Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஹரிதாவின் பகல் கனவுகள் part 21

கனவு 21

கீர்த்தியை சந்திக்க ஹரிதா சௌமியாவின் வீட்டுக்கே வந்துவிட்டாள். கீர்த்தி அப்போதுதான் எழுந்து காபி குடித்துக்கொண்டிருந்தாள் . சௌமியா குளித்து தயாராகி இருந்தாள். ஹரிதாவை பார்த்ததும் கீர்த்தி அவளை நலம் விசாரித்தாள். சௌமியா உக்காருடி கீர்த்தி இப்போதான் எழுந்தாள் என்று சொன்னாள். ஒண்ணும் அவசரமில்லை நிதானமாக வரட்டும் என்றாள் ஹரிதா. கோவிலுக்கு போகலாம் என சௌமியா சொன்னாள். நீ டிபன் சாப்பிட்டாயா என ஹரிதாவை கேட்டாள் சௌமியா . ஓ ஆச்சு நீ இன்னும் சாப்பிடவில்லையா என்று கேட்டாள். கோவிலுக்கு போய்விட்டு வந்து சாப்பிடலாம் என கீரத்தி சொன்னாள். இன்று என்ன விசேஷம் என்று கேட்டாள் ஹரிதா. விசேஷம் எல்லாம் ஒன்றுமில்லை. மனசே சரியில்லை என்றாள் கீர்த்தி. கீர்த்தி நான் குளித்துவிட்டு வருகிறேன் நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள் என்றாள். ஹரிதா சௌமியாவிடம் கீர்த்தி ரொம்ப வருத்தப்பட்டாளா ஆறுமுகம் பற்றி என்றாள். ஆமாம் அவளுக்கு அதுவே பெரிய கவலையாக இருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும் என்றாள் ஹரிதா. அவர்கள் முருகன் கோவிலுக்கு போக திட்டமிட்டு இருந்தார்கள். டூ வீலரில் மூவரும் போய்விடலாம் என கீர்த்தி சொன்னாள். அதன் படியே மூவரும் முருகன் கோவிலுக்கு சென்றார்கள்.

கீர்த்தி இப்படி சாமியை வேண்டி அல்லது கடவுளை பற்றி பேசியோ ஹரிதா கண்டதில்லை என்ன ஒரு திடீர் மாற்றம் கீர்த்தியிடம் என வியந்தாள் . கீர்த்தி கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள் . அதோடு பிரகாரத்தை மெதுவாக சுற்றத் தொடங்கினார்கள். இவள் கீர்த்தியிடமே கேட்டுவிட்டாள். என்ன இவ்வளவு பக்தி என்ன வேண்டுதல் கீர்த்தி எனக் கேட்டாள் . எனக்காக நான் என்றுமே எதுவும் கடவுளிடம் கேட்டதில்லை எல்லாம் அவனுக்காகத்தான் என்றாள். சௌமியா அமைதியாய் இருந்தாள் . ஹரிதா நாம் ஆசைப்பட்டாலும் படாவிட்டாலும் சில விஷயங்கள் நமக்கு நடக்கத்தான் செய்கின்றன. அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் சில சமயங்களில் நல்லது என்றாள் கீர்த்தி. இதென்ன புது தத்துவம் என்றாள் சௌமியா. என்னுடைய அனுபவ பாடம். நான் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் யாராவது நம் மீது உண்மையான அன்பு செலுத்தினால் அதை மறுக்க மனம் வருவதில்லை என்றாள் கீர்த்தி. ம் நீ சொல்வது குழப்பமாய் இருக்கிறதே என்றாள் சௌமியா. அதனால்தான் நாம் கோவிலுக்கு வந்திருக்கிறோம் என்றாள் ஹரிதா. விபூதியும் , குங்குமமும் அய்யரிடம் இருந்து வாங்கி கொண்டாள் கீர்த்தி. ஹரிதாவுக்கு கொஞ்சம் குங்குமம் கொடுத்தாள் .ஹரிதா கீர்த்தியின் குங்குமம் வைத்த முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.

கீர்த்தியும், சௌமியாவும் காலை 10 மணிக்குத்தான் டிபன் சாப்பிட்டனர். ஹரிதா டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இங்கே அருகே தியான மண்டபம் இருக்கிறதே சாயங்காலம் போவோமா என்றாள் சௌமியா.கீர்த்தி அவசியம் போவோம் என்றாள் . என்ன முழு நேர அமைதி பிரார்த்தனையா என்றாள் ஹரிதா அப்படியில்லை எனக்கு பிடித்திருக்கிறது என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை அதோடு நாம் மூவருமே இந்த அமைதிப்பாதையில் சென்று பார்ப்போம் என்று கூறி சிரித்தாள் கீர்த்தி. அவள் சிரிப்பில் சோகமே இருந்தது. கீர்த்தி நான் கொஞ்ச நேரம் படிக்க போகிறேன் என்று கூறிவிட்டு அறைக்குள் போனாள் . சௌமியா என்னடி இவள் இப்படியாகிவிட்டாள் என்று கேட்டாள். அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள். ஞானம் சில படிப்பினைகளுக்கு பிறகு தான் வருகிறது என்றாள் ஹரிதா. நான் போய்விட்டு சாயங்காலம் 4 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனாள் ஹரிதா. சௌமியா கீர்த்தியின் அறைக்குள் நுழைந்தாள் . அவள் சீரியஸ் ஆக ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் . இவளை பார்த்ததும் ஹரிதா போய்விட்டாளா என்றாள் . ம் அவள் சாயங்காலம் வருவதாக சொல்லியிருக்கிறாள். நல்லது .

மாலை 4 30 மணி போல ஹரிதா வந்தாள். இவர்கள் இருவரும் தயாராய் இருந்தனர். தியான மண்டபம் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அதை ஒரு வயதானவர் நிர்வகித்து வந்தார். அமைதி தேடுவோருக்காக அந்த ஊரில் இருந்த ஒரே நிறுவனம் அதுதான். சிந்து டீச்சர் கொஞ்ச நாள் அங்கே வேலை பார்த்து வந்ததாகவும் கேள்விப்பட்டு இருந்தாள் ஹரிதா. மூவரும் அங்கு சென்ற போது கூட்டம் அதிகமில்லை. ஒரு சிலரே இருந்தனர். ஹரிதா அதன் நிறுவனர் எப்போது வருவார் என விசாரித்தாள். அவர் 6 மணி போல வருவார் நீங்கள் தியானம் செய்ய ஒரு தடையுமில்லை என்றார்கள். சௌமியாவுக்கு அந்த இடம் பிடித்திருந்தது. கீர்த்தி, சௌமியா மற்றும் ஹரிதா ஆகியோர் அங்கே அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினர். ஹரிதா கண்களை மூடி தியானம் செய்ய தொடங்கும்போது அவள் மனது ஒரு நிலைப்படவில்லை. அவள் கண் திறந்து சௌமியாவை பார்த்தாள். அவளும் அப்படித்தான் விழித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள். இவள் மறுபடி சிந்து டீச்சர் சொல்லிக்கொடுத்த சில உத்திகளை பயன்படுத்தி மனதை தியானத்துக்கு கொண்டுவந்தாள். சௌமியா அப்படியே இருந்துவிடவில்லை முயற்சி செய்து அவளும் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டாள் . கீர்த்தி ஏற்கனவே நல்ல நிலையை தியானத்தின் மூலம் பெற்றிருந்தாள் .

6 மணி அளவில் அவர் வந்தார் அவருக்கு 50 வயதிருக்கும். வந்தவுடன் இவர்கள் மூவரை பற்றியும் விசாரித்தார். சொன்னார்கள். இந்த சின்ன வயதில் நீங்கள் இவ்வளவு தூரம் தியானத்துக்காக வந்ததில் மகிழ்ச்சி என்றார். நீங்கள் தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும் அதை நிறுத்துவது கூடாது என்றார். பிறகு மற்றவர்களிடமும் பேசிவிட்டு தானும் அவர்களோடு தியானத்தில் ஈடுபட்டார். 8 மணி போல அங்கிருந்து புறப்பட்டனர். நேராக வீட்டுக்கு போய்விட்டாள் ஹரிதா. கீர்த்தியும், சௌமியாவும் கொஞ்சம் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு போனார்கள். ஹரிதாவுக்கு அந்த தியானம் பிடித்திருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தாள் . சிந்து டீச்சருக்கு ஃபோன் பண்ணி சொன்னாள். நீ தியானம் செய்வதில் மட்டும் கவனமாய் இரு அந்த ஆளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று சொன்னாள் சிந்து டீச்சர். இவள் அதிக விவரம் கேட்கவில்லை . சிந்து டீச்சரும் எதுவும் சொல்லவில்லை. இந்த காம ஆசை எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. சிறு பெண்களை பிடித்த சாபம் இது என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் ஹரிதா.

கீரத்தி மறுநாள் காலையிலேயே ஊருக்கு கிளம்ப தயாரானாள் . இவள் சரியான சமயத்தில் அங்கு போய்விட்டாள். தானும் ஸ்டேஷன் வருவதாக ஹரிதா சொன்னாள். சரி என்று சௌமியாவும்,ஹரிதாவும் கீரத்தி கூட வழியனுப்ப போனார்கள். சிந்து டீச்சர் சொன்னதை சௌமியாவிடம் சொன்னாள் ஹரிதா. இப்போதெல்லாம் அப்படி இல்லாத ஆட்களைத்தான் நம்ப கூடாது என்றாள் கீர்த்தி. காமம் இல்லாத உலகமேது அதை கண்டமேனிக்கு பயன்படுத்துபவர்கள் தான் ஆபத்து என்றும் கீர்த்தி சொன்னாள். டிரைன் வர இன்னும் அரைமணி நேரம் இருந்தது . ஹரிதா போய் வாட்டர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்தாள். கீர்த்தியிடம் அவற்றை கொடுத்தாள் . என்ன ஹரிதா நாம் எவ்வளவு தூரம் நெருங்கியிருந்தாலும் பிரிவு ஏற்படுகிறதா என்றாள் கீர்த்தி. ஆமாம் நீதான் இறக்கை கட்டி பறக்கிறாய் என்றாள் ஹரிதா . கீர்த்தி சிரித்தாள். நீ எல்லாவற்றையும் ஆராய்ச்சி பண்ணாதே சிலவற்றை அப்படியே விட்டுவிடு என்றாள் கீர்த்தி . டிரைன் வந்துவிட்டது. கீர்த்தி அவளுடைய பெட்டியில ஏறிக்கொண்டாள் . கைசையசைத்தபடி விடை பெற்றாள் கீர்த்தி.

வரும் போது கீர்த்தி சொன்ன போலி குருமார்கள் பற்றி சிந்தித்தாள். இவர்கள்தான் காமத்தை மறைப்பதற்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள். தான் ஒழுக்கமானவன் என்று காட்டிக்கொள்ள எவ்வளவு தியாகங்கள் செய்வதாய் காட்டிககொள்கிறார்கள் என யோசித்தாள். தானும் அந்த மாதிரி போலி சாமியார் தானோ வாய்ப்பு கிடைத்தால் தானும் அவ்வாறு வழி தவறிப்போக வாய்ப்பிருக்கிறது என்றெண்ணினாள். அவளுக்கே அவளுடைய சிந்தனையின் மேல் வெட்கம் உண்டாயிற்று. தான் அவ்வாறு போக வாய்ப்பில்லை அதை தடுக்கத்தான் இந்த சமூகம் இயங்குகிறது. எப்போதும் கண் கொத்தி பாம்பு போல தன்னை சுற்றி கண்காணித்து வருகிறது என்று கருதினாள் . எது போலி எது அசல் என்று கண்டுபிடிப்பதற்குள் நம்முடைய வாழ்நாள் போதாது.. அதோடு அதற்கு அதன் உள் சென்று பார்க்க ஆழ்ந்த மனத்திடம் வேண்டும். என்னடி நீயே சிரித்துக் கொள்கிறாய் என்று கேட்டாள் அம்மா.நான் சாமியாரிணியாய் போவதாய் கனவு கண்டேன் என்றாள் ஹரிதா.அவள் அம்மா அது மட்டும்தான் பாக்கி என்றாள். மறுநாள் கீர்த்தி பத்திரமாக ஊருக்கு போய் சேர்ந்துவிட்டதாக ஃபோன் பண்ணியதாக சௌமியா சொன்னாள். கீர்த்தியை மறுபடி எப்போது பார்ப்போம் என்று இருந்தது ஹரிதாவுக்கு.

ஹரிதா எப்படியோ சாமியார் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கிளாஸ் பாடங்களில் கவனம் செலுத்த தொடங்கினாள். அவளுக்கு சிறகுகள் இல்லை ஆனால் அவள் எண்ணங்களுக்கு இருந்தது. அவை கட்டுங்கடங்காமல் பறந்தன. அவளும் அதை கட்டுப்படுத்த நினைக்கவில்லை. தற்காலிக இன்பம், நிரந்தர இன்பம் இரண்டையும் பிரித்து அறியாத வயது அது. சௌமியா நாம் அந்த தியான மண்டபம் போவோமா என்றாள். அதெல்லாம் விஷப்பரீட்சை என்றாள் ஹரிதா.கற்பு கெட்டுவிடுமா என்று சௌமியா சோதித்து பார்க்க விரும்புகிறாளா இல்லை தெரிந்தே அந்த ஆளை சோதித்து பார்க்க விரும்புகிறாளா என்னவா வேண்டுமானால் இருக்கட்டும். அந்த ஆளிடம் இரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. போலி சாமியார்களுக்கே உள்ள வசீகரம். சௌமியாவும், இவளும் ஸ்கூல் விட்டு வரும்போது சௌமியா கேட்டாள். என்னடி இப்பவும் சாமியார் சிந்தனையா ? அதெல்லாம் நமக்கு செட் ஆகாது. என்னுடைய தேவைகள் ரொம்ப குறைவு என்றாள் ஹரிதா. ம் இப்போதே உன்னிடம் பக்குவம் மிளிர்கிறது. கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை கையிலே பிடிக்க முடியாது என்றாள் சௌமியா. ஹரிதா வெட்கம் மின்ன சிரித்தாள்.

நடப்பவை, நடந்தவை, நடக்கப்போகிறவை எல்லாவற்றின் பின்னணியிலும் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த மாயம் கடவுளின் சக்தியா? இல்லை கானல் நீர் போன்ற தோற்றமா ? சௌமியா போன்ற அழகிக்கு கிடைக்கும் அங்கீகாரம் நமக்கும் கிடைக்குமா ? நாம் சொல்லும் விஷயங்கள் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுமா ? காலம் நமக்கும் சாதகமாக மாறுமா என்பதில் பல உறுதியற்ற தன்மைகள் இருப்பதாக ஹரிதா நினைத்தாள். நினைக்க நினைக்க பல தோற்றங்கள் தோன்றி மறைந்தது ஹரிதாவின் மனதில்.