Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 17

யாழினி வீடு சைதாப்பேட்டை அருகே இருந்தது. முன்பே ஃபோன் பண்ணி இருந்ததால் வீட்டில் இருந்தாள். இவர்களை வரவேற்றாள். உதித்தை நன்கு தெரிந்தவள் போல விசாரித்தாள் . எப்படியாவது உன்னை டாக்டர் ஆக்கி பார்க்கணும் அப்படிங்கிறது கமலனோட கனவா இருந்தது என்றாள். இருவருக்கும் டீ கொடுத்தாள் . எழிலை யாழினிக்கு அறிமுகம் செய்து வைத்தான் உதித். பசங்க ஸ்கூல் போயிருக்காங்க என்றாள். ஹஸ்பண்ட் இறந்ததற்கு பிறகு எல்லாமே கமலன் தான் ஹெல்ப் பண்ணினாரு . இப்போ நாங்க மறுபடி ஆதரவு யாருமில்லாம ஆயிட்டோம் என்றாள். எழில் கமலன் மரணம் குறித்து யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என விசாரித்தான். இன்ஸ்பெக்டர் கிரண் மேலதான் எனக்கு முன்னாடி சந்தேகம் வந்துச்சு. ஆனா அவன் பின்னாடி அந்த சௌமியாதான் இருக்குறாள். கிரண் வெறும் இடைத்தரகர்தான். அவளுக்கும் அவருக்கும் அரசியல் ரீதியா ஒத்து வரலை. ஏதோ அவள் பெரிய பதவிக்கு வருவதை இவர்தான் தடுத்து விட்டதா நினைத்து கொண்டு சண்டை போட்டா. இப்போ ஒரேடியா கணக்கை தீர்த்து விட்டாள் . ம் சௌமியா இப்போ ஆளுங்கட்சில சேர்ந்து பெரிய போஸ்டிங் ல இருக்காங்க. சரி யாழினி வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா உதித்துக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க. உங்களை மாதிரி நேர்மையான போலீஸ் ஆபிசர்தான் அவரை கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கி தரனும் என்றாள். எழிலும் , உதித்தும் விடை பெற்று கொண்டனர். ஸ்வேதா விடுதலை ஆக இன்னும் மூன்று மாதங்கள் இருந்தது. உதித்துக்கு நன்றி சொன்னான் எழில். கூடிய விரைவில் எல்லா உண்மைகளையும் அம்பலப்படுத்துவதாக வாக்கு கொடுத்தான் எழில்.

சிறையில் இருந்தவாறே ஆனந்த் நிர்மலாவை கொல்ல தீர்மானித்தான். கிரணிடம் சொல்லி நிர்மலாவின் கதையை முடிக்க சொன்னான். கிரண் சற்று பொறுமை காக்கும்படி சொன்னான். ஆனந்த் கேஸ் சுப்ரீம் கோர்ட் அப்பீல் போகும் போது நிர்மலா உயிரோடு இருக்க மாட்டாள் என சொன்னான் கிரண். போலீஸ் நிர்மலாவுக்கு போதிய பாதுகாப்பு கொடுத்திருந்தது. எழில் நிர்மலாவை சந்தித்தான். இந்த கேஸ் இத்தோடு முடியுமா அல்லது சுப்ரீம் கோர்ட்டில் ஆனந்த் தப்பித்து விடுவானா என்றான் எழில். அதெல்லாம் தப்ப முடியாது . ஷெரினின் வாக்குமூலமும்,கமலனின் வாக்கு மூலமும் ஸ்ட்ராங்க் ஆக உள்ளது. என்றாள். அப்போது சௌமியா பற்றி விசாரிக்கிறான் எழில். அந்த சௌமியா மேல் ஒரு வழக்கும் போலீஸால் பதிய முடியாது என்கிறாள் நிர்மலா. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான் எழில். சௌமியாவை சந்திக்க நேரம் கேட்டான் எழில். அவள் முதலில் தயங்கினாலும் பிறகு நேரம் ஒதுக்கினாள் .எழிலை வரவேற்ற அவள் என்ன யாழினி சொன்னாளா இந்த கமலன் கொலையை நான்தான் செய்தேன் என்று . அவள் தான் சார் இந்த வேலையை செய்திருப்பாள் என்றாள் சௌமியா. ம் உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது அரசியல் தவிர வேறு பிரச்சனை இருந்ததா? இல்லை சார். நீங்க நெனைக்கிற மாதிரி கமலனை நான் கொல்லற அளவுக்கு எதிரியா பாக்கலை . என்னோட அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டாரு . கட்சியை விட்டு அவரை நீக்குன பிறகு அவர் ஒரு செத்த பாம்பு. அவரை ஏன் நான் கொல்ல போறேன் என்றாள். எனக்கு யாழினி மேல தான் சந்தேகம் ஆனா அதற்கான காரணங்கள் தெளிவா என்கிட்ட இல்லை என்றாள். சரி மேடம் நான் வேற ஏதாவது தகவல் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன் என்றான். சரிங்க சார்.

உதித்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். சௌமியா வேண்டுமென்றே உங்களை குழப்புவதற்கு முயற்சி செய்கிறாள் என்று சொன்னான் உதித். இரண்டு நாட்கள் கழித்து யாழினியிடம் இருந்து ஃபோன் வந்தது. யாரோ ஃபோன் பண்ணி கமலன் விஷயத்தில் தலையிட வேண்டாமென்றும் அப்படி செய்தால் தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் சொன்னாள். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் விசாரித்து கொண்டு தான் இருக்கிறேன் என்றான். சிவா ஸ்வேதாவையும், ஷெரினையும் பார்க்க சிறையில் மனு போட்டிருந்தான். உதித் தானும் உடன் வருவதாக சொல்லியிருந்தான். உதித்தும். சிவாவும் ஷெரினையும் ,ஸ்வேதாவையும் சந்தித்தனர். ஸ்வேதா சிவாவை பார்த்ததும் அழுதாள். அழாதே ஸ்வேதா இன்னும் மூன்று மாதம் தான் அப்புறம் விடுதலை என்றான் சிவா. ஷெரினும் அவளை சமாதானப்படுத்தினாள் . என்ன உதித் படிப்பெல்லாம் எப்படி போகுது என்றாள் ஷெரின். நல்லா போகுது எனக்கு அப்பாவை கொலை செய்தவர்கள் வெளியே சுத்திட்டு இருக்காங்க அப்படின்னு நெனைக்கும்போது எதுக்கு இந்த படிப்புன்னு வெறுப்பா இருக்கு என்றான். நீ இப்போதான் கவனமா இருக்கணும் உங்க அப்பாவோட கனவு நீ டாக்டர் ஆகுறது இல்லையா என்றாள் ஷெரின்.

உதித் எழில் யாழினியையும், சௌமியாவையும் சந்தித்ததை பற்றி கூறினான். எல்லாவற்றையும் கவனமாக கேட்டு கொண்டாள் ஷெரின். நிர்மலா எப்படி இருக்கிறாள் என விசாரித்தாள் ஸ்வேதா. அவளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனந்தால் அவள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றாள் ஷெரின். ஷெரின் அவளுடைய அப்பாவை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்றாள். அடுத்த முறை நிச்சயம் அழைத்து வருகிறேன் என்றான் சிவா. சிவாவும், உதித்தும் விடை பெற்றுக்கொண்டார்கள். சிறையை விட்டு வெளியே வரும்போது சிவாவின் கண்கள் கலங்கி இருந்தன. உதித் நீங்க தைரியமா இருக்கணும் சிவா என்றான். ஸ்வேதா ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு சிறையில என்னென்ன கஷ்டபடுராளோ என வேதனைப்பட்டான். ஷிவானி கோர்ட் அமைத்த கமிட்டி முன் ஆஜர் ஆனாள். ஷிவானி தன்னுடைய விளக்கத்தை கமிட்டி முன் சொன்னாள். அவளுடைய விளக்கத்தை கெட்ட கமிட்டி மூன்று மாதங்கள் அவகாசத்தில் அவர்களுடைய முடிவை சொல்லுவதாக சொன்னது. வெளியே வந்த ஷிவானியிடம் என்னாச்சு என்றான் எழில். நல்ல முடிவா சொல்லுறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றாள். நீ திரும்ப டியூட்டி ல ஜாயின் பண்ண அடுத்த நாளே ஹனிமூன் தான் என்றான். சும்மா சொல்லுவே உனக்கு லீவே கிடையாது என்றாள் ஷிவானி. நிஜமாத்தான் சொல்லுறேன் என்றான் எழில்.

யாழினியிடம் இருந்து ஃபோன் வந்தது. ரொம்ப பயமாயிருக்கு சார் எப்பவுமே ரெண்டு ஆளுங்க வீட்டை கண்காணிக்கிறாங்க சார். எனக்கு ஏதும் ஆச்சுன்னா என் குழந்தைகளை நீங்கதான் சார் பார்த்துக்கணும் . நீங்க பயப்படாதீங்க யாழினி நான் உடனே யாரையாவது அனுப்பி அங்க நிலைமையை சரி பண்ண சொல்லுறேன். ரொம்ப தாங்க்ஸ் சார். எழில் இன்னொரு உயிர் போகக்கூடாது என நினைத்தான். டிபார்ட்மெண்ட்டில் சொல்லி அவளுடைய வீட்டை கண்காணிப்பவர்கள் பற்றி விசாரிக்க சொன்னான். சிவா ஃபோன் பண்ணினான் எழிலுக்கு ஸ்வேதாவையும், ஷெரினையும் பார்த்து வந்ததாக சொன்னான். ஸ்வேதாவை ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என எழில் சொன்னான். அடுத்த வாரம் ஷிவானியுடன் வந்து சிவாவை பார்ப்பதாக சொன்னான். உதித்தை கவனித்து கொள்ளும்படி சொன்னான் எழில். நிச்சயமாக சார். நிர்மலா வீட்டுக்கு போனான் எழில். நிர்மலா அப்போதுதான் வந்திருந்தாள். என்ன நிர்மலா எப்படி இருக்கீங்க என்றான். நான் நல்லாயிருக்கிறேன் ஆனால் உங்க டிபார்ட்மெண்ட் கிரண் என்னை முடிக்க துடியா துடித்து கொண்டிருக்கிறார் என்றாள். நானும் அதை பத்திதான் யோசனை பண்ணுறேன். அவனை என்ன பண்ணுறது அப்படின்னு எனக்கு தெரியலை என்றான் எழில். நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் என்ன சாப்பிடுறீங்க ? ஷிவானி எப்படி இருக்காங்க ஷிவானி கமிட்டி முன்னாடிஆஜர் ஆகி விட்டார்கள் அப்படின்னு கேள்விப்பட்டேன். ஆமாம் நல்ல ரிசல்ட் வரும் னு எதிர்பாக்கிறோம் . சரி நிர்மலா அப்போ நான் கிளம்பறேன் . அடுத்த வாரம் நான் போய் ஸ்வேதாவையும், ஷெரினையும் பார்க்கலாம்னு இருக்கேன் என்றாள். சரி நிர்மலா ஏதாவது அர்ஜண்ட் னா எப்ப வேணா கால் பண்ணுங்க என்றான்.

என்ன ஷிவானி கவனிப்பே இல்ல என்றான் எழில். முன்னாடி எப்படி சுத்தி வந்தே என்றான் எழில். க்கும் அந்த எழில் எனக்கு பாதுகாப்பா கேரிங்கா இருந்தாரு. இப்போ பேருக்கு ரொமான்ஸ் பண்ணுராறு. ஷிவானி என்னைக்குமே நான் உன்னை விட்டு விலகி இருக்கணும்னு நினைத்தது இல்லை. சும்மா சொன்னேன் எழில். ஐ லவ் யு சோ மச் . அடுத்த வாரம் நாம சிவாவை பார்க்க போறோம். பார்த்து ரொம்ப நாளாச்சு. சரி எழில் இன்னைக்கு வெளியே போய் சாப்பிடுவோமா .. ரொம்ப தாங்க்ஸ் ஷிவானி. உன் சமையல்கிட்டேயிருந்து விடுதலை என்றான். அவன் காதை பிடித்து செல்லமாக திருகினாள். அப்போது சௌமியாவிடயம் இருந்து ஃபோன் வந்தது. நீங்க வந்து போனப்புறம் யாழினி ஃபோன் பண்ணா. என்னையே மிரட்டுறா. அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க எழில் சார், ஒண்ணுக்கு ரெண்டு தடவை செக் பண்ணுங்க என்றாள். சரி மேடம் என்றான். திடீரென யாழினி மேல் எழிலுக்கு சந்தேகம் வலுத்தது . ஆனால் பொறுமை காப்போம் என நினைத்தான். அடுத்த வாரம் சிவாவையும் உதித்தையும் சந்தித்தான் எழில் . என்னவோ சார் உங்க மேல இருக்குற நம்பிக்கைல தான் நாங்க இருக்கிறோம் என்றான் சிவா. ஷிவானி கொடுத்த ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டான் உதித். என்ன உதித் அடுத்த வருஷம் டாக்டர் அப்போ எங்களையெல்லாம் மறந்து விடாதே என்றாள். நிச்சயமா மறக்க மாட்டேன் ஷிவானி மேடம். எனக்காக ஏர்போர்ட் வந்து ஃபைட் பண்ணத மறக்க முடியுமா என்றான். சிவா வேற ஏதாவது ஷெரின் சொன்னாங்களா. அவங்க அப்பாவை பார்க்கணும்னு சொன்னாங்க. நல்ல விஷயம் ஷெரினுக்கு அது ஒரு ஆறுதலா இருக்கும். சரி சிவா நான் கிளம்புறேன். ஜாக்கிரதையா இருங்க. அப்போது நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்தது.