ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை. ரஷ்மியின் மனதிலும்,ராகவின் மனதிலும் குழப்பமான சூழ்நிலையே இருந்தது. அன்று மாலை ரஷ்மியின் மியூசிக் பாண்ட் ஒத்திகை நிகழ்ச்சியை காண போயிருந்தான் ராகவ் கூடவே ஜோவும் தென்றலும் வந்திருந்தார்கள். ஒத்திகை என்றாலும் சிறப்பாக இருந்தது. அருண் அருமையாய் மியூசிக் compose செய்து இருந்தான். ரஷ்மி பாடிய விதமும் அருமையாய் இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னான். தென்றலும் பாராட்டினாள் .ஏன் ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை என்றான். தென்றல் இப்போதெல்லாம் என்னை எங்கும் கூப்பிடுவதில்லை என்றாள் ரஷ்மி. நீ அதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றான். நாளைக்கு சௌமியா மேடம் வருவார்கள் மதியம் 2 மணிக்கு ட்ரீட் கொடுப்பதாக சொல்லி இருக்கிறாய் நினைவு இருக்கிறது அல்லவா என்றாள். நன்றாக நினைவு இருக்கிறது. நான் எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டேன். மதியம் ஒரு மணிக்கெல்லாம் நான் அங்கு இருப்பேன் . நீ மேடத்தை 12 30 போல ஃபோன் செய்துவிட்டு பிக்அப் செய்து கொள் என்றாள். ஓகே ரஷ்மி. மற்ற எல்லோருக்கும் சொல்லிவிட்டேன். சரி.
சௌமியா மேடத்துக்கு ஃபோன் செய்தான். நான் ரெடி என்றாள். அவள் வீட்டுக்கு போன போது குமார் இருந்தார். என்னப்பா எனக்கெல்லாம் ட்ரீட் இல்லையா அப்படியெல்லாம் நினைக்காதீர்கள் சார் நீங்களும் வாருங்கள் என்றான். சும்மா கேட்டேன் நீங்கள் எல்லாம் சௌமியா மேல் காட்டும் அன்பு எனக்கு பொறாமையாக இருக்கிறது என்றார். சௌமியா எதுவும் சொல்லவில்லை. ராகவுடைய வண்டியில் எறிக்கொண்டாள் . பார்த்து மெதுவாகவே போ என்றாள். சரி மேம். தென்றல், ஜோ ,சுகன்யா எல்லோரும் 1 மணி போல வந்தார்கள். எல்லா ஏற்பாட்டையும் ரஷ்மி நேர்த்தியாக செய்திருந்தாள். தென்றலை ராகவுக்கு அருகில் அமர செய்தாள். சௌமியா, தென்றல், ராகவ் ஆகியோர் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர். ரஷ்மி, அருண், ஜோ,சுகன்யா ஆகியோர் மற்றொரு டேபிளில் அமர்ந்திருந்தனர். மெனு card எடுத்த சௌமியா மேடம் ரஷ்மியிடமே அந்த பொறுப்பை கொடுத்தார். தென்றல் இவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள். அவளுடைய விருப்பத்தை கேட்டு ஆர்டர் செய்தான் ராகவ்.
எல்லாம் சிறப்பாக முடிந்தது. ரொம்ப தாங்க்ஸ் ராகவ் என்றாள் சௌமியா. நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு நான்தான் தாங்க்ஸ் சொல்ல வேண்டும் என்றான். ஜோ நான் மேமை வீட்டில் விட்டு விடுகிறேன் என்றான். அருணும் சுகன்யாவுடன் கிளம்பி விட்டான். ரஷ்மி கிளம்புகிறேன் என்றாள் . தென்றல் என்ன அதுக்குள்ள போறே என்றாள். மூவரும் பக்கத்தில் உள்ள ஷாப்பிங் மால் போகலாம் என முடிவெடுத்தனர்.
தென்றல் எதுவும் வாங்கவில்லை. ரஷ்மி தனக்கென ஒரு டிரெஸ் எடுத்தாள் . தென்றலுக்கென ஒரு டிரஸ் எடுத்தான் ராகவ்.மூவி போலாமா என்றாள் தென்றல். நான் வரவில்லை நீங்க ரெண்டு பேரும் போங்க என்றாள் ரஷ்மி. சும்மா வா ரஷ்மி என்று அவள் கையை பிடித்து இழுத்தாள் தென்றல். முன்பு ரஷ்மியும் அவனும் பார்த்த சினிமா நினைவுக்கு வந்தது ராகவுக்கு. படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே ராகவ் கையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள் தென்றல். படம் எப்படா முடியும் என்று இருந்தான் ராகவ். ரஷ்மி படம் எப்படி இருந்தது என்றான் . பரவாயில்லை என்றாள். அவள் முகம் வாடி இருந்தது. தென்றல் நான் ஆட்டோ பிடித்து போய்க்கொள்கிறேன் நீ ரஷ்மியை வீட்டில் விட்டு விடு என்றாள். ரஷ்மி அதெல்லாம் வேண்டாம் என்றாள். பரவாயில்லை எங்களுக்காக சினிமா பார்க்க வந்தாயே இது கூட செய்ய மாட்டோமா என்றாள் . ரஷ்மி தயக்கத்துடன் இவன் வண்டியில் ஏறி கொண்டாள் . ரஷ்மி வீட்டுக்கு போனதும் சரி நான் கிளம்புறேன் என்றான். உள்ளே வா என்றாள். அவள் பழையபடி இல்லை என்பது தெளிவானது. எனக்கு சில மியூசிக் நோட்ஸ் வேணும். நாளைக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா என்றாள். ம் ஓகே எங்கே போகணும் என்றான். நானே ஃபோன் பண்ணி சொல்லுறேன் என்றாள். விடைபெற்றுக்கொண்டான்.
தென்றல் இரவு ராகவுக்கு ஃபோன் செய்தாள். என் மேல் உனக்கு காதல் இல்லையா என்றாள். சே சே ரஷ்மி இருந்ததால் கொஞ்சம் சினிமா மேல் கவனமாய் இருந்தேன் என்றான். அப்புறம் என்ன நான் நெருங்கி வந்தால் விலகி போகிறாயே என்றாள். இவனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் போனில் ஒரு முத்தம் குடுத்தான். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்று சிரித்தாள். அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு என்றாள். ரஷ்மி இவனுக்காக காத்திருந்தாள். இவன் வந்ததும் நான் ரொம்ப லேட் ஆ வந்து விட்டேனோ என்றான். நான்தான் சீக்கிரமாக கிளம்பிவிட்டேன் உனக்காக காத்திருக்கிறேன் என்றாள். எனக்கு மியூசிக் பத்தி எதுவும் தெரியாது bat ,பால் பத்தி தான் தெரியும் என்றான் சிரித்து கொண்டே. எப்போதும் அருணை கூப்பிட முடியாது அவனுக்கும் வேலை இருக்கிறது என்றாள். சரி சரி நீ மியூசிக் நோட்ஸ் தேடு என்றான். வெகு நேரமாகியும் தேடியது கிடைக்கவில்லை. சரி ஆன்லைனில் கிடைக்குமா என்று பார்ப்போம் என்றாள். உன் கூட இருக்கணும் போல இருக்கு என்றாள் அவளை அறியாமல். என்ன சொன்னே என்றான். ஒன்னுமில்லையே நாளைக்கு சுகன்யா பாடுகிறாள் அவசியம் வா ஓகே ஓகே வருகிறேன் என்றான். ரஷ்மி ஒரு வேலை செய் அதோட டீடெயில் குடு நானும் தேடி பார்க்கிறேன் என்றான். சரி.
சுகன்யா சுமாராகத்தான் பாடினாள் . வேறு யாரும் கிடைப்பார்களா என்று பார்க்க வேண்டும் என்றாள் ரஷ்மி. இல்லை இவளே பாடட்டும் என்றாள் சௌமியா. நாம் இந்த நிலையில் வேறு ஒருவரை தேட முடியாது என்றாள். ம் அதுவும் சரிதான் என்றாள் ரஷ்மி. சுகன்யா நான் அவ்வளவு மோசமாகவா பாடுகிறேன் என்றாள் ராகவிடம். எனக்கு மியூசிக் தெரியாது ஆனால் நீ பாட முயற்சி செய்தது பிடித்திருந்தது என்றான். தென்றல் இரண்டு நாளாக காலேஜ் வரவில்லை. என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இவனும் ரஷ்மியும் போய் பார்த்தார்கள். திடீரென அவர்கள் சொந்தக்காரர் ஒருவர் காலமாகிவிட்டார் அதற்கு போயிருக்கிறார்கள் அவளும் அவளுடைய அம்மாவும் என்றார் தென்றல் அப்பா. நாளை அவள் வந்தவுடன் ஃபோன் பண்ண சொல்லுகிறேன் என்றார். ரஷ்மி அந்த நோட்ஸ் கிடைத்ததா ? இல்லை எனக்கு தெரிந்த மியூசிக் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார் அவரை போய் பார்ப்போமா என்றாள். சரி போவோம் என்றான். மியூசிக் மாஸ்டர் ரஷ்மியை தொட்டு தொட்டு பேசினார். இவனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. ரஷ்மி நேரமாகிறது என்றான். அவர் இவனை ஒரு மாதிரியாக பார்த்தார். ரஷ்மி அவரிடம் நோட்ஸ் வாங்கி விட்டாள்.
என்னாச்சு அவன் ஏன் உன்னை தொட்டு தொட்டு பேசுறான் என்றான் கோவத்துடன். அவன் இவன் எல்லாம் பேசாதே அவர் என் குரு என்றாள். சரி சரி நான் எதுவும் சொல்லவில்லை என்றான். அவன் முகத்தை தொட்டு திருப்பினாள் . நீ எனக்கு வெறும் ஃப்ரெண்ட் மட்டும் இல்லை என்றாள். ஓகே ஓகே இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்றான். அவள் சிரித்து விட்டாள். அருணுக்கு ஃபோன் செய்தாள். அவன் வந்து அழைத்து போனான். இவனுக்கு ஆத்திரம் இன்னும் தீரவில்லை. அவள் எப்படி இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறாள். சௌமியா ஃபோன் செய்திருந்தாள். அவனை உடனே பார்க்க வேண்டும் என்று சொன்னாள். சரி வருகிறேன் மேம் என்றான். அவள் வீட்டுக்கு போய் சேர்ந்த போது இரவு 8 30 ஆகி இருந்தது. சார் இல்லையா மேம் என்றான். அவர் இப்போதெல்லாம் லேட் ஆகத்தான் வருகிறார். குடிக்கவும் செய்கிறார். ஓ சாரி மேடம். என்ன விஷயம் மேடம்? சில பேரை மியூசிக் பாண்ட் சம்பந்தமாக பார்க்க வேண்டும் நாளை நீயும் வருகிறாயா என்றாள். அருணோ, ஜோவையோ கூப்பிடாமல் உன்னை கூப்பிடுகிறேன் என்று பார்க்கிறாயா ? ம் அதெல்லாம் அப்படித்தான் என்றாள். எத்தனை மணிக்கு மேம் ? ஒரு 8 மணிக்கெல்லாம் வந்துவிடு. ரஷ்மியும் வருகிறாளா? என்றான் இல்லை நாம ரெண்டு பேரு மட்டும் தான் போறோம் என்றாள். கார் எடுத்து போறோம் என்றாள்.
ரஷ்மிக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். சரி எனக்கு அப்டேட் பண்ணு என்றாள். தென்றல் ஊரில் இருந்து வந்து விட்டாள். இவனை கட்டிக்கொண்டு ஒரே அழுகை . அவர் இவளுக்கு மிகவும் வேண்டியவராம். இவன் அவளை சமாதானப்படுத்தினான். நாளைக்கு என்ன புரோகிராம் என்றாள். மேம் கூட வெளியே போறேன் என்றான். சரி . அவளை முதுகில் தட்டிக்கொடுத்தான். நீ இன்னும் சின்ன பிள்ளையில்லை என்றான். நானே டிரைவ் பண்ணுகிறேன் என்றாள் மேம். சௌமியாவுடன் சில பேரை பார்த்த போது ஒருவர் sponser செய்வதாக ஒப்புக்கொண்டார். சௌமியா மகிழ்ச்சி அடைந்தாள் . வருகிற 15 ம் தேதி அவர் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்றாள். ராகவ் உனக்கு பசிக்குதா என்றாள் ஆமாம் மேம் என்றான் அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் சென்றார்கள். அவள் ஃபோன் பண்ணி ரஷ்மியிடம் விஷயத்தை சொன்னாள். வண்டியை மறுபடி எடுக்கும்போது சரியான மழை. ஒருவழியாய் சமாளித்து ஓட்டிக்கொண்டு வந்து விட்டாள் சௌமியா. நாளைக்கு பார்க்கலாம் என விடை பெற்றுக்கொண்டான். சௌமியா மனதிலும் ஏதோ துயரம் இருக்கிறது என நினைத்தான். தென்றலுக்கு ஃபோன் பண்ண நினைத்தான். பிறகு ரஷ்மிக்கு ஃபோன் செய்தான். தாங்க்ஸ் ராகவ் . சௌமியா மேம் உன் கூடத்தான் comfortable ஆக இருக்காங்க என்றாள்.
ஜோவையும் , அருணையும் வெகு நாட்களுக்கு பிறகு பார்த்தான் ராகவ். அவர்கள் என்னப்பா சௌமியா மேம் கூட ட்ரிப் எல்லாம் போனியா என்றார்கள். இல்லே sponser ஒருத்தரை பார்க்க போயிருந்தோம் என்றான். நீ எதுக்கும் அவங்க ஹஸ்பண்ட் கிட்ட ஜாக்கிரதையா இரு என்றார்கள். இவன் கேள்விக்குறியுடன் அவர்கள் இருவரின் முகங்களை பார்த்தான்.