. நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினாள்.
எக்ஸாம் நடக்கும் இரண்டு நாட்கள் முன்னதாக ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டாள் ஹரிதா. சைலன்ட் மோடில் வைத்திருக்க சௌமியா சொன்ன போதும் அவள் மறுத்துவிட்டாள். ரொம்ப அவசரம் என்றால் அவள் அப்பா நம்பரில் கூப்பிடும்படி சௌமியாவிடம் சொன்னாள். இவள் கடைசி நேர தயாரிப்பில் இருந்தாள் . மனம் முழுக்க பாடம் பற்றிய சிந்தனையில் இருந்தது. எக்ஸாம் நடக்கும் நாளுக்கு முதல் நாள் கோவிலுக்கு போகலாம் என சௌமியா சொன்னாள். கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது. நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளோடு வந்திருந்தார்கள். இவளும் வேண்டிக்கொண்டாள் . சௌமியா சொன்ன மாதிரி அவளை விட அதிக மார்க் வாங்கவில்லையென்றாலும் பரவாயில்லை கவுரவமான மார்க்குகள் வாங்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள் .இரவு முழுக்க கண் விழிக்க வேண்டாம் என அட்வைஸ் பண்ணியிருந்தாலும் இவளுக்கு தூக்கம் வரவில்லை. இரவு 11 மணி வரை படித்தாள் . காலை 4 மணிக்கே எழுந்தாள். அம்மா டீ போட்டு கொடுத்தாள். இவள் எல்லவற்றையும் சரி பார்த்து கொண்டாள். சில சமயம் ஏன் இந்த சோதனை என மனம் விட்டு பேசிக்கொண்டாள் . சௌமியா நேராக ஸ்கூல் வந்துவிடுவதாக சொல்லிவிட்டாள். எக்ஸாம் ஹால் பிரம்மாண்டமாய் இருந்தது. இவள் தயங்கி தயங்கி தன் நம்பர் பார்த்து இடம் தேடி உட்கார்ந்தாள் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டியது. சௌமியா கடைசியாக சொன்னது ஞாபகம் வந்தது. நாம் இருவரும் ஒரே காலேஜ் போகப்போகிறோம் அதை ஞாபகம் வைத்துக்கொள் என்றாள்.
முதல் பரீட்சைதான் நெர்வஸ் ஆக இருந்தது போக போக எல்லா பரீட்சையும் நன்றாகவே எழுதினாள் . எல்லாம் நல்லபடியாக முடிந்தது. வீட்டுக்கு வந்து அவற்றை ஆராய்ச்சி எல்லாம் பண்ணவில்லை . ஹரிதா அம்மா அவளுக்கு திருஷ்டி சுற்றி போட்டாள். நிச்சயம் எல்லாம் நல்லதுதான் நடக்கும் என்றாள். இனி 4 மாதங்களுக்கு லீவு தான். காலேஜ் சேரும் வரை அவளுக்கு ஓய்வுதான். அவள் சும்மா இருந்தால்தானே ஓய்வு. சௌமியாவை சந்தித்தாள் ஹரிதா. என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றாள் ஹரிதா. ம் நான் நல்லாத்தான் எழுதினேன் ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமக எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது. ம் நீ இன்னும் அதே நினைப்பில்தான் இருக்கிறாயா நான் எப்போதோ அதையெல்லாம் மறந்துவிட்டேன் என்றாள் ஹரிதா. சரி என்ன விடுமுறை பிளான். ஒரு வாரம் கழித்துத்தான் சொல்ல முடியும் அப்பாவும். அம்மாவும் என்ன சொல்ல போகிறார்களோ என்றாள் சௌமியா. சரி எனக்கு ஃபோன் பண்ணு என்றாள் ஹரிதா.
ஹரிதாவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் அவள் ஆறுமுகத்தையும் நினைத்துக்கொண்டாள். அவன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . இன்னும் உத்வேகமாகவும் , தைரியமாகவும் எக்ஸாம்ஸ் எழுதி இருப்பேன் என நினைத்தாள். கீர்த்திக்கு ஃபோன் பண்ணினாள். அவள் வாழ்த்துக்கள் சொன்னாள். எதுக்கு இப்போவே வாழ்த்துக்கள் சொல்கிறாய் கீர்த்தி என்றாள். இதெல்லாம் ஒரு முறைதான் நடக்கும் அப்புறம் விடுதலைதான் என்றாள். நீ தஞ்சாவூருக்கு வருகிறாயா என்றாள் கீரத்தி இல்லை இன்னும் முடிவு செய்யவில்லை . நீ வருவதென்றால் எனக்கு முன் கூட்டியே சொல் என்றாள். நிச்சயமாக. சௌமியாவுக்கு டான்ஸ் கிளாஸ் போக வேண்டுமென்று ஆசை. ஹரிதாவுக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை.சௌமியா முடிவு செய்து விட்டாள். டான்ஸ் கிளாஸ் சேருவதென்று . நீயும் வாயேன் செம வேடிக்கையாக இருக்கும் என்றாள் சௌமியா. ஹரிதா மனசே இல்லாமல் சேர்ந்தாள். டான்ஸ் கிளாஸ் என்றால் பரத நாட்டியம் இல்லை. அது ஒரு மாதிரி மிக்ஸ்டு ஆக இருந்தது.முதல் நாள் வகுப்பே சௌமியாவுக்கு ரொம்ப பிடித்து விட்டது. டான்ஸ் மாஸ்டர் பெண்ணாக இருந்ததால் சௌமியாவுக்கு பெரிதாக பிரச்சனைகள் இருக்காதென்று தோன்றியது. ஹரிதாவும் அபிநயம் பிடித்தாள். போக போக அவளும் பிக்அப் செய்து கொண்டாள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கிளாஸ்.
அது பெண்களுக்காகவே நடத்தப்படும் டான்ஸ் கிளாஸ். இது புதுமையாக இருந்தது ஹரிதாவுக்கு. கூட்டமும் குறைவாகவே இருந்தது. ஆறுமுகத்திற்கு ஃபோன் செய்தாள் சௌமியா. என்ன எக்ஸாம் எல்லாம் எப்படி போச்சு என்றான். அதெல்லாம் நல்லா போச்சு நீ எப்போது வருகிறாய் என்றாள். நான் எங்கே வேலையை விட்டு வருவது. சொல்ல மறந்துவிட்டேன் இளங்கோ சார் வந்திருந்தார் என்னைப் பார்க்க. என்ன சொன்னார். அடுத்த வருடம் எப்படியும் மறுபடி என்னை ஸ்கூலில் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்னார். எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்றான்.ஆல் தி பெஸ்ட் ஆறுமுகம் என்றாள். சௌமியாவுக்கு அவனை பார்த்தால் தேவலை போல இருந்தது. ஆனால் அங்கு போயும் தங்க முடியாது அதுதான் பிரச்சனை. கீர்த்தியிடம் பேசிப் பார்ப்போமா என யோசித்தாள். அது வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் என கருதினாள். டான்ஸ் கிளாஸ் நேரம் போக மீதி நேரம் ஊர் சுற்றினார்கள் ஹரிதாவும்,சௌமியாவும். சௌமியா ஆறுமுகத்துக்கு ஃபோன் பண்ணியதாக சொன்னாள். ஹரிதா அவனை எப்படியும் காலேஜ் சேருவதற்குள் ஒரு முறை பார்த்துவிட விரும்புவதாக ஹரிதா சொன்னாள்.
இவள் அப்பாவின் சொந்த கிராமத்துக்கு ஒரு வாரம் போகலாம் என அப்பா சொன்னார். ஏற்கனவே இவள் போய் வந்த ஊர்தான். அப்பாவின் சந்தோஷத்துக்காக போகலாம் என முடிவெடுத்தாள். சௌமியாவிடம் சொன்னாள். அவள் இதில் என்னடி இருக்கு நமக்கு கிடைக்கும் லீவு நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான் என்றாள். ஃபோன் பண்ணு சௌமியா அடிக்கடி என ஹரிதா கேட்டுக்கொண்டாள். போன முறை போன போதுதான் திலீபன், மஞ்சுவை பார்த்தாள். அவனை அந்த ஒற்றை கையுடன் பார்த்த பிறகு இவளுக்கு மனசே கேட்கவில்லை.இப்போதும் அந்த நினைவலைகளை மறக்க முடியவில்லை. அப்பா ஆபீஸ் லீவு சொல்லியிருந்தார். இவர்கள் டிரைன் புக் பண்ணியிருந்தனர். ஹரிதா இந்த முறை போன முறை மாதிரி யாரிடமும் வம்பிழுக்க கூடாது என்றாள் ஹரிதா அம்மா. நான் ஒன்றும் சின்ன பெண்ணில்லை . எல்லாம் எனக்கும் தெரியும் என்றாள். அவள் அப்பா சிரித்தார். அடுத்த வருஷமே கல்யாணம் பண்ணிவிட வேண்டும் இவளுக்கு என்றார். இவர்கள் போய் சேர்ந்த போது காலை 6 மணி ஆகியிருந்தது.
ஹரிதா அப்பாவை தெரிந்தவர்கள் அவரை விசாரித்தார்கள். ஹரிதா அப்பாவும் சளைக்காமல் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சியே அளித்தது. ஹரிதா தாத்தா எப்படி இருக்கீங்க என்றாள். எனக்கென்ன இந்த பயலுவோதான் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்கள் என்றார். நான் வந்துட்டேன்ல தாத்தா எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் என்றாள். ம் நீ போய் டிரஸ் மாத்தி ரெஸ்ட் எடு என்றாள் ஹரிதா அம்மா. அவள் உடை மாற்றிக்கொண்டாள். அமைதியாக இருந்தது ஊர். அவளுக்கு அந்த ஊர் பரிச்சயமானதுதான் என்ற போதும் முரட்டு பிள்ளைகள் உள்ள ஊர் என தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது.