Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 11

துப்பாக்கி குண்டு காயமடைந்த எழிலை ஹாஸ்பிடலில் சேர்க்கிறாள் ஷிவானி. எழில் உயிருக்கு ஆபத்து இல்லையெனினும் துடித்து போகிறாள் ஷிவானி. போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பார்த்து போனார்கள். கமலனின் திட்டப்படி எழிலின் பொறுப்புகள் எல்லாம் வேறு ஒரு ஆபீசரிடம் மாற்றப்பட்டது . எழில் வேதனையுடன் ஷிவானியிடம் இதை சொன்னான். நீங்க முதல்ல ஓய்வெடுங்க எழில் உங்க உடம்பு சரியானதும் எல்லாம் பழைய நிலைக்கு வந்து விடும் என்றாள் ஷிவானி. அன்னைக்கு நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க அது என்னன்னு சொல்லலியே என்றான். அதை அப்புறமா சொல்லுகிறேன் என்றாள். சிவா, ஸ்வேதா, நிர்மலா ஆகியோரும் அவனை வந்து பார்த்தனர். வருத்தபடாதீங்க எழில் அந்த கமலன் வேலைதான் இது என்றான் சிவா. மேலும் சில ரகசியமான வேலைகளை கமலன் நீலாங்கரைல இருக்கிற தன்னோட பங்களாவுல செய்யுறதா தகவல் இருக்கு என்றான் சிவா. நான் இப்போ இருக்கிற நிலமைல ஒண்ணும் செய்ய முடியாது ஷிவானி கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லுறேன் என்றான். ஷிவானி அருகில் இருந்து எழிலை கவனித்து கொண்டாள் .

மூன்று மாதங்கள் ஓய்வுக்கு பிறகு டூட்டியில் சேர்ந்தான் எழில். எல்லாமே மாறி விட்டிருந்தது. அவனுக்கு வேண்டிய ஆபீசர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர் . போலீஸ் வேலையில் அவனுக்கு இருந்த ஈடுபாட்டால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டான். ஷிவானி அவனை பார்க்க வந்திருந்தாள். எதுக்கு நீ இங்கெல்லாம் வருகிறாய் ஏற்கனவே ஒரு மாதிரி நம்மளை சேர்த்து வைச்சு பேசுறாங்க என்றான்.தப்புதான் இனிமே நான் வரவில்லை என்று கண்ணீரை கட்டுபடுத்தியவாறே அங்கிருந்து சென்றாள் ஷிவானி. அவளை பார்த்து ஒரு வாரம் ஆகிறது அவன் மனம் கேட்கவில்லை. ஷிவானிக்கு ஃபோன் செய்தான். சாரி என்றான். எப்போ மீட் பண்ணலாம் என்றாள் துடிப்புடன். ஷிவானி என்னோட இருந்தா உனக்கும் ஆபத்து தான் அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற என்றான் . அதெல்லாம் எனக்கு தெரியாது நாளைக்கு என் பர்த்டே கண்டிப்பா உங்களை பார்த்தாகனும் என்றாள். ஓ சொல்லவேயில்லை நிச்சயம் நாம மீட் பண்ணுவோம் நானே உனக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்றான்.


ஹேப்பி பர்த்டே ஷிவானி என்று சொன்னான் எழில் . இன்னைக்காவது கோபப்படாம இருப்பீங்களா ? என்றாள் . அவளுக்கு கேக் ஊட்டினான். என்னை கல்யாணம் பணணிக்கோ எழில் என்றாள் கண்களை தாழ்த்திக்கொண்டு.என்ன விளையாடுகிறாயா ?சே சே நீ சின்ன பொண்ணு இதெல்லாம் உனக்கு புரியாது என்றான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.சரி சரி பர்த்டே அதுவுமா நான் எதுவும் சொல்லலை. எனக்கு யோசிக்க டைம் குடு என்றான் . அவனை நெருங்கி நின்று செல்பி எடுத்து கொண்டாள். ஷிவானியிடம் கமலனின் பங்களா பற்றி சொன்னான். நான் பார்க்கிறேன் என்றாள். எழிலை பெங்களூருக்கு மாற்றி உத்தரவு போட்டிருந்தார்கள். இதை கேட்டதும் ஷிவானி அதிர்ந்தாள். நீங்க இதுக்கு ஒத்துக்காதீங்க என்றாள். வேற வழியில்லை ஷிவானி நீதான் இனிமே எல்லாம் பார்த்துக்கணும் என்றான்.

ஒரு வழியாக கமலனின் பங்களாவை சர்ச் செய்ய உத்தரவு வாங்கிவிட்டாள். அவள் தேடுவது காணாமல் போன மேலும் சில பெண்களின் விவரங்களை. என்ன ஷிவானி மேடம் ஏதும் கிடைச்சுதா .. பேசாம நீங்க எழில் சாரை லவ் பண்ண நேரம் ஒதுக்கி இருக்கலாம் என்றான் கமலன் கிண்டலாக .உங்க வேலையை மட்டும் பாருங்க என்றாள் கோபத்துடன். ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினாள் ஷிவானி. அப்போதுதான் அவனுடைய உதவியாளர் மணி பற்றி தோன்றியது ஒரு வேலை மணி வீட்டில் ஏதும் இருந்தால் ? உடனடியாக மணி வீட்டுக்கு போலீஸ் வண்டியை செலுத்தினாள். மணி ஊரில் இல்லை. மணி வீட்டில் சர்ச் செய்த போது மொபைல் ஃபோன் ஒன்று சிக்கியது அது யாருடையது என்று கேட்டபோது பதில் இல்லை. திலகவதி என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது . வரதனால் கொல்லப்பட்ட திலகவதியுடைய ஃபோன் என தெரிய வந்தது. மணியை வந்தா ஸ்டேஷன்
வர சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வந்தாள் ஷிவானி. முட்டாள் முட்டாள் என மணியை கடிந்துகொண்டான் கமலன். இப்போ என்ன பண்ண போறே இப்போ என்ன பண்ணுவியோ தெரியாது அந்த மொபைல் எனக்கு கட்டாயம் வேணும் என்றான்.


வாங்க மிஸ்டர் மணி என வரவேற்றாள் ஷிவானி. எந்தவித வாரண்டும் இல்லாம என வீட்டை சோதனை போட்டிருக்கீங்க மரியாதையா அந்த போனை கொடுத்திடுங்க என்றான். உன்னைய உக்கார வெச்சு பேசுரதே பெருசு இதுல நீ எனக்கு மரியாதை சொல்லித்தறியா ? என்றாள் ஷிவானி. இந்த மொபைல் உன் கைக்கு எப்படி கிடைச்சது. அது வந்து அது வந்து கேக்குறேன்ல பதில் சொல்லு . வரதன் எனக்கு அன்பளிப்பா கொடுத்தாரு . எதுக்கு திலகவதியை காட்டி கொடுத்ததுக்கா?அதெல்லாம் ஒண்ணுமில்லை. யார் திலகவதி என்றான் மணி ?அப்போ திலகவதி யாருன்னே உனக்கு தெரியாது. ஃபோன் எல்லாம் தர முடியாது வேணும்னா அந்த கமலனையே வர சொல்லு விசாரிச்சு முடிச்சப்புறம் தான் இந்த ஃபோன் குடுக்குறதா வேணாமான்னு முடிவு பண்ணுவோம். திலகவதியின் போனை லாகின் பண்ணி அதில் உள்ள தகவல்களை பெற வேண்டிய ஏற்பாடுகளை செய்தாள் .


எழிலுக்கு ஃபோன் செய்தாள் ஷிவானி எப்படி இருக்கீங்க எழில். நல்லா இருக்கேன் என்னாச்சு கமலன் வீட்டுக்கு ரைட் போய்ட்டு வந்தீங்களே ?அவரோட உதவியாளர் மணி மாட்டிக்கிட்டான். அவன் கிட்ட திலகவதி ஃபோன் இருந்தது என்றாள். ம் அடுத்து என்ன ? நம்ம கல்யாணம் தான் என்றாள். சும்மா விளையாடாதே எனக்கு அப்பப்போ அப்டேட் பண்ணு என்று போனை வைத்தான் எழில். ஷிவானி சர்ப்ரைஸ் ஆக பெங்களூர் போய் வர வேண்டும் என்று நினைத்தாள். திலகவதி போனில் whatsapp குழுக்கள் இருந்தன. திலகவதியுடன் சாட் செய்த பெண்கள் பெரும்பாலும் அரவிந்த் பற்றியும் ஆனந்த் பற்றியும் சொல்லியிருந்தனர். ஆனந்த் ஏமாற்றி விட்டதாக நிறைய பெண்கள் சொல்லி இருந்தார்கள். கமலனும், வரதனும் திலகவதியை மிரட்டும் வாய்ஸ் காலும் இருந்தது, ஒரு ஸ்பெசிஃபிக் குழுவில் அந்த லிஸ்ட் இருந்தது. காணாமல் போன பெண்களும் அவர்களின் பெயரும் மொபைல் எண்ணும் இருந்தது .அதை எழிலுக்கு ஃபார்வார்டு செய்தாள்.அதிலுள்ள தகவல்களை உயர் அதிகாரியுடன் பகிர்ந்து கொண்டாள்.

விடுப்பு எடுத்து கொண்டு ஷிவானியை திலகவதி போனுடன் பெங்களூர் வருமாறு அழைத்தான் எழில். சரி வரேன் என்றாள். எழில் அந்த போனையே பார்த்தான். நீ இந்த போனை மணியிடம் திருப்பி கொடு. ஆனால் இப்படியே அல்ல அவனின் நடவடிக்கைகளை டிராக் செய்யும் பக் ஒன்றை இதில் பிக்ஸ் செய்து தருகிறேன் என்றான். அப்புறம் என்ன என்றாள்? நான் வீட்டில உன்னை பத்தி சொல்லி இருக்கிறேன். அவங்க முதல்ல நல்ல முடிவா சொல்லட்டும். கமலன் மிரட்டும் ஆடியோவை திரும்ப கேட்ட எழில் கமலனை அரெஸ்ட் பண்ண இது மட்டும் போதாது. திலகவதி கொலை நடந்தப்போ கமலன் எங்க இருந்தான்னு விசாரிக்கணும் மணிகிட்ட . மணி சம்பந்தமா ஏதாவது ? அவங்க வீட்டுல வேற எதுவும் கிடைக்கலை என்றாள். ம் சரி வா லஞ்ச் வெளியே சாப்பிடுவோம் என்றான். வேண்டாம் இங்கேயே ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம் என்றாள். இன்னும் நீ அதை மறக்கலையா ? எப்படி மறக்க முடியும் என்றாள். ஷிவானி பிரிய மனமில்லாமல் விடை பெற்றாள்.

மணிக்கு ஃபோன் செய்து வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிகொடுத்துவிட்டு ஃபோன் பெற்று செல்லுமாறு சொன்னாள். மணி வந்து போனை வாங்கி போனான். இனிமே இது பயன்படாது என கமலன் சொன்னான். இருக்கட்டும் என்கிட்ட அப்புறம் திடீர்னு கேப்பீங்க என்றான். என்னவோ பண்ணித்தொலை என்றான். ஆனந்த்தை சிறையில் சந்தித்தான் கமலன். என்ன ஆச்சு திலகவதி ஃபோன் ஷிவானி கையிலே சிக்கிடுச்சி . அது போகட்டும் அந்த எழில் பழசை எல்லாம் தோண்டுறானா. அவனைத்தான் பெங்களூர் அனுப்பிட்டோமே என்றான். அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும். நான் பெயில் ல வர ஏற்பாடு பண்ணு கமலன், சரி ஆனந்த்,
மணி போகும் வரும் இடங்களை கவனித்து கொண்டுதான் இருந்தான் எழில். ஷிவானி விஷயத்தில் அவனால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. அப்போது பெரியவர் ஒருவர் கம்ப்ளைண்ட் குடுக்க வந்திருப்பதாக சொன்னார்கள். சொல்லுங்க பெரியவரே என்ன விஷயம். என் பொண்ணு காணாமல் போய் 6 மாசம் ஆவுது. நானும் எத்தனையோ முறை இந்த ஸ்டேஷன் வந்துட்டேன் ஆனா கம்ப்ளைண்ட் வாங்கிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. சரி குடுங்க . பொண்ணு பேரென்ன ஷெரின். மத்த டீடெயில்ஸ் எல்லாம் இதுல இருக்கு என்றார். கல்யாணத்துக்கு சென்னைக்கு போன பெண் திரும்ப வரவில்லை என்றார்.

அந்த புகாரில் உள்ள பெயரோடு லிஸ்டில் இருந்த பெயரை பார்த்தான் ஷெரின் என்ற பெயர் மொபைல் நம்பர் ஒப்பிட்டு பார்த்தான். அதுவும் சரியாக இருந்தது. ஷிவானிக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். ஷெரின் அப்படிங்கற பொண்ணு வயசு 23 ஏதாவது கொலை செய்யபட்டு இருக்காங்களா அப்படின்னு பாரு. அவங்க அப்பா அவங்க காணாம போய்விட்டதா கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு. நான் இன்னைக்கே விசாரிக்கிறேன் என்றாள் . விஷயம் ரகசியமா இருக்கட்டும் என்றான். மணி போனில் உள்ள காண்டாக்ட்களை புக் மூலமாக செக் செய்த போது ஷெரின் நம்பர் இருந்தது. மணியை ஸ்டேஷன் வரவழைத்தாள் ஷிவானி. மணி நான் உங்களை ரொம்ப குறைத்து எடை போட்டுட்டேன். நீங்க உமன் trafficking ல involve ஆகி இருக்கீங்க . இதென்ன அநியாயம் ? நான் ஒரு எம் எல் ஏ வோட உதவியாளர் என்கிட்டே இப்படியெல்லாம் பேசாதீங்க என்றான். நான் உங்களை உள்ளே வெச்சே விசாரிக்கிறேன் இப்போ நீங்க போலாம் என்றாள். வெளியே வந்த மணி அவசரமாக கமலனுக்கு ஃபோன் செய்தான்.