கனவு 18
அன்று காலை 8 மணிக்கு ஆறுமுகத்துக்கு இளங்கோவிடம் இருந்து ஃபோன் வந்தது. சார் எப்படி இருக்கிறீர்கள் என்றான். நான் நன்றாய் இருக்கிறேன் இங்கே லட்சுமி மஹாலில் ஒரு கான்பரன்ஸ் நடக்கிறது அதற்காக வந்திருக்கிறேன் என்றார். சாயங்காலம் 6 மணி போல வந்து என்னை பார்க்க முடியுமா என்றார். நிச்சயமாக வருகிறேன். ஹரிதாவையும் முடிந்தால் அழைத்து வா என்றார் .ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். அவள் மகிழ்ச்சி அடைந்தாள் . நீண்ட நாட்களுக்கு பிறகு இளங்கோ சாரை பார்க்க போகிறோம் என நினைத்தாள்.ஆறுமுகத்திடம் வேறு என்ன சொன்னார் இளங்கோ என விசாரித்தாள். அவர் உன்னையும் அழைத்து வர சொன்னார் என்று சொன்னான். சௌமியா எப்பவும் போல மாறிவிட்டாள் . அவளிடத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதுவும் தென்படவில்லை. கீர்த்தியின் பிறந்த நாள் அடுத்த வாரம் வருகிறதென்று சௌமியா சொன்னாள். அவள் சௌமியாவோடும், ரஞ்சித் கூடவும் பிறந்த நாள் கொண்டாட விரும்புவதாக சொன்னாள் என்று சௌமியா கூறினாள்.கீர்த்திக்கு பிறந்த நாளா அப்போது அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆறுமுகமும் கூறினான்.
மாலை 6 மணிக்கெல்லாம் அந்த மண்டபத்துக்கு போய்விட்டார்கள் ஹரிதாவும், ஆறுமுகமும். இருவரையும் டிபன் சாப்பிட அழைத்து போனார் இளங்கோ. இவள் என்னென்னவோ பேச நினைத்திருந்தாள். ஓரளவுக்கு கான்பரன்ஸ் கூட்டம் வந்திருந்தது. இவரும் சிறிது நேரம் மேடையில் ஏறி பேசினார். பிறகுதான் இவர்களை சந்தித்து பேச முடிந்தது. என்ன ஹரிதா இப்போதெல்லாம் புயல் வேகத்தில் விளையாடுகிறாயாமே என்றார். இவள் அப்படியெல்லாம் இல்லை என்றாள். நன்றாக விளையாடுகிறாய் என்று பிரேமா டீச்சர் சொன்னார். ஆனால் அவரிடம் சரியாக பேசுவதில்லை என்றும் சொல்லியிருந்தார்.அவர் ஆறுமுகத்திடம் சிறிது நேரம் ஹாஸ்டல் எல்லாம் எப்படி இருக்கிறது என விசாரித்தார்.ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டாம் கிளம்புங்கள் என்றார். ஹரிதாவுக்கு அதில் வருத்தம்தான். ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் அடிக்கடி ஃபோன் பண்ணுங்கள் சார் என்றாள் .
சார் மாறிவிட்டார் என்றாள் ஹரிதா. அவர் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடனே நம்முடன் பேசினார் என்றான் ஆறுமுகம். இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
கீர்த்தி ஆறுமுகத்துக்கும், ஹரிதாவுக்கும் ஃபோன் பண்ணி என்னுடைய பர்த்டே ஸ்பெஷல் ஆக நாம் பாண்டிச்சேரி போகிறோம் நீங்கள் இருவரும் கட்டாயம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டாள். ஒரு நாள் பயணம் தான் என்பதால் ஹரிதாவும்,ஆறுமுகமும் ஒத்துக்கொண்டனர். அது ஒரு சனி , ஞாயிறாக இருந்ததால் ஹரிதாவுக்கும், ஆறுமுகத்துக்கும் பிரச்சனை எதுவும் இல்லை. சனிக்கிழமை பர்த்டே பார்ட்டி,சண்டே பாண்டிச்சேரி போகிறோம் என ரஞ்சித்தும் சொல்லியிருந்தான்.சௌமியா அத்தனை உற்சாகத்தை பயணத்தில் காட்டவில்லை எனினும் கீர்த்திக்காக தான் வருவதாக சொல்லியிருந்தாள். அந்த வாரம் வேகமாக ஓடியது. கீர்த்தியை எப்போது பார்ப்போம் என ஆறுமுகமும், ஹரிதாவும் ஆர்வமாக இருந்தனர். அந்த ஆர்வம் அவர்களிடத்தில் இருந்த புரிதலை காட்டியது. அவள் இவர்கள் மேல் வைத்திருந்த அன்புக்காக இருவரும் அவள் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினர். ஒரு மோதிரம் வாங்கலாமா என்றாள் ஹரிதா என்னிடத்தில் அவ்வளவு பணமில்லை என்றான் ஆறுமுகம். சரி நீயே சொல் அவளுக்கு புத்தகங்கள் என்றாள் உயிர் அதை வாங்கி கொடுக்கலாம் என்றான். இவள் அதற்கு ஒத்துக்கொண்டாள். இருவரும் சில கடைகளில் அலைந்து திரிந்து நல்ல புத்தகங்களாக வாங்கி கிப்ட் பேக் செய்தனர்.
ரஞ்சித் எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பக செய்திருந்தான். வீட்டிலேயே இல்லாமல் ஒரு பார்ட்டி ஹால் ஒன்றை பிடித்திருந்தான். அதில் ஒரு 50 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தார்கள்.கீர்த்தி சனிக்கிழமை மதியம் போல வந்தாள். சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டாள். ரஞ்சித் அவளுக்காக பூங்கொத்து வாங்கி வைத்திருந்தான். சாயங்காலம் போல ஹரிதாவும், ஆறுமுகமும் வந்திருந்தார்கள். ஹேப்பி பர்த்டே கீர்த்தி என்றாள் ஹரிதா. ஆறுமுகமும் வாழ்த்தினான். அவள் தூங்கி எழுந்ததும் குளித்து மேக் அப் போட்டு தயாராவதற்குள் மணி 5 30 ஆகிவிட்டது. 6 மணிக்கு ஃபங்சன் . எல்லோரும் அவசரமாக காரில் ஏறி பார்ட்டி ஹால் விரைந்தனர். சௌமியா எல்லோரையும் வரவேற்றாள். ஆறுமுகம் கொஞ்சம் பதட்டத்துடனே இருந்தான். அவனை பார்த்த கீர்த்தி ஏன் இப்படி டைப் அடிக்கிறாய். இப்படி என் பக்கத்தில் நில்லு என்றாள். ஹரிதா அவளின் இடது புறத்தில் நின்றாள்.நேரம் ஆகிவிட்டது கேக் வெட்டலாம் என்றான் ரஞ்சித். கேக் வெட்டி முதலில் ஆறுமுகத்துக்கும் பிறகு ஹரிதாவுக்கும் கொடுத்தாள். ரஞ்சித்தும், சௌமியாவும் எல்லோருக்கும் கேக் வெட்டி கொடுத்தனர். பிறந்தநாள் விழா களை கட்டியது .டி ஜே மியூசிக் போட எல்லோரும் ஆட தொடங்கினர். கீர்த்தி ஆறுமுகம் கையை பிடித்துக்கொண்டு ஆடினாள் . ஹரிதாவும் சௌமியாவும் உற்சாகமாக ஆடினார்கள். ரஞ்சித் டி ஜே விடம் சில குறிப்புகளை கொடுத்துக்கொண்டிருந்தான். டிபன் பரிமாறப்பட்டது. சௌமியாவும், ஹரிதாவும் எல்லோருக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டு பரிமாறினர். ரஞ்சித் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்தான்.
ஹரிதாவும், ஆறுமுகமும் அந்த புத்தகங்கள் அடங்கிய கிப்ட் பேக்கை கீர்த்தியிடம் கொடுத்தனர். அவள் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டாள். எல்லோரும் வரிசையில் நின்று கிப்ட் கொடுத்தனர். சௌமியா ஒரு சாரி பரிசாக வழங்கினாள் . ரஞ்சித் மோதிரம் ஒன்றை அவளுக்கு அணிவித்தான்.மணி 9 ஆனதும் ஆறுமுகம் கிளம்பினான். நாளை காலை 4 மணிக்கெல்லாம் பாண்டிச்சேரி கிளம்புகிறோம் என்று கீர்த்தி அவனிடத்தில் சொன்னான். நான் தயாராய் இருப்பேன் என்று சொன்னான். ஹரிதா நானும் கிளம்புகிறேன் என்றாள். இரு போகலாம் ரஞ்சித் உன்னை டிராப் செய்வான் என்று கீர்த்தி சொன்னாள்.ஃபங்சன் சிறப்பாக நடந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம் . ரஞ்சித்துக்கு நன்றி சொன்னாள் கீர்த்தி. வீட்டுக்கு வந்ததும் கேக் , சாக்லேட் போன்றவை அடங்கிய பை ஒன்றை சௌமியா ஹரிதாவிடம் கொடுத்தாள். நீ நன்றாக டான்ஸ் ஆடினாய் நான்தான் மனமே இல்லாமல் ஆடினேன் என்றாள் சௌமியா. அதெல்லாம் உன் நினைப்புத்தான் நீ எப்பவுமே பெஸ்ட் என்றாள் ஹரிதா.ஹரிதாவை அவள் வீட்டில் காரில் டிராப் செய்தான் ரஞ்சித். மறுநாள் சீக்கிரமாக புறப்பட வேண்டும் என்பதால் வீட்டுக்கு போய் தூங்கியும் விட்டான்.
சௌமியாவும், கீர்த்தியும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். நீ ஏன் சும்மா கூட ரஞ்சித்திடம் பேசவில்லை என்றாள் கீர்த்தி. அவன் என்னிடம் பேச விரும்பவில்லை என்றாள் சௌமியா. உங்கள் இருவர் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்கு தெரியாது ஆனால் இது நல்லதல்ல என்று மட்டும் தெரியும் என்றாள் கீர்த்தி. சௌமியா நீ சோர்வாக இருப்பாய் இப்போது தூங்கு நாளை பேசிக்கொள்ளலாம் என்றாள். எனக்கு ஒன்றும் இல்லை நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன். சரி குட் நைட் என்றாள் கீர்த்தி. ஆறுமுகத்திடம் பேச வேண்டும் போல இருந்தது . ஆனால் இப்போது வேண்டாம் நாளைக்கு பேசிக்கொள்ளலாம் என எண்ணினாள். சௌமியா ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணினாள். என்னடி வீட்டுக்கு போய்விட்டாயா அவன் ஏதாவது சொன்னானா என்றாள். அவன் என்னிடம் அதிகம் பேசவில்லை. காலை 4 மணிக்கு தயாராய் இருக்கும்படி சொன்னான் . நீயும் நேரத்தோடு தூங்கு என்றாள் ஹரிதா. குட் நைட் . ஓகே பை .சௌமியாவுக்கு தூக்கம் வரவில்லை.பிறந்த நாள் விழா பார்ட்டி புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுக்கு தூக்கம் வந்திருக்க வேண்டும் .ஆனால் தன்னுடைய சூழ்நிலை பற்றிய நினைப்பு அவளை தூங்க விடாமல் செய்தது.
காலை 4 மணிக்கெல்லாம் எல்லோரும் தயாராய் இருந்தனர். கீரத்திதான் சற்று தூங்கி போய்விட்டாள். அவளை சௌமியா எழுப்பினாள். கீர்த்தி சாரி சாரி என்னால் லேட் ஆகிவிட்டதா என்றவாறே அவசரம் அவசரமாக கிளம்பினாள் . ஆறுமுகத்தையும், ஹரிதாவையும் போகிற வழியில் பிக்அப் செய்து கொண்டான் ரஞ்சித். சௌமியா பாண்டிச்சேரியில் பார்க்க போகிற இடங்களை பற்றி பேசிக்கொண்டு வந்தாள் . இரண்டு மணி நேர பயணம்தான். ஆறுமுகம் இந்த முறை தூங்கி வழியவில்லை.அவன் ரஞ்சித்துடன் பேசிக்கொண்டு வந்தான். ஹரிதா சௌமியாவுக்கு ரோஸ் வைத்துவிட்டாள். கீர்த்திக்கு பூக்கள் என்றால் அலர்ஜி. கார் கீர்த்தி சொன்னது போல மிதமான வேகத்தில் சென்றது. ஹரிதா ஏதாவது பாட்டு போடு ரஞ்சித் என்றாள். அவன் பிளே லிஸ்ட் வித்தியாசமாக இருந்தது. கீர்த்தி தன்னிடம் இருந்த பென் டிரைவ் கொடுத்தாள். அதை போட்டதும் கார் அதிர்ந்தது. என்னடி இப்படி குத்து பாட்டா வைத்திருக்கிறாய் என்றாள் சௌமியா. பயணத்தில் இது கூட இல்லையென்றால் எப்படி எனக் கேட்டாள். ஹரிதா சௌமியா மேல் சாய்ந்து தூங்கினாள் . எப்போதும் விழித்திருப்பவள் இன்று எப்படி இப்படி தூங்குகிறாள் என்று சௌமியா கூறினாள்.
இடையில் டிபன் சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினான் ரஞ்சித். இன்னும் அரைமணி நேரத்தில் பாண்டிச்சேரி போய்விடலாம் என்றான் ஆறுமுகம். ஆறுமுகம் கூகிள் மேப் ஒன்றை பார்த்தபடி இருந்தான். இன்று மழை வருமா ஆறுமுகம் என்றாள் கீர்த்தி. நிச்சயம் சாயங்காலம் வரும். இப்போது மிதமான வெயிலே இருக்கும் என்றான். கீர்த்தி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான் ஆறுமுகம். டிபன் நன்றாய் இருப்பதாய் கீர்த்தி சொன்னாள். ஹரிதா முகம் கழுவி வந்தாள். என்னவோ மயக்கம் என்று ஹரிதா சொன்னாள். ஹரிதாவும் சௌமியா ரஞ்சித் மூவரும் இன்னொரு டேபிள் ஒன்றில் அமர்ந்திருந்தார்கள். ஹரிதா நிதானமாக சாப்பிடு என்று ரஞ்சித் சொன்னான். சௌமியா சாப்பிட்டவுடன் காபி ஆர்டர் பண்ணினாள்.எல்லோரும் கிளம்பினர். ரஞ்சித் பில் பே பண்ணிவிட்டு வந்தான். ஆறுமுகம் கீர்த்தியிடம் பேசிக்கொண்டு வந்தான். கீர்த்தி இன்று நல்ல கிளைமேட்டில் போட்டிங் போக வேண்டும் என்று சொன்னாள்.
பாண்டிச்சேரி போய் சேர்ந்தபோது காலை 9 30 மணி ஆகியிருந்தது. அவர்கள் சில்வர் பீச், ராக் பீச் போன்றவற்றிற்கு போகலாம் என பிளான் பண்ணியிருந்தார்கள். முதலில் ராக் பீச் போகலாம் என கீர்த்தி சொன்னாள்.அதன்படியே சென்றார்கள்.எல்லோரும் சற்று நேரம் கடற்கரையில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டார்கள். சௌமியாவும், ஹரிதாவும் இந்த கடற்கரை கிளீன் ஆக இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். நீல நிற அலைகளை ஆர்வத்துடன் ரசித்தார்கள். அலை சில சமயம் ஆக்ரோஷமாயும், சில சமயம் அப்படி ஒரு சுவடே இல்லாதது போலவும் காட்சி அளிப்பதாக கீர்த்தி சொன்னாள்.