Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஹரிதாவின் பகல் கனவுகள் part 7


கனவு 7

ஹரிதாவுக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை. வைரஸ் ஃபீவர் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ரெஸ்ட் எடுக்குமாறு சொன்னதால் பள்ளிக்கு இரண்டு நாட்களாய் போகவில்லை. சமர், சௌமியா, ஆறுமுகம் எல்லோரும் வந்து பார்த்து பேசி விட்டு போனார்கள். அவள் மனம் சமர் வருத்தப்படுவானே என நினைத்து கவலை அடைந்தது. தூக்கம் வரவில்லை. ஏன்தான் இந்த ஜூரம் வந்ததோ உடலை அசைக்கவே முடியவில்லை. வியர்த்து கொட்டியது. அம்மா வந்து மின்விசிறி ஸ்பீட் அதிகம் வைத்துவிட்டு போனாள் . என்ன செய்யலாம் ஏதாவது செய்து சீக்கிரம் இந்த பெட்ரூம் விட்டு வெளியே போனால் தேவலாம் என்று இருந்தது. ரஞ்சித் காலேஜ் முடித்து விட்டான். அவனுடைய டிகிரி வாங்கும் பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் இருக்கிறதென்று சௌமியா சொல்லியிருந்தாள் . ரஞ்சித்தும் வந்து இவளை பார்த்து போனான். அப்போது அவசியம் அந்த பட்டமளிப்பு விழாவிற்கு அவள் வர வேண்டும் என சொல்லிப் போனான்.

காலம் தோறும் மாறுதல் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அந்த மாறுதல் ஹரிதாவுக்கு உத்வேகத்தை அளித்தது. ஹரிதா சீக்கிரம் குணமாக வேண்டும் என்று அவள் அம்மா கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஆறுமுகம் ஃபோன் பண்ணியிருந்தான். இவள் நாளைக்கு ஸ்கூல் வந்து விடுவதாக சொன்னாள். அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. ஸ்கூல் வந்ததும் சௌமியாவும், ஆறுமுகமும் அவளை நலம் விசாரித்தார்கள். எனக்கு ஒண்ணுமில்லை எல்லாம் சரியாப்போச்சு என்றாள். நீ அவசரப்பட்டு ஒன்றும் பள்ளிக்கு வந்துவிடவில்லையே என்றாள் சௌமியா. அதெல்லாம் ஒண்ணுமில்லை.அப்பாதான் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து போகலாம்னு சொன்னார். அவர் சொல்லுவார் அப்படித்தான். என்னால உங்களையெல்லாம் பார்க்காம இருக்க முடியல. வீட்டிலே சரியான போர் என்றாள். ம் நாளை மறுநாள் நாம எல்லோரும் ரஞ்சித் பட்டமளிப்பு விழாவுக்கு போறோமா ? என்றாள் ஹரிதா. நிச்சயம் என்றாள் சௌமியா. ஆறுமுகம் நீயும் வா என்றாள் சௌமியா. நான் எதற்கு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்றான். அட சும்மா வாப்பா . ரொம்ப பண்ணாதே என்றாள் ஹரிதா. சரி வருகிறேன் என்றான்.

காலையில் 11 மணிக்கு பட்டமளிப்பு விழா. அது ஒரு ஞாயிற்று கிழமை என்பதால் நல்ல கூட்டம். ரஞ்சித் இவர்களை வரவேற்றான். ஆறுமுகம்,சௌமியா, ஹரிதா ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார்கள். ஹரிதாவுக்கு பெருமையாய் இருந்தது. நாமும் ஒருநாள் இது போல பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள். சமருக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். அவனுக்கு செய்முறை வகுப்புகள் இருந்ததால் வர முடியவில்லை என்று சொன்னான். இவள் அவனை பார்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது. காலேஜை சுற்றி பார்த்தார்கள் ஆறுமுகமும், ஹரிதாவும். நாமும் ஒரு நாள் இங்கு படிப்போம் என்றான் ஆறுமுகம். சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆறுமுகத்தை ரஞ்சித்துக்கு அறிமுகம் செய்தாள் சௌமியா. விழா முடிந்து ஆறுமுகமும், ஹரிதாவும் மட்டும் வீடு திரும்பினார்கள். சௌமியா ரஞ்சித் கூட வீட்டுக்கு போய் விடுவதாக சொல்லிவிட்டாள். ஆறுமாகம் ஹரிதாவிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல இருப்பதாக சொல்லியிருந்தான். இவள் வற்புறுத்தி கேட்ட போதும் நான் நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். இவளுக்கு அவனுடைய செய்கை புதிராக இருந்தது.

ஆறுமுகம் பிளீஸ் சொல்லு என்ன விஷயம். அதுவந்து நான் யோசித்து பார்த்தேன் அதெல்லாம் சரியா வராது என்னையும் மீறி நான் ஆசையை வளர்த்து கொண்டேன் என்றான். ம் இப்படி பேசினால் யாருக்கு புரியும் என்றாள் ஹரிதா. நான் சௌமியாவை விரும்ப தொடங்கிவிட்டேன் என்றான். அவள் ஒரு நிமிடம் வாயடைத்து போய்விட்டாள் . என்னடா சொல்லுற என்றாள். பார்த்தியா உனக்கே இப்படி தோணுது ? அப்படியில்லைடா நான் அவள்கிட்ட பேசிப் பார்க்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம் இப்போ அவள் மனதில் ரஞ்சித் தான் இருக்கிறான். நான் இப்போது என் காதலை வெளிப்படுத்துவது சரியாய் இருக்காது என்றும் சொன்னான். இப்போ என்னதான்டா பண்ணப்போற ? ம் அதுதான் எனக்கு தவிப்பா இருக்கு என்றான். சௌமியா வருவதை பார்த்து இருவரும் அமைதி ஆயினர். என்ன ரகசியம் எனக்கு தெரியாம என்றாள். அதெல்லாம் ஒன்னுமில்லைடி நீ ஏன் சோகமா வர என்றாள் ஹரிதா. அதெல்லாம் ஒன்னுமில்லைடி. ரஞ்சித் வெளிநாடு போறானாம் . மேல்படிப்புக்காக வெளிநாடு போகிறானாம். இதை கேட்டதில் இருந்து எனக்கு தூக்கமே இல்லை. ஒரே யோசனையா இருக்கு என்றாள் சௌமியா. ஒண்ணும் கவலைப்படாதே அவன் சீக்கிரம் வந்துவிடுவான் என்றாள் ஹரிதா. ம் யாருக்கு தெரியும். என்னை ஞாபகம் வைத்திருப்பானோ இல்லை அங்கேயே செட்டில் ஆகிவிடுவானோ ? நீயா ஏண்டி கற்பனை பண்ணிக்குற . ம் எல்லாமே கற்பனைதான் இப்போ என்று வேதனைப்பட்டாள் சௌமியா.

இப்பொது போய் ஆறுமுகத்தின் காதலை சௌமியாவிடம் சொன்னால் சரியாக இருக்காது என்று நினைத்தாள் ஹரிதா . அதே நிலைதான் ஆறுமுகமும் எடுத்திருந்தான். சமர் ஹரிதாவை அன்று மாலை சந்தித்தான். எப்படி இருக்கிறாய் ஹரிதா என்றான். கடைசியா ஜூரம் வந்தப்போ பார்த்தது என்றாள். கொஞ்சம் பிஸி என்றான். ம் என் நினைப்பெல்லாம் உனக்கு இருக்குமா நீ காலேஜ் போற பையன் வேற என்றாள். அப்படியெல்லாம் உன்னைவிட பெரிதாக என்ன இருந்துவிட போகிறது என்றான் சமர். பேசி பேசியே ஆளை கவர் பண்ணிடு என்று சொன்னாள். சரி வா ஐஸ் கிரீம் சாப்பிட போகலாம் என்றான். இப்போவா நான் 7 மணிக்கு கோவில் கிட்ட வரேன் . நிச்சயமா? நிச்சயம்.நான் காத்திருப்பேன் என்றான். எல்லாம் நல்லபடியாய் போய்க்கொண்டிருந்தது. அன்று இரவு அப்பா கேட்டார் என்னம்மா ஐஸ்கிரீம் பார்லர் போயிருந்தாயா ? ஆமாம் என்றாள் சுருக்கமாக. எல்லாமே நல்லாத்தான் இருக்கும். நமக்கு ஒரு பிரச்சனை வராத வரைக்கும் என்றார். இவள் இனிமே போகலை என்றாள். உனக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாதம்மா அதுதான் அப்படி சொல்லவேண்டியதா போச்சு என்றார். சரிப்பா எனக்கு புரியுது என்றாள்.

ஸ்கூல் டூர் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். சௌமியா , ஆறுமுகம், ஹரிதா மூவரும் அந்த சுற்றுலாவுக்கு போவதாய் முடிவு பண்ணியிருந்தார்கள். சென்னை மற்றும், பெங்களூர் போவதாய் பிளான்.மொத்தம் மூன்று நாட்கள் சுற்றுலா. என்னடா இன்னும் நீ அதையே நினைத்துக்கொண்டிருக்கிறாயா ?அதெல்லாம் ஒன்றுமில்லை அதை மறக்க முயன்று கொண்டிருக்கிறேன். நீ இப்படியே பேசு இன்னும் இரண்டு நாளில் டூர் போக போகிறோம் உற்சாகமாக இரு என்றாள் ஹரிதா. சௌமியா ஏற்கனவே தயாரானது போல பேசினாள். அவள் காமிரா எடுத்து வருவதாக சொன்னாள். சௌமியா இந்த டூர் நாம் என்ஜாய் பண்ணுகிறோம் அந்த ரஞ்சித் பற்றிய கவலையை மறக்கவேண்டும் என்றாள். சௌமியாவும், ஹரிதாவும் ஏற்கனவே சென்னைக்கும், பெங்களூரும் போயிருக்கிறார்கள். ஆறுமுகம் முதல் முறையாக போக போகிறான். அவனுக்கு அது புது அனுபவமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். ஆறுமுகம் முதலில் வரவில்லை என சொன்னான். சௌமியாதான் எப்பவுமே படிப்பை கட்டிக்கொண்டு அழாதே .. வெளியில் வந்து உலகத்தை பார் என்று சொல்லியிருந்தாள் . அவன் மனம் சௌமியா பக்கமே இருந்தது.

பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு இரண்டு பஸ்கள் உற்சாகமாக புறப்பட்டன. கவனமாய் இருக்க வேண்டும் என ஹரிதா அப்பா சொல்லியிருந்தார். நீ பயணம் போவதும் நிறைய கற்றுக்கொள்ள என்றும் கூறினார். சமர் எப்போது திரும்ப வருவாய் என கேட்டபடி இருந்தான். நான் 3 நாளில் வந்து விடுவேன் என சொன்னாள். மாணவர்கள் உற்சாக நடனம் ஆடினர். இவளுக்கு ஸ்கூலில் நாள் முழுக்க அமைதியாய் இருக்கும் இவர்களா இப்படி ரகளை பண்ணுகிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது. முதலில் சென்னைக்கு போனார்கள். அங்கு ஒரு ஹோட்டல் ஒன்றில் ஃபிரெஷ் ஆகிவிட்டு எழும்பூர் அருங்காட்சியகம் , லைப்ரரி போன்றவற்றை பார்த்தார்கள். மாலை பீச் போனார்கள். ஆறுமுகம் பீச் மணலில் ரொம்ப நேரம் உட்காரந்திருந்தான். சௌமியாவும், ஹரிதாவும் கடல் அலையில் விளையாடிக்கொண்டிருந்தனர். எல்லோருமே உற்சாகமாய் இருந்தனர். சௌமியா போட்டோக்கள் எடுத்து கொண்டிருந்தாள். அந்த நாள் ஹரிதாவால் மறக்க முடியாத நாளாக இருந்தது. அவள் மனதில் சமர் கூட இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவனோடு கை கோர்த்து இந்த கடல் அலையில் கால் நனைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

ஹரிதா இரவு அப்பாவுக்கு ஃபோன் பண்ணினாள். அவள் அந்த சுற்றுலாவை ரொம்பவும் என்ஜாய் பண்ணியதாக சொன்னாள். இரவு கிளம்பி பெங்களூர் போவதாகவும் சொன்னாள். அப்பா பாத்தும்மா ஜாக்கிரதை என்றார். ஆறுமுகம் வெளியில் வந்து டீ சாப்பிட்டான். அப்போது சௌமியாவும், ஹரிதாவும் வந்தனர். எங்களை விட்டுவிட்டு ஏன் வந்தாய் என்றாள் ஹரிதா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் இருவருக்கும் பிரட் ஆம்லெட் வாங்கி கொடுத்தான். அந்த இரவு பயணமும் இனிமையாக இருந்தது. பெங்களூர் அதிகாலையில் போய் சேர்ந்தார்கள். சௌமியா நம்பருக்கு சமர் ஃபோன் பண்ணியிருந்தான். என்னடா ஒரு மூணு நாள் பிரிந்திருக்க முடியவில்லையா என்றாள் ஹரிதா.ம் அப்படியில்லை நீ தனியாய் சிரமப்படுவாய் என நினைத்தேன் என்றான். பிறகு நானே உன்னை கூப்பிடுகிறேன் சமர் என்றாள். பெங்களூர் லால்பாக் கார்டன் சுற்றி பார்த்தார்கள். மைசூர் அரண்மனை போன்றவற்றை சுற்றி பார்த்தார்கள். ஸ்பேஸ் ரிசர்ச் சென்டர் மற்றும் இன்ஜினியரிங் அருங்காட்சியகம் போன்றவற்றை பார்த்தார்கள். இங்கே நல்ல குளிர் அதோடு இந்த கிளைமேட் எனக்கு பிடித்திருக்கிறது என்றாள் சௌமியா. ஹரிதாவும் அதை ஆமோதித்தாள்.

ஆறுமுகம் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொண்டான். இதைப் பார்த்த சௌமியாவும். ஹரிதாவும் ஆச்சரியம் அடைந்தனர். நீ பெரிய ஆளுடா என்றனர். பெங்களூர் முழுக்க நாள் முழுக்க சுற்றி பார்த்தனர். எல்லோரும் சற்றே சோர்வாக அறைக்கு திரும்பினார். ஹரிதா சௌமியாவிடம் ஆறுமுகத்தை பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்டாள். என்ன திடீர்னு சும்மாதான் கேட்டேன் விஷயம் இல்லாமல் கேட்க மாட்டாயே என்றாள் சௌமியா. அவன் யாரையோ விரும்புகிறானாம் என்று இழுத்தாள் ஹரிதா.அவனுக்கென்ன குறை அவன் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம் என்றாள் சௌமியா. ம் இப்படி பொதுவாக சொன்னால் எப்படி நாம்தான் அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றாள் ஹரிதா. எல்லாம் புரிகிறது ஆனால் நீ ஏன் இவ்வளவு துடிப்பாய் இருக்கிறாய் என்று புரியவில்லை என்றாள் சௌமியா. சரி சரி நாளை காலை பேசுவோம் என்று பேச்சை நிறுத்தினாள் ஹரிதா.

மாணவ, மாணவிகள் டூர் முடிந்து ஊர் திரும்பினார்கள். டூர் போய் திரும்ப வந்தவர்களுக்கு சலுகையாக அன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஹரிதா மனம் சௌமியா , ஆறுமுகத்தையே சுற்றி வந்தது. அன்று பகலில் கொஞ்ச நேரமே தூங்கினாள் ஹரிதா. அம்மா ஏதோ ஹரிதாவுக்கென ஸ்பெஷல் ஆக சமைத்துக் கொண்டிருந்தாள்.