Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 2

சௌமியா மேம் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல கூட இல்லை. ரஷ்மி எப்படி போகிறது சௌமியா மேம் கிளாஸ் என விசாரித்தாள். நன்றாகத்தான் போகிறது. இப்போது லேசாக தன்னம்பிக்கை வந்திருக்கிறது என்றான். வெரி குட் என்றாள். அடுத்த வாரம் தென்றலின் பர்த்டே வருகிறது நாங்கள் சிம்பிள் ஆக ஒரு ரெஸ்டாரன்ட் புக் செய்துள்ளோம் நீயும் வர வேண்டும் என்றாள். ஜோவும், அருணும் கூட வருகிறார்கள் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் என்றாள். அது ஒரு சண்டேவாக இருந்தது. தென்றலுக்கு என ஒரு கிப்ட் ஜோ, அருண், ராகவ் மூன்று பேரும் சேர்ந்து வாங்கினார்கள். தென்றலுக்கு ரொம்ப சந்தோஷம். சௌமியா மேம் வந்திருந்தார்கள். அவர்கள் வருகையை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தாள் ரஷ்மி. என்னப்பா என்ன பார்த்ததும் freez ஆகி விட்டீர்கள் நானும் சின்ன பொண்ணுதான் என சிரித்தாள். எல்லோரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்கள். கேக் வெட்டினாள் தென்றல். அவள் ஜோவுக்கு முதலில் ஊட்டினாள் . பிறகு ரஷ்மி, சுகன்யாவுக்கு ஊட்டினாள். ஜோவின் காதில் என்னடா எங்களுக்கு தெரியாமல் தென்றலை கரெக்ட் பண்ணி விட்டாயா என்றான் அருண். அதெல்லாம் ஒண்ணுமில்லை என்னவோ ரொம்ப அட்டாச் ஆகிட்டோம் என்றான் ஜோ. ஃபங்சன் முடிந்ததும் ரஷ்மி என்னை வீட்டுல டிராப் பண்ணுறியா ராகவ் என்றாள். சௌமியா தலையை குனிந்தவாறே சிரித்தாள்.

இன்னைக்கு ரொம்ப நல்லா இருந்தது இல்ல ஃபங்சன் என்றாள். உள்ளே வாயேன் என்றாள். என்னப்பா எப்படி இருக்க என்றார் ரஷ்மி அப்பா. நல்லா இருக்கிறேன் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க என்றான். அதெல்லாம் அப்பா சூப்பர் ஆக இருக்காரு நீ வா மேல உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் ரஷ்மி. அவளுடைய பிரத்யேக அறைக்கு போகும்போதெல்லாம் என்னவோ போல இருந்தது ராகவுக்கு . இன்னுமா நீ கூச்சப்படுற ? சும்மா உட்கார். எனக்கு என்னவோ உன்னை பத்திதான் கவலையா இருந்தது. இப்போ நல்லா படிக்கிறேன்னு சௌமியா மேம் சொன்னாங்க . ரொம்ப தாங்க்ஸ் என்றாள். என்ன தாங்க்ஸ் எல்லாம் ?அது அப்படித்தான். நீ என்னவோ எனக்கு ரொம்ப நாள் நெருங்குன நண்பனா தெரியற என்றாள் . ரஷ்மி நீ பயப்படுற மாதிரி ஒரு நாளும் நம்ம ஃபிரண்ட்ஷிப் கெட்டு போற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன் என்றான். லேட் ஆயிடுச்சு ஏதாவது சாப்பிட்டு போயேன். ஃபங்சன்ல சாப்பிட்டதே போதும் புல்லா இருக்கு என்றான். அவள் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாளா என்று இருந்தது. அவன் சுதாரித்தவனாக நான் கிளம்புறேன் நாளைக்கு காலேஜ் ல பார்ப்போம் என்றான்.

திடீரென அவன் மனதிலும் சஞ்சலம். இவ்வளவு நல்லவளாக இருக்கிறாளே என்று யோசித்தான். சே சே வெறும் நட்புதான் இது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டான்.யாரிடமாவது அவள் பற்றி பேச வேண்டும் போல இருந்தது. அருணிடம் பேசினான். எனக்கு தெரியும்டா அவளை பத்தி உன்னை சேஃப் ஜோன் ல வச்சிருப்பா . எங்க எல்லாரையும் போல நீயும் ரோஸ் நீட்டி விடுவாயோ என மனசுக்குள் அவளுக்கு பயம் வந்திருக்கும் என்றான் அருண். அவ கிட்ட ஏதோ ஒரு நல்ல எண்ணம் இருக்கு அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றான் ராகவ். ரஷ்மி ஃபோன் பண்ணியிருந்தாள் இன்னைக்கு கிளாஸ் போக மனசே இல்லை வெளியே எங்காவது போலாமா தென்றலும், சுகன்யாவும் வராங்க ஏதாவது மூவி போலாமா என்றாள். அதெல்லாம் வேண்டாம் என்றான் அடுத்த டெஸ்ட் வைக்கிறா என்று மனம் சொல்லியது. சும்மா வாப்பா நான் உன்னை மட்டும்தான் கூப்பிடுறேன் என்றாள். அது ஒரு செம லவ் ஸ்டோரி படமாக இருந்தது. இடையிடையில் கண்களை துடைத்து கொண்டாள் ரஷ்மி. என்னாச்சு ரஷ்மி இதுக்கெல்லாம் எமோஷனல் ஆவுறே என்றான். அவனை லேசாக தொடையில் கிள்ளினாள் ரஷ்மி. எதிர்பார்த்த மாதிரி இந்த சோதனையையும் கடந்துவிட்டான் ராகவ்.

தென்றலும், சுகன்யாவும் ராகவை பார்த்து கிண்டல் செய்தனர். சரியான பல்புடி என்று ராகவை கிண்டல் செய்தனர். ராகவ் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியோ சமாளித்து விட்டதை எண்ணி தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான். அன்னைக்கு நைட் ரஷ்மி ஃபோன் பண்ணியிருந்தாள். சாரி லேட் ஆயிடுச்சா பேசணும் போல இருந்தது அதான் ஃபோன் பண்ணினேன் என்றாள். சொல்லு ரஷ்மி நான் இப்போ தூங்குற மாதிரி இல்லை. அந்த படத்தில் வரும் ஹீரோவை பற்றி ஏதேதோ பேசினாள். இவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான். நாம ரெண்டு பேரு மட்டும் அதே மூவி மறுபடி பார்ப்போமா வீக்கெண்ட் என்றாள். நீ மறுபடி அழறதுக்கா இல்லையில்லை நிச்சயம் அழ மாட்டேன் பிளீஸ் பிளீஸ் என்றாள். சரி போலாம் என்றான் . அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது ரொம்ப சிரமமாக இருந்தது. சரி ஓகே குட் நைட் என்றாள். இருவரும் அதே படத்துக்கு சேர்ந்து போவது புது அனுபவமாக இருந்தது. இம்முறை எமோஷனல் ஸீன் வரும் போது இவன் கையை பிடித்துக்கொண்டாள். இவன் அமைதியாக இருந்தான். ஒரு வழியாக படம் முடிந்தது. என்ன ரஷ்மி இந்த படம் பார்க்க உனக்கு ரொம்ப பிடிச்சிதா? ஆமாம் என்றாள் அதற்கு மேல் பேசவில்லை.

என்ன தனியா படம் பார்க்குற அளவுக்கு நெருக்கமா ஆகிவிட்டீர்களா என்றான் ஜோ. அவதாண்டா கூப்பிட்டா . ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்றான் அருண். சொல்லப்போனால் லேசான பொறாமை ராகவ் மேல் இருந்தது அருணுக்கு. ரஷ்மியுடனான நெருக்கம் வெறும் நட்பு ரீதியிலானது என்றே ராகவ் நினைத்தான். தென்றலும், சுகன்யாவும் எப்போதும் போல இருந்தனர். தினசரி காலேஜ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பது போல நாட்கள் ஓடியது. அந்த வார கடைசியில் சௌமியா மேமுக்கு உடம்பு சரியில்லை ஜுரம் என கேள்விப்பட்டான். ரஷ்மியை அழைத்துக்கொண்டு அவளை பார்க்க போனான். என்ன ஜோடியா வந்திருக்க மத்தவங்க எங்க என்றாள் சௌமியா. நீங்களும் அப்படி சொல்லாதீங்க மேம் என்றாள் ரஷ்மி. அவங்க எல்லாம் ஈவினிங் வருவாங்க என்றாள். கையில் வைத்திருந்த பழங்களை அருகில் இருந்த டேபிள் மீது வைத்தான். ரஷ்மி வீட்டில் யாரும் இல்லையா என்றாள். எல்லாம் வெளியே போயிருக்காங்க என்றாள் சௌமியா. சரி மேம் நான் ஏதாவது பண்ணி கொண்டு வந்து தருகிறேன் . அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சரி ஜூஸ் ஆவது போட்டு கொண்டு வருகிறேன் என்றாள் ரஷ்மி. நீ மேம் கூட பேசி கொண்டிரு நான் போய் ஜூஸ் போட்டு எடுத்து வருகிறேன். சரி. என்னாச்சு மேம் திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு என்றான் . குமார் சார் ஏதாவது திட்டினாரா? அதெல்லாம் ஒண்ணுமில்லை . குமாரும், சௌமியாவும் அதே காலேஜில் ஒன்றாய் வேலை பார்த்து லவ் மேரேஜ் பண்ணி கொண்டவர்கள். இப்போது குமார் வேறு காலேஜ் ஒன்றில் பணிபுரிகிறார்.


ஜூஸ் போட போன ரஷ்மியை காணவில்லை. என்னாச்சு அப்படின்னு தெரியலையே நான் போய் பார்த்துட்டு வரேன் என கிச்சன் உள்ளே நுழைந்தான். ரஷ்மி ஜோவுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள் . ரஷ்மி இவனிடம் ஒரு 5 மினிட்ஸ் என்றாள். இவனே ஜூஸ் போட்டு கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தான். என்ன சொன்னான் ஜோ. அடுத்த வாரம் ஃப்ரெண்ட் கல்யாணமாம் நம்மையும் கூப்பிடுறான் என்றாள். ஓ அப்ப ஜாலி தான் என்றாள் சௌமியா. கல்யாணம் கன்யாகுமரில என்றதும் ராகவ் யோசித்தான். சந்தோஷமா போயிட்டு வாங்க என்றாள் சௌமியா. நீங்களும் வாங்க மேம் என்றான் ராகவ். நீங்க சின்ன பசங்க நான் எதுக்கு இடைஞ்சலா என்றாள். என்னவோ சௌமியா மறைக்கிறாள் என்று பட்டது. அவளுக்கும் என்ன இரண்டு வயது கூடுதலாக இருக்கும். அவ்வளவுதான். ரஷ்மியை வீட்டில் விட்டான். ஜோ ஏதாவது பிளான் போடுகிறானா என்று நினைத்தான். தென்றலும், சுகன்யாவும் வீட்டில் பர்மிஷன் வாங்கி விட்டார்கள். ரஷ்மி வரவில்லை என்று சொல்லி விட்டாள். இவனும் வரவில்லை என்றாள் கிண்டல் செய்வார்கள். எனவே கன்யாகுமரி கல்யாணதுக்கு போவது என முடிவெடுத்தான். ஜோவும் அருணும் எவ்வளவோ வற்புறுத்தியும் ரஷ்மி வர மறுத்து விட்டாள்.

cab புக் செய்து போகலாம் என்று சொன்னார்கள் . அப்புறம் டிரைன் மூலமாகவே போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இவனுக்கு தென்றல் மீதோ. சுகன்யா மீதோ வெறுப்பு எதுவும் இல்லை ஆனால் ரஷ்மி வராதது ஏமாற்றமாய் இருந்தது. எல்லோரும் கிளம்பிய நேரத்தில் அருண் திடீரென வர வில்லை என்று சொல்லிவிட்டான். இவன் நினைத்ததும் அதுதான், ரஷ்மி மாதிரி ஒரு பெண்ணை யார் தான் விரும்ப மாட்டார்கள் அல்லது யார்தான் விட்டுக்கொடுப்பார்கள் . ரஷ்மி ராகவுக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். கன்னியாகுமரியில் கிடைக்கும் சில பொருட்களை வாங்கி வர சொல்லியிருந்தாள். கல்யாணம் ஜோவுடைய நெருங்கிய நண்பனுடையது என்பதால் இவர்களும் தயக்கம் இன்றி ஆட்டம் போட்டனர். சுகன்யா என்ன ராகவ் எங்க கூடவெல்லாம் என்ஜாய் பண்ண மாட்டியா ? என்றாள் அப்படி ஒரு நாளும் நினைத்ததில்லை என்றான். பிரியாணி விருந்து போட்டார்கள். அருண் ஃபோன் பண்ணியிருந்தான் ஜோவுக்கு . என்னடா நீ இப்போ போய் ரஷ்மியை தனியா விட்டு வரலாமா என்றான். ஏன் என்னாச்சு இது ஒரு அருமையான வாய்ப்பு உனக்காகத் தான் ஏற்பாடு பண்ணினேன் . இப்போ அருண் ஏதேதோ ட்ரை பண்ணுகிறான், என்னடா சொல்லுற?ஆமாடா அருண் ரஷ்மியை விரும்புகிறான். அவளை ப்ரபோஸ் பண்ணினாலும் பண்ணுவான். நீ இருந்தா இடைஞ்சலா இருக்கும்னு அவன் நினைத்திருப்பான். சே சே ஏண்டா இப்படியெல்லாம் பேசறே . அப்படியே ரஷ்மி அவனை லவ் பண்ணா உன்னால தாங்கிக்க முடியுமா சொல்லு என்றான் . இதை கேட்ட ராகவ் முதல்முறையாக வருத்தம் அடைந்தான். ரஷ்மிக்கு ஃபோன் செய்தான் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. உடனே அருணுக்கு ஃபோன் செய்தான் .