Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 7

ஒரு நிமிடம்தான் அந்த அணைப்பு நீடித்திருக்கும்.ரஷ்மி சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டாள் . ஜோவும் தென்றலும் வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ஏன் லேட் என ராகவ் தென்றலை கேட்டான். அவள் பதிலேதும் சொல்லவில்லை. அன்று முழுவதும் ரஷ்மி நினைவாகவே இருந்தது ராகவுக்கு. ரஷ்மி தான் தடுமாறியது குறித்து சௌமியா மேமிடம் பேச விரும்பினாள் சௌமியா மேம் வீட்டுக்கு போனாள் . என்ன திடீர்னு வந்திருக்க என்ன விஷயம் ஏதாவது ஸ்வீட் நியூஸ் ஆ என்றாள் சௌமியா . ம் ஸ்வீட் நியூஸ் தான் ஆனா எனக்குத்தான் அதை எப்படி எடுத்துக்கிறது அப்படின்னு தெரியல. காலையில் நடந்ததை பற்றி சொன்னாள் . ஓ அப்படி போகிறதா கதை. வாழ்த்துக்கள் என்றாள் சௌமியா. நீங்க வேற மேம் எனக்கு நான் தடுமாறுவேன் அப்படின்னு தோனலை .. நீங்க என்ன நினைக்கறீங்க . உனக்கு அவனை பிடிச்சிருக்கு இல்ல உடனே அவன்கிட்ட சொல்லு. அது வந்து அவன் தென்றல் கூட லவ் பண்ணுறப்போ நான் எப்படி குறுக்க போக முடியும் என்றாள். நீ ஒண்ணும் பயப்படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும். தாங்க்ஸ் மேம் நீங்க ஒருத்தராவது என்னை புரிஞ்சிக்குறீங்க .. ரஷ்மி காதல் என்பதெல்லாம் ரொம்ப கஷ்டம் நீ எதுக்கும் தயாராய் இரு என்றாள் சௌமியா. ஓகே மேம்.

தென்றலுடனான breakup பற்றி சிந்தித்து பார்த்தான் ராகவ். அவள் ஏதாவது நினைத்து செய்து கொண்டால் அதற்கும் தான்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் நினைத்தான். ஜோவிடம் பேசி பார்த்தான். இப்போதைய சூழ்நிலையில் எதுவும் செய்யவேண்டாம். ரஷ்மி தன்னை முழுமையாக வெளிப்படுத்தட்டும் அப்புறம் சொல்லிக்கொள்ளலாம் என்றான் ஜோ. ரெண்டு பேர் வாழ்க்கையும் அப்புறம் வீணாக போகி விடும் என்றும் சொன்னான். தென்றல் அவள் வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தாள். என்ன விஷயம் தென்றல் என்றான். அப்பா உன்னை பார்க்கணும் அப்படின்னு சொன்னார் . நீ ஏதும் சொன்னாயா இல்லை இல்லை சும்மா நான் உன்னை பத்தியே பேசிகிட்டு இருக்கேன் அப்படின்னு உன்னை பார்க்கணும்னு சொன்னார். சரி நான் வரேன். ஈவினிங் 6 மணி போல போய் பார்த்தான். என்னப்பா என் பொண்ணு மனசுல நீதான் இருக்கே போல வெறும் ஃபிரண்ட்ஷிப் தானா இல்ல .. அதெல்லாம் ஒண்ணுமில்லை அங்கிள் ஃபிரண்ட்ஷிப் மட்டும்தான் . வேற ஏதாவது இருந்தா இப்போ ஒண்ணும் வேணாம். படிக்கிற வயசு இது என்று சொன்னார்.சரி அங்கிள் . தென்றல் அப்போது வெளியே போயிருந்தாள்.

அருண் மறுபுறம் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான். அவனுடைய மனதிலும் ரஷ்மி பற்றிய எண்ணங்கள் எழாமல் இல்லை. அவன் மனதிலும் காதல் தீ ஓயாமல் எரிந்து கொண்டிருந்தது. அதை வெளிப்படுத்த காலம் கனிய வேண்டும் என நினைத்தான். வீக்கெண்ட் ரஷ்மி ராகவ் வீட்டுக்கு போயிருந்தாள் .வா ரஷ்மி என்ன முடிவு பண்ணியிருக்கிறாய் எதை பற்றி அதெல்லாம் ஒண்ணுமில்லை அன்றைக்கு நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்றாள். சும்மா சொல்லாதே என்றான். உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன் என்றாள். அப்போ அன்னைக்கு நடந்ததை பத்தி என்ன நினைக்கிற சும்மா அதை பத்தியே கேக்காதே .மூவி போவோமா என்றான். வேண்டாம் நீ பழையபடி இல்லை. அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறாய் என்றாள். யாரு நானா ? நீயேதான் என்று சொல்லிவிட்டு வெட்கப்புன்னகை பூத்தாள் . நீ மாறிவிட்டாய் என்றான் ம் கொஞ்சமே கொஞ்சமாய் உனக்காக என்றாள். இரு ஜூஸ் எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனான். நானும் வருகிறேன் என்று பின்னாலேயே வந்தாள் . ஒரே வெயிலாக இருக்கிறது என்றாள். ம் இந்த குளிர்காலத்திலும் உனக்கு வெயிலடிக்கிறது என்னவோ சரியில்லை என்றவாறே ஜூசை குடுத்தான். அவள் புதிதாக நிறைய மாற்றங்களை கொண்டிருந்தாள் அது அவனை பரவசநிலைக்கு தள்ளியது . சரி நான் போகட்டுமா என்ன அவசரம் ஏதாவது மியூசிக் கேட்போமா என்றான். ம் நீ சொல்லும்போது நான் மாட்டேன் என்று சொல்வேனா மொபைல் போனை கொடுத்தாள் . அவள்தான் எவ்வளவு ரசனைக்காரி என்று அவளுடைய மியூசிக் கலெக்ஷன் சொல்லியது.

மியூசிக் கிளாஸ் அவ்வளவு சுலபமாக இல்லை. ரஷ்மியின் மியூசிக் மாஸ்டர் பொறுமையாக ஒவ்வொன்றாக சொல்லித்தந்தார். இவனுடைய மனதில் வைராக்கியம் இருந்தது. ரஷ்மியுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் ராகவுக்கு முக்கியம்.தினமும் என்ன கற்றுக்கொண்டான் என்பதை இரவு 10 மணிக்கு மேல் ரஷ்மியிடம் போனில் சொல்லி வந்தான் ராகவ். மியூசிக் பாண்ட்டில் உள்ள அனைவரும் தி ஈகிள்ஸ் லோகோ கொண்ட டீ ஷர்ட் அணிவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜோ அந்த வேலைகளில் ஈடுபட்டு இருந்தான். புதிய லோகோ டீ ஷர்ட் அனைவரும் அணிந்து செல்பி எடுத்துக்கொண்டனர். அருண் ரஷ்மியிடம் பேசினான். நீ முன்பு போல என்னுடன் பேசுவதில்லை அதனால் நிறைய continuity விட்டு போகிறது ரஷ்மி. அப்படியெல்லாம் இல்லை நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசு என்றாள். தாங்க்ஸ் ரஷ்மி என்றான். அருண் மனதில் எப்படியாவது ராகவை பாண்டில் இருந்து கழற்றி விட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதற்கான நேரம் பார்த்து கொண்டிருந்தான். கஷ்டப்பட்டு பொறுமையாக இருந்தான். அவனுடைய மியூசிக் சென்ஸ் முழுவதையும் மியூசிக் பாண்ட் நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காக பயன்படுத்தினான். ரஷ்மியை அடுத்த வாரம் வெளியே போகலாம் என கூப்பிட்டு இருந்தான். அவளும் சரி என்று சொல்லி இருந்தாள்.

ரஷ்மியும் அருணும் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வருவதால் ரொம்ப உற்சாகமாக இருந்தான் அருண்.ரொம்ப சந்தோஷமா இருக்கு ரஷ்மி நீ வருவே அப்படின்னு எதிர்பார்க்கலே எனக்காக இவ்வளவு தூரம் வந்ததுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லை நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதோட நம்ம பாண்ட் வளர எப்போதும் கஷ்டப்படுற . எப்படி உன்னை விட்டுக்கொடுப்பேன் என்றாள். உனக்கும் ராகவுக்கும் இடையில் என்ன என்கிட்ட வெளிப்படையா சொல்லேன் என்றான். அதெல்லாம் வெறும் infactuation வேற ஒண்ணுமில்லை என்றாள்.வெளியில் ஹோட்டல் சென்று சாப்பிட்டார்கள். பீச் போலாம் என முடிவெடுத்தார்கள்.ராகவிடம் இருந்து ஃபோன் வந்தது ரஷ்மிக்கு. என்ன யார் ஃபோன் ல என்றான் அருண். ராகவ் தான் நான் அருண் கூடத்தான் இருக்கேன் பீச் போறோம் என்றாள். சரி ஓகே என்று போனை வைத்து விட்டாள். என்னவாம் அவனுக்கு சும்மாதான் நீ டென்ஷன் ஆகாதே என்றாள். அருண் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தான். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ரஷ்மி. என்ன அருண். நாம ராகவுக்கு டெஸ்ட் வைப்போம் அதுல அவன் தேறினா பாண்ட் ல சேர்த்துக்குவோம் இல்லைனா அவன் வேண்டாம் என்றான். இதை கேட்ட ரஷ்மி நிச்சயம் அவன் பாஸ் ஆவான் அதற்கு நான் பொறுப்பு என்றாள். நமக்கு மியூசிக் குவாலிடிதான் முக்கியம் என்றான். அருண் நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே உனக்கு அவன் கூட செட் ஆகலையா அப்படியெல்லாம் இல்லை என்னவோ நாம வீணா அவனுக்காக வெயிட் பண்ணுற மாதிரி தோணுது என்றான். ரஷ்மி எதுவும் பேசவில்லை.


சௌமியா எல்லாரையும் கூப்பிட்டு இனி கொஞ்சம் சீரியஸ் ஆக மியூசிக் முன்னெடுப்புகளை செய்யவேண்டும் என சொன்னாள். வருகிற கல்லூரி முதலாம் ஆண்டு விழாவிற்கு நம்முடைய பாண்ட் அரங்கேற்றம் செய்ய போகிறது என்றாள். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அடுத்த வாரம் ராகவுக்கு டெஸ்ட் வைப்பதாய் அருண் சொன்னான். ராகவ் பதட்டத்துடன் இருந்தான். ஜோ அவனுக்கு சப்போர்ட் ஆக இருந்தான். மியூசிக் குரு ஆலோசனைப்படி சில பிராக்டிஸ்களை தொடர்ந்து செய்து வந்தான் ராகவ். ரஷ்மி அதை கவனமாக கேட்டு வந்தாள். இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என தோன்றியது, அதை கேட்ட ராகவ் வேண்டாம் ரஷ்மி நான் இல்லாமலே இந்த மியூசிக் பாண்ட் இயங்கட்டும் என்றான். அதெல்லாம் முடியாது நீ கொஞ்சம் அவசரப்படுகிறாய். நிதானமாகவே நீ முயற்சி செய் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றாள்.அடுத்த வாரம் சனிக்கிழமை நாம காலேஜ்ல ரிகர்சல் வைக்கலாம் நான் சௌமியா மேம் கிட்ட சொல்லிக்கிறேன். நானும் நீயும் மட்டும் என்றாள். நீ ப்ரிப்பேர் ஆகு என்றாள். சரி ரஷ்மி. அருண் எப்படியும் இந்த டெஸ்டில் ராகவ் பெயில் ஆகிவிடுவான் அதன் பிறகு அவன் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டான் என்று கருதினான். ரஷ்மியும் ராகவும் சனிக்கிழமை கோவிலுக்கு போய்விட்டு காலேஜ் சென்றனர். மழை வரும் போல இருந்தது. ராகவ் டீ வாங்கி கொடுத்தான். அவள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னான் ராகவ். அவன் மனம்
ரஷ்மிக்காக துடித்துக்கொண்டிருந்தது.


லிசன் எல்லோரும் ரெடி தானே . என்ன முடிவோ அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான் அருண்.அருண் ராகவுக்கு டெஸ்ட் வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தான். சுகன்யா, தென்றல், ஜோ, ரஷ்மி எல்லோரும் ஆவலாய் காத்திருந்தார்கள். அப்போது சௌமியா மேமும் வந்து விட்டாள். டெஸ்ட் துவங்கியது . மெதுவாக அடிப்படைகளில் இருந்து துவங்கிய அருண் போக போக கடினமான டாஸ்க்களை கொடுத்தான். ராகவ் தடுமாறினாலும் அவற்றை நிறைவு செய்தான். என்ன மேம் டெஸ்ட் continue பன்னவா போதுமா என்றான் . நீ கம்ப்ளீட் பண்ணு அவன் புல்லா தயார் பண்ணிட்டுத்தான் வந்திருக்கான் என்றாள் சௌமியா. அருண் தன்னுடைய டெஸ்ட் முடிவு பெற்றதாக அறிவித்தான். முடிவுகளை sponser , சௌமியா மேம் பேசி முடிவு செய்வார்கள் என அறிவித்தான், மேம் அந்த டெஸ்ட் வீடியோவை sponser செய்பவருக்கு அனுப்பி வைத்தாள். இன்னும் அரைமணியில் முடிவு சொல்வதாய் அவர் சொல்லி இருந்தார். எல்லோரும் ஆவலாய் காத்திருந்தார்கள். ரஷ்மி கண்களை மூடி பிரார்த்தனை செய்தவாறே இருந்தாள். ரிசல்ட் மெசேஜ் வந்து விட்டது