Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஹரிதாவின் பகல் கனவுகள் part 23

கனவு 23
சௌமியாவுக்கு மூன்று நாட்களாக ஜுரம். அவளை ஹாஸ்பிடலில் அனுமதித்து இருந்தார்கள். ஹரிதா சௌமியாவை பார்க்க அவள் அம்மாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போயிருந்தாள் .சௌமியா மயக்கத்தில் இருந்தாள் சலைன் ஏறிக்கொண்டிருந்தது. இவள் அருகில் போய் சௌமியா என்று கூப்பிட்டு பார்த்தாள். அவளிடத்தில் அசைவு இல்லை. டாக்டர் இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று சொல்லியிருப்பதாக சௌமியா அம்மா சொன்னாள். நான் இடையில் வந்து பார்க்கிறேன் என்று ஹரிதா சொன்னாள். சௌமியா அம்மா அப்பா கவலையில் இருந்தார்கள் ஒரே பெண்ணாயிற்றே. ஹரிதா வீட்டுக்கு வந்த பிறகும் அதே சிந்தனையில் இருந்தாள். சௌமியா பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவள் உடல் நிலை சீக்கிரம் தேற கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் ஹரிதா . ரஞ்சித்துக்கும் கீர்த்திக்கும் மெசேஜ் பண்ணியிருந்தாள். அவர்கள் திரும்ப அழைத்த போது விஷயத்தை சொன்னாள். ரஞ்சித் அதைப் பற்றி கவலைப்படவில்லை. கீர்த்தி நான் சீக்கிரம் வந்து பார்க்கிறேன் என்றாள். நீ கொஞ்சம் அவளுக்கு ஆறுதலாய் இரு என்றும் சொன்னாள் கீர்த்தி.

ஆறுமுகத்துக்கு சொல்லலாமா வேண்டாமா என யோசித்து அவனுக்கும் ஃபோன் பண்ணினாள். அவன் ரொம்ப வருத்தப்பட்டான்.ஹரிதாவை அருகில் இருந்து பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். அருகில் இருந்த முருகன் கோவிலுக்கு போய் சௌமியா பேரில் அர்ச்சனை செய்தாள். இவள் மனமுருகி சௌமியா சீக்கிரம் குணமாக கடவுளை பிரார்த்தித்து கொண்டாள் .மறுபடி ஹாஸ்பிடல் போய் பார்த்த போது கண்விழித்து இருந்தாள் சௌமியா . இவளை பார்த்ததும் வா ஹரிதா என்று சொன்னாள். இவள் அவள் கைகளை பிடித்துக்கொண்டாள். என்னடி இதெல்லாம் பார்த்து பயந்து விட்டாயா என்றாள் சௌமியா. பின்ன என்னடி நீ அட்மிட் ஆகி ஒரு வாரமாகிறது கவலையாய் இருக்காதா என்றாள் ஹரிதா. எனக்கு ஒண்ணுமில்லை எல்லாம் சரியாய் போச்சு என்று சௌமியா சொன்னாள். சீக்கிரம் ஸ்கூல் வருகிற வழியை பார்.. நான் உனக்காக காத்திருப்பேன் என்று சொன்னாள். சரிடி நிச்சயம் வருகிறேன் . ஹரிதா விடைபெற்றுக்கொண்டாள். அவள் மனம் சௌமியாவுக்காக துடித்துக்கொண்டிருந்தது.

கீர்த்தி எக்ஸாம்ஸ் முடிந்து ஃப்ரீ ஆகிவிட்டதாய் ஃபோன் பண்ணினாள். எக்ஸாம் எல்லாம் நன்றாக பண்ணியிருப்பதாக சொன்னாள். ஒரு வாரம் சௌமியா வீட்டில் விடுமுறைக்காக வந்து தங்க போவதாய் ஹரிதாவிடம் சொல்லியிருந்தாள். சௌமியாவும் அவளை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக சொன்னாள். ஆனால் எப்போது வருவாள் என்று குறிப்பாக சொல்லவில்லை. சௌமியா முழுக்க குணமாகி ஸ்கூல் வந்தாள். இருந்த போதும் லேசாக களைப்பாக உணர்ந்தாள். என்னடி மயக்கம் வருதா என்றாள் ஹரிதா. அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் நல்லா தெம்பா இருக்கிறேன் என்றாள் சௌமியா. ம் உன்னை நம்ப முடியாது என்று சொல்லி சிரித்தாள் ஹரிதா. விட்டு போன பாடங்களை சௌமியா பிக்அப் செய்து கொள்ள ஹரிதா உதவினாள் . சௌமியா ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டாலும் எல்லாவற்றையும் கவர் செய்துவிட்டாள்.ரொம்ப தாங்க்ஸ் ஹரிதா என்றாள் . எதுக்குடி இதற்கு தாங்க்ஸ் எல்லாம் .. நீயும் நானும் இன்னும் நாலு வருஷம் ஒரே கிளாஸில் ஒரே காலேஜில் படிக்க வேண்டும் என்றாள் . உனக்கு ரொம்ப பேராசை என்று சௌமியா சொன்னாள்.

சௌமியா ஹரிதாவை வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தாள். மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ரஞ்சித் ஏதாவது கேட்டானா என்று சௌமியா ஹரிதாவிடம் கேட்டாள். அவள் அமைதியாய் இருந்தாள். எனக்கு தெரியும் அவன் என்னை மறந்து விட்டான் என்று. இருந்தாலும் ஒரு மேலோட்டமாக கூட என்னை விசாரிக்கவில்லையே என்றாள் . நீ அதெல்லாம் கடந்துவிட்டாய் சௌமியா அதனால்தான் நானும் அவனைப்பற்றி பேசுவதில்லை என்றாள் ஹரிதா. நாளைக்கு பிருந்தா டீச்சரை பார்க்க போகிறேன்.. அவங்களுக்கென்ன? அவங்க கல்யாணம் ரீசண்ட்டா ஆச்சே.. ஆமாம் அவங்க இப்போ உண்டாயிருக்காங்க. நல்ல விஷயம் . நீயும் வரியா ?அவங்களை எனக்கு தெரியாதே .. சரி பரவாயில்லை. நீ பெரிய மனுஷி மாதிரி பேசுகிறாய் ஹரிதா என்றாள் சௌமியா. பிருந்தா டீச்சரை பார்க்க போகும் முன் கொஞ்சம் பழங்கள் வாங்கிகொண்டாள் . டீச்சர் மாலை 7 மணிக்கு ஸ்கூல் விட்டு வந்துவிடுவார்கள் . மாப்பிள்ளை உள்ளூர்தான் என்பது ஒரு சவுகரியம். பிருந்தா டீச்சர் இவளை வரவேற்றாள். என்ன இதெல்லாம் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி என்றாள். குழந்தை புஷ்டியாய் பிறக்க வேண்டாமா என்று சிரித்தாள் ஹரிதா. ம் இப்போது நான் சந்தோஷமாய் இருக்கிறேன் என்றாள் பிருந்தா.

சமர் பற்றி ஏதாவது பிருந்தா டீச்சர் பேசுவாள் என ஹரிதா எதிர்பார்த்தாள். ஆனால் அவள் அவனைப் பற்றி பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் பிருந்தா கணவர் வந்துவிட இவளை பார்த்ததும் விசாரித்தார். நான் நல்லா படிக்கிறேன் என்றாள் ஹரிதா.ஹரிதா அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டாள். மனம் நிறைவாய் இருந்தது. இன்னும் 7 மாதத்தில் ஒரு தாயாக பிருந்தா டீச்சர் மாறிவிடுவார் . அவருடைய மனமும் உடலும் வேறு ஒரு புதிய உறவுக்கு தயார் ஆகி விடும் என நினைத்தாள் ஹரிதா. சமர் பற்றி பேசாதது ஒரு வகையில் வருத்தமாய் இருந்தாலும் அதை பற்றி இப்போது கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று தனக்குதானே சொல்லிக்கொண்டாள். கீர்த்தி வருகை இன்னும் சில நாட்களில் நிகழ போகிறது. அதன் தொடர்ச்சியாய் முன்னும் பின்னும் நிறைய ஸ்வரசியமான சம்பவங்கள் நடக்கும் என எதிர்பார்த்த வண்ணம் இருந்தாள் ஹரிதா. கீர்த்தி இப்போதைக்கு ஊருக்கு வருகிற மாதிரி தெரியவில்லை என சௌமியா சொன்னாலும் அதை ஹரிதா காதில் வாங்காத மாதிரியே இருந்தாள்.ஆறுமுகம் ஃபோன் பண்ணியிருந்தான். என்ன சௌமியா எங்களை கவலையடைய செய்து விட்டாயே என்றான். நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றாள் . நீ குணமானதே எங்களுக்கெல்லாம் சந்தோஷம் என்றான். நீ மறக்காமல் ஃபோன் பண்ணியதே எனக்கு சந்தோஷம் என்றாள். ஹரிதாவை கேட்டதாக சொல் என சொல்லிவிட்டு போனை வைத்தான் ஆறுமுகம். சௌமியா மனதில் ஆறுமுகம் குறித்து மதிப்பு உண்டாயிற்று. அவன் எத்தனையோ சிரமங்களுக்கிடையில் ஃபோன் பண்ண வேண்டும் என்று நினைத்திருக்கிறான். அவன் படிப்பை தொடர்ந்திருந்தால் தான் ஒருவேளை அவன் மீது காதல் கொண்டிருக்க கூடும் என்று நினைத்தாள். அது அவளுக்கு வெட்கத்தை உண்டு பண்ணியது.


ஹரிதாவிடம் ஆறுமுகம் ஃபோன் பண்ணியதை பற்றி சொன்னாள். அட நிஜமாகவா ? அவனுக்கு என் நினைப்பெல்லாம் இல்லை பாரேன் என்றாள் ஹரிதா. சே அவனே ஆயிரம் வேலைக்கு இடையில் ஃபோன் பண்ணியிருக்கிறான் அவனைப்போய்.. சரி சரி உங்கள் அண்டர்ஸ்டாண்டிங் எனக்கு புரிகிறது என்றாள் . இருவரும் அவன் குறித்து பேசுவதில் மகிழ்ச்சியே அடைந்தார்கள். கீர்த்தியின் வருகை இன்னும் நடக்காதது குறித்து ஹரிதா ஏமாற்றமடைந்தாள் .இவள் லேப்டாப் வாங்கி பயன்படுத்தாமல் இருப்பது குறித்து சௌமியாவிடம் சொன்னாள். நான் செட் பண்ணி தருகிறேன் என்று சௌமியா சொன்னாள். சாயங்காலம் ஹரிதா வீட்டுக்கு போனாள் சௌமியா. ஹரிதா காபி போட்டு கொடுத்தாள் . இருவரும் அதன் செட்டிங்ஸ் பற்றி பேசினர். பிறகு சௌமியாவே எல்லாவற்றையும் வேகமாக ரெடி பண்ணினாள். ஒரு இரண்டு மணி நேரத்தில் ஹரிதாவின் லேப்டாப் ரெடி ஆகி விட்டது. ஹரிதாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதில் பாடல்கள், வீடியோ போன்றவற்றையும் எப்படி டவுன்லோட் பண்ணுவது என்பதையும் ஹரிதாவுக்கு சௌமியா சொல்லிக்கொடுத்தாள் . சௌமியா விடை பெற்றுக்கொண்டாள் . இரவு மணி 8 ஆகி விட்டிருந்தது.

ஹரிதா அந்த லேப்டாப்பை ஆசையுடன் ஆபரேட் பண்ணினாள். சௌமியாவுக்குத்தான் எவ்வளவு திறமை என வியந்தாள் . லேப்டாப் வால் பேப்பர் இவள், ஆறுமுகம்,கீர்த்தி, ரஞ்சித் என எல்லோரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை வைத்தாள் .அது எவ்வளவு இனிமையான நாட்கள் அவை . அம்மா சாப்பிட கூப்பிட்டாள் . ஹரிதா லேப்டாப்பை அணைத்துவிட்டு சென்றாள். சப்பாத்தி செய்திருந்தாள் . இவளுக்கு சப்பாத்தி பிடிக்கும். அப்பா அப்போதுதான் வந்தார். அவர் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவார். இவள் திரும்ப தன் அறைக்கு வந்து லேப்டாப்பை பார்த்தாள். இது நல்லதா ? கெட்டதா யாருக்கு தெரியும் இதன் ரகசியங்கள் என்று மனதுக்குள் நினைத்தாள். சிறிது நேரத்தில் விளக்கணைத்து விட்டு தூங்கிப் போனாள். கனவு கனவில் தியான மண்டபம் வந்தது அந்த குரு தியானத்தில் வந்தார். ஹரிதா திடுக்கிட்டு விழித்தாள் . கனவு . கெட்ட கனவாகத்தான் இருக்கும் நமக்கு எப்போது நல்ல கனவுகள் வந்தது என சொல்லிக்கொண்டாள். மறுபடி தூக்கம் வந்தது இந்த முறை கனவுகள் வரவில்லை.

தான் அதீதமாக சிந்திப்பதால் இந்த கனவு வந்திருக்குமோ என சௌமியாவிடம் கேட்டாள். இருக்கலாம் ஆனால் அவர் உன் கையை பிடித்து இழுக்கவில்லையே என்றாள் சௌமியா. சே சே அப்படியெல்லாம் நடந்து கொள்வாரா ? யார் கண்டது பாம்பின் இருப்பை . பாம்பு மட்டுமே அறியும் என்றாள் சௌமியா. ஏண்டி பாம்பு கீம்பு என்று பயமுறுத்துகிறாய் . அதை நினைத்தாலே பயம் ஏற்படுகிறது. ம் அந்த பயம் எப்போதும் இருக்கவேண்டும் என்றாள் சௌமியா. நீ சமீபத்தில் அந்த மாதிரி படங்கள் பார்த்தாயா என்றாள் ஹரிதா. நான் வாரம் ஒரு முறை பார்ப்பேன். இவள் சிரித்தாள் . இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. நான் முயற்சித்து பார்க்கிறேன் என்னால் பதட்டப்படாமல் இருக்க முடியவில்லை என்றாள் ஹரிதா. ம் அப்படித்தான் சொல்வாய் ஆனால் பார்ப்பாய் அப்படித்தானே ? சே சே எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆர்வம் மட்டுமே உண்டு என்று சிரித்தாள். நீ சொல்வது எனக்கு புரியாமலில்லை. ஆனால் இன்னும் டீப் ஆக பேச நீ இன்னும் தயாராகவில்லை. சரி சரி போதும் என்னை குறைத்து மதிப்பிடாதே என்றாள் ஹரிதா. பாம்புகள் எப்போது எங்கிருந்து வரும் என எனக்கு தெரியும் என்றாள் சௌமியா.

இவள் அன்று எண்ணெய் தேய்த்து குளித்தாள் .அம்மா தான் தலையை இழுத்து பிடித்து எண்ணெய் தேய்த்து விட்டாள் . ஆனால் குளித்த பிறகு சுகமாய் இருந்தது. இவள் மதியம் தூங்கும் டைப் அல்ல ஆனால் அன்று தூக்கம் வரும் போல இருந்தது. கீர்த்தி பற்றி கேட்கலாம் என கீர்த்திக்கு ஃபோன் பண்ணினாள். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. இவளுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. என்ன ஆச்சு கீர்த்திக்கு என யோசித்தாள். ஒரு வேளை டிரைனில் வந்து கொண்டிருக்கிறாளோ ? அவள் ஒரு சர்ப்ரைஸ் ஆளு அப்படித்தான் ஏதாவது செய்வாள். அவள் பர்த்டே பார்ட்டியில் என்ன ஆட்டம் ஆடினாள். ஆறுமுகம் ரொம்ப கூச்சப்பட்டான். அதெல்லாம் இப்போது வெறும் நினைவுகள் நினைக்கவே கஷ்டமாய் இருந்தது ஹரிதாவுக்கு. கீர்த்தியிடம் இருந்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் கால் வந்தது.