ராகவ் தென்றலுடன் நிதானமாகவே பழகினான். அவளும் அவனை புரிந்து கொண்டாள் . ஆனால் இவர்களுடைய புரிதல் ரஷ்மிக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் தன்னை தயார் படுத்திக்கொண்டாள். ஜோவும் , அருணும் நடப்பதை கவனித்து வந்தனர். ஒரு புறம் படிப்பு மறுபுறம் நட்பும் , காதலும் இரண்டையும் பேலன்ஸ் செய்வது கஷ்டம்தான். அப்போதுதான் ரஷ்மி மியூசிக் பாண்ட் ஒன்றை துவங்குவதாக முடிவெடுத்து இருந்தாள். மெம்பர்களை சேர்க்கும் பணியில் இறங்கி இருந்தாள். ராகவுக்கு மியூசிக் மீது இஷ்டம் தான் ஆனால் அனுபவம் இல்லை. அருணுக்கு அதில் நல்ல ஆர்வம் இருந்தது. அருணை சேர்த்துக்கொண்டாள் ரஷ்மி கூடவே சுகன்யாவையும் சேர்த்து கொண்டாள். காலேஜில் மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அரேஞ்ச் செய்து தருவதாக சொல்லி இருந்தார்கள். ஜோவும் ராகவும் கிரிக்கெட்டில் மூழ்கி கிடந்தார்கள். மியூசிக் பாண்ட் துவங்கும் நாளையொட்டி எல்லோரையும் வர சொல்லி இருந்தாள். சிறிய இசை அறிமுகம் ஒன்றை அருண் செய்தான். அருணை நினைத்தால் பெருமையாக இருந்தது ராகவுக்கு. அந்த மியூசிக் பாண்டின் தலைவியாக ரஷ்மி இருந்தாள். சௌமியாவே அதற்கு organaiser ஆக இருந்தாள்.
ரஷ்மியை நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் போய் பார்க்க முடிவெடுத்தான். வாயேன் இதற்கு ஏன் ஃபோன் எல்லாம் பண்ணுகிறாய் என்றாள். நானும் வருகிறேன் என்றாள் தென்றல் . அவளையும் அழைத்து கொண்டு போனான். அங்கே அருண் இருந்தான் இவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. ஆயினும் அதை புரிந்து கொண்டவன் போல உடனே கிளம்பி விட்டான். என்ன விஷயம் ராகவ் நாங்கள் பாண்ட் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றாள். தென்றலையும் அதில் சேர்த்துக்கொள்ள முடியுமா என்றான். இப்போது எல்லா மெம்பர்ஸ் சேர்ந்து விட்டார்கள். அடுத்த முறை நிச்சயம் பார்க்கிறேன் என்றாள். அப்புறம் உங்க லவ் எல்லாம் எப்படி போகிறது. தென்றல் ஒரு நாண புன்னகை பூத்தாள் . இன்னும் எனக்கு ஒரு கிஸ் குடுக்க கூட இவனுக்கு நேரம் இல்லை என்றாள் தென்றல் . ஓ அப்படியா என்று சிரித்தாள் ரஷ்மி. ரஷ்மி மனதில் இப்போது எந்த சலனமும் இல்லை. அதை கடந்து விட்டாள்.இவள் சும்மா சொல்கிறாள் நேற்று கூட போனில் குடுத்தேனே என்றான். இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இவன் இன்னும் அந்த காலத்திலேயே இருக்கிறான் என்றாள் ரஷ்மி. பாவம் தென்றல் அருமையான பெண் என்று சொன்னாள்.
அருண் ரஷ்மியோடு எப்படி நெருங்கி பழகுகிறான் என்பதை தெரிந்து கொள்ளவே தென்றலை பாண்டில் சேர்த்து விட முயன்றான். ஆனால் ரஷ்மி அதை நாசூக்காக தவிர்த்து விட்டாள். இனி ஒன்றும் செய்ய முடியாது தனக்கு கிரிக்கெட் விட்டால் வேறு கதியில்லை என்று தனக்கு தானே சொல்லி கொண்டான். சௌமியா ரஷ்மிக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். என்னை organaiser ஆக கட்டாயப்படுத்தி சேர்த்துவிட்டாய் என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை நீங்கள்தான் அதற்கு பொருத்தமான ஆள். எல்லா பிரச்னையையும் சமாளிக்க கூடிய ஆள் என்றாள். எக்ஸாம்ஸ் நெருங்க நெருங்க ராகவ் தடுமாறினான். மறுபடி போய் சௌமியாவை பார்த்தான். எக்ஸாம் வந்தால்தான் உங்கள் அருமை தெரிகிறது என்றான். ம் போதும் புகழ்ந்தது. விஷயத்துக்கு வா என்றாள். அவள் சில குறிப்புகள் கொடுத்தாள். ரஷ்மியிடம் நோட்ஸ் வாங்கி வா நாளைக்கு என்றாள். இவன் தயங்கினான். நான் ஃபோன் பண்ணி சொல்லுகிறேன் நீ போ என்றாள். மறுநாள் போயிருந்த போது அவள் எதையோ சத்தமாக வைத்து கேட்டுக்கொண்டிருந்தாள் . அவள் இசையில் மூழ்கி இருந்தாள். இவனை பார்த்ததும் அதை அணைத்து விட்டு என்ன விஷயம் என்பதை போல பார்த்தாள் . சௌமியா மேம் சொல்லலியா என்றான். சரி வா ஜெராக்ஸ் கடைக்கு போவோம் என்றாள். அவளுடைய வண்டியில் அழைத்து போனாள். இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்றார்கள். அவள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் பார்லர் அழைத்து போனாள். கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தாள்.
எனக்கு ரொம்பவும் பிடித்த இடம் இது என்றாள். நன்றாக இருக்கிறது என்றான். தென்றலை அழைத்து கொண்டு வா ஒருமுறை இங்கே என்றாள். நிச்சயமாக என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்கள் சந்திப்பதை தவிர்த்து வந்தார்கள். ஐஸ்கிரீம் வந்து விட்டது. அவள் மனம் அதிலே பாதி குடுடா என ஏங்க தொடங்கியது. எனக்கு இந்த flavour பிடிக்கலை என்றாள். அப்போ இதை எடுத்துக்க என்றான். அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைக்கும் போதே அவள் இவனுடைய ஐஸ் கிரீம் எடுத்துக்கொண்டாள். ஜெராக்ஸ் கடையில் போய் நோட்ஸ் வாங்கி கொடுத்தாள். சரி நான் வருகிறேன் என்றான். இவள் அடிக்கடி என்னை வந்து பார் என்றாள். நிச்சயமாக என்றான். அவள் முகம் மலர்ந்திருந்தது. அதை கவனித்தான். சௌமியாவை மறுநாள் சந்தித்தான். என்ன என் பேரை சொல்லி ஐஸ் கிரீம் சாப்பிட்டீர்களா என்றாள். இவன் சிரிப்புடன் அடுத்த முறை உங்களையும் அழைத்து போகிறேன் என்றான். அதெல்லாம் சும்மா என்றாள். அருண் ,ஜோ இருவரையும் காலேஜில் பார்ப்பதோடு சரி. மற்ற நேரங்களில் தென்றல் இவன் கூடவே இருந்தாள்.
தென்றலுக்கு ஐஸ் கிரீம் வாங்கி குடுக்க வேண்டும் என்று நினைத்தான்.அவள் அதை விரும்புவாளா என்று தெரியவில்லை. அவளை கட்டாயப்படுத்தி ஒன்றும் ஆக போவதில்லை. எதற்கும் கேட்டுப்பார்ப்போமே என்று ஃபோன் செய்தான். எது அந்த ஐஸ் கிரீம் பார்லர் நீயும் ரஷ்மியும் சாப்பிட்ட அதே ஐஸ்கிரீம் பார்லரா எனக்கு வேண்டாம் என்று கோவத்துடன் போனை வைத்து விட்டாள். இவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. ஜோவுக்கு ஃபோன் செய்தான். ஜோ விடு மச்சி இப்போதானே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்கே இதெல்லாம் அதிலே ஒரு part தான் என்றான்.தென்றல் இவனை தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்து விட்டாள். வா போவோம் எங்கே என்றான் எனக்கு பிடித்த இடத்துக்கு என்றாள். அவளை பார்க்க பாவமாய் இருந்தது. கூட ஜோவும் வந்திருந்தான். சற்று தூரமாக இருந்தது அந்த இடம். ஜோ இருவருக்கும் பொதுவாய் பேசினான். தென்றல் நான் சொல்வதை கேள் என்றான் ராகவ். சரி சொல்லு . ஐ லவ் யு சோ மச் என்றான். அவள் சிரித்து விட்டாள். அவளை வீட்டில் விட்டான். ஜோவுக்கு நன்றி சொன்னான். அவன்தான் அந்த ஐடியா குடுத்தான்.
எப்படியோ ரஷ்மியும், ராகவும் ஐஸ் கிரீம் சாப்பிட்ட சேதி whatsapp வரை வந்து சேர்ந்து விட்டிருந்தது. அருணுக்கு கூட அதில் வருத்தம் என்று தெரிய வந்தது. என்ன அருண் நீ கூட என்னை புரிஞ்சிக்கலையா என்றான் ராகவ். அதெல்லாம் ஒண்ணுமில்லை ரஷ்மி மனசுல இன்னும் என்னோட இடம் எதுன்னு தெரியாதப்ப நானும் எதுவும் செய்ய முடியாதில்லையா என்றான். ம் நீ சொல்வதும் சரிதான் என்றான் ராகவ். எக்ஸாம்ஸ் டைம் முழுவதும் சௌமியா இவனோடு செலவிட்டாள் , அதற்கு நன்றிக்கடன் பட்டிருந்தான் ராகவ். நீங்கள் எனக்காக ரொம்ப சிரமப்படுகிறீர்கள் என்றான் ராகவ். அதெல்லாம் ஒண்ணுமில்லை எக்ஸாம் முடியட்டும் நானே உன்னிடம் என் ட்ரீட் கேட்டு வாங்கி கொள்கிறேன் என்றாள். ம் ட்ரீட் தானே நிச்சயம் தருகிறேன் என்றான். ரஷ்மியும் இவனும் அதிகம் பார்த்து கொள்ளவில்லை. என்னவோ அவளும் பிஸி ஆக இருந்தாள். ஒரு வழியாக எக்ஸாம் முடிந்ததும் அவளை சந்திக்க ஆவலாய் இருந்தான். அவளும் அருணும் மகாபலிபுரம் வரை போயிருப்பதாக மெசேஜ் ஜோ அனுப்பியிருந்தான். இவன் தளர்ந்து போய்விட்டான். ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. தான் அவளை விரும்புகிறோம் போல என எண்ணி கொண்டான். அதே சமயம் தென்றலை நினைத்தும் லேசாக தயக்கம் உருவாயிற்று.
குழப்பமான மனநிலையில் இருந்தான். அப்போது ரஷ்மியிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னப்பா என்னையெல்லாம் மறந்துவிட்டாயா என்றாள். நீ அருண் உடன் மகாபலிபுரம் போயிருப்பதாய் சொன்னான் ஜோ . ம் ஒரு சேஞ்ச்க்காக வந்தோம். அருணுக்கு இவ்வளவு மியூசிக் தெரியும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. நான் அதிர்ஷ்டசாலி என்றாள். நாளை மாலை உன்னுடைய வீட்டில் உன்னை சந்திக்கிறேன் என்று சொன்னாள். அருண் அவளிடத்தில் நெருங்கி விட்டான். அருண் புதிய உற்சாகத்தோடு இருந்தான். ஜோ அவனிடத்தில் என்னடா நடந்தது என கேட்ட போது கூடிய சீக்கிரம் தான் ரஷ்மியை விரும்புவதாக சொல்லத்தான் போகிறேன் என்றான், இதைக்கேட்ட ராகவ் அவனுக்கு குடுத்து வைத்திருக்கிறது என்றெண்ணி கொண்டான். ரஷ்மி மாலை 4 மணிக்கெல்லாம் ராகவ் வீட்டுக்கு வந்து விட்டாள். சௌமியா மேம்க்கு ட்ரீட் தரனும் அது சம்பந்தமா பேசலாம்னு நினைச்சேன் என்றாள். ஓ அப்ப நீ என்னை பார்க்க வரலை என மனதுக்குள் சொல்லிக்கொண்டான். என்னாச்சு அடிக்கடி பிரீஜ் ஆயிடுற . உனக்கு ஓகே தானே அடுத்த வாரம் எல்லோரையும் கூப்பிடலாம். நானே organise பண்ணுறேன் என்றாள். அவங்களுக்கு பிடிச்ச ரெஸ்டாரண்ட் போகலாம் என்றான். சரி அப்போது கரண்ட் போய் விட்டது. ஒரு நிமிஷம் இன்வெர்ட்டர் ஏதோ பிரச்சனை போல நான் பார்க்கிறேன் என்றான். நீ அங்கேயே இரு என்றான். மெழுகுவர்த்தி ஏத்தினான். தேவதையை பார்த்த மாதிரி இருந்தது. அவள் இவனையே பார்த்தபடி இருந்தாள். கரண்ட் சற்று நேரத்தில் வந்து விட்டது. அவள் என்ன பேசினாள் என்பதெல்லாம் நினைவில் இல்லை. அவள் மனதில் ஏதோ மாறுதல் ஏற்பட்டது போல தோன்றியது.அவளாய் சொல்லட்டுமே என்று நினைத்தான்.
அன்று இரவு தென்றல் ராகவுக்கு ஃபோன் செய்தாள். நாம ரொம்ப இடைவெளி விடறோமோ என தோணுது. அப்படியெல்லாம் நினைக்காதே என்றான். அப்போ நாளைக்கு என் கூட கோவிலுக்கு வா என்றாள். சுகன்யாவும் வந்திருந்தாள் . ரஷ்மி வருவாளா என்று அவன் மனம் ஏங்கியது . வெளியில் சொல்ல முடியாமலும் அவளை தவிர்க்க முடியாமலும் தவித்தான்.