Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 8

அருண் எதிர்பார்த்திருந்தது போல ராகவ் கொஞ்சம் போல வித்தியாசத்தில் பெயில் ஆகி விட்டிருந்தான் . தென்றலும், ரஷ்மியும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராகவை சமாதானப்படுத்தினர். அருண் உள்ளுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் நிரம்பியவனாக அடுத்த வருடம் நாம் மீண்டும் முயற்சிப்போம் என்றான். சௌமியாவும், sponser செய்பவரும் அதையே கூறினார்கள். ராகவ் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். அவனுடைய முகம் கறுத்து போய் இருந்தது. இனி எப்படி ரஷ்மியின் முகத்தில் விழிப்பது என்பதே அவனுடைய கவலை ஆக இருந்தது .
எக்ஸாம்ஸ் முடிந்து கல்லூரி 15 நாட்கள் விடுமுறை விட்டு இருந்தனர். யாருடைய ஃபோன் காலையும் அட்டென்ட் செய்யாமல் இருந்தான். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று தன் பாட்டியுடன் தங்க முடிவெடுத்தான் ராகவ். ரஷ்மி சௌமியா அவனை சந்திக்க சொன்னதாக மெசேஜ் அனுப்பியிருந்தாள் . சௌமியா மேம் அவனை எதுவும் கேட்கவில்லை நாம வேணா மியூசிக் மாஸ்டர் மாத்தி பார்ப்போமா என்றாள். அதெல்லாம் வேண்டாம் நான் மறுபடி முயற்சி செய்கிறேன் நிச்சயம் அடுத்த வருடம் இடம் பிடிப்பேன் என்றான். தட்ஸ் குட் என்றாள். நீ இப்படி போனை எடுக்காமல் இருப்பது நல்லாயில்லை இப்போது என்ன கெட்டு விட்டது ஏன் பிடிவாதமாய் இருக்கிறாய் ? அதெல்லாம் ஒண்ணுமில்லை எனக்கொரு பிரேக் தேவைப்படுகிறது அவ்வளவுதான் என்றான்.


ரஷ்மியும், தென்றலும் இவனை வழி அனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தனர். தென்றல் என்னை தப்பாய் நினைத்துக்கொள்ளாதே நான் உன் மனதில் ஆசை வளர்த்திருந்தால் என்னை மன்னித்து விடு என்றான். அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. நான் எப்பவும் உனக்காக காத்திருக்கிறேன் என்றாள் தென்றல். ரஷ்மி ஒரு சிறிய புளுடூத் மியூசிக் செட் பரிசளித்தாள் , எதுக்காக இதெல்லாம் இப்போ. இப்போதான் நீ தைரியமா இருக்கணும் என்றாள். நானும் வேண்டுமானால் உன் கூட வரவா என்றாள் ரஷ்மி. அதை கேட்டு ஆச்சர்யப்பட்டான் . அவள்தான் எவ்வளவு துடிப்பாக இருக்கிறாள். அவளை ஏமாற்றி விட்டோமே என வருந்தினான். வேண்டாம் ரஷ்மி நீ நல்லபடியாக நம்முடைய மியூசிக் பாண்ட் அரங்கேற்றம் செய்ய வேண்டும். அதுதான் எல்லோருடைய ஆசையும் என்றான். ரஷ்மி பிரியாவிடை கொடுத்தாள். அவனுடைய மியூசிக் மாஸ்டர் அவனிடம் ஏற்கனவே பேசி இருந்தார். அவர் நாம் மறுபடி முயற்சிப்போம் என்று சொன்னார். ஜோவும் அருணும் அதிகம் ராகவிடம் பேசவில்லை. அருண் நான்தான் சொன்னேனே யார் என் பேச்சைக்கேட்டீர்கள் இப்போது டைம் வேஸ்ட் என்றான் ஜோவிடம். ஜோ நீ இப்படி ரஷ்மி முன்னால் பேசிவிடாதே என்றான். அவளும் வருத்தத்தில் இருக்கிறாள் என்றான். ம் புரிகிறது என்றான் அருண்,

ராகவ் இல்லாத நாட்களை கடக்க போகிறோம் என ரஷ்மிக்கு கலக்கமாக இருந்தது . வெறும் 15 நாட்கள் தானே என்று நினைத்தாள் . ஆனால் அவள் மியூசிக் ரிகர்சல் போகும் போதெல்லாம் அவன் நினைவாகவே இருந்தது. தென்றல் மியூசிக் பாண்டில் இல்லாவிட்டாலும் சில வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தாள். அவளும் ரஷ்மியும் சேர்ந்தே சுற்றி வந்தனர். ராகவ் பாட்டி வீட்டுக்கு போனான். அங்கு போய்விட்டானே தவிர நினைவெல்லாம் ரஷ்மி மீதே இருந்தது. அவள் கொடுத்த புளுடூத் ஹெட் செட்டில் பாடல்களை ஏற்றி வைத்திருந்தாள் . அவளை ஏமாற்றக்கூடாது என்றெண்ணினான். ஜோ ஃபோன் பண்ணியிருந்தான். என்ன மச்சான் திடீர்னு ஊருக்கு போயிட்ட இங்க ரஷ்மி உன் நினைப்பாவே இருக்கா என்றான். என்னடா பண்ணுறது ஒரு சின்ன பிரேக் தானே எல்லாம் சரி ஆயிடும் அவளை நல்லா பார்த்துக்கங்கடா நான் அவகிட்ட மன்னிப்பு கேட்டேன் அப்படின்னு சொல்லுடா . சொல்லுறேன்டா. அருண் எந்நேரமும் இசையில் மூழ்கி கிடந்தான்.சுகன்யா இப்போது ஓரளவுக்கு தேறிவிட்ட படியால் மியூசிக் பாண்ட் நல்லபடியாக பிராக்டிஸ் செய்ய தொடங்கியது. அருண்,சுகன்யா, ரஷ்மி, ஜோ, தென்றல் ஆகியோர் எப்படியோ அந்த இசைக்குழுவை முன்னெடுத்து சென்றனர். ரஷ்மியிடம் பேச வேண்டும் போல மனம் துடித்தது ஆனால் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.


ரஷ்மி ராகவ் இல்லாத விடுமுறை நாட்களை வேதனையுடனே அணுகினாள் . அருண்தான் அவளுக்கு ஆறுதல் சொன்னான். ரஷ்மி நாம ஒண்ணும் வேண்டுமென்றே அவனை கழட்டி விடலையே அவனுக்கு இன்னொரு வாய்ப்பு வேணும்னா நான் அரேஞ்ச் பண்ணுறேன் . நீ இப்படி எந்நேரமும் அவனை நினைத்து கவலைப்படாதே என்றான். நான் அதற்காக கவலைப்படவில்லை. இந்த இடைவெளி அவன் மனதையும் பாதிக்கும் அதற்காகத்தான் வருத்தப்படுகிறேன் என்றாள். நாம வேணா சர்ப்ரைஸ் ஆக போய் அவனை ஒரு நாள் பார்த்து விட்டு வருவோமா என்றான். எப்படியாவது அவளை அந்த தனிமைத்துயரில் இருந்து விடுபடச்செய்ய வேண்டும் என்பதும் அருண் விருப்பமாக இருந்தது. தென்றலுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடாதா என்றாள். அவளிடம் நான் பேசிக்கொள்கிறேன் உனக்கு என்ன என் கூட வர தயக்கமா என்றான். நாம் நிச்சயம் போவோம் என்றாள். வீட்டில் எப்படியோ அருண் உடன் போவதற்கு பர்மிஷன் வாங்கி விட்டாள் . தென்றலை எப்படியோ அருண் convince செய்தான். முதன்முதலாக ஒரு பயணம் அதுவும் ரஷ்மியோடு டூ வீலரில் . மகிழ்ச்சியில் மிதந்தான் அருண். என்ஜாய் பண்ணு மச்சான் என்றான் ஜோ.

ராகவ் ஏதேதோ செய்து பொழுதை ஓட்டினான். ரஷ்மியின் வருகையை அவன் எதிர்பார்க்கவுமில்லை. அவளை நினைக்காமலுமில்லை. அருண் ரஷ்மியை இம்ப்ரஸ் செய்ய இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தான். அருண் நன்கு டிரஸ் செய்து கொண்டான். அவனுடைய வண்டி அவனுடைய காதலை சுமக்க தயாராய் இருந்தது. அருண் எப்பவுமே நினைத்தது போல நடக்காவிட்டாலும் அதற்காக வருத்தப்படுபவன் இல்லை. தொடர்ந்து முயற்சி செய்பவன் அதனால் இந்த ரிஸ்க் எடுத்தான். என்ன ரஷ்மி ரெடியா என ஃபோன் செய்தான். அவளுக்கு தயக்கங்கள் இருந்த போதும் ராகவ் என்று வரும்போது எல்லாம் பறந்து விட்டது. ஒருமுறை அவனுக்கு ஃபோன் செய்வோமா என்றாள் ரஷ்மி அதெல்லாம் வேண்டாம் அவன் அப்படியே இருக்கட்டும் அவனுக்கு தேவையில்லாமல் பிரஷர் குடுக்க வேண்டாம் என்றான் . ரஷ்மி வண்டியில் ஏறிகொண்டாள். இந்த பயணம் சக்ஸஸ் ஆக காலையிலேயே கோவிலுக்கு போய் வேண்டிக்கொண்டிருந்தான் அருண். தென்றலுக்கு இருப்பு கொள்ளவில்லை. இப்போது ரஷ்மி போய் வரட்டும் அடுத்து உன்னை அழைத்து போகிறேன் என அருண் வாக்கு கொடுத்திருந்தான். அதை நம்பியே தென்றல் அமைதியாய் இருக்க முயற்சி செய்தாள் . 200 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருந்தது ராகவின் பாட்டி வீடு, ரஷ்மி அவனுக்கென சில பழங்களை வாங்கி இருந்தாள். அவள் மனம் எப்படா அவனை பார்ப்போம் என்றும் எதுக்கு என்னை தவிக்கவிட்டு போனாய் எனவும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தது.


மதியம் 1 மணிக்கெல்லாம் ராகவ் வீட்டுக்கு போய்விடலாம் என்று சொன்னான். அருண் ஏற்கனவே ராகவுடன் போய் வந்திருக்கிறான். என்னவோ அருண் மேல் இருக்கும் நம்பிக்கையில் கிளம்பி விட்டாள். ராகவ் வீடருகே போனதும் இப்போது ஃபோன் செய் என்று சொன்னாள். ஸ்பீக்கரில் போடு என்றாள். ராகவ் ஃபோன் எடுத்தான் ரஷ்மி எப்படி இருக்கிறாள் என்றான் எடுத்தவுடன் . அருண் மலைத்து போய்விட்டான். இவன் எப்படி சதா ரஷ்மி நினைவாகவே இருக்கிறான் என்றெண்ணி வியந்தான் . ரஷ்மி ஃபோன் வாங்கி பேசினாள். டேய் இன்னுமாடா ஊர்லே இருக்கே கிளம்பி வாடா என்றாள். நாளைக்கே வரேன் நீ சொன்னா இன்னைக்கே வரேன் என்றான். நீ ரொம்ப மோசம் என்றாள். திரும்பி பாருடா ஃபூல் என்றாள். அவளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டது ராகவுக்கு. எனக்காக இவ்வளவு தூரம் வந்தாயா என்றான். இதுக்கெல்லாமா அழுவ என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை வா அருண் ரொம்ப தாங்க்ஸ் அருண் என்றான். அவள் அவனை கட்டிக்கொண்டாள்.அருண் ஏதும் சொல்லாமல் வேடிக்கை பார்த்தான்.
அருகே இருந்த வயல்வெளி, போர் செட் எல்லாம் கூட்டிப்போனான். அவனுடைய பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தான். எப்போ வருகிறாய் திரும்ப என்பதே ரஷ்மியுடைய ஒரே கேள்வியாக இருந்தது. ம்ம் உன்னை பார்த்துவிட்ட பிறகு எனக்கொரு புதிய தெம்பு கிடைத்திருக்கிறது. சீக்கிரமே வருகிறேன் என்றான். தென்றலிடமும் போனில் பேசினான். தென்றலை அலைக்கழிக்க வேண்டாம் நான் வந்தவுடன் அவளை பார்க்கிறேன் என்று சொல் என்று அருண் மூலமாக சொல்லி அனுப்பினான். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.


ரஷ்மி கிளம்புகிறேன் என்றதும் அவள் கையை பிடித்துக்கொண்டான் ராகவ். நாளைக்கு நாமிருவரும் சேர்ந்தே போகலாமே என்றான். அருண் அதெல்லாம் முடியாது ரிகர்சல் இருக்கிறது நான் போயாகவேண்டும் என்றான். ரஷ்மி யோசித்தவள் நாளைக்கு மாலையே நாம் கிளம்பிவிடவேண்டும் என்றாள். இதை கேட்ட அருண் என்னை இவள் அப்பாவிடம் நன்றாக மாட்டி விட்டு விட்டாய் ராகவ் என்றான். அருண் புறப்பட்டான். தப்பாக நினைக்காதே அருண் என்று ரஷ்மியும், ராகவும் சொன்னர்கள். அருண் உள்ளுக்குள் குமைந்தாலும் இப்போதைக்கு அவளுடைய நம்பிக்கையை பெற்றதே போதும் என நினைத்தான். ரஷ்மி தங்கும் அறையை ஏற்பாடு செய்தான். முன்பே சொல்லியிருந்தால் சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பேன் என்றான். இப்போதும் என்ன நன்றாக தான் இருக்கிறது. நீ தங்குகிற இடத்தில் ஒரு ஓரத்தில் இடம் கிடைத்தாலும் போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றாள். என்ன என் ஹெட்செட் எப்படி இருக்கிறது என்றாள். அருமையாக இசைக்கிறது என்றான் ராகவ். நீ எப்படி இத்தனை நாள் என்னை விட்டு இருந்தாய் என்றான் . அதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை.நான் வேறு நீ வேறு என்று நான் நினைக்கவேயில்லை என்றாள் ரஷ்மி.