Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 9

இதெல்லாம் நல்லா பேசு ஆனா என்னை விரும்புறியா அப்படின்னு கேட்டா ஒண்ணும் சொல்லாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த சந்தோஷ சூழ்நிலையை மாற்ற விரும்பாமல் அவள் எண்ணம் போலவே நடந்து கொள்ள தீர்மானித்தான். ரஷ்மி வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள். செம திட்டு விழுந்ததாக சொன்னாள். உனக்காக இதையும் தாங்கிப்பேன் என்றாள். பழங்களை பாட்டியிடம் கொடுத்தாள். உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.தாங்க்ஸ் என்றான் ராகவ். கொஞ்ச நேரம் கேம்ஸ் விளையாடினார்கள். இங்கே அடிக்கடி கரண்ட் கட் ஆகும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க ரஷ்மி என்றார் பாட்டி. சரி பாட்டி. அவர்கள் கொஞ்ச நேரம் மியூசிக் பற்றி பேசினார்கள். இரவு என்ன சமைக்கட்டும் என்றாள் பாட்டி . வா ராகவ் நாமே போய் சமைக்க தேவையானவற்றை வாங்கி வருவோம் என்றாள் . சப்பாத்தி ஓகே வா என்றாள். ம் நானே பண்ணி தருகிறேன் என்றாள். எனக்கு பயமாயிருக்கு என்றான். சே சே நான் நல்லா பண்ணி தருகிறேன் என்றாள் ரஷ்மி. இருவரும் அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட் சென்றனர். அவள் முகத்தையே பார்த்திருந்தான். என் கனவுகளை சுமக்கும் முகம் எனக்காக வந்த தேவதை என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்தான். ஹேய் என்ன அதுக்குள்ள கனவா வா இதையெல்லாம் எடுத்து பில்லிங் செக்ஷன் கொண்டு போ என்றாள்.

சப்பாத்தி போட ஹெல்ப் பண்ணு ராகவ் என்றாள். அவள் அந்த அரை இருட்டிலும் ஜொலித்தாள். அவளை அப்படியே அணைத்து கொண்டு ஐ லவ் யு ரஷ்மி என்று காதில் சொல்ல வேண்டும் போல இருந்தது. அவள் சப்பாத்திக்கு மாவு பிசைய சொல்லி விட்டாள். இவன் அவனுக்கு ஹெல்ப் பண்ணின மாதிரி தெரியவில்லை. அவள்தான் இவனுக்கு ஹெல்ப் பண்ணினாள் . ஒரு வழியாக சமைத்து முடித்தாள். அவள் சமைக்கும் போது ஒரு பாட்டு பாடினாள். கேட்டுக்கொண்டே இருக்கலாம் . பாட்டி நேரத்தோடு உறங்க சென்று விட்டார். இவனும் அவளும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். மேலே மாடியில் இருந்த ரூமில் அவளுக்கென படுக்க இடம் ஒதுக்கியிருந்தான். இன்னைக்கு நான் தூங்க மாட்டேன் என்றான் . ஏன் என்னாச்சு என்னவோ என் மனம் விவரிக்க முடியாத சந்தோஷத்தில் இருக்கிறது என்றான். எனக்கும் அப்படித்தான் இருக்கிறது என்றாள். குட்நைட் ராகவ்.. குட்நைட் ரஷ்மி. விடிவது வரை பல சிந்தனைகளோடு இருந்தான் ராகவ். ரஷ்மி பாட்டு கேட்டவாறே தூங்கிப்போனாள். இரவு திடீரென மழை பெய்தது. ரஷ்மி விழித்து கொண்டாள். மணியை பார்த்தாள். 3 என காட்டியது. கீழே போய் ராகவை பார்க்கலாம் என நினைத்தாள். ராகவுக்கு ஃபோன் செய்தாள். என்ன பண்ணுற மழை பெய்யுது என்றாள். ம் மழை வாசனை எனக்கு பிடித்திருக்கு என்றான். அவள் மௌனமாக அவன் பேசுவதை கேட்டுகொண்டிருந்தாள். அன்றைய தின விடியல் ஒரு கவிதையாக மலர்ந்து கொண்டிருந்தது.

ரஷ்மியும் அவனும் அந்த ஊரில் இருந்த கோவிலுக்கு போனார்கள். ராகவ் தன் மனதில் உள்ளவற்றையெல்லாம் கொட்டி பிரார்த்தனை செய்தான். அவனுக்கு விபூதி பூசி விட்டாள் . என்ன லேசாக ஜுரம் போல இருக்கிறது என்றாள் . அதெல்லாம் ஒண்ணுமில்லை கிளைமேட் ஒத்துக்கொள்ளவில்லை போல என்றான். ம் நீ என்னோடு வா என்று அழைத்து போய் மாத்திரைகள் சிலவற்றை வாங்கி கொடுத்தாள். ஒண்ணும் இல்ல சின்ன விஷயத்துக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகனுமா என்றான். அவள் எதுவும் சொல்லவில்லை. மதியம் போல சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். மழை மறுபடி வரும் முன் நாம் ஊருக்கு போய் விடுவோம் பயப்படாதே என்றான் ராகவ். அவள் மனம் நிறைந்திருந்தது. வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான். இடையில் நிறுத்தி டீ குடித்தார்கள். எப்படி இருந்தது ட்ரிப் என அருண் ஃபோன் பண்ணினான். தாங்க்ஸ் அருண் நீ எனக்காக எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறாய் . இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்து விடுவோம் என்றாள். ரஷ்மி அப்பாவும் இடையிடையில் ஃபோன் பண்ணி கொண்டிருந்தார். அவனே எடுத்து பேசினான். ஈவினிங் 4 மணிக்கெல்லாம் ரஷ்மி வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டார்கள். தென்றல் அவனுக்காக அங்கு காத்திருந்தாள்.


தென்றல் அவனை அணைத்துக்கொண்டாள் . ஏன் எனக்கு ஒரு ஃபோன் பண்ணல என்றாள். அதுதான் வந்தே விட்டேனே என்றான். நாமளும் ஒரு ட்ரிப் போகணும் என்றாள் நிச்சயமாக என்றான். ரஷ்மி எதுவும் பேசாமல் உள்ளே வா ராகவ் என்றாள். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வேறு ஒரு ரஷ்மியாக தோன்றினாள் . அவள் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ரஷ்மியிடம் விடை பெற்றான். ரஷ்மி மாடியில் இருந்து அவன் தென்றல் கூட வண்டியில் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளால் அவ்வளவுதான் செய்ய முடியும் என்று தோன்றியது,தென்றலை வீட்டில் விட்டவன் பிறகு பார்க்கலாம் என விடை கொடுத்தான். அவனால் இனியும் தன்னை ஒளிக்க முடியாது என்று பட்டது. வீட்டுக்கு போய் குளித்தான். ரஷ்மி மணம் இன்னும் அவனிடத்தில் இருந்தது. அவளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன் மனம் துடித்தது. நாளையே அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கற்பனை எட்டி பறந்தது. அந்த தேவதை என்னை நெருங்கிவிட்டாள் என அவன் மனம் கும்மாளமிட்டது. சௌமியா ஃபோன் பண்ணி இருந்தாள். விஷயத்தை கேள்விப்பட்டேன் என்ன ஆச்சு வழக்கம் போல சொதப்பி விட்டாயா என்றாள். இல்லை ரஷ்மி அவளே அவளை ஏமாற்றி கொள்கிறாள் என்றான்.

அருண் போய் ரஷ்மியை பார்த்தான். அவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் என்று சொன்னாள். அவன் அதை அவனுடைய பெருந்தன்மை குணத்துக்கு கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொண்டான். ரஷ்மி அவனுக்கும் கோவில் விபூதி பூசி விட்டாள். அருண் மனம் லேசாக ஆனது. நாம் நெருங்கி விட்டோம் என அவன் மனமும் நினைக்கத் தொடங்கியது. அப்புறம் ரிகர்சல் எல்லாம் எப்படி போகிறது என்று விசாரித்தாள் . எல்லாம் நல்லபடியாக போகிறது. இன்னைக்கு நைட் 7 மணிக்கும் இருக்கிறது நீ அவசியம் வா என்று சொல்லிவிட்டு சென்றான்.
ராகவ் அருணுக்கு ஃபோன் செய்தான் . அருண் அதை அட்டென்ட் செய்யாமல் விட்டான்.இனி அவனுடன் என்ன பேச்சு எல்லாமே தனக்கு ரஷ்மிதான் என நினைத்தான் அருண். தென்றல் நைட் டின்னர் ராகவுடன் ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்று இருந்தாள். அவன் தென்றலின் மனம் கோணாதபடி நடந்து கொண்டான். அவள் விருப்பத்துக்கு மறுப்பேதும் சொல்லவில்லை. எல்லாவற்றையும் அவளுக்காக மாற்றிக்கொண்டான். ரஷ்மி மனம் மாறும் வரை தான் இப்படியே இருக்க வேண்டியதுதான் என நினைத்தான்.

இரவு டின்னர் முடிந்ததும் ரிகர்சல் நடக்கும் அருண் வீட்டுக்கு போகலாம் என ராகவ் சொன்னான். சரி நானும் வருவேன் என்றாள் தென்றல். அருண் வீடு மாடியில் தான் ரிகர்சல் நடைபெற்று கொண்டிருந்தது. இவன் போய் அவன் வீடு சேர்வதற்கும் ரிகர்சல் முடிந்து ரஷ்மி வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது. என்ன அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா ? என்றான் ராகவ். உனக்கென்ன இங்கு வேலை என்றான் ராகவ். ஓ சாரி நான் ரஷ்மியை பார்க்க வந்தேன் என்றான். அப்ப ஓகே என்றான் அருண் , ரஷ்மி இல்லை பக்கத்து வீட்டுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆக இருக்கும அதுதான் சீக்கிரமே முடித்து விட்டோம் என்றாள். ஜோவும் சுகன்யாவும் இவனை நலம் விசாரித்தார்கள் . ரஷ்மியை அவள் வீட்டில் விட போனான் அருண். அவள் ஏனோ டூ வீலர் எடுத்து வரவில்லை. தென்றல் நான் ஜோவுடன் போகிறேன் என்றாள், சரி ஜாக்கிரதை என்றான். அவன் தனியாக வீடு வந்து சேர்ந்தான். ரஷ்மியிடம் இருந்து கால் வந்தது. அருண் அப்படி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றாள். நான் அதைபற்றி கவலைப்படவில்லை. உன்னை பார்க்க எனக்கு ஒருத்தனும் தடை விதிக்க முடியாது என்றான்.

நாளைக்கு பிரீயா நீ என்றான் என்ன விஷயம் சௌமியா மேம் வீடு வரை போகலாமா என்றான். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நானே உனக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்றாள். சரி ஓகே . என்னவோ அருண் அப்படி பேசியது இவனை காயப்படுத்தி விட்டது. சீக்கிரமே மெம்பர் ஆகி காட்டுகிறேன் பார் என மனதுக்குள் சவால் விட்டு கொண்டான். ரஷ்மி ஒரு 10 மணி போல ஃபோன் செய்தாள். நான் ரெடி நீ ஒரு அரைமணி நேரத்தில் என்னை பிக்அப் செய்துகொள் என்றாள். இருவரும் சௌமியா வீட்டுக்கு நுழைந்த போது வாங்க இப்போதான் என் நினைப்பு வந்ததா என்று கேட்டாள். அப்படியெல்லாம் இல்லை நாங்க ஊருக்கு போயிருந்தோம் என்றான். அதுதான் எல்லோருக்கும் தெரியுமே என்றாள். இருங்க டீ போட்டு எடுத்துட்டு வரேன் என்றாள். ரஷ்மி அவள் கூடவே உள்ளே சென்றாள். என்னாச்சு இன்னும் நீ தவிப்பாதான் இருக்கியா ம் அது என் தலைஎழுத்து என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை. உன்னை அவன் மிஸ் பண்ண மாட்டான் என்றாள். டீ சுட சுட இருந்தது. அருமையாய் இருக்கிறது என்றான். குமார் சார் எப்படி இருக்கிறார் என்றான். அவர் கொஞ்சமும் மாறவில்லை. நான் முக்கியமான முடிவை எடுக்க வேண்டியதுதான் என சொன்னாள். ரஷ்மி அவளை ஆசுவாசபடுத்தினாள் . அவசரப்படவேண்டாம் மேம் . என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது அவர் என் கூட பேசுவதை நிறுத்தி விட்டார் என்று அழுதாள் . ரஷ்மி அவளை உள்ளே அழைத்து போனாள் . நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் நான் இப்போது வருகிறேன். வந்து உன்னை அழைத்துபோகிறேன் ரஷ்மி என்றான் ராகவ்,

என்ன பிரச்சனை என்று மேம் சொல்லவில்லை. குமார் சாரும் நல்லவர் தான் ஆனால் குடிபழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டதாக மேம் சொல்கிறார். ம் நாம் என்ன செய்ய முடியும் ?அதுதான் எனக்கும் புரியவில்லை என்றாள் ரஷ்மி.