ரஷ்மி எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அதற்குமேல் சௌமியாவும் எதுவும் கேட்கவில்லை. சுகன்யாவிடம் ரஷ்மி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ ரஷ்மி தான் நினைத்ததை சாதித்து விட்டாள். சௌமியாவிடம் விடை பெற்றுக்கொண்டாள் ரஷ்மி. அவள் மனம் முழுக்க ராகவ் பாடிய பாட்டுத்தான் ஓடிக்கொண்டிருந்தது. தன்னால் தன்னை மீறி எதுவும் செய்யமுடியவில்லை என்ற வருத்தமும் இருந்தது அவளுக்கு . ராகவ் நைட் ஃபோன் பண்ணியிருந்தான். ரொம்ப தாங்க்ஸ் ரஷ்மி என்றான் . எதுக்குடா தாங்க்ஸ் எல்லாம் சொல்லுற. நீ மட்டும் சப்போர்ட் பண்ணாம போயிருந்தா இந்நேரம் நான் என்னவோ ஆயிருப்பேன் என்றான். டேய் உன்னை எனக்கு பிடிக்கும்டா உனக்காக
எப்பவும் சப்போர்ட் பண்ணிக்கிட்டுதான் இருப்பேன் என்றாள். ம் எல்லாம் வெறும் பேச்சுதான் என்றான் ராகவ். சரி அந்த கிருஷ்ணன் பொம்மை என்ன பண்ணின? அதை என் பெடரூம் ல வெச்சி இருக்கேன். டேய் அது சாமி சிலை டா... இருக்கட்டும் என் கூடவே இருக்கட்டும் என்றான். சரியான பிடிவாதக்காரன்டா நீ என்றும் சொன்னாள். இன்னும் ஒரு வாரமே விடுமுறை இருந்தது. நாளைக்கு சுகன்யாவை பார்க்க போறேன் நீயும் வரியா? கண்டிப்பா வரேன் .
சுகன்யாவிடம் போனில் பேசி இருந்தாள் ரஷ்மி. எக்காரணம் கொண்டும் ராகவுக்கு அவள் விட்டுக்கொடுத்தது தெரியக்கூடாது என சொல்லி இருந்தாள். சுகன்யா சற்றே சோர்வாக இருந்தாள். ஹாய் சுகன்யா இப்போ எப்படி இருக்குற என்றான் ராகவ். நான் நல்லாத்தான் இருக்கிறேன் . உங்களை எல்லாம் மிஸ் பண்ணுகிறேன் என்றாள். மியூசிக் வீடியோ பார்த்தியா ம் பார்த்தேன் பார்த்தேன் நல்லா வந்திருக்குது. ஜோ கலக்கி இருந்தான் அதோடு நீயும் என்றாள் சுகன்யா. இருங்க காப்பி போட்டு எடுத்து வரேன் என உள்ளே போனாள். ரொம்பவும் எளிமையாக இருந்தது வீடு. ரஷ்மி இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன அப்படி பார்க்குற என்றான். தென்றல் குடுத்து வைத்தவள் என்றாள். நீ ரொம்ப மோசம் என்றான். மனதுக்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுகிறாய் என்றான். என்ன சண்டை அங்கே என்று சுகன்யா குரல் குடுத்தாள் . அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மாதான் பேசிக்கொண்டிருந்தோம் என்றாள் ரஷ்மி. சுகன்யாவும் ரஷ்மியும் ஏதோ அடுத்த லெவல் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சுகன்யாவை அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக சேர்த்து கொள்வதாக ரஷ்மி சொன்னாள். மூவரும் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுடைய instagram பேஜில் upload செய்தனர். ரஷ்மியும் ராகவும் விடை பெற்றுக்கொண்டனர்.
சுகன்யா ரொம்ப நல்ல டைப் என்றான் ராகவ். ரஷ்மி எதுவும் சொல்லவில்லை. ரஷ்மியை வீட்டில் விட்டான். மியூசிக் மாஸ்டரை பார்த்து சில நாட்கள் ஆகியிருந்தது. அவரை போய் பார்த்தான். எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. நீ இவ்ளோ ஷார்ட் பீரியட் ல நல்லா பெர்ஃபார்மன்ஸ் பண்ணுவே என்று எதிர்பார்க்கவில்லை என்றார். எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் என்றான்.மறுபடி எப்போ வருகிறாய் கிளாசுக்கு என்றார். நாளைக்கே வருகிறேன் என்றான். நல்லது நீயும் ரஷ்மி போல சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்றார். தாங்க்ஸ் மாஸ்டர். கனவு போல இருந்தது ராகவுக்கு போன வாரம் இதை நினைத்து பார்த்திருக்க முடியாது . அவன் மனம் நிம்மதியால் நிறைந்து இருந்தது. சௌமியாவிடம் இருந்து ஃபோன் வந்தது. நாளைக்கு உன்னையும் என்னையும் sponser வர சொல்லி இருக்கிறார் அவருடைய வீட்டுக்கு. அவருடைய மகளுக்கு உன்னுடைய மியூசிக் ரொம்பவும் பிடித்து விட்டதாம் அவளும் உன்னை பார்க்க ஆவலாய் இருக்கிறாளாம் என்றாள். சரி மேம் நாம் போவோம் என்றான். மறுநாள் காலை 11 மணிக்கெல்லாம் தயாராகி விட்டான். மேம் தன்னுடைய காரில் போய் விடலாம் என்று சொல்லி இருந்தாள்.
sponser இவனை வரவேற்றார். அவருடைய மகளை அறிமுகம் செய்து வைத்தார். சக்கர நாற்காலியில் வந்திருந்த மகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான். பிறகு சுதாரித்து கொண்டு உங்களுக்கு என் பாட்டு பிடித்திருந்ததா என்றான். ரொம்ப என்றாள் சுருக்கமாக. வாங்க உள்ளே போகலாம் என்றார் . இவள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். பேர் பிரதீபா . அதெல்லாம் நானே சொல்வேன் என்றாள் பிரதீபா . சௌமியா சிறிது நேரம் அவள் பற்றி விசாரித்து கொண்டிருந்தாள். சரி வாங்க லஞ்ச் சாப்பிடலாம் என சொன்னார். இவளுக்கு அம்மா இல்லை. எல்லாம் ஹோட்டல் ஆர்டர் பண்ணினது தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளுங்கள் என்றார்.நீ அவசியம் எங்கள் காலேஜ் வர வேண்டும் பிரதீபா என்றான். நிச்சயம் உங்கள் நிகழ்ச்சி பார்க்க வருவேன் என்றாள் . அவர் சற்றே கலங்கிய குரலில் அவளுக்கு மியூசிக் என்றால் அவ்வளவு இஷ்டம். ரஷ்மி அக்காவை அடுத்த முறை வரும்போது அழைத்து வாருங்கள் என்றாள். நிச்சயமா என்றான். அவள் ஒரு சிறிய band ஒன்றை இவனுக்கு அணிவித்தாள் . இதை எப்போதுமே என் நினைவாக நீங்கள் அணிந்திருக்க வேண்டும் என்றாள். ரொம்ப நன்றி என்றான்.
சௌமியா ஆண்டவன் எப்படியெல்லாம் சோதிக்கிறான் பார்த்தாயா ராகவ் என்றாள். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் ரொம்ப நல்ல மாதிரியாய் இருக்கிரார்,அவருக்கு ஆண்டவன் இப்படி ஒரு சோதனையை தந்திருக்கிறான் என்றான். sponser செய்பவரின் பெயர் கிருஷ்ணன் என அறிந்தான்.பிரதீபாவை அடுத்த முறை பார்க்கும் போது ரஷ்மியையும் கூட்டி போக வேண்டும் என நினைத்தான். தென்றல் கிட்ட இருந்து ஃபோன் வந்தது. என்ன எங்கிருக்கிறாய். நான் இங்கே கிருஷ்ணன் சார் வீட்டில் இருந்து இப்போது தான் கிளம்புகிறேன் என்றான். நானும் ஜோவும் மூவி போகிறோம் நீயும் வருகிறாயா என்றாள். இல்லை இப்போதே நேரம் ஆகிவிட்டது இன்னொருமுறை வருகிறேன் என்றான். சரி நான் போய்விட்டு வருகிறேன் என்றாள். யாரு போனில் என்றாள் சௌமியா. தென்றல் தான். பாவம் உன்னையே நேசிக்கிறாள் எப்பவுமே என்று சொன்னாள். ம் அதனால்தான் அவளை இன்னும் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. சௌமியா இவனை வீட்டில் விட்டாள். தாங்க்ஸ் மேம் இன்றைய நாள் அருமையா இருந்தது என்றான். எனக்கும்தான் என்றாள்.
நாளை விடுமுறை முடிந்து காலேஜ் திறக்க இருந்தது. சுகன்யா இப்போது உடல் நலம் தேறி விட்டதாகவும் காலேஜ் வருவதாய் சொல்லி இருந்ததாகவும் ஜோ சொன்னான். ரஷ்மி ஃபோன் செய்திருந்தாள். இவன் கூட பைக்கில் வருவதாக சொல்லியிருந்தாள் . எப்போதும் காலேஜ் பஸ் மூலமாக செல்பவள் இன்றென்ன நினைத்தாளோ தெரியவில்லை இவனுக்கு ஃபோன் பண்ணி காலையிலேயே சொல்லிவிட்டாள். இவன் அவள் வீட்டுக்கு போய் பிக்அப் செய்து கொண்டான். அவள் சாரி கட்டி இருந்தாள். இவன் அசந்து போய்விட்டான். என்ன அழகுடா என்று வாய் விட்டு சொல்லிவிட்டான். என்னடா கிண்டல் பண்ணுறியா என்றாள். அவள் இப்போதெல்லாம் இவனை வாடா போடா என்றுதான் அழைக்கிறாள். இவன் சுமாராக டிரஸ் பண்ணியிருந்தான். இவனுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டாள் . ரஷ்மியிடம் பிரதீபா பற்றி சொல்லி இருந்தான். அவளும் ஒரு நாள் சேர்ந்து போய் பார்ப்போம் என்று சொன்னாள்.அவளுக்கு எடுத்த போட்டோவை whatsapp செய்தான், அவள் உடனே மகிழ்ச்சி தெரிவித்து ரிப்ளை அனுப்பியிருந்தாள். காலேஜ் போய் இறங்கியதும் தான் தெரிந்தது தென்றல்,சுகன்யா இருவரும் சாரி உடுத்தி வந்திருந்தனர். தென்றல் ராகவ் நீ என்னுடனும் புகைப்படம் எடுத்துக்கொள் என்றாள் . அவள் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.
அருண், ஜோ இருவரையும் சந்தித்து பேசினான். சுகன்யாவுக்கென பிரத்யேக இசை வகுப்புகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதை ரஷ்மியும், ராகவும் சேர்ந்து நடத்துவார்கள் எனவும் சொன்னான் அருண். ஜோ மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அன்று மாலையே ஆரம்பிக்க சொல்லிவிட்டான் அருண். அவன் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தான். சுகன்யாவும் எப்படியாவது தான் மியூசிக் பாண்டில் இடம் பெற முடிவு எடுத்திருந்தாள். சாயங்காலம் காலேஜ் முடிந்ததும் ரஷ்மி,சுகன்யா ராகவ் மூவரும் ரிகர்சல் நடக்கும் இடத்துக்கு சென்றனர். எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினர். சுகன்யா பாட ஆரம்பித்தாள். அவளுடைய குரல் ஒத்துழைத்தாலும் மனம் ஒத்துழைக்கவில்லை. சரி நான் போய் கேண்டீன் சென்று ஏதாவது வாங்கி வருகிறேன் என்றான் ராகவ். இருவருக்கும் காப்பி வாங்கி கொண்டு வந்திருந்தான். இப்போது சற்று தெம்பு வந்தவளாக இருந்தாள் சுகன்யா. நிதானமாக பாடு சுகன்யா நாங்கள் உனக்கு துணையாக இருக்கிறோம் என்றாள் ரஷ்மி. ஒரு வழியாக 8 மணிக்கெல்லாம் முடிவடைந்தது ரிகர்சல். இவன் ரஷ்மியை அழைத்து கொண்டு கிளம்பினான். சுகன்யா அவளுடைய வண்டியில் கிளம்பிவிட்டாள். நீ என்ன நினைக்கிறாய் ராகவ் சுகன்யா பற்றி . அவள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்றான் ராகவ். ம் அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்றாள்.
அடுத்த வாரம் ரஷ்மி யின் பர்த்டே வருகிறது. அருண் இந்த முறை ப்ரபோஸ் செய்ய போவதாக ஜோவிடம் சொன்னான். இதெல்லாம் நடக்கிற காரியமா ? அவள் எப்பவும் போல நீதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று சொல்லுவாள் நீயும் அதை கேட்டுக்கொண்டு வர வேண்டியது தான் என்றான். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றான் அருண். நான் எப்படியாவது அவள் சம்மதத்தை பெறுவேன் என்றான், ராகவ் அவளுக்காக தென்றலுடன் சேர்ந்து கிப்ட் வாங்க அலைந்து கொண்டிருந்தான். தென்றலும் ராகவ் மனம் கோணாமல் அவன் பின்னே சுற்றிக்கொண்டிருந்தாள். சௌமியாவும், குமாரும் கூட சேர்ந்து பர்த்டே கிப்ட் வாங்க மெனக்கெட்டு கொண்டிருந்தனர். பிரதீபா கூட அவள் வீட்டுக்கு வர சொல்லி இருந்தாள். ரஷ்மியும்,ராகவும் பிரதீபா வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தனர்.