Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 23

கணக்கு டீச்சர் இளங்கோவிற்கு பாராட்டு விழா. இளங்கோவிற்கு அவருடைய பழைய ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ரியூனியன் போல ஏற்பாடு செய்திருந்தார்கள். தீப்திதான் அதை தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருந்தாள்.தீப்தியும் ரஞ்சித்தும் வந்திருந்தவர்களை வரவேற்றனர்.இளங்கோ என்னமா இது இவ்ளோ கிராண்டா பண்ணனுமா என்றார். சார் நீங்க எவ்ளோ பேர் வாழ்க்கையை மாத்தி இருக்கீங்க ஜஸ்ட் ஒரு small celebration என்றாள்.buffet ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இளங்கோவிற்கு திருமணமாகி ஒரு பையன் இருந்தான்.அவன் பெயர் திலீப். மனைவி இறந்து விட்டார். அப்போது திடீரென இளங்கோ மயங்கி விழுந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. என்னாச்சு சார் டாக்டரை கூப்பிடவா ? அவசரமாக முதலுதவி செய்தார்கள்.வயசாயிடுச்சுல்ல வேற ஒண்ணுமில்ல என்றார் .பழைய நண்பர்கள் ஒவ்வொருவராக இளங்கோவை பாராட்டி பேசினார்கள். அவருக்கு சந்தன மாலையும் பரிசுபொருளும் வழங்கினார்கள். இளங்கோ கிறிஸ்துவ மதத்துக்கு சமீபத்தில் தான் மாறியிருந்தார்.

விழா இனிதே நிறைவுற்றது. தீப்தி இப்போ உனக்கு சந்தோஷம்தானே என்றான் ரஞ்சித். ம்ம் ஆனா அவர் மயங்கி விழுந்தது என்னவோ எனக்கு கவலையா இருக்கு . வயசானா லேசா படபடப்பு வரத்தானே செய்யும் என்றான் ரஞ்சித். அவர் கிளாஸ் எடுக்கிறார்னா எங்க எல்லோருக்கும் ஜாலிதான் என்றாள். ஏன் டான்ஸ் ஆடுவாரா என கேட்டு சிரித்தான் ரஞ்சித். அவர் ரொம்ப நல்ல மனுஷன் அதைத்தான் அப்படி சொன்னேன் என்றாள் தீப்தி. மறுநாள் இளங்கோவிற்கு போன் செய்து விசாரித்தாள். எப்படி இருக்கீங்க நீங்க மயங்கி விழுந்ததும் நாங்கெல்லாம் பயந்து போயிட்டோம் . அதெல்லாம் பயப்பட ஒண்ணுமில்லம்மா , ரொம்ப நன்றி தீப்தி மனசுக்கு நிறைவா இருந்தது இதனை வருஷ டீச்சிங் சர்வீஸ்ல இப்போதான் எனக்கு ஏதோ achieve பண்ணியிருக்கோம்னு தோணுது. உங்க ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் நல்ல நிலமைல இருகாங்க அதோட எல்லோருமே உங்க மேல மரியாதையா இருக்காங்க. சரி சார் நான் அப்புறம் பேசுறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க என்றாள் தீப்தி.

தீப்தி மறுபடி அவரை பார்க்க வேண்டுமென்று நினைத்து கொண்டிருந்தாள். அதற்குள் அந்த கெட்ட செய்தி வந்து விட்டது. இளங்கோவை யாரோ கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள் என்ற செய்தி இடி போல் இறங்கியது .என்ன சார் சொல்லறீங்க? ஆமா மேடம் நீங்க உடனே வாங்க என்றார் இன்ஸ்பெக்டர். அவர் பையன் திலீப் இவளை பார்த்ததும் மேடம் இப்படி ஆயிடுச்சே என்றான். என்ன நடந்துச்சு ? நேத்து நைட் நான் friends கூட படம் பார்க்க போயிருந்தேன் திரும்பி வந்து பார்த்தா அப்பாவை, அப்பாவை யாரோ குத்தி கொன்னிருக்காங்க.தீப்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ரஞ்சித் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தான்.நீங்கதானே இங்க விழா organise பண்ணினீங்க ? ஆமா சார்.அதுல கலந்துக்கிட்டவங்க லிஸ்ட் கொடுங்க. நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன் சார். கொன்னவன் கார்பென்டர் பயன்படுத்தும் உளி மாதிரி ஒன்னை பயன்படுத்தி இருக்கான். விழா வீடியோ இருந்தா அதையும் எங்களுக்கு அனுப்புங்க என்றார் இன்ஸ்பெக்டர்.தீப்திக்கு யார் என்ன காரணத்திற்காக இளங்கோவை கொன்றிருப்பார்கள் என்று புரியவில்லை. யாரோ திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கிறார்கள் என்று போலீஸ் சொன்னது.

இளங்கோவுடைய உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான டீச்சர்களும் , ஸ்டுடென்ட்ஸ்களும் வந்திருந்தனர்.எல்லோரும் அவருக்கு இப்படி நடந்திருக்க கூடாதென பேசிக்கொண்டனர்.தீப்தி ரஞ்சித்திடம் உடனே ராம் சாரை பாக்கணும் போன் பண்ணுங்க . இளங்கோ சாரை கொன்னவனை சும்மா விடக்கூடாது என்றாள். போலீஸ் விசாரிக்கிறாங்களே என்றான் ரஞ்சித். என்னோட திருப்திக்காக இதை செய்யுங்களேன் . ராமை போன் செய்து நேரில் வர சொன்னான் ரஞ்சித்.விஷயத்தை கேள்விப்பட்டதும் தீப்தி எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல . சீக்கிரமா அவனை கண்டுபிடியுங்க ராம் சார். திலீப்பிடம் விசாரணையை தொடங்கினான். என்ன motive ஆஹ் இருக்கும்னு நெனைக்குறீங்க திலீப் . எங்க அப்பா யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காதவரு..ம்ம் எத்தனை பேரு விழாவிற்கு வந்திருந்தாங்க ? 20 பேர் இருக்கும் சார். மாடி வழியா வந்துதான் இந்த கொலையை செய்திருக்கான். ஆமா சார். எப்போவுமே மாடிலதான் இருப்பாரா ? இல்ல கொஞ்ச நாளாதான். சரி திலீப் என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்யுறேன்.

தீப்தி அவர் திடீர்னு மதம் மாற காரணம் என்ன? அதுதான் எனக்கும் புரியல. கொஞ்ச நாளா அவருக்கு ஏதோ பிரச்னை இருந்திருக்கு என்றாள். அவங்க சர்ச் பாதரை நான் பாக்கணுமே என்றான். நான் திலீப் கிட்ட பேசி ஏற்பாடு பண்றேன்.அந்த விடியோவுல ஏதாவது தெரிஞ்சதா இல்லை சார் எல்லாரும் பழக்கபட்டவங்கதான்.ஏதாவது strange ஆஹ் தெரிஞ்சதா ? அவர் என்ன காரணத்தினாலோ மயக்கமாயிட்டாரு அவ்ளோதான் நடந்தது . ம்ம் சரி தீப்தி ஏதாவது அப்டேட் இருந்தா நானே உங்களை கூப்பிடுறேன் என்றான். சர்ச் பாதரை போய் பார்த்தான் ராம். அவர் கடைசியா சாகுறதுக்கு முதல் நாள் என்னை பார்க்க வந்தார். நான் பாவமன்னிப்பு கேட்க விரும்புவதாக சொன்னார்.ஆனா அவர் என்ன சொன்னார்ங்கிறதை வெளியில் சொல்ல கூடாது. அப்புறம் எனக்கேதாவது ஆயிட்டா பையனை கவனமாக பார்த்துக்கங்கனு சொன்னார். அவருக்கு முன்கூட்டியே தனக்கு ஏதோ நடக்க போகுதுன்னு தெரிஞ்சிருக்கு . அவரு பயந்தது போல நடந்திருச்சு . தேங்க்ஸ் பாதர் என்று விடை பெற்றான்.

இளங்கோ சாரோட ரூமை பார்க்கலாமா? பார்க்கலாம் சார். நிறைய புத்தகங்கள் இருந்தன. அவரே சில புத்தகங்கள் எழுதி இருந்தார்.பெரிதாக clue எதுவும் கிடைக்காததால் ராம் ஏமாற்றமடைந்தான்.போலீஸ் அன்று விழாவில் கலந்து கொண்டவர்களை விசாரித்தது. சந்தேகப்படும்படி யாரவது விழாவில் கலந்து கொண்டார்களா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் வந்தது.ராம் திலீப்பிடம் அவர் முன்னாடி ஸ்கூல் டீச்சரா எங்க ஒர்க் பண்ணாரு. ஆங் அது வந்து திருச்சி பக்கத்துல ஏதோ ஒரு சின்ன கிராமம்.அங்கேயிருந்து transfer ஆகித்தான் இங்க சென்னைக்கு வந்தோம் சென்னைக்கு வந்து 15 வருஷம்
இருக்கும்.எனக்கு அந்த பழைய ஸ்கூல் காண்டாக்ட் நம்பர் இருந்த விசாரிச்சு சொல்லுங்களேன் என்றான் ராம். நிச்சயமா சார். போட்டோ ஆல்பம் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தான் திலீப். இதுல கூட ஏதாவது clue இருக்கலாம் என்றான். அதில் நிறைய ஸ்டுடென்ட்ஸ்களோடு இளங்கோ எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இருந்தன.அதில் இருந்து தனியாக ஒரு புகைப்படம் கீழே விழுந்தது, போட்டோ பின்புறம் மேரி என்று எழுதி இருந்தது . அதில் மேரி மட்டும் தனியாய் இருந்தார். இது யார்னு தெரியுமா திலீப் ?இந்த ஆல்பத்துல இருந்துச்சு .தெரியலே சார் .. ஓகே திலீப் நான் அந்த ஸ்கூலுக்கு போய் விசாரிக்கிறேன். ஏதாவது தகவல் தெரிஞ்சா என்னை கூப்பிடுங்க.

திருச்சி அருகே இருந்த ஸ்கூல் இப்போதும் செயல்பட்டு கொண்டிருந்தது. மிக குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தார்கள்.அங்கிருந்த பியூன் ரத்தினம் மட்டும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பவன் போல பேசினான். headmaster சின்ன வயது ஆளாக இருந்தார். ரத்தினம் இந்த போட்டோவில் இருக்குறது மேரி ரொம்ப kind ஆனவங்க ஆனா இப்போ இவங்க உயிரோட இல்லையே? ஏன் என்னாச்சு
இவங்க இந்த ஸ்கூல் சர்வீஸ்ல இருந்தப்போவே தற்கொலை பண்ணிகிட்டாங்க.போலீஸ் விசாரிச்சுட்டு அது அவங்க குடும்ப பிரச்சனைன்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கு இளங்கோ சாரை தெரியுமா ? ரொம்ப தங்கமான மனுஷன் அவரை போய் கொன்னுட்டாங்களே சார்..பேப்பர்ல படிச்சேன் என்றான். அப்போ இந்த ஸ்கூல் headmaster ஆஹ் யார் இருந்தா? ரவிதான் இருந்தாரு அவர் வீடு அடுத்த தெருவுலதான் இருக்கு போய் பாக்குறதுன்னா பாருங்க என்றான். ரொம்ப தேங்க்ஸ் என்றான் ராம். ரவி சாருக்கு போன் பண்ணிவிட்டு நேரில் போய் பார்த்தான். நீங்க சந்தேகப்பட்டது சரிதான் அப்போ இளங்கோ சார் எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் மாதிரி அவராலதான் பசங்க நல்லா படிச்சாங்க.கணக்குல excellent வாங்குனாங்க.ஆனா மேரி டீச்சர் ? அதை எப்படி சொல்வேன் இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க அங்கே படிச்ச ஒரு பையனோட காண்டாக்ட் இருந்தது. இது எல்லா டீச்சருக்கும் தெரிஞ்சவுடனே மேரி suicide பண்ணிகிட்டாங்க.அதோட இந்த ஸ்கூல் பெரும் கெட்டு போச்சு.டீச்சர்ஸ் எல்லோரும் transfer வாங்கிகிட்டு போயிட்டாங்க. பசங்கள parents அனுப்பவும் தயங்குனாங்க. ஆனா மேரி போட்டோவை இளங்கோ ஏன் வெச்சிருந்தாருன்னு தெரியலே. உங்ககிட்ட மேரி சம்பந்தப்பட்ட காண்டாக்ட் டீடெயில்ஸ் ஏதாவது இருக்க ? அந்த பையன் பேரு என்ன ? அவனோட போட்டோ இருக்கா ? அவன் பேரு ராகுல்.அப்போ அவன் பிளஸ் டூ படிச்சிட்டு இருந்தான். அவனும் நல்ல பிரில்லியண்ட் ஸ்டுடென்ட் தான். ரத்தினம்தான் இந்த விஷயத்தை இளங்கோவுக்கு சொல்லி இருக்கான். அப்புறம் இளங்கோ என்கிட்டே சொன்னார். நானும் விசாரிச்சேன் அந்த பொண்ணு அழுதுச்சே தவிர ஒரு வார்த்தை பேசல.வேற வழியில்லாம அந்த பொண்ணை மட்டும் சஸ்பெண்ட் பண்ணினோம்.அன்னிக்கி சாயங்காலம் தூக்குல தொங்கிடுச்சி என்றார் ரவி. ஸ்கூல் ரெகார்டஸ் ல மேரி அட்ரஸ் இருக்கும் அந்த பையன் அட்ரஸும் இருக்கும் . நான் போன் பண்ணி சொல்றேன் நீங்க ஸ்கூலுக்கு போய் வாங்கிக்குங்க என்றார். ஸ்கூலுக்கு போயிருந்த போது ரத்தினம் ராகுலின் போட்டோவையும்
அட்ரெஸ்ஸையும் எடுத்து குடுத்தான், மேரியின் வீட்டு விலாசத்தையும் எடுத்து குடுத்தான்.