கனவு 14
அன்று ஹரிதாவுக்கும் ,இளங்கோவிற்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமொன்று பள்ளியில் நடந்தது. யாரோ சுவற்றில் இளங்கோவையும், ஹரிதாவையும் இணைத்து எழுதி இருந்தார்கள். விஷயம் தெரிந்து இளங்கோ ஹரிதாவிடம் பேசினார். நீ ஒன்றும் பயப்படாதே ஹரிதா .. இவர்கள் ஏதோ என்னை பழி வாங்குவதாய் நினைத்து உன் பெயரை கெடுக்க நினைக்கிறார்கள் என்றார். நான் இந்த பிரச்சனையை பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறினார். அந்த சுவர் செய்தி உடனடியாக அழிக்கப்பட்டது ஆனாலும் ஸ்கூல் மேனேஜ்மெண்ட் வரை அந்த செய்தி போய்விட்டது. பேரண்ட்ஸ் எல்லோரும் வந்து விசாரிக்க தொடங்கிவிட்டனர். உடனடியாக ஒரு என்குயரி கமிட்டி அமைக்கப்பட்டது. ஹரிதாவின் அப்பா, அம்மா கவலையடைந்தனர். ஆறுமுகம், சௌமியா இருவரும் ஹரிதாவுக்கு ஆறுதல் கூறினர். பசங்கள் இவளை பார்க்கும் பார்வை மாறி இருந்தது.அவள் கவலையெல்லாம் இளங்கோ அந்த ஸ்கூலை விட்டு வேறு ஸ்கூல் போய்விடக்கூடாது என்பதாக இருந்தது, ஹரிதா அப்பா என்னம்மா நடந்தது என விசாரித்தார். ஹரிதா எனக்கு எதுவும் தெரியாது எப்போதும் போல ஸ்கூல் போனேன் அப்போதுதான் என்னையும் இளங்கோ சாரையும் சம்பந்தபடுத்தி சுவற்றில் யாரோ எழுதி இருப்பதாக சொன்னார்கள் என்றாள். ஹரிதா அப்பா நான் பார்த்துக்கொள்கிறேன் நீ ஒன்றும் கவலைப்படாதே என்றார்.
என்குயரி கமிட்டி முன் ஹரிதா அப்பா, அம்மா , இளங்கோ மற்றும் ஹரிதா ஆகியோர் ஆஜர் ஆனார்கள். அவர்கள் மத்தியில் நிற்கவே ஹரிதாவிற்கு என்னவோ போல இருந்தது. அவர்கள் முதலில் லேடீஸ் டீச்சர் துணை கொண்டு ஹரிதாவை விசாரித்தார்கள். பிறகு இளங்கோவை விசாரித்தார்கள். அவ சின்ன பொண்ணு சார் நான் எதுவும் பண்ணலை சார் என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். ஹரிதா இளங்கோ எந்த தப்பான நோக்கத்திலும் என் கூட பழகவில்லை என தெளிவாக சொன்னாள். இது பற்றி மேலும் வதந்திகள் பரவக்கூடாது என்பதில் ஸ்கூல் மேனேஜ்மெண்ட் உறுதியாக இருந்தது .ஆறுமுகத்தையும் ஒரு சில டீச்சர்கள் விசாரித்தார்கள். இறுதியில் கமிட்டி இரண்டு விஷயங்களை பரிந்துரைத்தது. ஒன்று ஒரு பெண் விளையாட்டு டீச்சர் நியமிப்பது என தீர்மானித்தார்கள். இரண்டு இளங்கோவை வேறு பள்ளிக்கு மாற்ற பரிந்துரைப்பது என்று முடிவு எடுத்தார்கள். ஹரிதா எது நடக்கக்கூடாதென்று நினைத்தாளோ அது நடந்து விட்டது. அவளுக்கு பள்ளிக்கு செல்லவே பிடிக்கவில்லை. ஏனோ வெறுப்பாய் இருந்தது. யாரோ செய்த தவறுக்கு இளங்கோ சார் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என எண்ணினாள்.
ஆறுமுகம், சௌமியா வீட்டுக்கு வந்திருந்தனர். நீ எப்போதும் போல ஸ்கூலுக்கு வா இல்லையென்றால் உன்னைத்தான் தப்பாய் பேசுவார்கள் என்றாள் சௌமியா. ஏற்கனவே பேர் கேட்டுவிட்டது இனி என்ன பாக்கி இருக்கிறது என்றாள் ஹரிதா. அதெல்லாம் ஒன்றுமில்லை நாங்கள் இளங்கோ சாரை சந்தித்தோம் அவர் உன்னை எக்காரணம் கொண்டு படிப்பை தவற விட வேண்டாம் என்று சொன்னார்.ஹரிதா அழுது விடுவாள் போல இருந்தாள். ஆனாலும் நான் என்ன தப்பு செய்தேன் என்றாள். ஆறுமுகம் அவளுக்கு தைரியம் கூறினான். என்ன ஹரிதா இதற்கே இப்படி கலங்கலாமா இன்னும் காலேஜ் படிப்பு இருக்கிறது எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கிறது என்றான். அவள் அப்பாவும் அவளுக்கு அட்வைஸ் பண்ணினார். அதனால் ஸ்கூல் போக மனதளவில் தன்னை தயார் படுத்திக்கொண்டாள் .சில மாணவர்கள் இவளை பார்த்ததும் இளங்கோ என கத்திவிட்டு ஓடினர். இவளுக்கு அதிலெல்லாம் கவனமே இல்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.கூடிய சீக்கிரம் இளங்கோ சாரை ட்ரான்ஸ்பர் செய்து விடுவார்கள் என்ற செய்தி அவளுக்கு கிடைத்தது. அவள் மனம் தேவையில்லாமல் இப்படி ஒரு சம்பவம் நடக்க காரணம் யாராக இருக்கும் என யோசிக்க தொடங்கியது.
சில வாரங்களில் இளங்கோ இட மாற்றம் செய்யப்பட்டார். அவரை சந்திக்கவே சங்கடமாய் இருந்தது ஹரிதாவுக்கு.இறுதியாக அவரை ஒரு முறை பார்க்கமாட்டோமா என்று தோன்றியது. ஆறுமுகத்திடம் தான் சாயங்காலம் டிரைன் மூலம் ஊருக்கு போவதாக சொல்லியிருந்தார். ஹரிதா அவரை பார்க்க முடிவு செய்தாள். ஆறுமுகம், சௌமியா மற்றும் ஹரிதா ஸ்டேஷன் சென்றார்கள். அவர் அதிகம் பேசவில்லை. இங்கு ரொம்ப நேரம் இருக்க வேண்டாம் என்று மட்டும் சொன்னார். ஹரிதா என்னால்தான் உங்களுக்கு இந்த தொந்தரவு என்று சொன்னாள். இதெல்லாம் பாடம் நீ கவனமாக இருக்க வேண்டும் . இந்த ஸ்கூல் விட்டு போகும்போது நல்ல ரேங்க் உடன் போக வேண்டும் என்றார். அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறுமுகமும், சௌமியாவும் விடை பெற்றுக்கொண்டனர். இவள் ஸ்டேஷன் பெஞ்சு ஒன்றில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சில சமயம் நாம் விரும்பாததும் நடக்கத்தான் செய்கிறது என உணர்ந்தாள்.இளங்கோ போய் விட்டார். இனி அவரை பார்ப்பது கடினம். ஆனால் அவர் சொல்லிக்கொடுத்தவை எப்போதும் நினைவில் நிற்கும். ஒரு வகையில் ஆறுமுகத்துக்கும் இழப்புதான். இனி யார் அவனுக்கு ஒரு நண்பனை போல கைட் பண்ணக்கூடும். இப்படியாக யோசித்தவாறே வீடு வந்து சேர்ந்தாள்.
அம்மா எனக்கு பசிக்கவில்லை என சொல்லிவிட்டு அவள் அறைக்கு போய் கதவை சாத்திக்கொண்டாள்.இந்த நிகழ்வு மறக்கக்கூடியாதுதான் என்றாலும் கசப்பான அனுபவம் தனக்கு நடந்துவிட்டது எனக் கருதினாள். புது லேடி விளையாட்டு டீச்சர் இன்னும் ஒரு வாரத்தில் வருவதாக சௌமியா சொன்னாள். இனி தான் யாருக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இந்த சமுதாயத்தின் பார்வைகளில் இருந்து வித்தியாசமாகவே தெரிவோம் என நினைத்தாள். புது டீச்சர் பிரேமா ரொம்ப கெடுபிடி காட்டினாள் . இவளை கூப்பிட்டு விசாரித்தாள்.அவள் தான் ரொம்ப கண்டிப்பானவள் என்பதை காட்டிக்கொள்ளவே விரும்புவதாக தெரிந்தது. பிரேமா திறமை மிக்கவள்தான் என எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஸ்கூல் பிள்ளைகளிடம் எப்படி பழகுவது என்பதில் அவள் முதல் படி கூட தாண்டவில்லை என்பது ஆறுமுகத்துக்கும், ஹரிதாவுக்கும் புரிந்து விட்டது.இருந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு விளையாட்டை தொடர்ந்தாள் ஹரிதா. அவள் தான் செயற்கையாக இயங்குவதாக தோன்றுவதை மறைக்க முயன்றாள்.
பிரேமா டீச்சர் ஹரிதா வீட்டுக்கு வந்திருந்தாள். எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது இவ்வளவு திறமை இருக்கிற பெண்ணை எப்படி அப்படி சுவற்றில் எழுதினார்கள் என்றார். ஹரிதா அம்மா மட்டும் அப்போது வீட்டில் இருந்தார். ஹரிதா எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் நான் இருக்கும் வரை உங்கள் பெண்ணுக்கு ஒன்றும் ஆகாது என்றாள். டீ, பிஸ்கட் கொண்டு வந்து கொடுத்தாள் ஹரிதா. தாங்க்ஸ் சொல்லி அவற்றை சாப்பிட்டாள். பிரேமாவுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவள் ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தாள் . பிரேமா விடைபெற்றுக்கொண்டாள் . ஹரிதா அம்மா பார்க்க நல்ல டீச்சராத்தான் தெரியுறாங்க என்றாள். இரண்டு மூன்று டோர்ணமென்ட் பிரேமா கூட போய் கலந்து கொண்டு வந்தாள் ஹரிதா. நீ ஏன் அப்படி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறாய் ஹரிதா. ஜெயித்த பிறகு கூட உன் முகத்தில் சந்தோஷம் காணோமே என்றாள் பிரேமா. அப்படியில்லை மேடம் என் முகமே அப்படித்தான் என்றாள் ஹரிதா. என்னவோ போ நானும் உன்னை போல வயதை கடந்து வந்தவள்தான் என்று பிரேமா சொன்னாள்.
மாலை வெயில் இதமாக இருந்தது. ஆறுமுகத்தை விட்டு இளங்கோவிடம் பேச சொன்னாள் ஹரிதா. அவர் நல்லாயிருக்கிறார். உன்னையும் விசாரித்தார் என்றான். எப்படியோ அவர் நன்றாய் இருந்தால் போதும் என்று ஹரிதா கருதினாள். சௌமியா நீ இப்போது ரொம்ப மாறிவிட்டாய் ஹரிதா என்றாள். நீ இறுக்கமாக இருக்கிறாய் பழைய அப்பாவி பெண் குணமெல்லாம் போய்விட்டது என்றாள். ம் என்ன செய்ய வலி இருக்கிறது அதை மறைக்க முடியவில்லை என்றாள்.நாட்கள் ஓடின. கொஞ்சம் கொஞ்சமாக ஹரிதா தன்னை சூழ்நிலைக்கேற்ப தயார்படுத்திக்கொண்டாள் . ஆறுமுகம் நன்றாக விளையாட தொடங்கினான். அவனுக்கும் பரிசுகள் தொடர்ந்து கிடைத்தன.ஹரிதாவுடன் பிருந்தா டீச்சர் போனில் பேசினாள். நானும் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன் என்றாள். இதே மாதிரிதான் எனக்கும் நடந்தது என்று வருத்தப்பட்டாள். இது ஒரு எளிதான தனி மனித தாக்குதல் என்று பிருந்தா சொன்னாள். எனக்கு நீ அதில் இருந்து மீண்டு வந்ததே மகிழ்ச்சி என்றாள். தாங்க்ஸ் டீச்சர் நான் என்னை மாற்றிக்கொண்டு விட்டேன் என்று ஹரிதா சொன்னாள்.சமர் உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக என்னிடம் சொன்னான் . நான் அவனை மறந்து ரொம்ப நாட்களாயிற்று என சொன்னாள் ஹரிதா.
எக்ஸாம்ஸ் நெருங்குகிற நேரம் அது . இவள் மனம் படிப்பில் ஒன்றவில்லை . ஏதோ ஒன்று நம்மை தவிப்புக்கு உள்ளாக்குகிறதே என்று யோசித்தாள். விடுதலை, சுதந்திரம் எல்லாமே ஒரு மாயை போல தெரிகிறதே. நாம் இரண்டடி முன்னேற நினைத்தால் உடனே ஏதாவது நடக்கிறதே என நினைத்தாள். இவள் கஷ்டப்பட்டு பாடங்களில் கவனம் செலுத்த முயன்றாள். ஆறுமுகம் இவளை புரிந்து கொண்டான். ஹரிதா நீ முதலில் ரிலாக்ஸ் ஆகு பிறகு படிக்க தொடங்கு என்றான். சௌமியாவும் அவளுக்கு ஹெல்ப் பண்ணினாள். நாம் சேர்ந்து படிப்போம் நீ வீட்டுக்கு வந்து விடு என்றாள். சௌமியா வீட்டுக்கு போனாள்.அப்போது ரஞ்சித் கால் பண்ணியிருந்தான். அவன் இருவரிடமும் பேசினான். சௌமியா இவள் நன்றாக படிக்க வேண்டும் அப்போதுதான் நாம் இவற்றையெல்லாம் கடக்க முடியும் என்றாள்.ம் நானும் எல்லாவித முயற்சியும் பண்ணுகிறேன் என்று சொன்னாள்.இரவு 8 மணி போல வீட்டுக்கு வந்தாள். அப்பா அவளை விசாரித்தார். சௌமியா எப்படி இருக்கிறாள் என்று கேட்டார்.ஹரிதா நீ உற்சாகமாய் இரு உனக்கு ஒரு குறையுமில்லை என்று சொன்னார்.
மாற்றங்களில் ஏதோ ஒன்று நிகழ்கிறது . நாம் ஒன்றை இழக்கிறோம் அல்லது பெறுகிறோம் அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் . இது யோகா டீச்சர் சிந்து இவளுக்கு சொன்னது . அவள் தூங்க முயற்சித்தாள். கனவுகள் மேலும் கனவுகள்.. சுவரொட்டி கனவுகள் இவள் திடுக்கிட்டு விழித்தாள். கிச்சன் போய் ஃபிரிஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தாள். இவள் மனம் உறுதியாய் இருந்தது. எப்பவும் பாட்டு கேட்பவள் அன்று கேட்கவில்லை. மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் ரொம்ப நேரம் தூங்கி விட்டாள். அவள் அம்மா தூங்கட்டும் என்று விட்டுவிட்டாள். சௌமியா ஃபோன் பண்ணியிருக்கிறாள். இவள் சற்று தாமதமாகத்தான் அதை பார்த்தாள். என்னடி தூக்கமா ? ஆமாம் கனவு தொல்லை என்றாள்.சௌமியா இங்கேயும்தான் என்றாள்.