Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 22

சந்திரனிடம் விசாரித்த போது பாவம் கீர்த்தி அவளை யாரோ பிஸிக்கல் ஆகவும் மெண்டல் ஆகவும் சின்ன வயசுலேயே தொந்தரவு பண்ணியிருக்காங்க . உங்களுக்கு ராமநாதன் பத்தி தெரியுமா சார். ம்ம் அவரும் நல்ல மனிதர்தான். எங்கிட்ட க்ளாஸ்க்கு வந்தப்புறம் தான் அவளுக்கு மியூசிக் தவிர வேற எதுலயும் interest இல்லைனு தெரிஞ்சது. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் அவ ரொம்ப பிடிவாதமா இருக்கா. ரொம்ப தேங்க்ஸ் சார் என்றாள் தீபு.

இப்போ என்ன பண்றது பாஸ் நாம பொறுமையாதான் இருக்கணும் கீர்த்திய abuse பண்ணது ஒரு வேளை ராமநாதனா கூட இருக்கலாம். அதை prove பண்ணி ஒன்னும் ஆக போறதில்லே ஆனா அவர் அப்படிப்பட்டவர்னுதான் நாம நிரூபிக்க நம்மகிட்ட வேற எவிடென்ஸ் எதுவும் இல்லையே.கீர்த்திக்கிட்டே ஒருவேளை அந்த எவிடென்ஸ் இருக்கலாம். ராமநாதனோட ஸ்டுடென்ட் ஸ்நேஹாகிட்ட பேசி பார்க்கலாமா ? வேண்டாம் அவ ரொம்ப சின்ன பொண்ணு. அவர் மனைவிகிட்டயே கேட்டு பாப்போம். நீங்க சொல்றதை என்னால நம்ப முடியல அதுவும் கீர்த்தி இப்படி ஆனதுக்கு ராமநாதன் காரணம்னு சொல்றத நான் நம்ப மாட்டேன்.இந்தாங்க அவருடைய பர்சனல் ரூம் key அவர் போனும் அந்த ரூம்லதான் இருக்கு. எனக்கு தெரிஞ்சு அவர் ஒரு ஓபன் புக். நீங்க என்ன கிடைக்குதோ அதை எடுத்துக்கலாம் என்றாள்.ராமநாதன் ரூம் அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்சின் ஒரு மூலையில் இருந்தது.அந்த அறையை கவனமாக சோதித்ததில் எதுவும் இருக்கவில்லை . அந்த அறையில் இருந்த ராமநாதனின் செல்போனிலும் எதுவும் இருக்கவில்லை, மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினான் ராம்.

நாந்தான் சொன்னனே சார் அவரு சுத்த தங்கம் சார் என்று சொல்லிவிட்டு அழுதாள்.ராம் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் பேசினான்.ராமநாதன் சாவு பற்றி ஏதாவது clue கிடைத்ததா என விசாரித்தான்.நாங்களும் விசாரித்தோம் அவருக்கு எதிரிகள் யாருமில்லை, அவர் தவறி விழுந்துதான் இறந்திருக்கிறார் அவருடைய சட்டை பையில் ஒரு key இருந்தது அதை அவர் மனைவியிடம் கொடுத்து விட்டோம் என்றார். ராமநாதன் மனைவியிடம் கேட்ட போது அது வந்து அந்த சாவி அவருடைய பர்சனல் லாக்கர் சாவி.எதையும் மறைக்காதீங்க இதுல உங்களை மாதிரி நெறைய பேர் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கு என்றான் ராம். நீங்களே மனசு மாறுனா எங்களை கூப்பிடுங்க என்றான். நில்லுங்க நானும் வரேன் இப்போவே ஓபன் பண்ணி பார்த்துடலாம் என்றாள் .

அந்த லாக்கரில் pendrive ஒன்று இருந்தது.pendrive முழுக்க அவரிடம் படித்த சின்ன பெண்களின் போட்டோவால் நிரம்பியிருந்தது .ராமால் இதை நம்ப முடியவில்லை. கீர்த்தியின் போட்டோவும் அதில் இருந்தது. ராமநாதன் மனைவி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாள்.அந்த pendrive இல் இருந்த பெண்களை தொடர்பு கொண்டபோது பலரும் பேச மறுத்தார்கள். இது நிச்சயமாக சைல்ட் abuse case தான் என ராம் முடிவுக்கு வந்தான்.

ராம் இந்த போட்டோக்களை தீபுவிடம் கொடுத்து இதை எடுத்துக்கொண்டு போய் கீர்த்தியிடம் காட்டு அவள் அப்போதுதான் பேசுவாளென சொன்னான். தீபு இந்த முறை அவள் வீட்டுக்கு போயிருந்த போது அவள் ஹாஸ்பிடலில் அனுமதிப்பட்டிருந்ததாகவும் அவள் நிலைமை தற்போது மோசமானதாக இருப்பதாகவும் சொன்னார்கள். நேரே ஹாஸ்பிடலுக்கு சென்ற போது இப்போது யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இந்த போட்டோவை மட்டும் காட்டுங்கள் என்று சொல்லி பிரிண்ட் போடப்பட்ட சிறு வயது கீர்த்தியின் போட்டோவை கொடுத்தனுப்பினாள் தீபு. அதை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினாள் கீர்த்தி. டாக்டர் உங்களை பார்க்க வர சொல்றாங்க. வாங்க நீங்க கொடுத்து அனுப்புன போட்டோ எங்கே கிடைச்சது கொஞ்சம் டீடெயில்ஸ் சொல்லறீங்களா ? அவள் விவரங்களை சொன்னாள். இப்போதான் அவங்க பிரேக் ஆயிருக்காங்க traumaலேயிருந்து கொஞ்சம் ரிலீவ் ஆயிருக்காங்க. ரெண்டு நாள் கழிச்சு நானே உங்களுக்கு போன் பண்றேன். ஓகே டாக்டர் தேங்க்ஸ். அந்த புகைப்படத்தில் அவள் ராமநாதனுடன் இருந்தாள்.

ரெண்டு நாட்கள் கழித்து டாக்டர் தீபுவை தொடர்பு கொண்டாள். கீர்த்தி இப்போ நல்லா இருக்காங்க . அவங்ககிட்ட இப்போ பேசலாம். கீர்த்தி மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். ராமநாதன் செத்துட்டானா ? என்றாள். கீர்த்தி உங்களுக்கெப்படி தெரியும் . எனக்கெல்லாம் தெரியும் அவன் செத்ததுக்கெல்லாம் ஒரு விசாரணையா ?அதான் உங்க மேல கோவமா இருந்தேன். நான் உங்ககிட்டே தனியா பேசணும் என்றாள் தீபு. வாங்க பேசுவோம் என்றாள் கீர்த்தி. ராமநாதன் என்னை பழிவாங்கினான் என்ன சொல்லறீங்க அவரு உங்க குருஜி .. அவனா அவன் ஒரு மிருகம் . என்னை அடைய துடித்த ஒரு மிருகம். அவனால நெறைய பேரு பாதிக்கப்பட்டாங்க.அதுல நானும் ஒருத்தி என்னோட போட்டோவை எடுத்து வைச்சுக்கிட்டு என்னை பிளாக்மெயில் பண்ண மிருகம் அது. நீங்க ஏன் அதை expose பண்ணல ? நான் அதை வெளியில சொன்னப்போ யாரும் அதை நம்பலை.எல்லோரும் அவனுக்கு பயந்துகிட்டு இருந்தாங்க. எப்படி செத்தான்னு கொஞ்சம் டீடைலா சொல்லறீங்களா கேக்க நல்லாயிருக்கும் என்றாள் கீர்த்தி. மாடியிலே இருந்து கீழே விழுந்து. இல்லே என் புருஷன்தான் கொன்னிருப்பாரு. அவரு ரொம்ப நல்லவரு. என்னை குணப்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணினாரு .யாரு உங்க husband ? ரவிக்குமார் . அதே கட்டிடத்துல எஞ்சினீரா ஒர்க் பன்றாரு. ஓ ..அங்க இருந்த ரூம்லதான் hidden கேமரா வைச்சு எல்லோரையும் படம் எடுத்துக்கிட்டு இருந்தான் ராமநாதன். என் புருஷன்தான் அவர்தான் நிச்சயம் இதை செஞ்சிருப்பாரு .thankyou ரவி என்றாள் .

ரவியை சந்தித்தபோது கீர்த்தி சொன்னது உண்மைதான் . எங்களால சந்தோசமா வாழ முடியல சின்ன வயசுல அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அவளால மறக்க முடியல. எங்கிட்ட சொல்லவும் முடியல. அவ பின்னணி குறித்து விசாரிச்சேன் அப்போதான் ராமநாதன் இந்த வேலையை அவரே கூப்பிட்டு குடுத்தாரு, ராமநாதன் ரூம்ல இருந்த காமெராக்களை கண்டு பிடிச்சேன் .அது பத்தி கேட்டபோது எல்லாத்தையும் ஒத்துக்கிட்டார். இனிமே நீ உயிரோட இருக்க கூடாதுனு சொன்னேன்.அவரை மாடியிலிருந்து தள்ளிவிட்டேன் அவர் அப்போ என்னை எதிர்க்க கூட இல்லை.
அந்த வீடியோவெல்லாம் எப்பவோ அழிச்சுட்டேன் . ராமநாதன் மாதிரி ஆளுங்க இந்த சமூகத்தோடு கலந்து இருக்காங்க அவங்களை கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் என்றான் ரவி. நானே போலீஸ் கிட்டே surrender ஆக நெனச்சேன். ஆனா என் wife இப்பதான் குணமாயிட்டு வரா. அவளுக்கு துணையா கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் surrender ஆக போறேன் என்றான்.