கனவு 6
இப்போது என்ன செய்ய போகிறாய் ஹரிதா என்றான் ஆறுமுகம். அதுதான் எனக்கும் புரியவில்லை. சமரை பார்த்து பேச வேண்டும் அவ்வளவுதான். அவன் அட்வாண்டேஜ் எடுத்துக்கொண்டால் என்ன செய்வாய். அப்படி ஒன்று இருக்கிறதோ ? ம் என்ன செய்ய செய்யலாம் நீயே சொல் ஆறுமுகம். அவனிடத்தில் ஃபோன் பண்ணி பேசு என்றான். இது வொர்க் அவுட் ஆகுமா ? நிச்சயம் வொர்க் அவுட் ஆகும் . சரி நீ டிபன் சாப்பிட்டாயா ? இன்னும் இல்லை சரி வா. அங்கே இருக்கிற சிறிய உணவகம் ஒன்றில் போய் சாப்பிட்டார்கள். சரி நான் அப்போது கிளம்பட்டுமா என்றாள். வீட்டுக்கு வா அடுத்த வாரம் அப்பா, அம்மா உன்னை பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்றாள். சரி வருகிறேன் என்றான். விடைபெற்றுக்கொண்டாள். அவள் சைக்கிளில்தான் வந்திருந்தாள். பார்த்து ஜாக்கிரதையாக போ என்று ஆறுமுகம் சொல்லியிருந்தான். தான் ஒன்றும் அறியாத பெண்ணில்லை எல்லா பக்குவமும் தனக்கும் தெரியும் என்று ஹரிதா நம்பினாள். அப்பா போனில் இருந்து கூப்பிட்டால் தொந்தரவு அதனால் சௌமியா ஃபோன் மூலம் சமரை கூப்பிடலாம் என முடிவு செய்தாள்.
பிளஸ் ஒன் பருவம் அதிக சிரமமில்லாதது போல தோன்றினாலும்,ஹரிதா துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு படிப்பில் நல்ல நாட்டம் இருந்தது அதே சமயம் அவளை பற்றியும் இந்த சமூகத்தைப் பற்றியும் அளவுக்கு அதிகமான கவலை இருந்தது. கேள்விகள் மேலும் கேள்விகள் . ஒரு வேளை தான் வெளிநாட்டில் இருந்திருந்தால் இந்த கேள்விக்கே அவசியம் இருந்திருக்காது என்று கூட யோசித்தாள். அப்படி ஒரு வாய்ப்பு அவளுக்கு கிடைக்குமா என்பது கூட தெரியவில்லை. சண்டே சாயங்காலம் போல அம்மாவுடன் ஷாப்பிங் போனாள். நேரம் போனதே தெரியவில்லை. அவள் அம்மா ஒவ்வொரு பொருள் வாங்கவும் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டாள். அவள் அப்பா அப்படியில்லை. சட்டென்று முடிவு எடுக்க கூடியவர். அவள் அம்மாவிடம் ஆறுமுகம் பற்றி சொன்னாள். ஏற்கனவே சொல்லியிருந்தாலும் அடுத்த வாரம் அவனை வீட்டுக்கு வர சொல்லியிருப்பதாக சொன்னாள். பையன் நல்ல பையனாத்தான் இருப்பான் போல என்றெண்ணிக்கொண்டாள் ஹரிதா அம்மா. ஹரிதா மனதில் ஓடிக்கொண்டிருப்பதெல்லாம் சமர் பெயர் மட்டுமே. அதன் பின்விளைவுகள் பற்றி சிந்திக்க கூட அவளுக்கு தோன்றவில்லை.
திங்கள்கிழமை பரபரப்புடன் ஸ்கூல் போயிருந்தாள் . எல்லவாற்றிலும் இப்போது ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்திருந்தாள். அவள் தன்னை சீரமைக்க விரும்பினாள். அதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு வேலை செய்தாள். மற்ற பெண்கள் போல தானும் நடந்து கொள்ள கூடாது என்று தனக்கு தானே உறுதி கொண்டாள். என்ன ஹரிதா சமரிடம் பேசினாயா என்றான் ஆறுமுகம். இல்லை என்ன அவசரம் இப்போது சௌமியா போனில்தான் பேச வேண்டும் என்றாள்.ஆறுமுகம் ஏழையில்லை அவன் மனம் திடமான முன்னேற்றம் குறித்த சிந்தனையில் இருந்தது. நல்ல தன்னம்பிக்கை இருந்தது. அதுவே ஹரிதா அவன் கூட நெருங்கி பழக காரணமாய் இருந்தது. ஆறுமுகம் என்னை பற்றி என்ன நினைக்கிறாய் என்றாள் ? அவன் ஒரு நிமிடம் திடுக்கிட்டான் . என்ன திடீர்னு ? ஒண்ணுமில்லை சும்மா ஒரு நாலேட்ஜ்க்காக என்றாள். நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் நீ பெண்ணை இருப்பதால் சில விஷயங்களை நான் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றான். ம் அவ்வளவுதானா ? வேறு என்ன சொல்ல நீ ஒரு புத்திசாலி பூதம். அவள் சிரித்து விட்டாள்.
சௌமியா என்னடி சமர் கூட என்ன பேச போகிறாய் என்றாள். சும்மா கூட பழக கூடாதா ? அது தேவையா என்று யோசித்து பேசு அவனோ சோசியல் டைப் நீயோ ஒரு ஸ்ட்ரைட் ஃபார்வார்டு டைப். ம் நீ சொல்வதும் சரிதான். ஃபோன் வாங்கி அவன் நம்பர் கால் செய்தாள். அவன் உடனே எடுக்கவில்லை. எங்கேயாவது டிரைவிங் செய்து கொண்டிருக்கலாம் என்றாள் சௌமியா. ம் அப்புறம் பேசுவோம் என்றாள். 10 நிமிடம் கழித்து சமரே கூப்பிட்டான். யார் வேணும் உங்களுக்கு என்றான். நான் ஹரிதா பேசுகிறேன் என்றாள். சொல்லு ஹரிதா இது யார் நம்பர் இது சௌமியாவுடையது. என்னவோ உன்னிடம் பேச தோன்றியது. நாளைக்கு ஈவினிங் நானே உன்னை சந்திக்கிறேன் என்றான். அவன் போனை வைத்து விட்டான். இவளுக்கு குபீர் என்று வியர்த்தது. நீண்ட நாட்கள் கழித்து நடக்க போகிற சந்திப்பல்லவா ? ஆறுமுகத்திடமும் சொன்னாள். ஆல் தி பெஸ்ட் என்றான். நீ அவனை உண்மையில் நேசிக்கிறாயா ? இல்லை சும்மா துணைக்காக பழக போகிறாயா என்று கேட்டான். இப்படியெல்லாம் கேட்டால் எனக்கு பதில் சொல்ல தெரியாது என்றாள்.
அவனை ஸ்கூல் யூனிபோர்மில் சந்திப்பது நன்றாய் இருக்காது என்று தோன்றியது. அவன் எப்போது எங்கு வருவான் என்று சொல்லவில்லையே . அவளிடத்தில் அளவில்லாத ஆவல் ஏற்பட்டது. மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கும் போய்விட்டாள். எதற்கும் கோவில் பக்கம் போய் பார்ப்போமா என்று யோசித்தாள். அம்மாவிடம் சொல்லிவிட்டு கோவிலுக்கு போனாள் . அங்கே அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் போகும் வரை காத்திருந்தாள். ஹேய் எனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணினியா என்றான். அப்படியில்லை. பரவாயில்லை என்ன விஷயம் சொல்லு. நான் உன்னை ரொம்ப கடுமையாக பேசிவிட்டேன் சாரி என்றாள். அதெல்லாம் நான் எப்போதோ மறந்து விட்டேன். நீ சொல்ல வந்ததை சொல்லு. சும்மா சொல்லு சொல்லு என்றால் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உடனே காதல் என்று கற்பனை செய்ய வேண்டாம் என்றாள். ம் அப்புறம் ? நாம் நல்ல நண்பர்களாய் இருப்போம் என்றாள். அதுக்கென்ன நிச்சயம் நாம் நல்ல நண்பர்களாய் இருப்போம் என்றான்.
சௌமியாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள். சே அவ்வளவுதானா என்றாள். வேறென்ன எதிர்பார்த்தாய் . அதெல்லாம் வேண்டாம் .. நீ சந்தோஷமாய் இருந்தாலே போதும் என்றாள். ஆறுமுகம் ஆவலாய் விசாரித்தான் . சமர் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை என்றாள். உன் வாழ்வில் நிச்சயம் அவன் ஒரு திருப்புமுனையாக இருப்பான் என்றான். ஆறுமுகம் நான் அவனோடு லவ்வில் விழுந்துவிடுவேனா என்றாள்.உனக்கே தெரியாதபோது எனக்கெப்படி தெரியும் என்றான். ம் நீ ஒரு குறும்புக்காரன் என்று அவன் தோளில் குத்தினாள் . ஆறுமுகத்திற்கு சில சமயம் ஹரிதாவுடைய அறியாமை நல்ல விஷயம் என்று தோன்றியது. நாட்கள் நகர்ந்தன. அன்று ஆறுமுகம் ஹரிதா வீட்டுக்கு வந்திருந்தான். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். மதியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். அவன் மனம் நிறைவடைந்திருந்தது. ஹரிதா வெறும் பெயர் அளவுக்கு பழகுபவள் அல்ல என்று நினைத்தான். விடை பெற்றுக்கொண்டான்.
சமர் அவளுக்கு ஃபோன் பண்ண சிரமமாய் இருந்தது. அவளே கால் பண்ணி பேசினால்தான் உண்டு. இதை சமரும் சொன்னான். கொஞ்ச நாள் தானே அப்புறம் ஃபோன் வாங்கி விடலாம் என்று ஹரிதா சொன்னாள். இப்போது கேட்டால் அப்பா கேள்விகள் கேட்பார் என்றும் சொன்னாள். நான் வேண்டுமென்றால் ஃபோன் வாங்கித் தரவா என்றான். அதெல்லாம் வேண்டாம் நான் சமாளித்துக்கொள்வேன் என்றாள். அவர்கள் பட்டும் படாமல் பேசினார்கள். ஆறுமுகம் அவளிடம் எப்படி போகிறது சமருடனான நட்பு என விசாரித்தான். ம் ஏதோ பேசுகிறான். நான் அவ்வளவு நெருக்கமாக உணரவில்லை என்றாள். நான் ஏற்கனவே உன்னைப் பற்றி அவனிடம் சொல்லியிருக்கிறேன். உனக்கு சைக்கிள் வாங்க ஏற்பாடு செய்வதாய் சொல்லியிருக்கிறான். அதெல்லாம் எதற்கு. நீ எவ்வளவு சிரமப்படுகிறாய் என்பதை நான் அறிவேன். நிச்சயம் அந்த சைக்கிள் உனக்கு தேவைதான் . நீ மறுக்க கூடாது என்றாள். ரொம்ப தாங்க்ஸ் ஹரிதா. நீ எனக்காக செய்யும் உதவிகளை மறக்க மாட்டேன் என்றான்.
அடுத்த வாரத்தில் சைக்கிள் வந்துவிட்டது. அது பயன்படுத்திய சைக்கிள் என்ற போதும் அதன் அருமை ஆறுமுகத்துக்கு தெரிந்தது. ரொம்ப நன்றி என்றான் சமரிடம்.நீ இனி சிரமப்பட வேண்டாம் என்றான் சமர். நீ ஹரிதாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் சொன்னான்.விஷயத்தை கேள்விப்பட்ட சௌமியா ஹரிதாவை பாராட்டினாள். என்னென்னவோ பண்ணுறியே கலக்கிட்ட என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லடி நீ அதை பெரிது படுத்தாதே . ஹரிதா சமர் கூட அடுத்த வாரம் சினிமாவுக்கு போனாள். எதுவும் நடக்கவில்லை. சௌமியா ஹரிதாவை கிண்டல் செய்தாள். என்ன படம் பார்த்தானா இல்லை உன்னையே பார்த்தானா என்றாள். சீ அவன் திருந்திவிட்டான் என்றே நினைக்கிறேன். ம் நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும். எனக்கு அவ்வளவு பேராசை எல்லாம் கிடையாது. பார்ப்பதெல்லாம் ஆசைப்பட நான் விரும்பவில்லை. சரி சரி நாளைக்கு பார்க்கலாம் என்றாள் சௌமியா.
ஹரிதாவின் சூழல் முன்னை விட இப்போது மேம்பட்டு இருந்தது. அவள் படிப்பில் கவனம் செலுத்தினாள் . அவளுடைய பழைய கேள்விகளை அவள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருந்தாள் . சமர், சௌமியா, ஆறுமுகம் மூவரும் நல்ல துணையாக இருந்தனர். இப்படியாக அவளுடைய உலகம் விரிவடைய தொடங்கியது.அவள் பரபரப்பாக எப்போதும் போல ஸ்கூல் கிளம்பி கொண்டிருதாள். அன்று மழை வரும் போல இருந்தது. இவள் குடை எடுத்து செல்லவில்லை. ஏதோ காரணத்தால் மழை விடுமுறை விட்டார்கள். அவள் ஆறுமுகம், சௌமியா மூவரும் பள்ளியை விட்டு வெளியே வந்த போது சமர் வந்தான். எல்லோரும் அருகில் இருக்கும் அவனுடைய வீட்டுக்கு போகலாம் என்றான். சௌமியா நான் ரஞ்சித்தை பார்க்க போகிறேன் என்றாள். ஆறுமுகம் நானும் போகிறேன் கொஞ்சம் வேலையிருக்கிறது என்று சொன்னான். இவள் தயங்கினாள். அப்புறம் சரி நாளை பார்க்கலாம் என சௌமியாவுக்கும்,ஆறுமுகத்துக்கும் விடை கொடுத்தாள். சமர் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டாள் .
அவனுடைய வீடு நீட் ஆக இருந்தது. அவனுடைய அப்பா அம்மா வேலைக்கு போயிருந்தார்கள். அவள் அவர்களை பற்றி விசாரித்தாள். இரு ஜூஸ் கொண்டு வருகிறேன் என கிச்சன் உள்ளே போனான். அவளுடைய மனம் படபடவென அடித்துக்கொண்டது. இது சரியா தவறா இப்படி வந்திருக்க கூடாதோ என நினைத்து கொண்டாள். மேலும் அவன் அருகில் இவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்து இருந்தது என்னவோ போல இருந்தது. கஷ்டப்பட்டு ஜூஸ் குடித்தாள். சரி நான் போகட்டுமா என்றாள். நீ இப்படியே இருப்பதுதான் உன் உத்தேசமா ? அடுத்த கட்டத்துக்கு போக வேண்டாமா என்றான். அவள் தயக்கமாக அதற்கு என்ன அவசரம் என்றாள். நான் உன்னை விட்டு எங்கேயும் போகவில்லையே ? ம் நீ சொல்வதும் சரிதான். அவளை கொண்டு போய் அவள் வீட்டில் விட்டான். நல்ல வேளை அவன் எதுவும் செய்யவில்லை என நினைத்தாள். என்ன நினைக்கிறோம் நாம் அவனை இப்படியே காத்திருக்க செய்வதா என யோசித்தாள்.
என்ன நேத்து ஒரே ஜாலியா என்றாள் சௌமியா. அதெல்லாம் ஒன்றுமில்லை. கிஸ்ஸாவது பண்ணினீர்களா இல்லையா என்றாள். போடி உனக்கு வேறு வேலையில்லை. அவன் பயந்து போய்விட்டான் என்றாள். இவ்வளவு தான் நடந்ததா ? இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்றும் கிண்டல் செய்தாள். ஆறுமுகம் ஒன்றும் கேட்கவில்லை. ஹரிதா இனி அப்படி போக கூடாது என்று சொல்லிக்கொண்டாள். நாம் ஸ்கூல் படிக்கிற பொண்ணு அதற்கு மேல் நம்மிடம் என்ன பவர் இருக்கிறது. என்றும் யோசித்தாள். கட்டுப்பாடு ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் இல்லையென்றால் எல்லை மீறிய பிறகு யோசித்தும் பயன் இல்லை என்று மனதுக்குள் நிலை நிறுத்திக்கொண்டாள்