Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 28

ராமுக்கு எல்லாம் புரிந்தது போல இருந்தாலும் எதுவும் புரியவில்லை. நவீனா தன்ராஜை விரும்பியிருக்கிறார் இது சாதாரண விஷயம். ஆனால் என்னிடம் அதை ஏன் மறைத்தாள் என்று யோசித்தான்.இந்த நிலையில்தான் சாரதியிடமிருந்து போன் வந்தது.சார் உங்களை மீட் பண்ணணுமே.. என்ன விஷயமா ?தன்ராஜ் accident விஷயமா . அப்படியா நாம இப்போவே மீட் பண்ண முடியுமா .. வேண்டாம் சார் நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு மீட் பண்ணலாம்.நான் டிரைவிங்கில இருப்பேன் அதனாலே நானே உங்களுக்கு போன் பண்ணுறேன் என்றான்.இவன் என்ன விஷயம் சொல்ல போகிறானோ என்ற தவிப்பு இன்னும் அதிகமானது.மறுநாள் சாயங்காலம் வரை போன் வரவில்லை. அந்த ஹாஸ்பிடலுக்கு சென்று விசாரித்த பொது சாரதி ரெண்டு நாட்களுக்கு முன்பு வேலையை resign செய்து விட்டதாக சொன்னார்கள்.தேவி அங்கேயே பணிபுரிந்து வந்தாள். தேவியிடம் விசாரித்த போது என்னவோ லாட்டரி அடிச்சது போல குதிச்சான் சார்.நிறைய பணம் வந்த மாதிரி பேசினான்.அதுக்கப்புறம் அவனை ஆள பார்க்க முடியல என்றாள். தேவியிடம் சாரதியுடைய வீட்டு அட்ரஸ்
வாங்கி அவன் வீட்டுக்கு போய் பார்த்தான்.அவனுடைய வீட்டில் அம்மா மட்டுமே இருந்தார்.என்னப்பா விஷயம் எதுவும் பிரச்னையா ?அதெல்லாம் ஒண்ணுமில்ல வேலை விஷயமா என்னை பாக்க வர சொல்லியிருந்தாரு அதான் வந்தேன்.அவன் புதுசா பைக் வாங்கியிருக்கான்பா அதோட அவன் friends எல்லாம் சேர்ந்து tour போறேன்னு சொல்லிட்டு போனான்பா. போயி ரெண்டு நாளாவுது இன்னும் காணோம் . சரிம்மா நான் வந்துட்டு போனேன்னு சொல்லுங்க என் பேரு ராம்.

ஆம்புலன்ஸ் டிரைவர் கேரளாவில் மரணம் என்ற செய்தி கேட்டு அதிர்ந்தான் ராம். சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சாரதி வயது 25 லாரி மோதி சம்பவ இடத்திலேயே மரணம். அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. ராம் உடனே கிளம்பி சாரதி வீட்டுக்கு போனான். என்ன நடந்துச்சுனு தெரியலியே .. கூட போன friends எல்லோரிடமும் விசாரித்தான். நாங்க அப்போ ரூம்லதான் இருந்தோம் . tea குடிக்க போறேன்னுதான் சொல்லிட்டு போனான். ராம் அவர்களிடம் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தான். போலீசிடம் விசாரித்த போது அந்த லாரி டிரைவர் சற்று தூங்கிவிட்டான் என்று காரணம் சொன்னார்கள்.ராம் சாரதியின் போனை வாங்கி பார்த்தான் அதுவும் புது போனாக இருந்தது.கான்டக்ட்ஸ் எதையும் அவன் copy செய்திருக்கவில்லை. சாரதி என்ன சொல்ல வந்தான் என்பது குறித்து ராமுக்கு ஒரு யோசனையும் இல்லை. தேவி துக்க நிகழ்வுக்கு வந்திருந்தாள்.எப்படி இவ்ளோ விலை ஜாஸ்தியான பைக்கை உடனே வாங்குனாரு என நண்பர்களிடம் கேட்ட போது அவர்களும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்கள். அவர் வேலைய resign பண்ணுனதாவது தெரியுமா என்ற கேள்விக்கு நான் பாரின் போலாம்னு இருக்கேன் அதனாலதான் resign பண்ணிட்டேன்னு சாரதி சொன்னதாக சொன்னார்கள்.
போலீசிடம் ராம் பேசியபோது இந்து சந்தேக மரணம் என்றுதான் பதிவு செய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள்.கடைசியாக சாரதி வைத்திருந்த உடமைகளை போலீஸ் கொண்டு வந்து கொடுத்தனர்.சாரதியின் அம்மாவிடம் சொல்லிவிட்டு அதை சோதித்தான் ராம். ஒரு சிறிய பாக்கெட் டைரியில் மொபைல் நம்பர் எழுதப்பட்டு இருந்தது.அந்த நம்பருக்கு போன் செய்தான். ஹலோ என் பேரு ராம். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?என் பேரு நிதிஷ்.இங்க சாரதின்னு ஒருத்தர் accident ல இறந்துட்டாரு உங்களுக்கு அது சம்மந்தமா எதுவும் தகவல் தெரியுமா?இல்லை சார் நீங்க சொல்றவரை எனக்கு தெரியாது . தேங்க்ஸ் சார் என்று போனை வைத்தான்.ராம் மேலும் தேடும் போது சாரதியுடைய பேங்க் பாஸ்புக் கிடைத்தது.
அவன் resign செய்த அதே நாளில் அவனுடைய வங்கி கணக்கில் 2 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது.அவனுடைய அம்மாவிடம் லோன் எதுவும் எடுத்தீர்களா என்ற கேள்விக்கு இல்லையென்றே பதில் வந்தது.ராம் தேடியது கடைசியில் கிடைத்தது. அதை பார்த்ததும் அதிர்ந்து போனான். தன்ராஜுடைய போனேதான் அது. மாஸ்டர் தன்ராஜ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த போனை பத்திரப்படுத்தினான்.
தேவியிடம் இருந்து கால் வந்தது . நான் resign பண்ணிட்டேன் சார். என்னாச்சு ? என்னை யாரோ follow பண்ற மாதிரி இருக்கு சார்.நான் உங்ககிட்டே பேசறது தெரிஞ்சாலே என்னை கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க சார்.யார்னு தெரியல. இருந்தாலும் என் மனசாட்சி உறுத்துது.நீங்க நேர்ல வாங்க சொல்றேன். உடனே வரேன், தேவி ரொம்பவும் பயந்து போயிருந்தாள்.நீங்க எதுக்கும் பயப்படாதீங்க . என்னை மிரட்டுறது இந்த நம்பர்ல உள்ள ஆள்தான் என்று அந்த நம்பரை கொடுத்தாள்.சரி போலீஸ்கிட்டே விஷயத்தை சொன்னீங்களா.இல்லை சார் நான் சொந்த ஊருக்கே போறேன். எதுவும் சொல்லாமல் சொந்த ஊருக்கே போறேன்னா என்ன அர்த்தம். நான் செஞ்சதும் தப்புதான் ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்துறதா நெனைச்சு அந்த தப்பை செஞ்சேன்.ம்ம் நீங்க எங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். நான் உங்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சுட்டு போறேன் அங்க வந்து சொன்னா போதும். சரிங்க சார். செலவுக்கு பணம் வேணுமா என கேட்டு கொஞ்சம் பணமும் கொடுத்தான்.உங்களுக்கு எந்த பிரச்னைனாலும் உடனே கூப்பிடுங்க என்றான். உடனடியாக அந்த நம்பரை செக் செய்த போது அது வெறும் மிரட்டலுக்காக பயன்படுத்தப்பட்ட சிம் என்று தெரிய வந்தது.
நவீனாவை ஒரு முறை சந்திக்கலாம் என்று முடிவெடுத்தான். நவீனா இன்னும் என்ன சார் பாக்கி ?வீட்ல தெரிஞ்சா என்னை என்ன நினைப்பாங்க .. வெளியே எங்காவது பார்க்கலாம் என்று சொன்னாள்.நவீனா ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நீங்க தன்ராஜை விரும்புனீங்களா இல்லையா? ஆமா அப்போ புடிச்சுது விரும்புனேன் அப்புறம் புடிக்கல விலகிட்டேன். அதை ஏன் எங்கிட்ட மறைச்சிங்க .சரி நீங்க போகலாம்.இப்போவும் நீங்க எதையோ மறைக்கறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.அதனாலே உங்களுக்கு தோணும்போது என்னை காண்டாக்ட் பண்ணுங்க என்றான். அப்போது அவளுடைய போன் அடித்தது.ஒரு நிமிஷம் இதோ வந்துட்டேன். மீட்டிங் முடிஞ்சிடுச்சி இப்போ வந்துட்றேன் நிதிஷ் என்றாள். அந்த பேரை கேட்டதும் திடுக்கிட்டான்.ஹலோ எவ்வளவு நேரமா உனக்காக வெயிட் பண்றேன் .இவர் பேரு நிதிஷ் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவரு என்றாள். என் பேரு ராம், ஓ நீங்களா வாட் எ coincidence என்று சொல்லிவிட்டு நாங்க வரோம் என விடை பெற்றான்.
நிதிஷின் பின்னணி குறித்து விசாரித்தபோது எல்லாம் சரியை இருந்தது. ஆனால் அவன் நம்பரை சாரதி ஏன் வைத்திருக்க வேண்டும் என குழம்பினான்.மறுபடி சாரதியின் பேங்க் பாஸ் புக்கை எடுத்துக்கொண்டு போய் பாங்கில் விசாரித்த போது அந்த பணம் நிதிஷுக்கு சொந்தமான அக்கௌன்ட் டில் இருந்து transfer செய்யப்பட்டதாக தெரிய வந்தது.கையில் இருக்கும் ஒரே ஆதாரம் தன்ராஜின் போன் மட்டுமே அதை ஓபன் செய்ய முயன்றான். முடியவில்லை. ராம் அதை கடையில் கொடுத்து ஓபன் செய்யுமாறு கேட்டுக்கொண்டான். தேவிக்கு போன் செய்தான் எப்படீங்க இருக்கீங்க .. பரவாயில்ல சார் இப்போ கொஞ்சம் பரவாயில்ல. மறுபடி யாரும் மிரட்டுனாங்களா ? இல்லை சார். நாளைக்கு காலையில ரெடி ஆஹ் இருங்க நான் வந்து உங்களை கூட்டிட்டு போறேன். ஓகே சார். எங்க வந்து வேணாலும் உண்மையா சொல்லுறேன். ராம் தன்ராஜின் போனை ஓபன் செய்த போது அதில் இருந்த விடீயோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

மறுநாள் தேவியை பெண் நீதிபதி முன் ஆஜர்படுத்தினான். என்னம்மா நடந்துச்சு அன்னிக்கி accident ஆனதுன்னு போன் வந்தப்புறம் நானும் சாரதியும் ஸ்பாட்டுக்கு போனோம். அவர் உயிர் பிழைக்க எல்லா சான்ஸ்ம் இருந்ததது.ஆனா அவர் உயிர் பிழைக்க கூடாதுங்கிறதுங்கிற மாதிரி சாரதியும் , அந்த பொண்ணு நவீனாவும் நடந்துக்கிட்டாங்க . என்ன விஷயம்னு கேட்டப்போ அந்த பொண்ணு நவீனாவோட ஆபாச விடியோவை எடுத்து வச்சுக்கிட்டு தன்ராஜ் மெரட்டுறதா சொன்னாங்க. தன்ராஜ் மொபைலை சாரதி எடுத்து வைச்சுகிட்டான். தன்ராஜுக்கு கொடுத்திருந்த லைப் சப்போர்ட் சிஸ்டம் disconnect பண்ணி விட்டுட்டா அந்த பொண்ணு நவீனா .நவீனாதான் இந்த விஷயத்தை பிளான் பண்ணி செஞ்சான்னு சாரதி எங்கிட்ட சொன்னான். நானும் ஒரு பொண்ணுங்கிற முறையில அவளை காப்பாத்த நெனச்சேன்,அவ்ளோதான் மேடம். ராம் அந்த போனை கோர்ட்டில் ஒப்படைத்தான்.அதை பார்த்த ஜட்ஜ், தன்ராஜ் கேஸை reopen பண்ணுங்க என்று உத்தரவிட்டார்.

நவீனாவை போலீஸ் கைது செய்தார்கள். ,நிதீஷும் தான்தான் சாரதியை கொன்றதாக ஒப்புக்கொண்டான். சாரதி என்னிடம் நவீனா விடியோவை காட்டி பிளாக்மெயில் செய்தான். அவனுக்கு 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன் . அப்போதும் அவன் விடியோவை தரவில்லை, அதனால் ஆள் வைத்து அவனை கொன்றேன் என வாக்குமூலம் அளித்தான்.ராம் தீப்தியிடம் இதை சொன்னபோது தீப்தி ஒருத்தரோட நிஜ முகம் எவ்ளோ மோசமா இருக்கு என்றாள்.