Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஹரிதாவின் பகல் கனவுகள் part 24


கனவு 24

கீர்த்தி போனில் தான் ஊருக்குத்தான் வந்து கொண்டிருப்பதாகவும் டிரைனில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றும் சொன்னாள். ஒன்றும் அவசரமில்லை நீ நிதானமாக வா என்றாள் ஹரிதா. சௌமியாவுக்கும் ஃபோன் பண்ணி கீர்த்தி வந்து கொண்டிருக்கும் செய்தியை சொன்னாள். ஸ்டேஷன் போவோமா என கேட்டாள் ஹரிதா. சரி நான் வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கொள்கிறேன் என்றாள் சௌமியா. இவள் தயாராகி காத்திருந்தாள். டிரைன் இன்னும் 40 நிமிடத்தில் வந்துவிடும் என சௌமியா சொல்லியிருந்தாள் . ஹரிதாவையும் அழைத்துக்கொண்டு சௌமியா ஸ்டேஷன் போய் சேர டிரைன் வர இன்னும் 10 நிமிடங்கள் இருந்தது. சௌமியா சரியான நேரத்துக்குத்தான் வந்து விட்டோம் ஹரிதா என்றாள். கீர்த்தி சிறிய அளவிலான பெட்டி ஒன்றை மட்டுமே கொண்டு வந்திருந்தாள். ஒரு தோள் பை ஒன்றும் வைத்திருந்தாள். அவள் இவர்களை பார்த்து கைசையத்தாள். என்ன சௌமியா ஆள் இளைத்தார் போல இருக்கிறாயே சரியாக சாப்பிடுவாதில்லையா என்றாள் கீர்த்தி. அதெல்லாம் ஒன்றுமில்லை ஜூரம் வந்ததல்லவா அதுதான் கொஞ்சம் வீக் ஆக தெரிகிறேன் என்றாள் சௌமியா. ஹரிதா உன்னை பார்த்தால் சந்தோஷமாய் இருப்பதாக தெரிகிறது என்ன மறுபடி லவ்வா ? என்றாள். அதெல்லாம் இல்லை கீர்த்தி இப்போது எந்த பிரச்சனையும் இல்லை அது கூட காரணமாக இருக்கலாம் என்றாள் ஹரிதா. மூவரும் அங்கே இருந்த கபேயில் காபி குடித்தனர். வீட்டுக்கு வரும்போது மதியம் 1 மணி ஆகியிருந்தது.

ஹரிதா நான் கிளம்புகிறேன் என விடை பெற்றுக்கொண்டாள். ஈவினிங் பார்க்கலாம் என கீர்த்தி சொன்னாள். உனக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் உண்மையில் எனக்கு பதட்டமாய் இருந்தது. என்னால் உடனடியாக வர முடியவில்லை சாரி என்றாள் கீர்த்தி. அதெல்லாம் சாதாரண ஜூரம் தான். நீ கவலைப்படும்படி ஏதும்இல்லை என்றாள் சௌமியா. ஹரிதா நான் உண்மையில் சந்தோஷமாய் தெரிகிறேனா என கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் . நிஜமாகவே அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தாள்.சந்தோஷம் இந்த வார்த்தை எவ்வளவு பேருக்கு நிஜமான சந்தோஷத்தை தரும் கீர்த்தி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நான் ஏன் என்னையே சந்தேகமாக பார்க்கிறேன் அப்படியிருக்கக்கூடாது என உறுதி எடுத்துக்கொண்டாள் . அவள் அம்மாவிடம் போய் கீர்த்தி ஊரில் இருந்து வந்துவிட்டதாக சொன்னாள். அவள் இந்த விஷயத்தைல பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஹரிதாவும் கீர்த்தி பற்றி அதிகம் சொல்லியிருக்கவில்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஈவினிங் கீர்த்தியை பார்க்கும் போது அவளிடமே இது பற்றி ஒரு அபிப்ராயம் கேட்கலாம் என எண்ணியிருந்தாள்.

கீர்த்தி அவளுடைய ஆளுமை ஹரிதாவை எவ்வளவு தூரம் இன்ஃப்ளூயென்ஸ் செய்தது என்று ஹரிதா அம்மாவுக்கு தெரியவில்லை அல்லது தெரிய வாய்ப்பில்லை. ஹரிதா அம்மா அவள் உண்டு அவள் வேலையுண்டு என்று இருப்பவள். சாதாரண காரியங்களில் கூட அபிப்ராயம் சொல்லும் பழக்கம் அவளுக்கு இல்லை. நெருக்கடிகளின் போது நிதானமாக இருக்க, நேர்த்தியாக சமையல் செய்ய போன்றவற்றைத்தான் ஹரிதா அம்மா கற்று வைத்திருந்தாள். மாலை 4 ஆனதும் ஹரிதா சௌமியா வீட்டுக்கு போனாள். கீர்த்தி அசந்து தூங்கிக்கொண்டிருப்பதாக சொன்னாள் சௌமியா. சரி சரி என்ன பிளான் என்றாள் ஹரிதா. கீர்த்தியையே கேட்போம் அவள் விருப்பபடியே எங்காவது போவோம். இது பெரிய சிட்டியாய் இல்லாதது யார் செய்த குற்றம் என்றாள் ஹரிதா. நீ கவலைப்படாதே இன்டெர்நெட் தடையின்றி கிடைக்கும் வரை இதுவும் பெரிய சிட்டிதான் என்றாள் சௌமியா.ஹரிதாவுக்கு டீ போட்டு கொடுத்தாள் சௌமியா. மாடிக்கு போனார்கள் அங்கே செவ்வானம் அழகாக காட்சி அளித்தது. என்ன ஒரு அழகு என்றாள் ஹரிதா. இன்னும் நீ சிறு பெண்தான் என்றாள் சௌமியா.

கீர்த்தி 6 மணிக்கு தயரானாள் . அவளுக்கு ஹரிதாவை காத்திருக்க செய்யும் நோக்கமெல்லாம் இருக்கவில்லை. என்ன ஹரிதா 4 மணிக்கே வந்ததாக சௌமியா சொன்னாள். ம் என்னவோ வீட்டில் இருக்க போர் அடித்தது அதுதான் வந்துவிட்டேன் என்றாள். ஆறுமுகம் மறுபடி ஃபோன் பண்ணினானா என்றாள் கீரத்தி. இல்லை அவன் ரொம்ப பிஸியான ஆள் . ம் நான் காபி குடித்துவிட்டு வருகிறேன் என கீழே போனாள் கீர்த்தி. இவள் அந்தி வானம் அதன் தோற்றம் , மறைவு குறித்தெல்லாம் யோசித்தாள். ஜோடியாய் அதை ரசிக்க வேண்டும் இல்லையென்றால் சும்மா இருக்க வேண்டும் என நினைத்தாள். கீர்த்தி நாம் ஷாப்பிங் மால் போவோம் என்றாள். இங்கே ஏது ஷாப்பிங் மால் ? என்றாள் ஹரிதா. சூப்பர் மார்க்கெட்டைத்தான் அப்படி சொன்னேன் என்றாள் கீர்த்தி. மாலை 7 மணி ஆகிவிட்டிருந்தது. சௌமியா அம்மா சில மளிகை சாமான்களை வாங்க சொல்லியிருந்தாள். அவற்றையும் வாங்க போனார்கள். கீர்த்தி சில மேக் அப் சாமான்கள் வாங்கினாள் . யாருக்காக இது யாருக்காக என்றாள் ஹரிதா . நான் அழகாய் தெரிய கூடாதா ? இதில் கூட ஆராய்ச்சியா என்றாள் கீர்த்தி.

9 மணிக்கு ஷாப்பிங் முடிந்து மூவரும் வீடு திரும்பினார்கள். கீர்த்தி பகலெல்லாம் தூங்கியதால் கொஞ்ச நேரம் போல பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் என ஹரிதா விடைபெற்றாள். ஜாக்கிரதையா போ என்று சௌமியா சொன்னாள். கீர்த்தி உடை மாற்றிக்கொண்டு ரஞ்சித்திடம் பேச வேண்டும் என்று சொன்னாள். நீயே பேசு அவனிடம் நான் இருப்பதை சொல்லாதே என்றாள் சௌமியா.போனை ஸ்பீக்கரில் போடவா என்றாள் கீரத்தி. உன் விருப்பம் போல செய் என்றாள் சௌமியா.ரஞ்சித் ஃபோன் எடுத்தான் சொல்லு கீர்த்தி எப்படி இருக்கிறாய் என்றான். எனக்கென்ன அடுத்து உன் கூட வெளிநாடு படிப்பு படிக்க நினைக்கிறேன் என்றாள். நிச்சயம் வருகிறாயா என்றான். சும்மா சொன்னேன் நானே இப்போதுதான் படிப்பெல்லாம் முடித்திருக்கிறேன் . சௌமியா எப்படி இருக்கிறாள் என நீ கேட்கவில்லையே என்றாள் . அவளுக்கென்ன மகாராணி என்றான். ம் இப்படியே இருந்தால் எப்படி கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகலாம் அல்லவா என்றாள். அதெல்லாம் எவ்வளவோ விட்டுக்கொடுத்தாயிற்று . ம் நீ பிடிவாதக்காரன். அங்கே என்ன செய்கிறாய் உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்கிறார்கள். எல்லோரும் ஃபைன். நான் கேர்ள் ஃபிரண்ட்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அதையெல்லாம் நான் விட்டுவிட்டேன் என்றான். சரி நான் ஒரு வாரம் இங்கே சௌமியா கூடத்தான் இருப்பேன் ஃபோன் பண்ணு என்றாள் கீர்த்தி. எனக்கு தெரியும் நீ சௌமியாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாய் என்று. குட் நைட் என்றான். டேக் கேர் என்றாள்.

மறுபடி ரஞ்சித் பற்றி கீர்த்தி பேச்செடுக்கவில்லை. அவன் அப்படியே இருக்கட்டும் இங்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் சௌமியா என்றாள். எனக்கு ஒன்றும் அவன் கூட மறுபடி காதல் எல்லாம் வேண்டாம். இயல்பாய் பழகினாலே போதும். எதிரி போல என்னை நடத்தாமல் இருந்தால் போதும் என்றாள். ம் எனக்கு புரிகிறது சில தேவைகளுக்கு நாம் அடிமையாகும் போது நமக்கு ஒன்றும் புரியாது. அவன் அப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறான். வெளிநாட்டு படிப்பு முடிந்து வரட்டும். நார்மல் ஆகிவிடுவான் என்றாள் கீர்த்தி. இருவரும் தூங்க போனார்கள். நாளைக்கு நீ ஸ்கூல் போய்விடுவாய் போர் அடிக்குமே என்றாள் கீர்த்தி. அதெல்லாம் 4 மணிக்கெல்லாம் வந்துவிடுவேன். நீ லைப்ரரி போ அங்கு உனக்கு தேவையான எல்லா புத்தகமும் கிடைக்கும் என்றாள் சௌமியா. அதுவும் சரிதான். ஆனால் அங்கு எல்லோரும் தூங்கி கொண்டிருப்பார்கள் என்று சிரித்தாள் சௌமியா. இதெல்லாம் எல்லா ஊரிலும் பொதுவானது தான் . சிலவற்றை மாற்றவும் முடியாது. மாறவும் மாறாது என்றாள் கீர்த்தி.

ஸ்கூலில் என்ன ஆச்சு கீர்த்தி ரஞ்சித்திடம் பேசினான் என சௌமியா ஹரிதாவிடம் சொன்னாள். ஹரிதா சௌமியாவே சொல்லட்டும் என காத்திருந்தாள். அவன் அப்படியேதான் இருக்கிறான் அதே திமிர் அதே ஆண் என்ற அகம்பாவம். ம் நீ என்ன நினைக்கிறாய் ஹரிதா. நான் ஏற்கனவே இதில் சமர் என்கிற ஒருவனோடு இதில் அனுபவப்பட்டு விட்டேன். தான் என்ன நினைக்கிறோம் என்பதிலேயே அவர்கள் கவனம் இருக்கிறது. மற்றவர்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்றாள் ஹரிதா. இதில் இருந்து விடுதலையடைய நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். என்ன அது என்றாள் சௌமியா அடுத்த ஜென்மத்தில் ஆணாக பிறக்க வேண்டியது தான் என்றாள். இருவரும் சிரித்தார்கள். கீர்த்தி லைப்ரரி போயிருப்பாள். சாயங்காலம் வந்து என்னை திட்டப் போகிறாள். அதெல்லாம் திட்டமாட்டாள் . லைப்ரரி இந்நேரம் ஒழுங்கு பெற்றிருக்கும் என்றாள் ஹரிதா. விதவிதமான எக்ஸாம்களை வாரந்தோறும் அந்த மாணவிகளும், மாணவர்களும் எதிர்கொண்டனர். ஆனால் அவை எதுவுமே இறுதிபரீட்சையில் வரும் என்பதற்கு எந்த உத்திரவாதவும் கிடையாது.

சாயங்காலம் ஹரிதா கீர்த்தியை பார்த்தாள் . எப்படி இருந்தது லைப்ரரி அனுபவம் என்றாள். சில வயதானவர்கள் இருந்தார்கள். ஆனால் மோசமில்லை நான் தேடிய புத்தகங்கள் அங்கு இருந்தன என்றாள். கீர்த்தி டிவியில் சங்கீத கச்சேரி புரோகிராம் பார்த்துக்கொண்டிருந்தாள். சௌமியாவும், ஹரிதாவும் கூட ஆர்வமாக பார்த்தனர். கீர்த்தி நான் விரும்புவது மெல்லிசையே என்றாள். எனக்கும் அப்படித்தான் கேட்க ஆசை என்றாள் ஹரிதா. ஆனால் குத்து பாட்டில் இருக்கும் ஈர்ப்பு சில சமயங்களில் என்னை அதிக இம்ப்ரஸ் செய்துவிடுகிறது என்றாள் கீர்த்தி. சௌமியா தானும் ஏதோ சொல்ல வந்தாள் பிறகு கிச்சன் போய் ஸ்நாக்ஸ் எடுத்து வந்து ஹரிதாவுக்கும் ,கீர்த்திக்கும் கொடுத்தாள். ஹரிதா தான் வெயிட் போட்டுவிடுவேன் என பயம் கொண்டிருப்பதாக சொன்னாள். அதெல்லாம் எனக்கு பயம் இல்லை என்று கீர்த்தி சொன்னாள். நான் வெயிட் குறைவாக இருக்கிறேன் என சௌமியா வருத்தப்பட்டாள்.
சில புத்தகங்களை ஹரிதாவிடம் கொடுத்து நேரம் கிடைக்கும் போது இதையும் படி என்றாள். அவை ரொமான்ஸ் பற்றிய புத்தகங்களாக இருந்தன. எனக்கு எதற்கு கீர்த்தி இதெல்லாம் என்றாள். நீ மயக்கத்தில் இருந்து விடுபட என்று சொன்னாள். ம் நானாவது குழப்பத்தில் இருந்து மீளுவதாவது? நடக்கும் நிச்சயம் நடக்கும் என்றாள் கீரத்தி.

வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும் முன் அந்த புத்தகங்களை வாசிக்க முயன்றாள். தூக்கம் வந்தது. கஷ்டப்பட்டு சில பக்கங்கள் வாசித்தாள். அவளுக்கு ஏக்கங்களில்லை . மாறாக தனக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டதென நினைத்தாள். அது ஒரு ஆண் மூலமாகத்தான் கிடைக்கவேண்டும் என்கிற கட்டாயத்தை அவள் வெறுத்தாள். தான் தன்னுடைய நடத்தை, அறிவு இதன் மூலம் கிடைக்கும் பேரையே அவள் விரும்பினாள் . மாறாக ஒரு பெண் என்பதற்க்காக மட்டும் எந்த ஒரு சலுகையையும் அவள் பெற ஒருநாளும் விரும்பியதில்லை.