கனவு 5
ஆன்மா, மெய்ப்பொருள் ,உடல் இது குறித்து யோகா கிளாசில் விளக்கப்பட்டது. ஹரிதா இவைகளை கவனமாக கேட்டுக்கொண்டாள் . சிந்து டீச்சர் தன்னுடைய வேதனைகளை மறைக்க அந்த சிரிப்பை பயன்படுத்துவதாய் உணர்ந்தாள் . வெறும் உடலால் ஆன்மாவை உணர முடியாது அதற்க்கு பயிற்சிகள் தேவை என்று ஹரிதாவுக்கு போதிக்கப்பட்டது. ஆன்மாவை மனதின் கட்டுப்பாட்டில் வைக்க யோகா உதவும் என்று நம்பிக்கை இருந்தது. சௌமியா விசாரித்தாள் நீ ஏற்கனவே சாமியாரிணிதானே இப்போ யோகா கிளாஸ் வேற போற .. எப்படி இருக்கு யோகா கிளாஸ் என்றாள். அது நல்ல எஃபக்ட் இருக்கு. முன்ன மாதிரி இல்லை கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு என்றாள் ஹரிதா . யாருடி சொன்னா நான் சாமியாரிணி அப்படின்னு? கூடிய சீக்கிரம் எல்லோர் மாதிரியும் நானும் செட்டில் ஆவேன் என்றாள். ம் நல்ல முன்னேற்றம் என்றாள் சௌமியா.
காட்டிலே தவம் செய்வது போல வீட்டிலும் தவம் செய்தாள் ஹரிதா . அவள் மனம் கட்டுக்குள் வந்ததோ இல்லையோ 2 கிலோ எடை குறைந்திருந்தாள். அப்பா எதுக்கும்மா உனக்கு இந்த வேண்டாத வேலை என்றார். அதெல்லாம் உனக்கு புரியாது நான் ஆன்மாவின் தேடலில் இருக்கிறேன் என்றாள் சிரித்தபடி. ம் நானும் பார்க்கிறேன் எத்தனை நாளைக்கு நீ இதை செய்கிறாய் என்று சொல்லிவிட்டு போனார்.ஹரிதா எக்ஸாம் முடிவுகள் வந்துவிட்டன. 80 சதவீத மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள் . அவள் அப்பா இதை எதிர்பார்க்கவேயில்லை. அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார். ஆனால் ஹரிதாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அவள் 60% வாங்கியிருந்தால் ஏதாவது ஸ்கூலில் சேர்த்து விட்டிருப்பார் . இப்போது அதே ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கும் பள்ளியில் சேர்க்க போகிறார். இவள் போய் பிருந்தா டீச்சரை பார்த்தாள். அவளுக்கும் இதில் மகிழ்ச்சி தான். சௌமியா 90% மதிப்பெண்கள் எடுத்திருந்தாள் . நிச்சயம் அவளும் இவளும் ஒரே வகுப்பில் சேர வாய்ப்பிருந்தது.
எப்படியோ போராடி கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர்ந்தாள் ஹரிதா . அவளுக்கும் கம்ப்யூட்டருக்கும் ஏழாம் பொருத்தம். சீக்கிரமே அவளுக்கொரு சிஸ்டம் வீட்டில் வாங்கி தருவதாக அப்பா சொல்லியிருந்தார். இவள் யோகா கிளாஸ் எல்லாம் இனி போக முடியாது. இனி பிளஸ் டூ முடியும் வரை வேறு எந்த இலக்குகளும் வேண்டாமென அப்பா சொல்லிவிட்டார். இவளை நல்லதொரு இஞ்சீனியர் ஆக்கி பார்க்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அதற்காக பலரிடமும் ஆலோசனை கேட்டு வந்தார். சமர் காலேஜ் ஒன்றில் சேர்ந்ததாக கேள்விப்பட்டாள் ஹரிதா. அவனை பற்றிய தகவல்கள் எப்படியோ இவளை வந்து சேர்ந்தன. மேற்கொண்டு அவள் முதல்நாள் ஸ்கூலில் எப்படி இருக்க போகிறதென்று கற்பனை செய்து பார்த்தாள். அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் நடந்து விட வில்லை. அந்த பசங்கள் அப்படி ஒன்றும் குறும்புகள் செய்துவிடவில்லை. மாறாக புத்தக புழுவாக இருந்தார்கள். இவளுக்கு இருக்கும் தைரியம் கூட அவர்களிடத்தில் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது.
எல்லோரையும் வரவேற்ற தலைமையாசிரியர் இங்கு எல்லோருமே நன்கு படிக்கக்கூடியவர்கள் ஆனால் அடுத்தவர்க்கு உதவாத படிப்பு ஒன்றுக்கும் உதவாத படிப்பென்று நான் சொல்லுவேன் என்றார். அவர் சொன்னதில் நியாயம் இருந்தது. இவளும் படிக்க எவ்வளவு சிரமப்பட்டு இருப்பாள். அடுத்தவர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடத்தும் இருக்குமா என்பதே சந்தேகம் தான். ஹரிதா வை கண்டுகொள்வார் யாருமில்லை. சௌமியா ஏற்கனவே பாப்புலர்தான். அப்போதுதான் ஒரு பையன் இவளிடத்தில் வந்து தன்னை அறிமுகபடுத்தி கொண்டான். தன் பெயர் ஆறுமுகம் என்றும் கிராமத்தில் இருந்து வந்ததால் இங்கு அதிக பழக்கமில்லை.. ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக சொன்னான். இவளுக்கு ஒரு நிமிடம் திகைப்பாய் இருந்தாலும் சரி நானும் உங்களைப்போலத்தான் என்றாள். ஆறுமுகம் நல்ல பெயர்தானே என சொல்லிக்கொண்டாள். சௌமியாவுக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள் . சௌமியா அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. யாருடி அவன் பார்த்தாலே பயமா இருக்கு அவனை போய் இன்ட்ரொடியூஸ் பண்ணி வைக்கிறே என்றாள். அதனால் என்னடி ரெண்டு வருஷம் நம்ம கூட படிக்க போறான் சும்மா தெரிஞ்சு வைத்து கொள்ளேன் என்றாள். நீயாச்சு அவனாச்சு என்றாள் சௌமியா.
ஆறுமுகம் மற்றவர்களோடு அதிகம் பழகவில்லை. இவள் தானாக போய் பேசாவிட்டாலும் அவனே வந்து பேசுவான். அது பழக்கமாகிவிட்டது. எங்கே இருக்கிறது உன் ஹாஸ்டல் என்று கேட்டாள். அது அந்த சுபின் காம்ப்ளக்ஸ் பின்புறம் இருக்கிறது என்று சொன்னான். இவளுக்கு தெரிந்தவரை அது ரொம்ப தூரம். அவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறாயா என்றாள். நடந்துதான் வருகிறேன் என்றான். இவளுக்கு அவன் மேல் பரிதாபம் உண்டாயிற்று. அந்த ஊர் அப்படிப்பட்ட ஊர் என்பதில் கோபம் உண்டாயிற்று. இவள் மதியம் அவனோடு சேர்ந்து சாப்பிட்டாள். சௌமியா கேண்டீன் போய் சாப்பிடுவாள். ஆறுமுகம் நன்றாக படிக்கக்கூடியவன் மட்டுமல்ல ஸ்போர்ட்ஸ் போன்றவற்றிலும் திறமை மிக்கவன் என தெரிந்து கொண்டாள். ரொம்பவும் இளகாதே அப்புறம் வருத்தப்படுவாய் என சௌமியா சொன்னாள். சிந்து டீச்சர் இவளை மறுபடி யோகா கிளாஸ் வரும்படி சொன்னாள். இவள் அப்பாவிடம் கேட்டுவிட்டு சொல்வதாக சொல்லியிருந்தாள்.
ஸ்கூல் அமைதியாக போனது. பசங்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று ஹரிதா நினைக்கவேயில்லை. அன்று லஞ்ச் இடைவெளியில் லைப்ரரி போயிருந்தார்கள் இவளும் ஆறுமுகமும். இந்நேரத்துக்கு அங்கு போக வேண்டாம் என்றான் ஆறுமுகம். என்ன அங்கே என்ன நடக்கிறது என்றாள். அதெல்லாம் உனக்கு வேண்டாம் என்றான் . ம் நானும் பார்க்கிறேன் என்றாள். லைப்ரரி ஸ்டாஃப் பெண்மணியும் மற்றொரு லைப்ரரி ஆளும் மயக்க நிலையில் இருந்தனர். இவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.இதெல்லாம் என்ன எப்படி இவர்கள் ஸ்கூலில் இந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்றாள். ம் அதனால்தான் சொன்னேன் நாம் அங்கு போக வேண்டாம் என என்றான். உனக்கு அந்த மாதிரி கேர்ள் ஃப்ரெண்ட் உண்டா ஆறுமுகம் என்றாள். எனக்கு ஹாஸ்டல் நடக்கவே நேரம் சரியாய் இருக்கிறது . நீ என்னை பார்த்து அப்படி கேட்டுவிட்டாய் என்றான். சரி சரி இனி நான் அப்படி கேட்கவில்லை. உனக்கு பாய் ஃப்ரெண்ட் யாருமே இல்லையா ? எனக்கு அது அவசியமாக தோன்றவில்லை என்றாள். இல்லை கட்டாயம் தேவை என்றான். இவள் அவன் முகத்தை பார்த்தாள். நீ பார்ப்பது கண்ணாடியின் ஒருபுறம் மட்டுமே . மறுபுறம் ஒன்று இருக்கிறது. அது உனக்கு பெரும் உதவியாய் இருக்கும் என்றான் ஆறுமுகம்.
சௌமியாவிடம் சொன்னாள். எனக்கு பாய்ஃப்ரெண்ட் வேண்டும் என்று கட்டாயம் ஆறுமுகம் சொல்லிவிட்டான். நான் இப்போது எங்கு போவேன் என சிரித்தாள். ம் அவனையே உன் பாய்ஃப்ரெண்ட் ஆக்கி கொள். அவன்தான் உனக்கு பொருத்தமானவன் என்றாள். சே சே அவன் அப்படிப்பட்ட டைப் கிடையாது. பிறகு எப்படிப்பட்ட டைப் . இவள் யோசனை செய்து பார்த்தாள். தான் யாரிடமும் பழகாமல் ஒரு முடிவுக்கும் வர முடியாதென்பதை உணர்ந்து இருந்தாள். அப்போதுதான் சமர் படிக்கும் காலேஜில் சயின்ஸ் கண்காட்சி போட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நாளைக்கு நாம் அங்கு போகலாமா என்றாள் ஹரிதா. சமர் ஒருவேளை மனம் மாறியிருக்கலாம் இப்போது எப்படியிருக்கிறான் என பார்க்கிற ஆவல் ஏற்பட்டது. ஆறுமுகமும் வந்திருந்தான். சௌமியாவோடு , ஹரிதாவும் அந்த கண்காட்சிக்கு சென்று இருந்தனர். உயிரியல்,இயற்பியல்,வேதியியல் என வெவ்வேறு பிரிவுகளில் கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது.ஆறுமுகமும் இவளும் மட்டும் சுற்றி பார்த்தனர். சௌமியா ரஞ்சித்திடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள் .
சமர் ஒரு ஸ்டால் ஒன்றில் விளக்கம் கொடுப்பவனாக நின்று கொண்டிருந்தான். அவனுடன் ஒரு பெண்ணும் ஒரு பையனும் கூட நின்று கொண்டிருந்தனர். ஹரிதாவை பார்த்ததும் புன்னகைத்தான் . ஹாய் ஹவ் ஆர் யு என்றான். நான் நல்லாத்தான் இருக்கிறேன். இவன் என் ஃப்ரெண்ட் ஆறுமுகம் என்றாள். அவனுடன் ஆறுமுகம் கை குலுக்கினான் . சிறிது நேரம் சந்தேகங்கள் கேட்டான் ஆறுமுகம். இருவரும் விடைபெற்றுக்கொண்டார்கள். ஆறுமுகம் சமர் எப்படி என்றாள் . நல்ல ஸ்மார்ட் என்றான். ம் தாங்க்ஸ் . அவன் உன்னை ப்ரபோஸ் செய்தானா என்று கேட்டான் . ஆமாம் எப்படி கண்டுபிடித்தாய் அவன் கண்கள் உன்னை நோக்கியே இருந்தது. அதெல்லாம் பழைய கதை என்று சொன்னாள். சௌமியா பிறகு வந்து சேர்ந்து கொண்டாள். மூவரும் அங்கிருந்த கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டனர். சௌமியா நீ சமரை பார்த்தாயா என்ன சொன்னான் என்றாள். அவன் இப்போது மாறி இருக்கிறான். ஆனால் நான் அவனை விட மாறி இருக்கிறேன் என்றாள் ஹரிதா.
இரவு ஹரிதா தூங்க நேரம் ஆனது. சமர் இப்போதும் தன்னை விரும்புவானா அல்லது அவாய்ட் செய்வானா என யோசித்தாள் . அதனால் நமக்கென்ன அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கென்ன என்று அவள் மனம் சொல்லியது. நிச்சயம் அதை யார் மூலமாவது தெரிந்து கொள்ள வேண்டும் . நாமும் கொஞ்சம் ரிஸ்க் எடுப்பதில் தவறில்லை . அவனோடு சேர்ந்து இருக்க முடியுமா என்ன ? அவன் இஷ்டத்துக்கு நம்மால் ஓட முடியுமா இப்படியாக அவள் சிந்தனை நீண்டது. அவள் சிந்து டீச்சரிடமே இதை கேட்போம் என நினைத்தாள். அவள் யோகா கிளாஸ் நடத்துவதில் பிஸி ஆக இருந்ததால் கொஞ்சம் காத்திருக்கும் படி சொன்னாள். இவள் பிரச்சனையை சொன்னதும் சிரித்தாள். நீ நினைப்பதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஆனால் உன்னுடைய தகுதி குறித்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்றாள். ம் புரிகிறது மேடம் என்றாள். நீ முயற்சி பண்ணு ஆனால் கட்டுப்பாட்டை இழந்து விடாதே என்றாள் சிந்து.
உனக்கு படிக்கிற வேலையை விட இது முக்கியமா என்றாள் சௌமியா. என்னடி திடீர்னு இப்படி சொல்லிட்ட ? ம் அப்புறம் என்ன நீ சதா இதே சிந்தனையா இருந்தா எப்படி.. படிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்து என்றாள். சே எப்படி இருந்தாலும் அவளை போல நான் இல்லை. எதற்காகவோ காத்துக்கொண்டே இருக்கிறேன். சதா சர்வாகாலமும் இந்த ஒரு ஸைட் சிந்தனை தன்னை வாட்டி எடுக்கிறது. அதை நிச்சயம் தீர்க்கவேண்டும் என முடிவு செய்தாள். மறுபடி சமரிடம் தானே போய் பேசுவதுதான் சரியாக இருக்க முடியும் என நினைத்தாள். என்ன காரணத்துக்காக அவனை வேண்டாம் என்றோம் என்பது அவளுக்கு நினைவில் இல்லை. அவன் அவளை இப்போதும் நேசித்தால் அவைகளை பற்றி அவன் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்றே கருதினாள். அவள் காலையில் லேட் ஆக எழுந்து கொண்டாள். சண்டேவாக அது இருந்தது. அவள் காப்பி பருகியபடி அந்த நாளை இனிதே துவங்கினாள். ஆறுமுகத்தை முதலில் பார்த்தால் தேவலாம் என தோன்றியது. அவனுடைய ஹாஸ்டல் ஃபோன் நம்பருக்கு ஃபோன் செய்தாள். தான் அவன் ஹாஸ்டல் காம்ப்ளக்ஸ் அருகே வருவதாக சொல்லியிருந்தாள். அவன் அரைமணி நேரத்தில் தயாராகிவிடுவேன் என சொன்னான். நிச்சயம் தான் சரியான பாதையை நோக்கித்தான் போவதாக ஹரிதா தனக்குள் சொல்லிக்கொண்டாள்.